மாயம் 24

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பிரிந்து சென்ற
இதயம்
இரத்தக்கரையுடன்
இன்று துடித்திருப்பதை
அன்று அறிந்திருந்தால்
செல்ல அனுமதித்திருக்குமா
பிரிவுத்துயரால்
இத்தனை காலம்
கண்ணீர் வடித்த
மற்றைய இதயம்...???

வழமைபோல் ஆபிஸில் சகாக்களுடன் அரட்டையடித்தபடி பிசியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள் ஶ்ரீ..

“சஞ்சு.... இந்த பிராஜக்ட் எப்போ முடியும்???”

“நமக்கு குடுத்திருக்க டைம் பீரியட்டுக்குள்ள முடிச்சி சப்மிட் பண்ணனும்... உனக்கு தான் தெரியுமே...பிறகு எதுக்கு இப்படி ஒரு புத்திசாலித்தனமான கேள்வி...???”

“இல்லைடி... இந்த பிராஜக்ட் அநியாயத்துக்கு வச்சி செய்யுது.... அந்த டமார் தலையன் ஆயிரத்தெட்டு கரெக்ஷன் சொல்றான்.... எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச கோடிங்கும் டமார் தலையன் புண்ணியத்துல மறந்துடும் போல இருக்கு... சில நேரம் நமக்கு தான் ஒன்னுமே தெரியைலையோ அப்படிங்கிற டவுட்டு வந்திடுதுபா....”

“ஆளாளப்பட்ட உனக்கே இந்த நிலைமைனா அப்போ எங்களுக்கு எப்படி இருக்கும்???”

“ஹாஹா... சேம் பின்ச்....ஆனாலும் இந்த டமார் தலையன் ரொம்ப தான் பண்ணுறான்.... இந்த புதுசா வந்த மேனா மினுக்கி ரஞ்சிதாவுக்கு ஜொள்ளு விடுறதுக்காக நம்மளை காய்ச்சி எடுக்குறான்.... அவளும் இது தான் சான்சுனு மொத்த வேலையையும் நம்ம தலையில் கட்டிட்டு ஹாயா இருக்கா... இவன் நம்ம உசுரை எடுக்குறான்...” என்று அங்கலாய்த்தாள் ஶ்ரீ...

“அது என்னமோ உண்மை தான் ஶ்ரீ... அவ ஆளும் மூஞ்சும் ட்ரெஸ்சும்.... ஆபிஸில் உள்ள எல்லா ஆம்பிளைங்களும் அவளுக்கு ஜொள்ளு விடனும்னே பொங்கலுக்கு வெள்ளையடிச்ச மாதிரி மேக்கப் கிட்டுல உள்ள மொத்த பவுடரையும் அடிச்சிக்கிட்டு வர்ற... இவனுங்களும் ஈனு இளிக்கிறாய்ங்க.... இந்த ரவி பய தான் ஓவரா வழிஞ்சிட்டு அலையிறான்.....”

“ஹாஹா அவன் ரூட்டு போடாத ஒரு பொண்ணு இந்த ஆபிஸில் இருக்கானு சொல்லு....இதையே பொழப்பா வச்சிட்டு சுத்துறவன் அந்த மேனாமினிக்கியை ஜொள்ளு விடாட்டி தான் அதிசயம்... ஆனா நம்ம சுந்தர் கிட்ட அந்த மேனாமினிக்கி நோஸ் கட்டாகுனதை நீ பாக்கலையே..... எனக்கு அதை பார்த்த பிறகு தான் மனசுக்கு கொஞ்சர் ஆறுதலாக இருந்துச்சு.... அப்போ அவ மூஞ்சை பார்க்கனுமே ஜின்சர் தின்ன கிங்காங் மாதிரி இருந்துச்சு....”

“சுந்தர் அந்த விஷயத்துல எல்லாம் பக்கா ஜென்டில்மேன்.... அவன்கிட்ட வாலாட்ட முடியாது.... ஆனாலும் இவ பண்ணுறது ரொம்ப ஓவர்டி... இவ தொல்லை தாங்க முடியலை... இந்த ஹேமா மட்டும் வேலையை ரிசைன் பண்ணியிருக்காட்டி இந்த எருமையெல்லாம் மேய்க்க வேண்டிய நிலைமை வந்துருக்காது... எங்கடி இருக்கா அவ??? உனக்கு பேசுனாலா???”

“இல்லை சஞ்சு... அவ மேரேஜிற்கு பிறகு ஒரு தடவை தான் பேசுனா... அதுக்கு பிறகு அவ என்னை காண்டக்ட் பண்ணவே இல்லை.. நானும் அவ பழைய நம்பருக்கும் புது நம்பருக்கும் நிறைய தடவை ட்ரை பண்ணிட்டேன்... அவுட் ஒப் சர்விஸ்னு வருதுடி... ஆண்டி அங்கிள் கூட வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டாங்க... எங்க போனாங்கனு யாருக்கும் எந்த விவரமும் தெரியாது.... ரவி மூலமா கல்யாணம் நடந்த ஊரை கண்டுபிடிச்சு தேடிப்பார்த்தா அவங்க அந்த ஊருல இல்லைனு சொல்லுறாங்க.... அவளுக்கு என்னாச்சுனே தெரியலை.... இப்போவெல்லாம் அடிக்கடி அவ நியாபகம் வருதுடி... அன்னைக்கு கூட ஷாப்பிங் போயிறந்தப்போ அவளை மாதிரி யாரையோ பார்த்துட்டு அவதான்னு கிட்ட போய் பேச போய்ட்டேன்.... ஏன் இப்படி அவ நியாபகம் அடிக்கடி வருதுனு தெரியலை... அத்தான் கிட்ட சொன்னா அவளை தேட ஏதாவது ஏற்பாடு பண்ணுவாரு... ஆனா எப்படி சொல்லுறது?? அவருக்கு ஹேமா மேல கோபம் இருக்கு....... ரித்வி அத்தானை தேத்தி எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு.... ரித்வி அத்தான் லைப் செட்டிலானா அத்தானோட கோபம் கொஞ்சமாவது குறையும்... அதுனால அவருகிட்டயும் ஹெல்ப் கேட்க முடியாது....ஆனா அவ எப்படி இருக்க என்ன செய்றானு தெரிஞ்சா கொஞ்சமாவது ஆறுதலா இருக்கும்...” என்று தன் தோழியை நினைத்து புலம்பிய ஶ்ரீயிற்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் விழித்திருந்தாள் சஞ்சு..

அவளுமே தன்னால் முடிந்த வழிகளிலெல்லாம் ஹேமா பற்றி விசாரித்துவிட்டாள்... பதிலென்னவோ பூஜ்ஜியம் தான்... அவள் காணாமல் போயிருந்தால் கூட போலிஸில் புகார் கொடுத்து அவளை தேடச் சொல்லலாம்.... திருமணம் முடித்து புகுந்தவீட்டில் இருப்பவளை எப்படி காணவில்லை என்று புகார் கொடுப்பது???
இவ்வாறு இருவரும் ஹேமா பற்றி கவலையில் இருக்க ஶ்ரீயின் மொபைல் சிணுங்கியது...
அதை எடுத்து பார்க்க அதில் ராஜ் அத்தான் காலிங் என்று வர அழைப்பை எடுத்தாள் ஶ்ரீ..

“ஹலோ சொல்லுங்க அத்தான்....”

“......”

“ஆபிஸில அத்தான்..”

“.....”

“ஏன் அத்தான் யாருக்கம் ஏதாவது ப்ராப்ளமா??”

“......”

“சரி எந்த ஹாஸ்பிடல்???”

“......”

“நான் இன்னும் ஒரு ஹாப் அன்ட் ஹவர்ல அங்க இருப்பேன்...” என்றுவிட்டு போனை துண்டித்தவளை என்னவென்று பார்த்தாள் சஞ்சு..

“ரித்வி அத்தான் தான்டி... என்னானு தெரியலை சி.எஸ்.டி ஹாஸ்பிடலுக்கு வர சொல்லுறாரு... என்னனு கேட்டா விவரம் சொல்ல மாட்டேன்குறாரு.... ரிஷி அத்தானுக்கும் கால் பண்ண வேணாம்னு சொல்லிட்டாரு... என்னானு தெரியலை .. நான் ஹாப்டே லீவ் சொல்லிட்டு கிளம்புறேன்.. நீ பென்டிங்கில் இருக்கிற வேலையை முடிஞ்சிரு.... நான் என்னான்னு பார்த்துட்டு உனக்கு கால் பண்ணுறேன்.....” என்று சஞ்சுவிற்கு ரித்வி கூறியதை தெரிவித்துவிட்டு விரைந்து அவன் கூறிய ஆஸ்பிடலுக்கு கிளம்பினாள்...

ஆட்டோவில் ஆஸ்பிடலில் வாசலில் இறங்கியவள் ரித்வியை அழைக்க அவன் எட்டாம் இலக்க அறைக்கு வரச்சொன்னான்... அவன் கூறிய அறை இருக்கும் தளத்தை ரிசப்ஷனில் கேட்டுக்கொண்டு தேடி வந்தாள் ஶ்ரீ.... ..

அறை வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ரித்வியை நோக்கி சென்ற ஶ்ரீ
“அத்தான் யாருக்கு என்னாச்சு....??? எதுக்கு எதுவும் சொல்லாமல் அவசரமா வரச்சொன்னீங்க??” என்று ஶ்ரீ கேட்க பதிலேதும் சொல்லாமல் அமைதியாயிருந்தான் ரித்வி...

“அத்தான் என்ன அமைதியா இருக்கீங்க?? என்னதுனு சொன்னா தானே தெரியும்....”

“ஹேமா....”என்று ரித்வி கூற அதிர்ச்சியடைந்த ஶ்ரீ

“ஹேமாவா...??? என்ன அத்தான் சொல்லுறீங்க???? ஹேமா எப்படி இங்க??? அவளுக்கு என்னாச்சு??? அவளை எப்படி நீங்க பார்த்தீங்க??? “ என்று அடுக்கடுக்காய் ஶ்ரீ கேட்க ரித்வியோ பதிலேதும் கூறாது இருக்க

“அத்தான் ஏதாவது சொன்னாதானே தெரியும்??? அவளுக்கு என்னாச்சு...... அவளை எங்க பார்த்தீங்க..??”

“இளநீர் வாங்க காரை பார்க் பண்ணிட்டு இறங்கும் போது ஒரு பைக் அவளை மோதிரிச்சு.... இவ பைக் வர்றதை பார்க்காம ரோட் கிராஸ் பண்ண ட்ரை பண்ணிருக்கா.. பைக்காரன் ஸ்லோவா வந்ததால பெரிசா அடியில்லை...சின்ன காயம் தான்... இடிப்பட்டதும் அங்கயே மயங்கிட்டா...நான் தூக்க கிட்ட போகும் போது தான் ஹேமானு தெரிஞ்சிது..... உடனே லேட் பண்ணாம ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டேன்....”

“ஐயோ....இப்ப எப்படி இருக்கா அத்தான்... கண்ணு முழிச்சிட்டாளா...??”

“இன்னும் மயக்கத்துல தான் இருக்கா.... ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு.... உள்ள போய் பாரு...” என்று ரித்வி கூறிவிட்டு மீண்டும் அமர்ந்து கொள்ள அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஹேமா இருந்த அறைக்குள் சென்றாள் ஶ்ரீ...

அங்கு தலையில் சிறு பிளாஸ்திரி இடக்கையில் ஒரு கட்டுடன் படுத்நிருந்தாள் ஹேமா... ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க கண்மூடியிருந்தவள் அருகில் சென்ற ஶ்ரீ ஹேமாவின் தலையை தடவிக்கொடுக்க மெதுவாக கண்விழித்தாள் ஹேமா......

ஶ்ரீயை கண்டதும்
“ ஶ்ரீ.... நீ எப்படி இங்க... நான் எங்க இருக்கேன்..... ஶ்ரீ எப்படியாவது என்னை காப்பாத்து ஶ்ரீ.... அவனுங்க என்னை மறுபடியும் அந்த நரகத்துல தள்ள பார்க்கிறாய்ங்க ஶ்ரீ... என்னை எப்படியாவது காப்பாத்து ஶ்ரீ.... என்னால திரும்பவும் அந்த நரகத்துல துடிச்சி சாகமுடியாது ஶ்ரீ.... எப்படியாவது என்னை அவங்ககிட்டயிருந்து காப்பாத்து ஶ்ரீ.... என்னை தனியா விட்டுட்டு போயிறாத ஶ்ரீ...” என்று கதறி கூப்பாடு போட்டவளை அமைதிப்படுத்தும் வழி தெரியாது ரித்வியை அழைக்க அவன் டாக்டர் சகிதம் வந்தான்...
டாக்டரும் அவளை அமைதிப்படுத்த மயக்க ஊசியை போட சற்று நேரத்தில் உறக்கத்திற்கு சென்றுவிட்டாள் ஹேமா....

அவளது இந்த நடவடிக்கையில் பயந்த ஶ்ரீ ரித்வியை பார்க்க அவனது முகமோ சொல்லொண்ணா வேதனையில் வாடியிருந்தது.... ரித்வியை டாக்டர் அழைக்க அவனுடன் சென்றாள் ஶ்ரீ..

டாக்டரோ
“ மிஸ்டர் ரித்விராஜ்... மிசஸ் ஹேமா டிஸ்டர்ப்டா இருக்காங்க... கன்சீவ்வா இருக்க இந்த டைம்ல அவங்க இப்படி இருக்கது அவங்க ஹெல்த்தையும் கருவோட வளர்ச்சியையும் பாதிக்கும்.... அவங்க நல்லா ரெஸ்டா இருக்கனும்... அவங்க மனசை பாதிக்கிற மாதிரி ஏதோ நடந்துருக்கு. அது என்னான்னு தெரிஞ்சிக்கிட்டு சால்வ் பண்ண ட்ரை பண்ணுங்க... இந்த டைமில் அவங்க ரொம்ப கவனமா இருக்கனும்... அவங்க மனசு பாதிக்கிற மாதிரி எந்தவிஷயமும் அவங்களுக்கு தெரியாத மாதிரி பார்த்துக்கோங்க... இப்போ அவங்க ஒன் மன்த் ட்வெல்வ் டேஸ் ப்ரெக்னென்ட்... த்ரீ மன்த்ஸ் முடிய வரைக்கும் அவங்களல ரொம்ப பத்திரமா பாத்துக்கோங்க....மத்தபடி வேற எந்த ப்ராப்ளமும் இல்லை ... இன்னைக்கே அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போங்க.... காயம் ஆற வரைக்கும் தண்ணி படாமல் பார்த்துக்கோங்க.... அவ்வளவு தான்....”என்று ஹேமாவின் உடல்நிலையை எடுத்துரைத்த டாக்டரிடம் நன்றியுரைத்துவிட்டு ஶ்ரீயும் ரித்வியும் வெளியே வந்தனர்..

வெளியே வந்ததும் ரித்வி ஶ்ரீயிடம்
“என்னாச்சு ஶ்ரீ ஹேமாவுக்கு??? அவளுக்கு என்னாச்சு??? எங்கயோ நிம்மதி வாழுறானு நாம நினைச்சிட்டு இருந்தா இப்படி பாதி உயிரா வந்திருக்கா..... இதுக்கா அவ கல்யாணம் பண்ணிக்கிட்டா.... இப்படி இவளை பார்க்கவா நான் உயிரோட இருக்கேன் .. அவளை பூ மாதிரி வச்சிக்க ஆசைபட்டேன்... இப்படி பித்து புடிச்சவ மாதிரி இருக்காளே..... ஐயோ கடவுளே.. இப்போ நான் என்ன பண்ணுவேன்.....எதுக்கு அவளை என்கிட்ட இருந்து பிரிச்ச??? எதுக்கு அவளை இப்படி கஷ்டப்படுத்துற??” என்று புலம்பியவனுக்கு ஆறுதல் கூறினாள் ஶ்ரீ...

“அத்தான்.... காம் டவுண் அவளுக்கு என்ன பிரச்சனைனு தெரியலை... அதை சொல்லுற நிலைமையிலயும் அவ இல்லை.... மொதல்ல அவளை நாம அவளை சரிப்படுத்துவோம்... பிறகு என்ன பிரச்சனைனு விசாரிச்சு அதை சரிப்படுத்த முயற்சி பண்ணுவோம்... இப்படி நீங்களே உடைஞ்சி போன அவளை திடப்படுத்த முடியாது... அவ மயக்கத்துல இருந்து எழுந்ததும் பேசனத வச்சி பார்க்கிறப்போ அவளோட மேரேஜ் லைப்பில் ஏதோ பெரிய ப்ராப்ளம் இருக்குதுனு நினைக்கிறேன்... அவளா வாயை திறந்து சொல்ல வரைக்கும் நம்மால எதுவும் பண்ண முடியாது. ஆனா அவளுக்கு ஆதரவா இருக்க முடியும்... டாக்டர் அவ ரொம்ப டென்ஷனாக கூடாதுனு சொல்லியிருக்காரு.... சோ நாம அவளை பத்திரமா பார்த்துக்கனும்.... ஈவினிங் அவளை டிஸ்சார்ஜ் பண்ணதும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்... நான் அப்பாவுக்கு கால் பண்ணி இங்க வர சொல்லுறேன்.....நீங்க கிளம்புங்க அத்தான்.... உங்களை பார்த்தா இன்னும் கஷ்டப்படுவா அத்தான்...... ப்ளீஸ் அத்தான்....”

“சரி ஶ்ரீ...... நீ சொல்லுற மாதிரி செய்யலாம்... நான் மாமா வரவரைக்கும் உனக்கு துணைக்கு இருக்கேன்...... அவளோட ஹஸ்பண்ட் பத்தி ஏதாவது டீடெய்ல்ஸ் தெரியுமா உனக்கு???”

“இல்லை அத்தான்.... பெயரும் ஊரும் மட்டும் தெரியும்... போட்டோ ரவிகிட்ட இருக்கும்..”

“சரி நீ எனக்கு அதை எனக்கு மெசேஜ் பண்ணு.. நான் டிடெக்டிவ்வை வைத்து அவங்கள பத்தி விசாரிக்கிறேன்..... நீ அவளை பத்திரமா பாத்துக்கோ.... அவ கன்சீவ்வா வேற இருக்கா.. ஜாக்கிரதையா பார்த்துக்க. . அவளை தனியா வெளியே எங்கேயும் அனுப்பாத.... டாக்டரை வேணும்னா வீட்டுக்கு வரவழைச்சிக்கிரலாம்... பாத்துக்கோ ஶ்ரீ.....”

“நான் பாத்துக்கிறேன் அத்தான்... நீங்க கவலைப்படாதீங்க.... அப்புறம் அத்தான் ஹேமா அம்மா அப்பா எங்க இருக்காங்கனு கண்டுபிடிக்கனும்.... அவங்க வீட்டை காலி பண்ணிட்டு எங்கேயோ போயிட்டாங்க... அவங்க இருந்தா அவளுக்கு இன்னும் சப்போர்ட்டா இருக்கும்....”

“சரி ஶ்ரீ...அதை நான் பார்த்துக்கிறேன்.... நீ மாமா வந்துட்டாரானு பாரு...” என்றுவிட்டு தன் மொபைலை ரித்வி யாருடனோ பேசத்தொடங்கினான்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN