நாம் - 6

sagimoli

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 6.
"சேமித்து வைத்த காதல் அனைத்தும் கொட்டித்தீர்க்க ஆசைக்கொண்டேன் கண்மணி...
ஆசை சூரியனில் நனைந்த பனியாய் மாறியதன் காரணம் ஏனோ........."
எனக்குப் பசிக்குது என்று வந்து நின்றவளைப் பார்த்தவனுக்கு திடுக்கென்று இருந்தது. அப்படியே நின்று விட்டான். டேய் லூசு உன்கிட்ட தான்டா பசிக்குது என்று அவனை உழுக்கியவள்.
ஆங்ங்ங்..... என்று விழித்தவன், சரி இரு எதுவும் இல்ல வீட்ல, காபி போட்டுத்தருகிறேன் குடி, இப்ப உடம்பு பரவில்லைனா உன் டிரஸ் காய்ந்திருக்கும், போட்டுட்டு வரயா வெளியில போய்ட்டு வரலாம்.. என்றான்.
அவள் சரி என்றவுடன் , நீ போய் ரெடியாய் இரு நான் உனக்கு காபி போட்டு கொண்டு வரேன் என்றான்.
சென்று முகம் கழுவி வந்தவளின் கையில் காபியைத் தந்தவன் குடிச்சிட்டு ரெடியா இரு. நானும் அதுக்குள்ள ரெடியாகிறேன்.
பதினைந்து நிமிடத்தில் இருவரும் காரில் இருந்தனர். இளா வாகியை கூட வர அழைக்குமாறு கூறினாள். நான் கால் பண்ணேன் அவ எதோ அவசரமா வெளில இருக்கேன் சார் இளாட்ட சொல்லிடுங்கனு என்று என்னிடம் சொன்னாள் என்றான்.
இளா எதுவும் கூறவில்லை. முதலில் ஹோட்டலுக்கு சென்றவர்கள் சாப்பிட்டு விட்டு இருவருக்கும் டிரஸ் வாங்க கடைக்கு சென்றார்கள். கடமைக்கே என இருந்தவளைப் பார்த்து வேனி என்ன வேணுமோ எடுத்துக்கோ என்றான். அவள் எதுவும் கூறாமல் அப்படியே ஓரமாகச் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
ச்சசசசச.. என்றவன் அவளுக்கு தேவையான சேரி, சுடிதார், நைட் டிரஸ் ,இன்னர்ஸ் என்று வாங்கியவன் அவனுக்கு தேவையானதையும் வாங்கும் வரை எதுவும் கூறாமல் ஜடம் மாறி அமர்ந்திருந்தாள்.
பில்ப்பே பண்ணிக்கொண்டு வந்தவன், வா போலாம் என்றான். அடுத்து வீட்டுக்கு தேவையானதை வாங்கும் போதும் அதே நிலைமை தான்.
கோபம் வந்தாலும் நாம் தான் காரணம் என்று விட்டுவிட்டான்.
வீட்டிற்கு வந்தவன் படுக்கச்செல்லும் போது , வேனில் நாளைக்கு நான் காலேஜ்ல ஜாயின் பண்றேன் என்றவன் உனக்கும் அட்மிஷன் போட்டுறேன் மேல படிக்க என்றான்.
அவளுக்கு அதில் இஷ்டமா என்று ஒரு வார்த்தைக்கூட கேட்கவில்லை. அவளும் எதுவும் கூற வில்லை.
புரிஞ்சிக்கிறவங்கிட்ட சொன்ன பரவால இவன் எப்ப தான் என்ன புரிஞ்சியிருக்கான் இவன்ட இத பத்தி பேசுறதும் வேஸ்ட் என்று நினைத்தவள் அமைதியாகி விட்டாள்.
மறுநாள் அதிகாலையிலே எழுந்தவன் அன்றைக்குத் தேவையானதை சமைத்து வைத்துவிட்டு குளிக்கச்சென்றான்.
இன்னும் இளா எழவில்லை.
அதான் தெரியுமே இது ஒரு தூங்கு முஞ்சி என்று அமுதா உன் வாழ்க இப்படியே போயிடும் போலிருக்கு... என்று நினைத்தவன் எல்லா வேலையையும் செய்து முடித்தான்.
குளித்து முடித்து சாப்பிட்டப்பின் தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு கதவை தாழிட்டு கிளம்பி விட்டான்.
அதுவரையும் இளா எழவில்லை..
மதியம் 12 மணிக்கு எழுந்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள்.
எங்க போயிட்டான் இந்த மாடு ஆள காணோம் என்று முகம் கழுவி வந்தவள் அவனை வீடு முழுவதும் தேடினாள்.
எங்க போனா நமக்கு என்ன என்று சாப்பிட எதாவது இருக்கிறதா என்று உணவு மேஜைக்கு வந்தவள் அங்க அவன் எழுதிய குறிப்பு hot box மேல் ஒட்டியிருந்தது.
எரும, நல்ல தூங்கியிருப்பனு நினைக்கிறேன், நான் காலேஜ்க்கு கிளம்பிட்டேன். எனக்கு தெரிஞ்சத சமைச்சியிருக்கேன் நல்ல சாப்பிட்டு போர் அடிச்சா டி.வி பாரு இல்லனா என் கப்போர்டுல story books இருக்கு படி.
பி.கு.
தயவு செய்து குளிடி அழுக்கு மூட்ட...
இளாவிற்கு சிரிப்பு தான் வந்தது. என்ன தான் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் மனஸ்சாபமிருந்தாலும் ஒருத்தவங்கள எப்படி டீல் பண்ணனும் என்று இவனிடம் தான் கத்துக்கனும்.
என்ன தான் பிடிக்காம எல்லாம் பண்ணாலும் அவளால் வெறுக்கவும் முடியவில்லை எதுவும் சொல்லவும் முடியவில்லை.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், பரவாலை நல்ல சமைக்க கத்துக்கொடுத்திருக்காங்க அத்த, இவன் பண்றதிலே ஓரே உறுப்படியான விசியம் இது மட்டும் தான் நினைக்கிறேன்.
அத்தையை நினைத்தவளாள் அதற்கு மேலே எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. கைக்கழுவிக் கொண்டுவந்தவள்.
ச்சசசச அத்த கூட நம்பள நம்பவில்லைல. அன்றே இளா அமுதனிடம் அத்தையை பார்க்க வேண்டும் என்று கூறினாள் அவன் போதும் வேனில் இதுக்கு மேல யார் முன்னாடியும் நான் அவமானம் பட விரும்பவில்லை என்று கூறிவிட்டான்.
அப்படியே அமுதனை அடிக்க வேண்டும் என்று ஆத்திரம் வந்தது இளாவிற்கு....
அழுதுக்கொண்டே, ஏன்டா இப்படி பண்ண என்னால உன்ன மறக்கவும் முடில வெறுக்கவும் முடில சேர்ந்து வாழவும் பிடிக்கல, உன்ன பாத்தாலே என் அக்கா நியாபகம் தான் வருது, எதுக்குடா என் லைப்ல வந்த.... உன்ன மறக்கனும் தானே உன்ன பாக்காமலே இருந்தேன்.
நீ என்னைக்கு என் அக்காவ காதலிக்கறனு தெரிஞ்சதோ அன்னைக்கே நான் என்ன மாத்திக்கிட்டேன். நான் உன்ன மறந்து வாழ பழகிட்ட பிறகு இப்ப என் லைப்ல வந்து இருக்க.
நீ என் வாழ்க்கையில திரும்ப வந்தது நினைச்சு எனக்கு சந்தோசம் கூட வரல கோபமா வருது. கடவுள் எவ்வளவு கொடுமைக்கு பிறகு உன்ன எனக்கு கொடுத்திருக்கார். நான் இனி வாழ்க்கையில சந்தோசமா இருக்கக்கூடாதுனு முடிவு பண்ணிட்டார் போல. இவ குற்ற உணர்வுலே சாகனும் என்று எண்ணிவிட்டார் போல.
என்ன எல்லார் முன்னாடியும் குற்றவாளியா மாத்திட்டியே, நீ தான் நான் இப்படி இருக்க காரணம் உன்னால தான் எனக்கும் என் பெற்றோர்க்கும் பிடிப்பில்லாம போச்சு என்று தேம்பி தேம்பி அழுதுக்கொண்டே இருந்தாள்.
ஆம் அமுதன் தான் இளாவின் முதல் காதலன்.
இளாவின் முதலும் முடிவானவன் அமுதன். அவளின் காயங்களிற்கு எப்போது மருந்தாகப் போறானோ......
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. எந்த பிடித்தமும் இல்லாமல் ஆனால் வெறுக்கவும் இயலாமல் சென்றது இளாவிற்கு.
கல்லூரி தொடங்குகிறது நாளை முதல் என்று அமுதன் கூறும் வரை இளா எதுவும் கேட்கவில்லை.
அவன், தனக்கு அட்மிஷன் போட்டதிலிருந்து பீஸ் கட்டினது வரை எதைப் பற்றியும் அவள் கண்டுக்கொள்ளவில்லை.
வாகினி இரண்டு நாள் ஒரு தடம் வந்துச்செல்வாள். வாகினியும் தன் வகுப்பு என்பதே இளாவிற்கு போதுமானதாய் இருந்தது.
ம்ம்ம்ம் சரி என்றாள் அப்புறம் ஒரு முக்கியமான விசியம். கொஞ்சம் சென்சிடிவ் கூட. உனக்கு என்ன பண்ணணும் தொனுதோ அத பண்ணு என்றான்.
என்ன என்றாள் இளா, அது நமக்கு தான் கல்யாணம் ஆகியிருக்குனு இது வர வாகினி தவிர யாருக்கும் தெரியாது. So, உனக்கு விருப்பம் இருந்தா தாலி மெட்டி பொட்டு எல்லாம் போட்டுக்கோ இல்லனா ..........
இல்லனா என்றாள் இளா......
ம்ம்ம் கலட்டி வஞ்சிட்டு போகலாம். எனக்கு எந்த ஆட்சியபனனையும் இல்லை என்றான்.
இளாவிற்கு யாரோ எங்கோ தன் நெஞ்சில் குத்தியதுப் போலிருந்தது.
அப்ப கல்யாணமாகி இந்த 35 days ல நான் அவன கொஞ்சம் கூட பாதிக்கல, என்று நினைத்தவள் எதுவும் கூறவில்லை.
அமுதனிடம் சரி குட் நைட், என்றாள்.
அமுதனுக்கு எதோ பாரத்தை இறக்கி வைத்த மனநிலை.
காலை 4.30 மணிக்கே இளா எழுந்து விட்டாள். எழுந்து பல் துலக்கிவிட்டு வெளியே வந்தவள் காபி போட சமையலறைக்குச் சென்றாள்.
அங்கே போகும் வழியில் அமுதன் தரையில் நன்கு தூங்கிக்கொண்டிருந்தான்.
இளா என்ன நினைத்தாளோ எவ்வளவு நேரம் அவனைப்பார்த்துக் கொண்டிருந்தாளோ அவளுக்கு தெரியாது.
அமுதனின் அலாரம் அடித்ததும் விறுக்கென முழித்தவள் அவன் எழும் முன்பு சமையல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அமுதன் சமையலறையில் லைட் எரிவதில் எழுந்தவன் அங்கே இளா பால் காய்ச்சிக்கொண்டிருந்தது தெரிந்தது.
இப்போது 10 நாட்களாக இளா சமையல் அறை வேலைகளைச் செய்துவிடுகிறாள். இவன் வீடு மட்டும் பெருக்கித் தருவான் ஒரு சில சமயம் பாத்திரம் கழுவித்தருவான்.
அன்றும் அவன் கையில் காபியைத்திணித்தவள், சமையல் அறையில் காலை சிற்றுண்டிக்கு இட்லியும் தேங்காய் சட்டினியும் மதியத்திற்கு தக்காளி சாதமும் தயிர் சாதமும் செய்து விட்டு இரண்டுப்பேருக்கும் டிபன்பாக்ஸில் போட்டுவைத்தாள். பின்பு சமையல் அறையைச் சுத்தம் செய்து வைத்துக் கொண்டு வந்தாள்.
அப்போது தான் அமுதன் வீடுப் பெருக்கிக்கொண்டிருந்தான். அவனிடம் நான் குளிச்சிட்டு வரேன் என்றாள்.
அவள் குளித்துமுடித்த உடன் அமுதன் குளிக்கச்சென்றான்.
அவன் வருவதற்குள் இளா கிளம்பியிருந்தாள்.
அவன் வந்தவுடன் சீக்கிரம் கிளம்பிட்டு வா சாப்பிடலாம் என்றான்.இருவரும் இந்த 25 நாட்களாக ஒன்றாகத் தான் அமர்ந்து சாப்பிடுவார்கள் இது அமுதனின் strict order.
தன் எதிரே அமர்ந்து உண்டுக்கொண்டிருந்தவளின் கழுத்தை எதர்ச்சியாய் பார்த்தவன் அவள் தாலி அணிந்திருக்கவில்லை பின்பு கீழே பார்த்தவன் மெட்டியும் போடவில்லை. எங்கிருந்து தான் கோபம் வந்ததோ அப்படியே கையை கழுவியவன் தட்டை எழுத்து படார் என்று வாஷ் பேசனில் போட்டான்.
என்ன ஆச்சு இவனுக்கு , என்னமோ நமக்கு என்ன?????
இருவரும் கிளம்பி கீழே வந்தவர்கள், வேனி இரு கார்லே போலாம் என்றான். இல்ல நீ தான் யாருக்கும் தெரியவேண்டாம் சொல்லிட்டல நான் வாகினிய வர சொல்லிஇருக்கேன், மார்னிங் ஈவ்னிங் அவ கூடவே வந்துடுவேன் என்றவள்,சாலையை நோக்கிச் சென்றாள்.
அமுதனுக்கு, ஆமா இவ பெரிய இவ சும்மா சொன்ன உண்மையாவே எல்லாத்தியும் பண்றா இருடி குட்டச்சி உன்னப் பாத்துக்கிறேன் என்று திட்டினான்.
வண்டியில் செல்லும் போது வாகினியிடம் திருமணத்தைப்பற்றி யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கூறி விட்டாள்.
இருவரும் அந்த கல்லூரியின் உள்ளே சென்றனர். பல மாணவமாணவிகள் அவர்களுள் வெவ்வேறு மனநிலைகள். இளாவிற்கு 'இது வர எப்படியோ இனியாவது chemistry யை கத்துக்கனும் இளவேனில்'என்று நினைத்துக்கொண்டாள்.
வகுப்பிற்குச் சென்றவர்கள் முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு செமினர் ஹாலில் மீட்டிங் என்று அழைத்தனர்.
அவர்கள் அங்கு சென்றதும் இவர்கள் துறை பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் என அனைவரும் இருந்தனர்.
மாணவர்கள் ஆசிரியர்கள் self introduction முடிந்தப்பிறகு. துறைத்தலைவர் வாசுகி உங்கள் வகுப்பாசிரியர் prof.amudhavanan என்றார். இளாவிற்குச் சொன்னவுடன் இவனா மாறுபடியுமா????? என்று நினைத்தவளுக்கு சற்று சத்தமாகவே புரை ஏறிவிட்டது.
மாணவர்கள் அனைவரும் இவளையே பார்க்க, அவள் முழிப்பதைப் பார்த்து அமுதனுக்கு சிரிப்பு வந்துவிட்டது வாகினிக்கும்.....
Sorry mam, என்றாள். அவர் its okay please drink some water.....என்று கூறிவிட்டு you all may now go to your respective classes, your professor will meet you soon in your class for some queries, என்று கூறினார்.
வெளியே வந்தவுடன் வாகினி இளாவைப் பார்த்து நன்றாக சிரித்தாள் , ஏண்டி சிரிக்கிற என்றாள் இளா, பின்ன அமுதன் சார்னு பேர சொன்னாலே மேடமுக்கு எங்க இருந்து தான் பயம் வருமோ......
ஏய், நான் எதுக்குடி அவன பாத்துப்பயப்படனும் அதன் நான் வீட்லே அவன தினமும் பார்த்துட்டு இருக்கேனே என்றவள் சட்டென வாயைக் கடித்துக்கொண்டாள்.
ஆமா வேற யாரும் வேண்டாம், உன் வாயே உனக்கு சனிடி, நல்ல வேலை யாரும் பாக்கல வா போலாம் என்றாள் வாகினி.
ஆமா வாடி இல்லனா அதுக்கும் வேற திட்டுவான்......என்றவள்
உண்மையாகவே அமுதனை பேராசிரியராய் நினைத்துப்பயம் தான் இளாவிற்கு..........
தன் வாழ்வின் இனிய மாற்றங்கள் இங்கிருந்துத்தான் தொடங்கப்போகிறது என்றுத் தெரியாமால் இரு உள்ளங்களும் உலா வந்தனர்........
தொடரும்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN