நாம்-5

sagimoli

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 5.
அமுதனுக்கு ஒரு நிமிடம் உயிர் போய் வந்தது . எங்கே கல்யாணம் பிடிக்காம பண்ணிக்கிட்டதால் தற்கொலை பண்ண முயற்சிப் பண்ணிடாலானு. சிறு பயத்துடன் அருகில் சென்றவன் அவளை எழுப்பினான் அவளிடம் சிறு அசைவைக் கண்டவன். வேனில் என்னடி ஆச்சு என்றான், இளா மயக்கத்தில், வாகு வயிறு வலிக்குதுடி என்று உளறியவள் அப்படியே மயங்கிவிட்டாள்.
என்ன உளறல் இது என்று உடம்பில் எங்கே எதாவது காயம் இருக்கிறதா என்று பார்த்தவன் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. அப்ப எப்படி இவ்வளவு பிலிடிங் போகுது என்று பார்த்தான். ஓ காட்..... வேனி எழுந்தரிடி...என்றவன் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்தான்.
திக்கென்று விழித்தவளால் எழக்கூட முடியவில்லை. தன் நிலைமையைப் பார்த்தவளால் ஒன்று செய்ய முடியவில்லை. உடல் முழுவதும் மரத்துப்போயிருந்தது.
வேனி எழுந்திரிடி என்றான். என்னால முடியல என்று முணுமுணுத்தவள், அழுதுக்கொண்டே படுத்திருந்தாள்.
ஆபத்திற்கு பாவம் இல்லை என்று நினைத்தவன் சாரி டி என்ன மனிச்சிரு என்று, அவளை அலெக்காகத் தூக்கிக்கொண்டு குளியல் அறைக்குச் சென்றான்.
வெளியில் இருந்த நாற்காலியை எடுத்து வந்து அவளை அமரவைத்தவன்.
சவரை திறந்துவிட்டான், இளாவின் நிராக்கரிப்பு எதுவும் அவனை அசைக்கவில்லை. நிமிடத்தில் அவளின் ஆடைகளைக் களைத்தவன்.
வெதுவெதுப்பான நீர் நிறைந்த பாத்டப்பில் அவளை படுக்கவிட்டான்.
எதுவும் பேசாமல் வாகினிக்கு போன் செய்தவன், வாகினி எங்க வர?
சார் ஒரு 2 நிமிஷம் வந்துடேன். அம்மா மதியம் வரனேனுச் சொன்னாங்க... சரி சீக்கிரம் வரீயா என்றான். அவள் ஏதோ பிரச்சனை போல என்று எண்ணி வந்துட்டேன் சார் என்றவள் போனை அணைத்தாள்..
அமுதன் தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்துவிட்டான்.
கதவுத்தட்டும் ஒலிக்கேட்டு எழுந்து சென்று திறந்தான். அங்கே வாகினி நின்றிருந்தாள். என்ன ஆச்சு சார் ... என்றவளை உள்ள போய் பாரு என்றான்...
உள்ளே சென்றவள் பெட்டைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவள். இளா எங்க சார்... உள்ள பாத்டப்ல படுக்க வச்சியிருக்கேன் என்றான்.
வேகமாக உள்ளே சென்றவள், அவளின் நிலைமையைப்பார்த்த உடன் புரிந்துவிட்டது. இளா இளா என்றாள் வாகு என்னால முடியலடி ரொம்ப ப்பெயின் ஆ இருக்கு . சரி இரு வரேன் என்றவள்.வெளியே சென்றவள் அமுதனிடம் sir she is on her period.....
எனக்கு தெரியும் வாகினி. But I don't know how to handle this situation. She is in horrible state.
சார், இளாக்கு mensuration அப்ப over bleeding போகும் சார். அவளால 2 days நடக்ககூட முடியாது என்றாள்.
பின்பு நாப்கின் இருக்கா இல்ல வாங்கனுமா என்றவள்.
இரு வாகினி நான் போய் வாங்கிட்டு வரேன் என்றான். 10 நிமிடத்தில் வந்தவன் வாகினியிடம் தந்தான்.
இளா குளிந்து வந்தவள் towel லை மட்டும் சுற்றிக்கொண்டு வாகினியை பிடித்துக்கொண்டு வந்தாள்.
அப்போது சாப்பிட உணவு வாங்கி வந்தவன். வாகினியிடம் தந்து சாப்பிட வைக்குமாறு கூறினான்.
இளா பெட்டை பார்த்தாள் அது வேறு பரப்பு போடப்பட்டதைப்பார்த்து அமுதனின் முகம் பார்க்காமல் சாரி என்றாள்.
எதுவும் பேசாமல் உணவு அருந்தியவள். வாகினியிடம் வாகினி போட்டுக்க dress இல்லடி என்றாள். அப்போது அங்கு வந்த அமுதன் வாகினியிடம் தன்னுடைய டீ சட்டையும் சாட்ஸையும் கொடுத்தான், போட்டுக்கச் சொல்லு என்றான்.
இப்போதைக்கு இதப் போட்டுக்க சொல்லு மாலையில் நான் வாங்கிட்டு வந்துடறேன் என்றான் வேறுப்பக்கம் திரும்பி...
தயக்கத்துடன் அதைவாங்கியவள் அவன் சென்ற பிறகு அதை அணிந்தவளின் மனதில் இனம்புரியா படப்படப்பு. எதுவும் சொல்லாமல் அப்படியே உறங்கிவிட்டாள்.
அவள் உறங்கியப் பின்பு வெளியே வந்த வாகினி.. சார் நான் கிளம்பறேன். எதுன கால் பண்ணுங்க சார்.
இல்ல வாகினி நீ இருந்த she feel better என்றான்.
வாகினி, இந்த situation தான் இவங்கள் இடையே இருக்கும் ,வெறுமையை கொஞ்சமாவது சரி செய்யும் என்று எண்ணியவள் ,இல்ல சார் ரொம்ப முக்கியமான வேலை என்றாள்.
அமுதன் எதுவும் பேசவில்லை, சரி நீ கிளம்பு நான் எதுனா கால் பண்றேன் என்றான்.
வாகினி கிளம்பியவள் தன் அன்னையையும் வர வேண்டாம் என்று கூறினாள்.
அமுதன் சற்று நேரம் யோசித்தவன் பெட் சீட்டையும் இளாவின் ஆடையும் துவைக்கத்தொடங்கினான்.
துவைக்கும் சத்தம் கேட்டு எழுந்தவள், மெதுவாக நடந்து வந்து செவிற்றில் சாய்ந்து, என்ன !!!! பண்ற உன்ன இப்ப நான் துவைக்கச்சொன்னேனா...
என் துணிய துவைக்க எனக்குத் தெரியும்.. ஒழுங்க வச்சிட்டு போறயா என்றாள்.
எதுவும் கேட்காதவன், அவன் வேலையைச் செவ்வனே செய்தான்.
சொல்ல சொல்ல கேக்காமா நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு பண்ற என்று அவனிடம் இருக்கும் ஆடையை பிடுங்க வந்தவள், சோப்பு நுரைவழுக்கி அமுதன் மேலே விழுந்தாள்.
அம்மா......... என்று அவன் மீது விழுந்தவளால் எழ கூட முடியவில்லை. எரும எழுந்திரிடி வலிக்குது என்றான்.
எழுந்தரிக்க முடிஞ்சா எழுந்திரிக்க மாட்டேன்னா, முடியலடா.... தூக்கிவிடு என்றாள்.
அவளின் நிலைமையைப்புரிந்தவன், இரு தூக்கித்தொலைக்கிறேன் என்றான், வழுக்கிவிடாமல் இருக்க மெதுவாக அவளைத் தூக்கியவன் என்ன நினைத்தானோ அப்படியே சென்று பெட்டில் அமர வைத்தான்.
டேய், எதுக்குடா என் டிரஸ் எல்லாம் துவைக்கிற, எனக்கு என் டிரஸ்ஸ துவைக்கத்தெரியும் நீ உன் வேலைய மட்டும் பாரு, அப்படியே இத சாக்க வச்சி அட்வான்டேஜ் எடுத்துக்காத.. நீ தான் என் வாழ்க்க இப்படி ஆனதுக்கு காரணம் என்றாள் கோபமாக.
அழுதுக்கொண்டே ஏன்டா இப்படி பண்ண , சின்ன வயதுல இருந்தே எங்க வீட்ல என்ன ஒதுக்க நீதான்டா காரணம். நான் பாட்டுக்கு என்வேலையைப் பார்த்துட்டு அமைதியா தான இருந்தேன்.
என் லைப்ல உன்ன பாக்கவே கூடாதுனு இருந்தேன். எதுக்குடா வந்த , எதுக்குடா எனக்கு தாலிக் கட்டுன, எங்க அக்கா வாயில இருந்தே அவள நான் ஏமாத்திடேனு சொல்லவச்சிட,
எங்க அப்பா நான் தான் உன்ன மயக்கிட்டேன்னு சொன்னாரு, எனக்கு அப்படியே சாகனும் போல இருத்திச்சி, எல்லாத்துக்கும் நீ மட்டும் தான்டா காரணம் என்றவள் அவன் கன்னத்திலிருந்து உடம்பு முழுவதும் தன் வெறித்தீர அடித்தாள்.
அமுதன், எதுவும் சொல்லவில்லை அமைதியாக அவள் அடிக்கட்டும் என்று விட்டுவிட்டான். அப்போதுதான் தன்னால் அவள் எவ்வளவு பாதிப்படைந்து இருக்கிறாள் என்று உணர்ந்தான்.
அடித்து அடித்து ஓய்ந்தவள் ஓஓஓஓவென்று அழ ஆரம்பித்தாள். அமுதன் எதுவும் சொல்லவில்லை எழுந்து வெளியே சென்றுவிட்டான்.
அமுதனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போனதுப் போலிருந்தது.
இருவரும் தத்தம் தங்களின் யோசனையில் ஆழ்ந்திருக்க காலன் தன் வேலையைச் சரியாகச் செய்யத்தொடங்கினான்.
யோசனையிலிருந்தவன் எப்படி உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.
திடுக்கென முழித்தவன் மணியைப்பாக்க போனை எடுத்தவன், அதில் பத்து மிஸ்டுக்கால் இருந்ததைப் பார்த்தான்.
யாராய் இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அந்த எண்ணை டிரு காலரில் தேடினான். அது தன் புதுக்கல்லூரியின் துறை தலைவி என்று அறிந்து அவருக்கு கால் செய்தான்.
Hello, Mrs. Vaasugi here, என்றார். மேம் iam amudhavanan, you called me few hours before. Sorry mam I am little bit busy i unable to attend the call.
இட்ஸ் ஓகே அமுதன், திருமண வாழ்த்துகள் என்றவர். நாளைக்கு வந்து ஜாயின் பண்ணுகிறீர்களா??? அட்மிஷன் வேலை வேற இருக்கு.. if not no problem, you may take your own time என்றார்
சரி இப்படியே இருந்தா இரண்டுப்பேருக்கும் பையித்தியம் பிடிச்சிரும் என்று எண்ணியவன்.
இல்ல மேம் நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன் என்றவன், நன்றி கூறி போனை வைத்தான்.
மணி 6.30 மாலை....
முகம் கழுவிக்கொண்டு வந்தவன், இளா குழந்தைப்போல் தலையணையைக் கட்டிக் கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள். பார்த்தவனின் மனம் சற்று நிம்மதியாய் இருந்தது.
எழுப்பாமல் தனக்கு காபி கலக்கியவன், பால்கனியில் போய் நின்றுக்கொண்டு பழசை அசைப்போட்டு கொண்டிருந்தான்.
அவனுக்கு சென்னை ஒன்றும் புதியதில்லை முதுகலை IIT யில் தான் படித்தான். ஆனால் ஏனோ இந்த ஊரின் மீது அவனுக்கு அவ்வளவு ஒன்றுதல் இல்லை. தன் ஊரு தன் மக்கள் என்று தான் வாழவேண்டும் ஆசை.
எல்லாம் பனிமலருக்காகத் தான்.
தனக்காக இல்லையென்றாலும் தன்னவளுக்காக வந்தவனின் வாழ்க்கை இங்கே நிரந்திரமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.
நான் என்ன பனி பண்ணேன், ஏன் இப்படி பண்ண என்று கண்ணீரோடு காற்றிடம் பேசிக்கொண்டிருந்தான்.
உனக்காக தான இந்த ஊருக்கு வந்தேன், நீ கஷ்டப்படக்கூடாதுனு தான இந்த வீட்ட வாங்கினேன். Interior design, painting எல்லாம் பனியின் பிடித்தங்கள், எல்லாம் உனக்காக தான எனக்கு பிடிச்ச விசியத்தெல்லாம் விட்டேன் ஏன்டி இப்படி பண்ண என்றவனின் மனம் கணத்துப்போயிருந்தது.
எனக்கு பசிக்குது,,, என்ற சத்தத்தைக்கேட்டு திடுக்கிட்டவன், இவ எப்ப வந்தா ஒரு வேளை எல்லாம் கேட்டிருப்பாலோ என்று எண்ணி அவளை மிரச்சியுடன் பார்த்தான்.
தொடரும்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN