நாம்-4

sagimoli

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் -4.
மருத்துவமனையில்..........
ஒரு நிமிடம் இளாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஆமா நாம்ம இப்ப எங்க இருக்கோம் என்று விழித்தவளுக்கு தன் அருகில் வாகினி தன் கையை ஆறுதலாய் பற்றி இருப்பதைப் பார்த்தவள், வாகினியிடம் அம்மா என்றாள். வாகினி அழுதுக்கொண்டே இருந்தாள்.
வாகி!!! எனக்கு ஒன்றும் புரியல என்று கூறி எழுந்தப்போது தான் தன் கழுத்திலிருந்து வெளிவந்த தாலி கண்ணில்பட்டது.
இளாவிற்கு அப்போது தான் தனக்கு திருமணமானது உண்மை என உரைத்தது.
அமுதன் தனக்குத்தாலிக் கட்டிய அதிர்ச்சியில் இளா அங்கு மயங்கி விழுந்தவள் தான். அதன் பிறகு இப்போது தான் கண்விழித்தாள்.
அம்மா, அப்பா அத்த சரண்யா பனி பாட்டி தாத்தா எல்லாம் எங்க வாகி..... என்றாள். வாகினி
அழுதுக்கொண்டே நின்றிருந்தாள் வாகினிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை இளாவைப் பாவமாகப் பார்த்திருந்தாள்.
கதவுத்தட்டும் ஒலிக்கேட்டு இருவரும் அங்கு உள்ளே வந்த அமுதனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
டாக்டர், இப்ப ஓ.கே ஆயிடாலாம் எனவே டிஸ்டார்ஜ் பண்ணிக்கலாம் என்று சொல்லிடாங்க என்றான், வாகினியைப் பார்த்து.
என்ன வாகு நான் ஒருத்தி இங்க காட்டுக்கத்து கத்திட்டு இருக்கேன் அவனிடம் என்ன பேச்சு என்றாள்.
என்ன கேட்ட, எங்க தாத்தா பாட்டி அப்பா அம்மா னு தான . இனி உனக்குகோ எனக்கோ யாரும் வரமாட்டாங்க, சரியா???? சும்மா சும்மா கேள்வி கேட்காம சீக்கிரமா கிளம்பு என்றான்.
நான் எதுக்கு உன்கூட வரனும். என்னாள் எல்லாம் நீ இருக்குற இடத்திற்கு வர முடியாது. நான் இப்ப வீட்டுக்குப் போகனும் என்றாள்.
போய் தான் பாரேன் என்றான் அமுதன்.
நீ யாரு எனக்கு ஆடர் போட என்றாள் இளா.
அங்ங்ங்ங்.... நீ இப்ப வெறும் இளவேனில் இல்ல திருமதி. இளவேனில் அமுதவானன்.நியாபகம் வச்சிட்டு பேசு என்றான்.
எப்படி எப்படி ஒரு பெண்ணின் இஷ்டமில்லாமல் நீங்க தாலி கட்டுவீங்களாம், நாங்க கணவனே கண்கண்ட தெய்வம்னு உங்கப்பின்னாடியே வரனுமா.. என்னளெல்லாம் முடியாது என்றவள் எனக்கு வீட்டுக்கு போகனும் என்று வாகினியைப் பார்த்தவள், வாகினி இளா சொன்னா கேளு பிளிஸ் என்றாள்.
இப்ப நீ என்கூட வரயா இல்லயா என்றாள். சங்கடமாக அமுதனைப்பார்த்த வாகினியை அவன் போயிட்டு வா என்று கண் சிமிட்டினான். எப்படியும் என்கிட்ட தான வரனும் என்றான் இளாவிடம்.
இளா கோபப்பார்வை வீசிவிட்டு சென்றாள். வாகினியின் பெற்றோருடன் இளா தன் வீட்டிற்குச் சென்றாள்.

வீட்டின் வாசல் அருகே சென்றவளை, உள்ள வந்த கை கால வெட்டி விடுவேன் பாத்துக்கோ என்றார் சகாதேவன். வாகினியும் அவள் பெற்றோரும் வெளியே நின்றுந்திருந்தனர்.
அப்பா.... அப்பாவது ஒன்னாவது ஒழுங்க வீட்ட விட்டு வெளியே போடி..
என் மானத்த கெடுக்கவே பிறந்திருக்கவ என்றார்.
இளா, அப்பா நான் என்னப்பா தப்பு பண்ணினேன்.என் மேல எந்த தப்பும் இல்லப்பா என்றாள்.
அம்மா நீயாச்சும் சொல்லேன் என்றாள், சாரதா அழுதுக்கொண்டே நின்றிருந்தார்.
என்னடி பண்ணல, அந்தப் புள்ள முகத்தப்பாருடி என்ன தப்பு பண்ணுச்சி அது எல்லார் முன்னாடியும் அவமானம் பட வச்சிடியே என்றவரிடம்
நான் என்னப்பா பண்ணினேன் பண்ணதெல்லாம் அவன், எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லப்பா என்றாள்.
நீ மட்டும் தான் காரணம் உங்க அக்காவக் கட்டிக்கப்போறவன் முன்னாடி அடக்க ஒடுக்கமா நிக்கனும் வளைய வளைய அந்தப்பையன் முன்னாடி வந்து அவன மயக்கிட்ட
என்றார்.
இளாவால் அவர் சொன்ன வார்த்தையைக் கேட்கமுடியாமல் அப்பா போதும் பா, என்னால முடியல.... என் மேல உங்களுக்கு நம்பிக்கையே இல்லையா அப்பா, நான் போய் இப்படி பண்ணியிருப்பேனாச் சொல்லுங்க என்றாள்.
அதான் நல்லா பண்ணிட்டியே, இனி அந்த புள்ளய யாரு கல்யாணம் பண்ணிப்பா அவ எவ்வளவு மனசு ஒடிஞ்சுப் போயிருப்பா. கொஞ்சம்மாவது உனக்கு மனசாட்சினு இருந்தா தயவுச்செய்து வீட்ட விட்டுப்போ என்றார்.
பனி நீயுமா இத நம்பற என்றாள் அவளைப் பார்த்து, பனிமலர் விரத்தியாய் இளாவைப்பார்த்து எப்படி இளா எல்லாம் பண்ணிட்டு நல்லவமாறி இப்படி நடிக்கிறாய் என்றாள்.
இளாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை தன்னை நம்பு ஒரே ஜீவனும் இப்படி தன்னை நம்பவில்லையே என்று அழுதுக்கொண்டே நின்றிருந்தாள்.
கடைசியாகத் தன் தாயைப்பார்த்தாள் இவர் மட்டும் என்ன தன்னை நம்பி விடவா போகிறார் என்று நினைத்தவள் அப்படியே கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தாள்.
இப்ப வெளியப் போறயா இல்லயா என்று கை ஓங்கியவரை ஒரு கரம் தடுத்தது.
அமுதன் தான் இளாவைப்பார்த்து இதுக்கு தான் அப்பவே சொன்னேன் என்றான்.
நீங்க நினைக்கறப்பெல்லாம் அடிக்க இனி அவ உங்க மகளில்லை. என்னோட மனைவி. என் மனைவியை தொட்டுப்பேசுற உரிமை இனி எனக்கு மட்டும் தான் மீறினால் என்னப்பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்றவன், இனி என் பொண்டாட்டி உங்க வீட்டு வாசப்படிய நீங்களே வந்துக்கூப்புற வர மிதிக்க மாட்டாம் என்றான்.
சகாதேவன் கண்டிப்பா நீங்க நல்லாவே இருக்கமாட்டிங்கடா என்று சாபமளித்தார்.
இளாவிற்கோ தன்னை அமுதன் காப்பாற்றியதோ தன் தந்தையிடம் பேசியதோ பின்பு தன்னை அவன் காரில் ஏற்றியதையோ, எதுவும் தெரியவில்லை.
அவள் நினைப்பு முழுவதும் தன்னை ஒருவர்க்கூட நம்பவில்லை என்பதுதான். தான் இந்த இருபது வருட வாழ்க்கையில் ஒருவரிடம் கூடவா நம்பிக்கையுடன் நடந்துக்கொள்ளவில்லை என்று நினைத்து அழுதுக்கொண்டிருந்தாள், யாரோ நெஞ்சில் அணி அடித்ததுப்போலிருந்தது....
தன் நம்பிக்கையே அமுதன்தான் என இந்தப்பேதைக்கு எப்போதுப் புரியுமோ.....
"அரவம் இல்லா காட்டில் தனித்து விடப்பட்ட மான்குட்டிப் போல் என் மனம் திக்காடுதே"
சென்னைத் தங்களை அன்புடன் வரவேற்கிறது.....
எதுவும் சொல்லத்தெரியாமல் இருஉள்ளங்களும் தங்களின் எண்ணத்தை எங்கோ சிதறவிட்டுக்கொண்டிருந்தன......
அமுதனக்கு இந்த 7 மணி நேர கார் பயணம் எப்படி இருந்தது என்று கேட்டால் வருத்தம் மட்டுமே சூழ்ந்திருந்தது எனலாம்.
இரவு 10 மணி
அமுதன் ஒரு காரிலும் வாகினியின் பெற்றோர் ஒரு காரிலும் வந்திருந்தனர்.
அமுதன் தன் காரை ஒரு சின்ன ஹோட்டலில் நிறுத்தினான். பின் இருக்கையைப்பார்த்தான், வாகினியின் மடியில் இளா அழுது அழுது ஒய்ந்திருந்ததுத் தெரிந்தது. மெதுவாக வாகினியை எழுப்பியவன் இளாவா கூட்டிட்டு சாப்பட வா நானும் உன் அப்பா அம்மாவும் முன்னாடிப் போறோம் என்றான்.
வாகினி சரி என்றாள். மெதுவாக இளாவை எழுப்பியவள். இளா எழுந்தரி சாப்பட வா.இல்ல வேண்டாம் எனக்கு என்றாள்.
வாகினி, இப்ப நீ சாப்படாமா இருந்த இங்க எதாவது மாற போகுதா எதுவும் இல்ல.... Just accept the reality இளா.. நான் உன்ன சார் கூட உடனே குடும்பம் நடத்தச்சொல்லவில்லை கொஞ்சம் யோசி அவர் எந்த காரணம் இல்லாம இப்படி பண்ணமாட்டார்.
எனக்குத் தெரியும் கொஞ்ச நாள் ஆகும் நீ மீண்டு வர, என்ன காரணமா இருக்கும் அவர் இப்படி பண்ண என்று யோசி இளா.. என்றாள்.
அதுக்காவது கொஞ்சம் சாப்படுடி.... இவ்வளவு பிடிவாதமா இருக்காத.. எனக்காகவாது கொஞ்சம் சாப்படு எனக்குத் தெரியும் நீ பசித்தாங்க மாட்டாய் என்று..... வா... என்று அவளை அழைத்துச் சென்றாள்.
இளாவிற்கு தனக்கு இருக்கும் ஒரே ஆறுதலும் தற்போது வாகினித்தான் என்று நினைத்தவள் எழுந்து வந்தாள்.
காரைவிட்டு கீழே இறங்கியவர்கள் சாப்பிடச் சென்றனர். கடமைக்கே என்று கொறித்தனர்.பின் பில் அமுதன் தானே ப்பேபண்றேன் சார் என்று அவர் மறுத்தும் கட்டிவிட்டு வந்தான்.
வாகினியின் பெற்றோர் வாகினியிடம் இளா கூட இருந்திட்டு காலையில வரயா... இல்ல இப்பவே வரயா என்றனர்.
வாகினி இல்ல அப்பா உங்கக்கூடவே வரேன் என்றவள் சார் ஒரு நிமிஷம் உங்கிட்ட பேசனும் என்றாள் அமுதனிடம்...
சொல்லு வாகினி..... என்றான் அமுதன். சார், நீங்க எந்த மோட்டிவ்ல இளாவ கல்யாணம் பண்ணீங்கனு எனக்குத்தெரியாது.. பட் கான்ப்பாம் மா அவள நீங்க லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணல. Iam damn sure about it but பிளிஸ், அவ ரொம்ப அடிப்பட்டுடா அவளுக்கு இருக்கறது ஒரு சின்ன உலகம் சார் அதுல அவ வச்சியிருக்கறது ஒரு சில பேர் தான்.
அப்ப அப்ப அவ மூட் விங்ஸ் , மாறும் ஆன ரொம்ப நல்லவ சார் . நல்லப்பாத்துக்கோங்க சார் என்று அவனிடம் வேண்டினாள்.
அமுதன் எதுவும் பேசவில்லை கண்கள் சிறியதாய் கலங்கி இருந்தது.வாகினி சார் நான் எதன கஷ்டம் பண்ணுகிற மாறி பேசியிருந்தா சாரி சார் என்றவளிடம்
இல்ல வாகினி எனக்கு தான் கொஞ்சம் இமோஷனல் ஆயிடுச்சி. நீ சொன்னதெல்லாம் உண்மை தான் ஒரு வழில நான் தான் முதல் காரணம் அவ இப்படி லோன்லீயா பீல் பண்ண பட் இப்ப இவ வாழ்க்கைய வெறுக்கவும் நான் காரணம் ஆயிட்டேன். நான் வேணும் என்று எதும் பண்ணல பட் சூழ்நிலை கைதியாயிடேன். கண்டிப்பா அதுக்கான ரீசன் ஒரு நாள் அவ புரிஞ்சிப்பா என்றவன், தேங்க்ஸ் வாகினி. அவளுடன் எப்போது நீ இருக்கவேண்டும் என்றான்.
சார், நீங்க சொல்லலனாலும் she is my everything சார். I love her so much than any thing சார் என்றாள் .
அமுதனிடம் பேசியவள் இளாவிடம் வந்து நான் வீட்டுக்கு போறேன் இளா, நீ பத்திரமா இரு எது வேணுமானாலும் கால் பண்ணு. நான் காலையில வரேன் சரியா என்றவள் இளா அவளை கெட்டியாக கட்டியனணைத்துக்கொண்டாள். இளா, வாகு பிளிஸ் , என்கூடவே இருவே இன்னைக்கு மட்டும் என்றாள்.
வாகினி, இல்ல இளா இங்க பாரு நான் உன்கூட எவள்ளவு நேரம் இருக்க முடியும் . நீ தான் பேஸ் பண்ணனும். நீ தான் இந்த சூழ்நிலையை சாமாளிக்கனும். சார் கண்டிப்பா உன்னப்புரிச்சிப்பார்.
இளா விரக்தியாகப் புன்னகைத்தாள்.
வாகினி இளாவிடமிருந்து விடைப்பெற்று அமுதனிடம் வருகிறேன் சார். நான் மார்னிங் வரேன் ,பாத்துக்கோங்க என்றவள் தன் பெற்றோரிடம் சென்றவள் போலாம் அப்பா என்றாள்.
வாகினியின் அம்மா இளாவிடம் எதுவும் நினைக்காத, இளா நான் இருக்கேன் உன் அம்மாவா எந்த பிரச்சனையினாலும் என்கிட்ட நீ தாராளமா சொல்லலாம் என்றவள் பத்திரமா இரு மார்னிங் வருகிறோம் நானும் வாகினியும் என்றவர் அமுதனிடம் பாத்துக்கொள்ளுங்கள் தம்பி என்று கிளம்பிவிட்டார்.
வாகினியின் தந்தையும் அமுதனிடம் விடைப்பெற்றவர் காரை செலுத்திக்கொண்டு கிளம்பிவிட்டனர்.
இளா வாகினி கிளம்பும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்...
அமுதன் இளாவிடம் கிளம்பலாமா என்றான் இளா எதுவும் கூறாமல் காரில் ஏறினாள்.
30 நிமிடத்தில் தங்கள் அப்பாட்மண்டிற்கு வந்திருந்தினர். அமுதன் கார் பார்க்கிங் செய்துவிட்டு இளாவிடம் வா போலாம் என்றான். எதுவும் சொல்லாமல் அவன் பின்பு லிப்டில் சென்றவள், அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
அமுதன் கதவைத்திறந்து லைட்டை ஆன் செய்தான். அப்போது தான் இளா வெளியே நிற்பதை அறிந்தவன் உள்ள வா என்றான்.
நினைவு வந்தவளாக உள்ளே வந்தவள் எதுவும் கூறாமல் நின்றுக்கொண்டிருந்தாள்.
அமுதன் அங்க தான் பேட் ரூம் இருக்கு நீ அங்க ரெஸ்ட் எடுத்துக்கோ நான் இங்க ஹால்ல இருந்துக்குறேன் என்றவன் தன் வேட்டி சட்டையை களைத்து விட்டு குளித்துமுடித்து டீ சர்ட ஷாட்ஸ்க்கு மாறினான்.
உனக்கு வேணுனா அந்த கப்போர்ட்ல சரண் நைட் டிரஸ் இருக்கு குளிச்சிட்டு போட்டுக்கோ குட் நைட்.... என்று சென்றுவிட்டான்.
அவன் வெளியே சென்றவுடன் படார் என்று கதவை சாத்தியவள். குளித்து உடைமாற்றி வந்து பெட்டில் படுத்தவள் எதுவும் புரியாமல் அடுத்து என்ன தன் வாழ்க்கை தனக்குத் தர காத்துக்கொண்டிருக்கிறது என்று நினைத்து அழுதுக்கொண்டிருந்தாள்.
அமுதன் இளா படார் என்று கதவை சாத்தியதில் கோபம் கொண்டாலும் எதுவும் சொல்லாமல் வந்து டி.வி யை ஆன் செய்து சன் மியுசிக்கை ஒலிக்க விட்டு விட்டத்தைப்பார்த்துப் படுத்திருந்தான்.
இரு உள்ளங்களும் தத்தம் யோசனையில் மூழ்கியிருக்க, மணி4 போல தான் உறங்கியிருந்தனர்.
காலை 11 மணியளவில் கண்விழித்த அமுதன் பல் தேய்க்க பெட் ரூம் அருகே சென்று கதவைத் தட்டினான். கை வைத்ததும், திறந்த கதவைத் தள்ளியவன் அங்கே இளா இரத்த வெள்ளத்தில் மயங்கியிருப்பதைப் பார்த்து உயிர் ஒரு நிமிடம் உறைந்தது அவனுக்கு.
தொடரும்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN