ஞாபகங்கள் தாலாட்டும் 2

Avira

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் கடந்த காலத்து நினைவுகளில் மூழ்க்கியிருந்த நந்தினி தன்னை யாரோ அழைக்கும் குரல் கேட்டு சுயநினைவடைந்தாள்.
அப்பொழுதுதான் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து பார்த்தவள், தான் வழக்கமாக தன் மகளை அழைத்து வரும் சிறுவர் பூங்காவில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை அடைந்த நத்தினி தன் இல்லம் நோக்கி நடக்கலானாள்.
நந்தினி இல்லத்தை அடைந்ததும் " அம்மா.............." என்று கத்திக்கொண்டே நந்தினியின் மகள் மதுரா அவளை கட்டி அனைத்தாள்.
தன் மனவேதனை அனைத்தும் காற்றுப்போன பலூன் போல லேசானதாக உணர்ந்த நந்தினி தன் தேவதையை தன் கைகளுக்குள் பொக்கிஷமென ஏந்தி கண்ணத்தில் முத்தமிட்டாள்.
" ஏன்மா இவ்வளவு லேட்..?" என்று ஏக்கத்துடன் கேட்ட தன் மகளின் வார்த்தைகளால் குற்ற உணர்வு தோன்ற அதை மறைத்துகொண்டு பேச்சினை திசை திருப்பினாள்.
நேரம் வேகமாக செல்ல அந்த வீட்டுத் தலைவனின் வருகைக்காக அந்த இரண்டு பெண்களும் காத்திருந்தனர்.
" அம்மா..... அப்பா எப்ப வருவாங்க?"
" வந்திருவாங்க செல்லம் என் செல்லத்தை பார்காம அவங்களால இருக்க முடியாது இல்லையா?'
இருவரும் உறையாடிக்கொண்டிருந்தாலும் நந்தினியின் எண்ணங்கள் தன் இறந்தகாலத்தை நோக்கி பயணப்பட்டது.
கௌதமிடம் நன்றி சொல்வதற்காக அழைத்த நந்தினி சிறு நலம் விசாரிப்புகளுக்கு பிறகு தன் நன்றியை தெரிவித்தாள்.
" நீங்க ப்ளட் டொனேட் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப தாங்ஸ் கௌதம்."
" இதுல தாங்ஸ் சொல்ல என்ன இருக்கு நந்தினி என்னோட ப்ளட் குரூப் னால நான் டொனேட் பண்ணேன் இது அவ்ளோ பெரிய விஷயமெல்லாம் இல்லை."
" உங்களுக்கு தெரியாது கௌதம் நிறைய பேர் டொனேட் பண்ண விரும்ப மாட்டாங்க ."
" ம்....சரி உங்களை பத்தி சொல்லுங்க நீங்க என்ன படிக்கிறீங்க? "
" ம்...நான் பயோடெக்னாலஜி செகன்ட் இயர் படிக்கிறேன்."
" பார்ரா......ஒரு கேள்வி கேட்டா அதுக்கு மட்டும் தான் பதில் சொல்வீங்களா???"
" அப்பறம் வேற என்ன சொல்லனும்?"
" உங்களை பத்தி சொல்லுங்க.."
" முதல்ல நீங்க வாங்க போங்க கூப்பிட வேணாமே உங்களை விட நான் சின்ன பொண்ணு தான்."
" ஓ..எனக்கு பிரச்சினை இல்லை நந்தினி."
" என்ன பா இது உடனே ஒத்துக்கிட்டீங்க? "
" அட இன்னும் ஐஞ்சு நிமிஷத்தில நானாவே அப்படி தான் கூப்பிட்டிருப்பேன்."
" ம்....."
" என்னாச்சு நந்தினி தப்பா எடுத்துக்கிட்டீயா??"
" இல்லை இல்லை கௌதம் என்னோட சொந்த ஊர் திருநெல்வேலி பக்கத்தில வள்ளியூர்.நான் இப்போ சென்னை செயின்ட் லூயிஸ் காலேஜ்ல ஹாஸ்டல்ல தங்கிதான் படிக்கிறேன் .இப்போ ஊருக்கு வந்திருகேன்.நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு."
" அட சூப்பர் அப்போ பயங்கர செல்லம்னு சொல்லு."
" அதான் இல்லை செம ஸ்டிக்ட் ஆபிசர் எங்க அப்பா."
" ஓ.....அப்போ லீவ் முடிஞ்சு ஊருக்கு போயிடுவியா?"
" ம்...ஆமா இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்குல ஒரு மாசம் செமஸ்டர் லீவ் ல வந்தேன் ,"
" ஓ......"
இப்படியாக அவர்களின் சம்பாஷனைகள் தொடர்ந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு நந்தினி," ஹே....இருங்க கௌதம் யாரோ வௌளிய லைட் போடுறாங்க நான் யாருனு பார்த்திட்டு வரேன்,"என்றாள்.
" ஹே.....இரு இரு....அது யாரோ இல்லை நம்ம சூரிய பகவான் தான்."
"என்ன கிண்டலா , இப்பதான் பத்து மணி ஆச்சு அதுக்குள்ள எப்படி விடியும?" என்று கூறிக்கொண்டே ஜன்னல் திரையை விளக்கி பார்க்க அங்கே தனது ஆட்சியை நிலைநாட்டும் முனைப்புடன் சூரிய பகவான் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தார்.
" ஹே.....நிஜமாவே விடிஞ்சிடுச்சு நான் அப்பறம் பேசறன் பை பை," என்று கூறி கௌதமின் பதிலிற்கு காத்திராமல் கால் ஐ கட் செய்தாள் நந்தினி.அவள் கட் செய்து சிறிது நேரம் வரை கௌதமின் உதட்டில் மென்னகை தவழ்ந்த வண்ணம் இருந்தது.
வீட்டு கட்டுப்பாட்டில் வளர்க்ப்பட்ட நந்தினி முதல் முறையாக குடும்பம் அல்லாத வேறொரு ஆணுடன் அதிக நேரம் பேசுவது அதுவே முதல் முறை.அதனால் அன்று முழுவதும் அவள் மிகுந்த உற்சாகமாகவே இருந்தாள்.

மெது மெதுவாக அவர்களது நட்பு ஆழமான உறவாக மாறத்துவங்கியது,இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பதை வெளிப்படுத்தவில்லை இருப்பினும் அவர்களால் மற்றவரை உணர முடிந்தது.
நந்தினி கௌதமின் இன்றியமையாதவளாக மாறினாள்.காலையில் அவனை எழுப்பும் அலாரம் முதல் இரவு அவனது குட் நைட் வரை அனைத்திலும் அவள் நிறைந்திருந்தாள்.
நந்தினியிடம் பேசாமல் கௌதமால் ஒரு நாள் கூட இருக்க முடியாது, இப்படியாக சென்று கொண்டிருந்தவர்களின் வாழ்வில் தங்கள் காதலை உணரும் தருணமும் வந்தது.
கௌதம் மூன்றாம் வருடம் முடித்துவிட்டு இறுதியாண்டில் கால் பதித்தான்.அதற்கு அவனுக்கு தரப்பட்ட 2 மாத விடுமுறையில் அவன் தந்தையின் அழைப்பை ஏற்று அவரின் தொழில் உதவிக்காக மும்பை செல்ல நேர்ந்தது.
அந்த நாட்களில் அவனால் மொபைலை உபயோகிக்க முடியாமல் போனது, அந்த நாட்களில் நந்தினியின் நிலை மிகவும் மோசமாக இருந்தது,அவளால் அவனை நல்லவன் என்று நம்பவும் முடியாமல் , கெட்டவன் என்று எண்ணி ஒதுங்கவும் முடியாமல் மிகவும் துயரம் கொண்டாள்.
கௌதமின் நிலையோ வேறாக இருந்தது, அவனால் நந்தினியிடம் பேச நேரம் ஒதுக்க முடியவில்லை ஆனால் அவளிடம் பேசாமல் அவன் மனதில் ஒரு வெற்றிடம் உருவானது.அதன்.காரணம் நந்தினி தான் என்று அவன் உணரவும் இல்லை.
இரண்டு மாதங்கள் கௌதமிற்கு இரண்டு நிமிடங்களாகவும் நந்தினிக்கு இரண்டு யுகங்களாகவும் சென்றது.மீண்டும் தன் கல்லூரி வாழ்வை தொடங்கிய கௌதம் தன் வழக்கம் போல நந்தினியிடம் பேசலானான், ஆனால் நந்தினியின் மனமோ அவனுடன் பேச நந்தினிக்கு தடை விதித்தது.
பெண்கள் எப்பொழுதும் தன் மனதில் உள்ள காதலையும் , ,பயத்தையும் வெளியே சொல்ல தயங்குவார்கள். ஒரு முறை ஏமாற்றம் அடைந்தாள் மீண்டும் அந்த உறவில் பழைய நிலையை அடைய அவர்கள் மனம் எச்சரிக்கை செய்யும்.
நந்தினியும் அதே போல தான் கௌதமின் மீது அவளின் நம்பிக்கை குறையவில்லை ஆனால் அந்த உறவு அவளுக்கு பல காயங்கள் கொடுக்கும் என்று அவள் நினைத்தாள்.அதனால் அவள் கௌதமின் போன் கால்களை(phone call) எடுக்கவில்லை.
நந்தினியின் இந்த ஒதுக்கத்தை உணர்ந்த கௌதமின் மனம் முதல் முறையாக அவளை தேடத்துவங்கியது.
இதுவரை இருவரும் தங்களது புகைப்படங்களை பரிமாரிக்கொள்ளவில்லை , அந்த சிந்தை அவர்களுக்கு ஏற்பட்டதும் இல்லை, ஆனால் இன்றோ கௌதமின் மனதில் நந்தினியை காண வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
இது நாள் வரை அவளை புகைப்படத்தை கூட அனுப்பக்கேட்காத அவனது முட்டாள் தனத்தை நினைத்து வருந்தினான்.
மீண்டும் மீண்டும் நந்தினியை தொடர்பு கொண்டான். அவனின் தொடர் முயற்சி வீண் போகவில்லை அவள் பத்து தினங்களுக்கு பிறகு கௌதமின் அழைப்பை ஏற்றாள்.
அழைப்பை ஏற்ற நந்தினியும் பேசவில்லை, அழைத்த கௌதமும் பேசவில்லை இருவரிடமும் ஒரு.வித அமைதி நிலவியது, அந்த மௌனம் கௌதமை மேலும் வாட்ட அதற்கு.மேல் தாங்க முடியாதவன்," நந்து....... ப்ளீஸ்... என்கிட்ட பேசு, I'm missing u badly da...., நான் உன்னை பார்க்கனும் உடனே எங்க வரனும் , எப்ப பார்கலாம் னு நீ சொல்லு , பேசுடா.... ப்ளீஸ்டா.....," என்று தன் இத்தனை நாள் ஏக்கத்தை குரலில் வெளிப்படுத்தினான்.
நந்தினியின் நிலையோ வேறாக இருந்தது, கௌதமிடமிருந்து இப்படி ஒன்றை அவள் எதிர்பார்க்கவில்லை," கௌதம்.....நீதான் பேசறியா????என்னால நம்ப முடியலை...? என்னை திடீர்னு இவ்ளோ எமோஷனலா பேசுற???," என்று தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினாள். கவனமாக அவன் கேட்ட கேள்விக்கு விடையளிப்பதை தவிர்த்துவிட்டு.
மீண்டும் அமைதியாக இருந்த கௌதம்," நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலை நந்து நீ...," என்றவனது குரலில் முதலில் இருந்த குழைவுக்கு பதில் சிறு வேதனை கலந்திருந்தது.
" ம்ம்ம்.....சரி கௌதம் இன்னைக்கு சாய்ந்தரம் 5 மணிக்கு பெசன்ட் நகர் பீச் ல பார்களாம், " என்ற கூறிய நந்தினியின் குரலில் இருந்தது சலிப்பா??சோசகமா???என்று கௌதமிற்கு புரியவில்லை, இருந்தும் இருவரும் அந்த மாலை பொழுதிற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
மாலை 4.30 மணிக்கே பீச்சில் கௌதமிற்காக காத்திருந்தாள் நந்தினி, கௌதமை இதுவரை அவள் பார்ததில்லை என்பதாலும் அவனின் உருவத்தை பல விதமாக கற்பனை செய்ய தொடங்கியது நந்தினியின் மனம்.
"நந்நு டார்லிங்........, " என்று நந்தினியின் பின்னாலிருந்து இருகரம் காதலுடன் அனைத்துக்கொள்ள அவளின் கழுத்துவலைவில் முகம் பதித்து தன் வேலையின்சோம்பலையும் நந்தினியின் சிந்தனையும் ஒரு சேர விரட்டி அடித்தான் அவளின் அன்பு கணவன் சிவா என்ற சிவச்சந்திரன்.
 

Author: Avira
Article Title: ஞாபகங்கள் தாலாட்டும் 2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN