ஞாபகங்கள் தாலாட்டும் 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஞாபகங்கள் தாலாட்டும் 1

சென்னையின் மிக பிரலமான அந்த சூப்பர்மார்க்கெட்டில் தனக்கு வேண்டிய பொருட்களை கவனமாக தேடிக்கொண்டிருந்தாள் நந்தினி. தன்னுடைய டிராலியை தள்ளிக்கொண்டு முன்னே செல்கையில் வேறு ஒருவருடைய டிராலியில் தெரியாமல் இடித்துவிட்டு பதற்றத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் அங்கே தன் உயிர் தோழி லலிதா வை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.

இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்த தோழிகள் அனைவரும் இவர்களை இரட்டையர்கள் என்றே அழைப்பர்.ஆனால் காலங்கள் செல்ல செல்ல இருவரும் தங்களின் தொடர்பை நீடிக்க முடியவில்லை. ஐந்து நெடிய ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது தான் இருவரும் சந்திக்கின்றனர்.

லலிதா," நந்து எப்படி இருக்க ? நீ தானா இது எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? உன்னை பார்த்து எவ்ளோ வருஷமாச்சு?" தொலைந்த நட்பு மீண்டும் கிடைத்த சந்தோஷம் முகத்தில் பிரதிபலிக்க கேட்ட தன் தோழியை அதே உற்சாகத்துடன் நோக்கிய நந்தினி, "நான் நல்லா இருக்கேன்டா நீ எப்படி இருக்க? உன்னோட கல்யாணத்துக்கு வர முடியலை .உன்னை பத்தி சொல்லு , இப்ப எங்க இருக்க?"

" பராவாயில்லைடா. நான் நல்லா இருக்கேன் , சந்தோஷமா இருக்கேன் .இப்ப மும்பை ல தான் தங்கிருக்கேன். லீவுக்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன்.ஒரு பையன் 3 வயசாகுது. நீ சொல்லுடா உன்னை பத்தி. உனக்கு கல்யாணமாயிடுச்சா ? உன்னவர் எப்படி இருக்காரு?" என்று கேலியுடன் வினவினாள் லலிதா.

துணிகொண்ட துடைத்தது போல் நந்தினியின் சிரிப்பு டக்கென்று நின்றது.தன் தோழி அறியா வண்ணம் தன் முகத்தை மறைத்தவள் அமைதியாக ," எனக்கும் அவருக்கும் கல்யாணமாகி 4 வருஷம் முடிஞ்சிருச்சு, 2 வயசுல ஒரு பொண்ணு இருக்கா,நாங்க இங்க சென்னைல தான் இருக்கோம். சரி எனக்கு லேட் ஆகிடுச்சு நான் அப்பறமா உன்கிட்ட மொபைல பேசுறேன். "

வேகவேகமாக செல்பேசி எண்களை மாற்றிக்கொண்டு அவ்விடம்விட்டு நகர்ந்த தன் தோழியை கண்ட லலிதாவிற்கு அவளது நிலைகண்டு குழப்பம் பிறந்தது.தன் தோழியை புரியாமல் பார்த்துக்கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

லலிதாவிடம் ஏதோ சொல்லி தப்பித்த நந்தினி வேறு செக்க்ஷனிற்கு போய் அங்குள்ள பொருள்களை ஆராய தொடங்கினாள்.தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டிருக்கையில் ஒரு சிரிப்புசத்தம் அவளை மீண்டும் உரைய வைத்தது.

எந்த குரலை கேட்க ஏங்கினாளோ,எந்த சிரிப்பு சத்தத்திற்காக தவமிருந்தாளோ ,இப்பொழுது அதே சிரிப்பை கேட்டு உதட்டில் வறட்சி புன்னகையுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

வாங்கிய பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வெறும் கையுடன் நடந்த நந்தினியின் கால்கள் தன் போக்கில் நடந்து செல்ல நந்தினியின் மனமோ சில வருடங்கள் பின்னோக்கி சென்றது.

அப்பொழுது நந்தினி கல்லூரியில் (Bsc biotechnology) இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தாள். செயல்முறை தேர்வுகள் நடந்துகொண்டிருந்தது. அன்று தான் கடைசி தேர்வு. தன் தேர்வினை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்துவிட்ட நந்தினி வெளியே தன் தோழிகளின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தாள்.

நந்தினி யின் வகுப்புதோழி தேவகியின் செல்பேசி மெதுவாக இசைத்தது.தன் தோழியின் உடைமையிலிருந்து அவள் கைபேசியை வெளியே எடுத்த நந்தினி அது ஒரு அறியாஎண் என்பதை அறிந்து குழப்பம் கொண்டாள்.நந்தினியின் மனம் செல்லை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற பட்டிமண்றம் நடத்த அதற்குள் அது தன் சத்தத்தை நிறுத்தியிருந்தது. அப்பாடா நின்றுச்சு என்று எண்ணுகையில் மீண்டும் அடிக்க தொடங்கிய செல்லைதைரியத்தை வரவழைத்துக்கொண்டு எடுத்து பேசினாள்.
"ஹலோ தேவகி , நான் அண்ணண் பேசுறேன்மா."

" ஹலோ நான் தேவகியோட ப்ரெண்ட் நந்தினி பேசுறேன்,தேவகி லாப்ல இருக்கா , வந்ததும் பேச சொல்றேன்."
என்று கூறி கால் ஐ வைக்க போகையில் அந்த பக்கமிருந்தவர்," வச்சிடாதாமா, நான் தேவகி கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.அதுக்கு தான் அவசரமா கால் இருந்து கால் பண்ணேண்."

" ஓ சரிங்க அண்ணா, சொல்லுங்க நான் தேவகி கிட்ட சொல்லிடறேன். "

"எங்க பெரியப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு அதுனால நாங்க எல்லாரும் அவசரமா ஊருக்கு கிளம்பிட்டோம் மா. தேவகி கிட்ட இந்த விஷயத்தை சொல்லிடுங்க. அப்பறம் என் நண்பன் கௌதம் வந்து அவளை பிக்கப் பண்ணிப்பான்.இதையும் அவகிட்ட சொல்லனும்."

ஒகே அண்ணா நான் அவ வந்ததும் சொல்லிடறேன்."

"அப்பறம் ஒரு சின்ன உதவி செய்யனும் மா."

" சொல்லுங்க அண்ணா என்ன செய்யனும்?"

" கௌதம் கிட்ட தேவகி நம்பர் குடுத்துருக்கேன்.அவன் எப்ப வேணா call பண்ணுவான்.ஒரு வேலை தேவகி வர்றதுக்குள்ள பண்ணா நீ அடென்ட் பண்ணி பேசுவியாமா?"

என்னடா இது வம்பா போச்சு என்று நினைத்த நந்தினி," சரிங்க அண்ணா ."
என்று கூறி மேலும் பேச்சை வளர்காமல் காலை கட் செய்தாள்.

சிறிது நேரம் சென்ற பின் மீண்டும் தேவகியின் செல்பேசி அழைக்க அதை எடுத்த நந்தினி்," ஹலோ யாரு கௌதமா?" என்று கேட்டாள்.

அந்த பக்கமிருந்த கௌதமிர்கோ என்னடா இது என்றிருந்தது.மேலும் தொடர்ந்த நந்தினி,"ஹலோ கௌதம் தானே பேசுறது." என்று சத்தமாக கேட்டாள்.

" ஆமா நான் கௌதம் தான் பேசுறேன். ஏன் பாட்டி தேவகி வீட்லயே ஃபோன வச்சிட்டு போய்டாளா?" என்று கேட்டான்.

கோபத்தின் உச்சிக்கு சென்ற நந்தின்," ஹலோ மிஸ்டர் என் குரல கேட்டா பாட்டி குரல் மாதிரி இருக்கா?"என்று கேட்டாள்.

"உனக்கு மட்டும் என் குரல கேட்டா என்ன சின்ன பையன் குரல் மாதிரி தெரியுதா? நீ பாட்டுக்கு சொல்லு கௌதம் னு சொல்ற?" என்று எகிறினான்.

தன் தவறை உணர்ந்த நந்தினி," சாரி சாரி சார் , நான் ஐதோ டென்ஷன் ல உங்களை அப்படி மரியாதையில்லாம கூப்டுடேன்." மன்னிப்பு கேட்ட நந்தினியின் செயலில் நெகிழ்ந்த கௌதம்.," பரவாயில்லை என் நம்பர நோட் பண்ணிக்குங்க ,தேவகி வந்தா எனக்கு காலை பண்ண சொல்லுங்க,என்று கூறிவிட்டு கால் ஐ கட்செய்தான்."

சிறிது நேரத்தில் அங்கு வந்த தன் தோழியிடம் விபரத்தை கூறிய நந்தினி புறப்பட எத்தனிக்கையில் தேவகி ," நந்து என் மொபைல்ல பேலன்ஸ் இல்லை , உன்னோட மொபைல குடு நான் கௌதம் அண்ணாகிட்ட பேசிட்டு தர்றேன்" என்று கூறினாள்.

யோசனையுடனே தயங்கி தயங்கி தன் மொபைலை குடுத்த நந்தினி தேவகி பேசியவுடன் தன் வீடு நோக்கி சென்றாள்.

இவ்வாறு இருவரது எண்களும் மற்றவரிடம் இடம்மாறி இருந்தது. அதை இருவரும் அறியவுமில்லை. நாட்கள் அதன் போக்கில் சென்றுகொண்டிருந்தது.

கௌதம், நந்தினி இருவரும் தத்தமது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள். கௌதம் மூன்றாமாண்டு நானோடெக்னாலஜி( nanotechnology) படித்துக்கொண்டிருக்க ,நந்தினியோ இரண்டாம் ஆண்டு பயோடெக்னாலஜி (Biotechnology) படித்துக்கொண்டிருந்தாள்.

நந்தினி ஒரு தொண்டு நிறுவனத்தில் இணைந்து தன்னாலான உதவிகளை செய்து கொண்டிருக்கும் பெண்.ஒரு முறை " ஏ" பாசிடிவ் இரத்தம் நிறைய தேவைப்பட்டதால் தன் மொபைலில் உள்ள அணைத்து நபர்களுக்கும் விபரத்தை தெரிவித்தாள். அவளை அறியாமலேயே கௌதமிற்கு சென்றது மெசேஜ் . கௌதமிற்கும் அதே இரத்த மாதிரி என்பதால் அவனும் உடனே உதவினான்.

அவன் உதவியதற்கு நன்றி தெரிவித்து அவனை மொபைலில் அழைத்தாள்.அவளின் இந்த ஒரு செயலிற்கு பின்னாலில் வருந்தபோவது தெரியாமல்.
 

Author: yuvanika
Article Title: ஞாபகங்கள் தாலாட்டும் 1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN