மாயம் 23

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அழகியே
உன்
அழகால்
கவிழ்ந்தேனடி...

அடிமேல் அடி வைத்து ரிஷி ஶ்ரீயை நெருங்க ஶ்ரீயோ மெதுவாக அவ்விடத்திலிருந்து அசையத்தொடங்கினாள்.... இரு காதலர்களும் கபடியாட எண்ணிஅங்கிருந்து அசைய கடைசியில் வாட்ரோப்பின் அருகில் வந்த ஶ்ரீ வேண்டுமென்றே ரிஷியின் கைகளில் சிக்கினாள்... சிக்கியவளை வளைத்து பிடித்தவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து கூந்தலின் வாசம் பிடிக்கத்தொடங்கினான்...

அதை பெண்ணவள் ரசித்தபடியிருக்க ரிஷியோ

“அம்லு ஏன்டி இவ்வளவு அழகா பொறந்த?? உன்னை பார்த்ததுல இருந்து பைத்தியமா திரியிறேன்டி... அதுவும் இன்னைக்கு சாரியில் பார்த்ததும் கவுந்துட்டேன் டி... நீ சாரியில நடந்து வந்தப்போ ஏதோ சிலையே உயிரோட எழும்பி வந்த மாதிரி இருந்துச்சு.. பா.... ஐயம் ப்ரீஸ்ட்..... ஒரு நிமிஷம் இவளை பெத்தாங்களா இல்லை செதுக்குனாங்களானு தோணுச்சு..... அது எல்லாத்தையும் விட நீ சிரிக்கும் போது உன் கன்னத்துல விழுகிற குழி என்னை புதைகுழியா உள்ளே இழுத்துருச்சு... எனக்குனே உன்னை எங்க அத்தை பெத்தாங்க போல.... நீ வெட்கப்படும்போது சிவக்குற உன் கன்னத்தை அப்படியே கடிச்சி சாப்பிட்டா என்னான்னு தோனும்.... நீ பேசும்போது உருண்டோடுற உன்கண்களை பார்க்கும் போது அந்த மைவிழிகளை என் கண்ணோடு கலக்கச்செய்யனும்னு தோனும்... முகத்துக்கு நடுவில ஒய்யார இருந்துக்கிட்டு நான் தான் ராஜாங்குற மாதிரி கிரீடமாக அந்த வெள்ளைக்கல்லு மூக்குத்தியை போட்டுக்கிட்டிருக்க அந்த மூக்கை பார்க்கும் போது அதை என்னோட மூக்கால் உரசனும்னு தோனும்... அப்புறம் அந்த காதோடு என் வாயை வைத்து அந்த காதுக்குள்ள ரகசியம் பேசனும்னு தோணும்.....
கடைசியா எப்பவும் ஈரமாகவும் அடிக்கடி அந்த முத்துப்பல்லுக்கிட்ட சிக்கிக்கிட்டு அல்லாடுற அந்த செவ்விதழ்களை ருசிப்பார்த்து அனுபவிக்கனும்னு தோனும்.... இப்படி உன்ன பார்க்கிறப்போ உன்னை முழுசா எனக்கு சொந்தமாக்கிடனும்னு தோனுது..... இது வரைக்கும் எத்தனையோ பேரை பாரத்திருக்கேன்....... ஆனா உன்னை பார்க்கும் போது என் மனசுக்கு ஏதோ ஒரு இனம்புரியாத சந்தோஷம்..... அதை வார்த்தையால சொல்லி முடியாது.... சொல்லி முடியாது அப்படீங்கிறத விட சொல்லத்தெரியலை... அப்படி என்ன மாயம் மந்திரம் பண்ண அம்லு..... ஒவ்வொரு நாளும் என்னை இப்படி பைத்தியாம அலைய வைக்கிற.... நைட்டு சரியா தூக்கம் வரமாட்டேன்குது..... அப்படியே தூங்கிட்டாலும் கனவுல வந்து தூங்காதடானு தொல்லை பண்ணுற..... சாப்பிடவே தோன மாட்டேங்குது.... இப்பவே இப்படினா நீ முழுசா எனக்கு சொந்தமான பிறகு???”

“அத்தான் நான் ஒன்னு சொல்லனும்....”

“சொல்லு அம்லு...”

“நீங்க ஒரு நல்ல டாக்டரை கன்சல்ட் பண்ணுறது நல்லதுனு தோணுது...”

“ஏன் அம்லு அப்படி சொல்லுற???”

“இல்லை சாப்பிட முடியல தூங்க முடியலனு சொல்லுறீங்களே..... ஏதாவது புது வெரைட்டி வியாதியாக இருக்கப்போகுது... இப்போ தான் டிசைன் டிசைன்னா வியாதியெல்லாம் சொல்லுறாங்களே..... அதுல ஏதாவது ஒன்னா இருக்கப்போகுது.. நீங்க டாக்டரை சீக்கிரம் போய் பார்க்கிறது நல்லதுனு தோனுது....”

“அடிப்பாவி.... நான் எவ்வளவு பீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன்... நீ என்னடானா டாக்டரை போய் பாருனா சொல்லுற???? வரவர உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிருச்சி.. இரு உன் மொத்த கொழுப்பையும் குறைக்கிறேன்...” என்றுவிட்டு அணைப்பை இறுக்கியவன் முன்னே எக்கி கன்னத்தில் இதழ் பதித்தான்....
அதை விரும்பி பெற்றுக்கொண்டவள் ரிஷியை வம்பிழுக்கும் விதமாக

“உங்க ஊருல இப்படிதான் கொழுப்பை குறைப்பாங்களா அய்த்தான்.... நான் கூட வேற என்னமோ நினைச்சேன்....” என்று அந்த வேற என்னமோ என்ற வார்த்தையை அழுத்தி கூறினாள் ஶ்ரீ...

அதை புரிந்து கொண்ட ரிஷி
“அது என்ன ஶ்ரீ அந்த வேற என்னமோ???? எனக்கு தெரியாதே...”

“வாத்திக்கே சப்ஜெக்டை பத்தி தெரியலைனா ஸ்டூடண்ட் எப்படி சப்ஜெக்டை கத்துக்கிறது?? சோ பேட்..” என்று அங்தலாய்த்தவளை தனக்கு நேரெதிரே திருப்பியவன் அவள் இடுப்பை வளைத்து அருகில் இழுத்து

“டீச்சருக்கு தெரியாத விஷயம் கூட ஸ்டூண்டுக்கு தெரிஞ்சிருக்கலாம்..... அதை ஸ்டூடண்ட் டீச்சருக்கு சொல்லிக்கொடுக்கலாம்... இப்போ இந்த ஸ்டூடண்ட் அதை டீச்சருக்கு சொல்லு கொடுப்பாங்கலாம்.... அதை இந்த வாத்தி சமத்தா கத்துக்கிட்டு ப்ராக்டிக்கலா செய்து காட்டுவாராம்...” என்று சொல்லி அவளது இதழ் நோக்கி குனிய அவனை தள்ளிவிட்டவள்

“நாட்டி பாய்.... எல்லாத்துக்கும் அவசரம்... பாருங்க நீங்க பண்ண சேட்டையில நான் உங்களை எதுக்கு வர சொன்னேன்னே மறந்துட்டேன்....”

“அதை எதுக்கு அம்லு இவ்வளவு தூரத்துல இருந்து சொல்லப்போற?? இப்படி பக்கத்துல வந்து என்னோட கைவளைவுக்குள்ள இருந்து சொல்லு... அப்போ அது இன்னும் ஸ்வீட்டா இருக்கும்...”

“இருக்கும் இருக்கும்... இப்போ யாராவது வந்து கதவை தட்டுனா இன்னும் ஸ்வீட்டா இருக்கும்..” என்றவாறு தன் வாட்ரோப்பை திறந்தவள் உள்ளிருந்து ஒரு டயரியை வெளியே எடுத்தாள்...
அதை ரிஷியிடம் நீட்ட அதை கேள்வியுடன் கையில் வாங்கியவன் உள்ளே திறந்து பார்க்க அதன் முதல் பக்கத்தில் “காதல் கிறுக்கனின் காதல் பரிசு இந்த காதல் ராட்சசிக்காக” என்று அவன் ஏற்கனவே எழுதியிருந்ததுடன் இந்த “காதல் ராட்சசிக்காக” என்ற வார்த்தைகளை சேர்த்திருந்தாள் ஶ்ரீ...

இப்படிக்கு காதல் ராட்சசியின் காதல் கிறுக்கன் என்று கையெப்பமிட்டிருந்தது... அதை தடவிக்கொடுத்தவன்

“ஹேய் என்ன அம்லு இது.... எப்படி உனக்கு மட்டும் இப்படியெல்லாம் தோனுது...??”

“நான் தான் அறிவாளினு இந்து ஊருக்கு தெரியுமே... அதான் இப்படி...”

“கஷ்டப்பட்டு உனக்கு கிப்ட் ரெடி பண்ணது நான்.... ரெண்டு வார்த்தையை சேர்த்துக்கிட்டு நீ அறிவாளினு சொல்லிக்கிற... நடத்து நடத்து..”

“என்ன பண்ண அய்த்தான்... உண்மைகள் சில வேளை கசக்கத்தான் செய்யும்.... ஆனா அதுக்காக அது உண்மையில்லைனு சொல்லமுடியாது..”

“எனக்கு ஒரு டவுட்டு அம்லு.... நீ என்ன பேசுறனு நான் புரிஞ்சிக்க முடியாம அல்லாடும்ங்கிற நல்ல எண்ணத்தில் இப்படி லிங்கே இல்லாமல் பேசிறியா?? இல்லை வேற ஏதாவது காரணமா??”

“பெரிசா ஒன்னுமில்லை அத்தான்... நீங்க இப்படி மொக்க வாங்குறத பார்க்க ஆசையா இருந்துச்சு.. அதான் இப்படி...”

“யப்பா சாமி உன் ஆசைக்கு ஒரு அளவே இல்லையாமா??”

“அதில்லாம் இல்லை அய்த்தான்... சரி அதை விடுங்க... இப்போ அந்த பக்கத்தை திருப்புங்க..” என்று ஶ்ரீ கூற அடுத்த பக்கத்தை திருப்ப அதில் அவன் கொடுத்த அந்த டைட்டானியம் மோதிரம் இருந்தது... அதை கையில் எடுத்தவன்

“என்ன அம்லு ரிங்கை அப்படியே வச்சிருக்க?? போட்டுக்கலையா???” என்று ரிஷி கேட்க ஶ்ரீ அவனை முறைத்தாள்..

“இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி முறைக்கிற?? சைஸ் பத்தலையா ஶ்ரீ???”

“ஏன் அய்த்தான் உனக்கு மண்டையில ஏதாவது மசாலா இருக்கா??”

“மண்டையில எப்படி அம்லு மசாலா இருக்கும்??”

“என்ன நக்கலா???”

“ஐயோ... உன்னை போய் நான்...”

“அத்தான் நீ ஓவரா பண்ணுற சொல்லிட்டேன்....”

“நான் என்ன அம்லு ஓவரா பண்ணேன்.. நீ தான் மசாலா இருக்கா மஞ்சள் தூள் இருக்கானு கேட்டுட்டு இருக்க?? புரியிற மாதிரி சொன்னா தானே புரியும்...”

“மற்றதெல்லாம் சொல்லாமலே புரிஞ்சிரும்... இதையெல்லாம் சொன்னா தான் புரியுமா??”
“நீ சொன்னா தான் எனக்கு புரியும்..” என்று அவள் என்ன கூற முயல்கிறாள் என்று அறிந்துகொண்டே அவள் வாய் வார்த்தைகளால் கேட்பதற்காக அவளிடம் தெரியாதது போல் நடித்துக்கொண்டிருந்தான் ரிஷி...
“இப்போ என்ன உனக்கு என் வாயலேயே விஷயத்தை தெரிஞ்சிக்கனும்... அதானே.. சரி அந்த ரிங்கை உன் கையாலேயே எனக்கு போட்டுவிடு அய்த்தான்....”

“அப்படி சொல்லுடி... என்னோட அமுல் பேபி... இதை உன் வாயால கேட்கிறதுக்கு எவ்வளவு எனர்ஜி வேஸ்ட் பண்ணவேண்டியிருக்கு....” என்றுவிட்டு அந்த மோதிரத்தை எடுத்தவன் அவள் கையில் மோதிரத்தை அணிவித்துவிட்டு அவளது உள்ளங்கையில் இதழ் பதித்தான்... அவனது முத்தத்தில் பெண்ணவளோ சிணுங்க அவளுடன் சிணுங்கியது ரிஷியின் மொபைல்...

மொபைலை திட்டிக்கொண்டே அழைப்பை எடுத்தவன் காதில் வைக்க அந்தப்புறம் ரித்வி
“அண்ணா எங்க இருக்கீங்க?? வாஸ் ரூம் போனவர காணோம்னு இங்க மாமா தேடிட்டு இருக்காரு..நீங்க எங்க இருக்கீங்க??”

“ரித்வி நான் ஶ்ரீ ரூம்ல இருக்கேன்... ஒரு பத்து நிமிஷம் அங்க எல்லாரையும் சமாளி.... சீக்கிரம் வந்திடுறேன்.. .” என்றுவிட்டு அழைப்பை துண்டிக்க அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது...

“ஐயோ வந்துட்டாங்க போலவே..வசமா மாட்டுனோம்... இப்போ உள்ள வந்தா எல்லாரும் டிசைன் டிசைனா வச்சி செய்வாள்களே....ஐயோ... எல்லாம் உங்களால தான் அத்தான்... “

“ஹேய் நான் என்ன பண்ணேன்... நீ சொன்னதை தானே செய்தேன்...”

“அதை செஞ்சதால தான் இப்படி மாட்டிக்கிட்டோம்...உங்களை யாரு என்னிடம் சேலஞ் பண்ண சொன்னது...?? உங்களை யாரு சேலஞ்சில் வின் பண்ண சொன்னது??? இப்போ பாருங்க உங்க டீலை முடிக்க வரச்சொல்லப்போய் இப்போ இரண்டு பேரும் வசமா மட்டிக்கிட்டோம்...”

“ஹேய்.. என்ன சொல்லுற?? அப்போ ஸ்வீட்டு சாப்பிடத்தான் என்ன வர சொன்னியா?? அது தெரியாமல் இப்படி டைமை வேஸ்ட் பண்ணிட்டேனே...” என்று வருந்தியவனை முறைத்தவள்

“இப்போ இது ரொம்ப முக்கியம்... இப்போ தப்பிக்கிறதுக்கு ஏதாவது வழியை யோசிங்க..”

“நான் ஏன் யோசிக்கனும்... என்கிட்ட கேட்டா நீ வர சொல்லி தான் வந்தேன்னு சொல்லிருவேன்..”

“வேணா அத்தான்...கடுப்பை கிளப்பாதீங்க.. உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை.. நானா ஏதாவது யோசிக்கிறேன்...ஓ ஐடியா... நான் சொல்லுறதுக்கு எல்லாம் நீங்க தலையை மட்டும் ஆட்டுனா போதும் சரியா???” என்றவள் சென்று கதவல திறந்தாள்.. வெளியே ஶ்ரீயின் அன்னை ப்ரீதா, அனு மற்றும் ரிஷியின் அன்னை ஆகியோர் நின்றிருந்தனர்..

உள்ளே ரிஷியையும் ஶ்ரீயையும் பார்த்தவர்கள் என்னவென்று ஶ்ரீயை பார்க்க அவளோ தான் இயற்றிய கதையை கூறத்தொடங்கினாள்...

“அத்தான் நான் வெளிய போயிருந்தப்போ வாஸ் ரூம் வந்திருக்காரு.. நானும் அத்தான் உள்ள இருக்கது தெரியாமல் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணுறதுக்காக கதவ தாழ்ப்பாள் போட்டுட்டேன்... சரியா அந்த டைமில் பாத்ரூமில் இருந்து அத்தான் வெளிய வந்தாரு...அவருக்கிட்ட விசாரிச்சிட்டு இருக்கும் போது சரியா நீங்களும் வந்துட்டீங்க...” என்று கூற ப்ரீதாவோ

“என்ன அத்தான் வீட்டுல வேற எந்த வாஸ்ரூமும் உங்க கண்ணுக்கு தெரியலையா?? எப்படி சரியா ஶ்ரீயோட ரூம் மட்டும் கண்ணுல பட்டுச்சி?? அதுவும் ஶ்ரீ இல்லாதப்போ...??” என்று வம்பிழுக்க ரிஷியோ அசடு வழிந்தான்...
ராதாவோ ஶ்ரீயை முறைத்தபடியிருக்க ஶ்ரீயோ அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு

“மம்மி நான் எதுவும் பண்ணலை... நம்பு மம்மி... இது தான் நடந்துச்சு...” என்று கூற அவளது பாவனையில் சிரித்த சுபா ரிஷியை பார்க்க அவனது முகமே நடந்தது அதுவல்ல என்று உரைத்தது...

சுபாவே “விடுங்க அண்ணி... அதான் பிள்ளை சொல்லுதே... ரிஷி எல்லோரும் கிளம்பிட்டாங்க. உன்னை தான் பார்த்துட்டு இருக்காங்க.. நீ கிளம்பு” என்று ரிஷியை வெளியே கிளப்பியவர் ஶ்ரீயிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்றுவிட்டு வாசலிற்கு சென்றார்...
ஶ்ரீ தவிர மற்றைய அனைவரும் வாசலுக்கு வந்து அனைவரையும் வழியனுப்பி வைத்தனர்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN