காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 24

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பகுதி 25


கோயம்பத்தூர்

அந்த பெரிய மர சப்பாட்டு மேசையில் காய்கறிகளை நறுக்கிய வண்ணம் அமர்ந்திருந்த மஞ்சுளா, தியா என்னைக்கு ஊட்டிக்கு போற என்று டிவியில் மூழ்கி இருந்தவளிடம் கேள்வியை எழுப்பினார்.

தொலைக்காட்சி பெட்டியில் மூழ்கி இருந்தவள் கண்களை அகற்றாமலையே அடுத்த வாரம் வெள்ளி கிழமை மா என்று கூற

சரி சரி நீ அங்க வர்ரத ராதா கிட்ட சொல்லிடுறேன் அவங்க வந்து ஒரு எட்டு பாத்துக்குவாங்க என்றபடியே காயை நறுக்கினார்.

ஒரு நிமிடம் திரும்பி தாயை பார்த்தவள் மா.... நான் என்ன இன்னும் சின்ன குழந்தையா காலேஜ்ல இருக்குற அத்தனை பாட்னி ஸ்டுடன்டும் கூட வரபோறாங்க ஏதோ குட்டி குழந்தைய எஸ்கஷன் அனுப்புற மாதிரி ஏம்மா ஏன் இப்படி அலப்பற பண்ற என்னை எப்போதான் வளரவிடப்போரிங்க என்றாள் ஆதங்கமாக

அது இல்லடி.... ஊட்டிக்கு போற அங்க தன் சித்து வீடு இருக்கு அவ்வளவு தூரம் போய் ஒரு வார்த்தை சொல்லலனா எப்படி தியா என்று தன்மையாக கேட்க

என்னமோ பண்ணுமா என்று சலிப்புடனே சொல்ல உள்ளுக்குள் மட்டும். அய்யய்யோ ஆனந்தமே பாடல் பின்னனியில் இசைக்க அவ்வளவு ஆனாந்தமாய் உணர்ந்தாள் தியா அவனை காண போகும் ஆவள் இப்போதே இருந்தே ஆரம்பம் ஆகியது தனது மனதை அடக்கவே தாயிடமும் ஏன் தனக்கே கூட ஒரு பொய் முகமூடியை போட்டதுபோல் அனைநத்தையும் மறைத்து வைத்திருந்தாள் அந்த காதல் கன்னி.

அதே நேரம் டிவியில் காதல் பாடல் ஒளிவரப்பாக காதலை பற்றிய தாயின் மனநிலையை அறிந்து கொள்ள நினைத்தவள்.

அம்மா நீ இந்த காதல்லமா காதல் அதை பத்தி என்னமா நினைக்கிற என்று குழைவாக கேட்க

காயை நறுக்கிக்கொண்டே உன்னை படிக்க அனுப்பி வைச்சா இது மாதிரி கேனத்தனமா காதல் கத்திரிக்காய்ன்னு கேள்வியா கேக்குர என்று அவளை காய்ச்சி எடுத்தார்.

அம்மா... லவ்ன்னா உடனே கெட்டவார்த்தையா முடிவே கட்டிட வேண்டியது தானா என்று மறுபடி அவருக்கு புரிய வைக்கும் நோக்கில் வலிய செற்று வாயை கொடுத்தாள்.

ஓ..... அது தப்பு இல்லையா கண்ணு வேற எதுடா ராஜாத்தி தப்பு என்று அவளை நக்கல் குரலில் கேட்டவர் உனக்கு இப்போ ஏண்டி இந்த ஆராய்ச்சி என்று கடுப்புடன் முடிக்க

அது இல்லமா நம்ம குடும்பத்துல லவ் மேரேஜ் எனுப் போதே

அடி செருப்பால வாய இழுத்து வைச்சி சூடு போட்டுடுவேன் ஒருத்தி தான் சுவரு ஏறிக் குதிக்கிறேன் அத பண்றேன் இதை பண்றேன்னு என்னை பதைபதைக்க வைச்சா வாயித்தல நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன் இப்போ நீ காதலுக்கு வக்காலத்து வாங்க வந்து இருக்கிய என்று அர்ச்சனைஙளை வாரி வழங்க

இரு காதுகளலயும் பொத்திக்கொண்டு கண்களை இறுக்க மூடி உன் நிலமை ரொம்ப மோசம் டீ பாவம் நீ எல்லாரையும் கரெக்ட் பண்ண வேண்டி இருக்கு இங்க இந்த அலப்பறனா அங்க டேய் மாமா உன்னை என் வழிக்கு கொண்டு வரத்துக்குள்ள தான் கிழவி ஆகிடுவேன் போல இருக்கே எனக்கு ஸ்டெட்டா அறுவதாம் கல்யாணம் தான் நடக்குமோ என்று தனக்கு தானே இறக்கப்பட்டவள் மெல்ல கண்களை திறக்க அவளை முறைத்தபடி நின்றிருந்தார் மஞ்சு

அதான் உன்னால முடிஞ்சது எல்லாம் சொல்லிட்டியே அம்மா இன்னும் ஏன் இந்த பத்திரக்காளி வேஷம் என்று வழிந்தபடியே தாயை நக்கல் செய்ய

அந்நேரம் பார்த்து ராம் படத்திலிருந்து

உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீதீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொல்லத் துணிஞ்சிடுச்சே
தீயில் என்னை நிற்கவைச்சு சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே என்ற காதலின் சோக பாடல் ஒளிவரப்பாக இன்னும் எழுந்ததே அவருக்கு கோபம் கையில் இருந்த கத்தியை ஆட்டியபடியே

படிக்கிற பொண்ணு மாதிரியா இருக்க டிவி பொட்டி முன்னாடி உட்காந்த கண்ட கருமத்தையும் பாக்க வேண்டியது இவனுங்களா... இதுகலதான் தண்ணி தெளிச்சி விட்டானுங்க போல இதை பாக்குறதுங்களும் ல கெட்டு சீர்ரழியுதுங்க என்று தலையில் அடித்து கொண்டவர் என்ன கருமமோ முதல்ல அந்த கண்ராவிய ஆப் பண்ணு உள்ள போயி படிக்கிற வேலைய பாரு என்று கடுகடுத்து கொண்டே கிச்சனுக்குள் சென்றார்.

காதல் ன்னு ஒரு வார்த்தைய விட்டதுக்கே அடைமழை பெஞ்சி ஒஞ்சா மாதிரி இருக்கே..... இதுல நான் லவ் பண்ற விஷயம் தெரிஞ்சா என்னை காலி பண்ணிடுவாங்களோ இந்த மஞ்சு செஞ்சாலும் செய்யும் இப்போவே என்ன பேச்சி பேசினாங்க கத்தி எங்க என்ன பதம் பாத்துடுமோன்னுல பயந்துட்டு இருந்தேன் என்றவள் விடு தியா பாத்துக்கலாம் நம்ம காதல் கட்சி தலைவி இளசிங்கம் கவிதான் கூடவே இருக்காலே கயிறு ஏறி குதிச்சாவுது என் காதலை சேத்து வைச்சிடமாட்ட நம்ம காதல் இளவரசி பார்கவி தேவி என்ற தைரியத்துடன் இருந்தாள்.

அவளுக்கு என்ன தெரியும் காதல் என்ற மூன்று எழுத்துதான் பார்கவியின் குடும்பத்துக்குள் பிரச்சனை வர காரணமாய் அமைய போகின்றது என்று பொருத்து இருந்து பார்ப்போம்.
______________________________________

மாலை சிற்றுண்டியை கவியின் பிறந்த வீட்டில் முடித்தவர்கள் இரவு 7மணிபோல் வீடு திரும்பினர். வந்தது முதல் உதவி செய்கிறேன் என்ற பேர்வழியில் காலை கல்லூரியில் அடித்த கூத்து முதல் மாலை வீட்டில் பேசியது வரை அனைத்தையும் அத்தையுடன் கலந்து உறையாடியவள் நாளை கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று ஆதி நினைவு படுத்திய பிறகே மேலே தங்களது அறைக்கு திரும்ப அவளை அழைத்தவர் உனக்கும் கேஷவுக்கும் இதுல பால் இருக்கு மறக்காம குடிச்சிட்டு படுங்க என்றவர் காலை அவளுக்கு தேவையான மதிய உணவை விசாரித்து வைத்துக் கொண்டார். அவள் கேண்டீனில் பார்த்துக்கொள்ளவதாய் எவ்வளவு சொல்லியும் ஒற்றை பேச்சைக் கொண்டு முடித்த ஆதி உனக்கு வேணுன்றத மட்டும் சொல்லு என்று அதட்டலுடன் வினவ கப்சிப் என்று அடங்கியவள் அவளுக்கு பிடித்ததை சொல்லிவிட்டு மேலே சென்றுவிட்டாள். விளையாட்டு பொண்ணு என்றபடியே தனது அறைக்கு படுக்க சென்று விட்டார் ஆதி.

இரவு உணவை முடித்து கொண்டு மேலே வந்தவனுக்கு நெற்றியில் சிந்தனை ரேகை படர்ந்து அவனை முழுவதும் முழ்கடித்து கொண்டிருந்தது மாலை மாணிக்கம் வீட்டில் நடந்ததும் தனது அலுவலகத்தில் தான் அடுத்ததாய் செய்ய வேண்டிய வேலைகளை பற்றியும் தான் மண்டையில் ஓடி குடைய்ந்து கொண்டிருந்தது.

அறைக்கு வந்தவள் அவனின் புருவ முடிச்சுக்களை பார்த்து காலைல. கூட நல்லாதானே இருந்தார் இவினிங் அப்பாவிட்டுக்கு போனபோதுகூட நல்லதானே இருந்தார் தீடிர்னு ஏன் ஒரு மாதிரி உட்காந்து இருக்கார். அவர் பேசினாலும் ஒரு மாதிரி இருக்கு பேசமா இருந்தாலும் ஒரு மாதிரி இருக்கு எனக்கு என்ன அச்சி எனக்கே தெரியல ஒவ்வொரு முறை உன் கூட மல்லுக்கு நிக்க சொல்லவும் என்னை அறியாமலே உன் பக்கம் சாஞ்சிடுது என் மனசு என்று அவனை பார்த்தபடியே நினைத்தவள் இருவருக்குமான் பாலை டேபுளின் மேல் வைத்துவிட்டு பால் கொஞ்சம் சுடா இருக்கு வந்து கொடுப்போம் என்று நினைத்தவள் அவளுக்கான மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

சிறிது நேரம் கழித்து குளியலறை கதவை திறக்கும் ஓசையில் சுயம் அடைந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க
எதிரல் இரவு உடையான பேண்டும் சற்று இறுக்கமான் சட்டையினையும் அணிந்தவளை காணவும் மற்ற யோசனைகள் அனைத்தும் மறந்து போக அவனின் எண்ணங்கள் முழுதும் மனைவியே சுற்றியே வட்டமடித்தது. ரசனையாக அவளை பார்த்தவனின் இதயமும் ஒரு முறைக்கு பலமுறை எம்பி குதித்து உனக்கு ஈவு இறக்கமே இல்லலயாடி என்பது போல் இருந்தது.

பூ துவாளையில் முகத்தை துடைத்தபடியே டேபுள் அருகில் வந்தளின் வதனம் அவனை இம்சை செய்ய இன்னைக்கு அவகிட்ட சொல்லிடனும் என்ற முடிவோடு இருந்தான்.

ம்.... இந்த பால் என்று அவனிடம் நீட்டியவள் தனக்கும் ஒன்றை எடுத்துக்கொண்டு அவனை சுற்றி மெத்தையின் அடுத்தபக்கத்தில் வந்து அமரந்தாள். அவள் செப்பு இதழ்களில் பால் அருந்திய தடம் இருக்க ரோஜா இதழில் தேன்துளிகள் இருந்தது போல இருக்க உணர்வின் பிடியில் சிக்கி தவித்து போனான் கேஷவ். உன் கிட்ட பேசனும் ஆட்டோ பாம் என்றான் பால் டம்பளரை வெறித்தபடி

"என்ன ஆட்டோ பாமா" என்றாள் விழி விரிக்க

பச் என்று சலித்தவன் ரொம்ப முக்கியம் சொல்ற கேளுடி என்றான் கடுப்பாய்

போடா ஆட்டோ பாம்ன்னு கூப்புடுற எனக்கு பெரு இல்ல மூஞ்சிய பாரு இருடா உனக்கு ஒரு பேரூ வைக்கிறேன் என்றவள் அவன் முகம் பார்த்து என்ன பேரு வைக்கலாம் என்று அவனை கண்ணை பார்க்க அது துளைத்து எடுப்பது போல் அவளையே பார்த்தது அவன் இதழை பார்க்க அது சொன்ன சேதி அவளை ஏதேதோ செய்ய முடிவாய் அதனை உதரியவள் அவனின் திமிரையும் அதிகார தோரனையும் கொண்டே பேரு வைக்கனும் என்று நினைத்தாள். துவார பாலகர்ன்னு வைப்போமா சே... சே... அவங்க வெளியே ல நிப்பாங்க இவன் உள்ள இருக்கானே அது பெரிய கிடா சைஸ் மீசை வைச்சி இருப்பாங்க பாக்கவே கதோட்கஜன் மாதிரில இருப்பாங்க இவன் மீசையே அழகா இருக்கு பார்க்க கொஞ்சம் ஹேன்சமாவே இருக்கான். அது வேன என்று கைவிட்டவள் அடுத்து யோசித்தது கஞ்சி பவுடர்ன்னு சொல்லுவோமா ரொம்ப விரைப்பா தானே இருக்கான் அதுதான் செட் ஆகும் என்று மனதினிலே கணக்கு போட்டவள் போடா porritage.... என்றவள் இன்னைல இருந்து ஷாட்டா பூரி என்று உள்ளுக்குள் கூறியவள் அவன் சொல்லும் சேதிக்காக அவனுடைய அழகிய முகம் பார்த்து காத்திருந்தாள். என்ன மறைத்தும் அவனை ரசிக்க ஆரம்பித்த மனதை கட்டுபடுத்த முடியவில்லை

நான் சொல்றது உன் நல்லதுக்குதான் என்று அவன் பீடிகையை போட ரொம்ப பெரிய விஷயம் பேச போறான் போல இருக்கே கோஞ்சம் உஷாரா கவனிப்போம் அவனையே பார்த்திருந்தா எல்லாத்தையும் மறந்துடுவோம் என்று அவள் விழி அகற்றாமல் அவனையே பார்த்திருந்தாள் பார்கவி.

அது என்று தயங்கியவன் தயவு செய்து டிரெஸ் கொஞ்சம் லூசா போடுடீ மனுஷன் கண்ட்ரோல் மிஸ்சாகுது இல்ல என்று சொல்ல அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை

அவன் வேறு ஏதோ பேசவான் என்று எதிர் பார்த்தவளுக்கு அவளுடைய உடையை பற்றி பேசவும் மனதுக்குள் ஏதோ படபடப்பாய் உணர்ந்தாள். வயிற்றுக்குள் பட்டம்பூச்சி பறப்பது போல உணர்வு தாக்கியது இருந்தும் அவன முன் அதை மறைத்து என்னது லூசாவா இந்த டிரெஸ்க்கு என்ன என்று இழுக்க ம் என்றவன் போய் அங்க பாரு என்று ஆளுயர கண்ணாடியை கை காட்டினான் அவளின் மணாளன்.

அவள் எழுந்து சென்று கண்ணாடியில் தன் பிம்பத்தை காண அவளுடைய உடலை இறுக்கி தழுவியிருந்த சட்டையை கண்டவள் முதன் முறையாய் நாணம் கொண்டு அவனை பார்க்க சங்கட பட்டுக் கொண்டு தலையை தாழ்த்திக் கொள்ள அவள் மேனியில் அத்துமீறி அவன் பார்வையால் ஊர்வலம் நடத்தியவன் நான் ரொம்ப நல்லவனா இருக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்டி என்று எழுந்து வேகமாக அவளருகில் வந்து நின்றான். அவளின் பிரேத்யேகமான நறுமணம் அவன் நாசியை தீண்ட அவள் கண்ணாடி முன் நிற்க அவள் பின்னால் இவன் நின்றபடி கழுத்தில் முகம் வைப்பது போல காட்சி கண்ணாடியில் பார்க்க அவள் நாணத்தில் கண்களை பொத்திக் கொண்டாள்.

அவள் வெட்கத்தினை கண்டவனின் இதழ்கள் மெல்ல விரிந்து இவள் தனக்கானவள் என்ற எண்ணம் தோன்ற அவளின் கைகளை விளக்கி ஒற்றை விரல் கொண்டு நாடியை நிமிர்த்தியவன் கண்கள் அயிரம் கதைகள் சொன்னது அவளுக்கு

பீளிஸ் ஆட்டோபாம் உன் நல்லதுக்குதான் சொல்றேன்... நானும் சராசரி ஆம்பள தான் என் பொண்டாட்டின்னு உன் மேல உரிமை கொண்டடிட ஒரு நிமிஷம் போதும் ஆனா அதுல எனக்கு விருப்பம் இல்ல நீயா மனசு மாறனும் நான் உன் புருஷன்னு உன் மனசு நினைக்கனும் நீ மொத்தமா எனக்கு வேனும் அதுக்காக ஒவ்வெரு நாளும் நான் காத்துக்கிட்டு இருக்கேன் என்றவன் அங்கு இருந்து அகன்று கட்டிலில் சென்று படுத்துக்கொண்டான்.

வெகுநேரம் அவனைபற்றியே சிந்தனையில் இருந்தவள் கட்டிலின் மறுபக்கம் வந்து படுக்க தூங்கியவனின் காரங்கள் தன் மனையாளின் இடையில் படர
கவிதான் உறக்கம் இல்லாமல் தத்தளித்தாள் புது வித உணர்வு அவளை ஆட்கொண்டது. உடலில் ஏதோ ஒரு ஹார்மோன் மாற்றம் இரத்தம் சூடாவதை உணர்ந்தாள். மூடியிருந்த கண்களுக்குள் கண்மணிகள் அங்கும் இங்கும் நிலையில்லாமல் ஓட. கேஷவின் உறக்கத்தை உறுதிபடுத்திக் கொண்டவள் அவளின் அருகில் தெரிந்த அவன் முகத்தை பார்த்தாள். விரல்கள் கொண்டு அவன் முகத்தில் கோலம் போட்டவள் நீ சரியான திமிர் புடிச்சவன் நினைச்சிட்டு இருந்தேன் தடா.... உனக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா டா.... கெட்ட பையா.... பொறுக்கி பையா.... ஆனாலும் இத்தனுண்டு இதோ இத்தனுண்ணு நீ நல்லவன் தான்டா என்று திட்டினாலும் அவளின் முகமோ மலர்ந்து கைகளை காட்டி சொல்லிக் கொண்டிருந்தாள். விரல் இதழ்களில் மேல் இருந்த மீசையில் இறங்க அதனை பிடித்து இழுத்தாள். அதன் குறுகுறுப்பில் இன்னும் கேஷவின் அணைப்பு இறுக அவனிடம் இருந்து விடுபெற எண்ணம் இல்லாது அவனின் மார்பையே மஞ்சமாக்கி அதில் துயில் கொள்ள ஆரம்பித்தாள் பார்கவி.
______________________________________
______________________________________

ஊட்டி

ஏதோ ஒரு துள்ளல் இசையை விசில் அடித்தபடியே விரல் இடுக்கில் சாவியை சுற்றியபடியே உள்ளே வந்தான் சித்தார்த்.

கையில் பாதம் அல்வாகிண்ணத்தை வைத்தபடியே கணவரிடம் வாங்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்க சித்து உள்ளே வருவதை பார்த்ததும் இதை புடிங்க அவனுக்கும் கொண்டு வரேன் என்று சென்றவரை பாவமாக பார்த்தபடி விதி வலியது எனும் பாவனையில் அமர்ந்திருந்தார் நவநீதன்.

இன்னைக்கு என்னபா சோதனை செய்து இருக்காங்க அம்மா என்று கலவரத்துடனே கேட்க

அதை ஏன்டா கேக்குற ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கிச்சனுக்கு போனவ வெளியே வரும் போது அல்வான்னு இதை கொண்டு வரா என்று மகனுக்கு காட்டியவர் ஏதோ புதவிதமாய் முயற்சித்திருப்பார் போலும் பார்கவே கொஞ்சம் பீதியாகதான் இருந்தது எட்டி கிண்ணத்தை பார்த்தவன் கிச்சனையும் ஒரு பார்வை பார்த்தான் என்ன பார்க்குற உன்னை பாத்துட்டா உனக்கும் எடுத்துட்டு வறேன்னு போயி இருக்கா இதை பாக்கவே பயமா இருக்குடா இதை திங்கலனா அதுக்கு வேற தனியா பணிஷ் பண்ணுவா என்று புலம்பியபடி இருக்க

சமையலறையில் இருந்து வெளிபட்ட ராதா வை பார்த்ததும் வாயை இறுக்க மூடிக்கொண்டார் நவநீதன்.

அவரை முறைத்தபடியே மகனுக்கும் ஒரு கிண்ணத்தில் கொடுத்தவர் ஆவர்மாக கணவரையும் மகனையும் பார்க்க மிகவும் கஷ்டப்பட்டு உள்ளே இறக்கினார் நவநீதன் அது வாயோடு ஒட்டிக்கொண்டு வாய் திறக்க மறுத்தது தந்தையின் நிலமையை கண்டவன். மா வெளியே போயிட்டு இப்போ தான் வந்தேன் பிரெஷ் ஆகிட்டு வறேன் மா என்றவன்

அதுசரி என்னம்மா திடீர்ன்னு ஸ்வீட்ல இறங்கிட்ட வீட்டுல ஏதாவது விஷேஷமா என்று பேச்சை வேறு திசையில் கொண்டு செல்ல

அட அதெல்லாம் ஒன்னும் இல்ல செய்ய தோனுச்சி நல்லா இருக்கான்னு சொல்லு கண்ணா.என்றவர் ஸ்பூனில் ஒரு வாய் ஊட்டிவிட்டவர் சொல்லவே மறந்துட்டேன் பாரேன் மதியம் நம்ம மஞ்சு கால் பண்ணி இருந்தா வர்ர வெள்ளி கிழமை தியாகுட்டி இங்க வர்ராலாம் படிப்பு விஷயமா காலேஜ்ல இருந்து பஸ் வருதாம் என்றவர். மகன் அதிர்ச்சியில் இப்பதை கவனத்தில் கொள்ளாமல் தன் பாட்டிற்க்கு பேசிக்கொண்டே செல்ல இவனுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒடடிக்கொண்டது போல உணர்வில் இருந்தான்.

தாயிடமிருந்து லேசாய் நழுவியவன் தன் அறைக்கு சென்று ஓய்ந்து அமர்ந்தான். ராச்சசி ராச்சசி உன்னை டிஸ்டரப் பண்ண மாட்டேன் உன்கிட்ட பேச மாட்டேன் சொல்லிட்டு இப்படி அடிக்கடி இம்சை கொடுக்குறியேடி கண்மூடினா கனவுல வர கண் திறந்த நேர்ல இருக்கா மாதிரி இருக்க இம்போ உண்மையா எதிர்ல வந்து என்னை உண்டு இல்லன்னு பண்ண போறியா...... இதுக்கு ஒரே ஐடியாதான் நீ வரும்போது நான் ஊருலியே இருக்க கூடாது எங்கயாவது கண்காணாத தேசத்துக்கு ஓடி போயிடனும் என்று கண்மூடி நினைத்து நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து இருக்க அவன் கண்களை இறுக்கி மூடியபடி பின்னால் தியா சிரித்து நின்று கொண்டிருப்பது போல் தோன்றியது அவனுக்கு இது கோயம்புத்தூரில் இருந்து வந்த நாள் முதல் அவனுக்கு தோன்றும் ஒரு பிரம்மை இன்றும். அதுபோலவே தோன்றியது என்ன மாமா என்ன என்னை நேர்ல பாக்க பயந்துகிட்டு தானே ஓடி ஓளியுற மாமா எங்க போனாலும் உன்னை விடமாட்டேன். என்னை பேஸ் பண்ண ரெடியா இருந்துக்கோ மாமா.... உன்னை பாக்க நான் இதோ வந்துகிட்டே இருக்கேன்... என்றவளின் குரல் காதில் வெகு அருகில் கேட்பது போன்ற உணர்வு.

தலையை உலுக்கி அதனை விரட்டியவன். நான் ரொம்ப ஸ்டாங் என்னை சாய்க்கவே முடியாது முடிஞ்சா வந்து பாத்துக்கோடி என்று சுவற்றை பார்த்து பேச

அவனுக்கு காபியை கொண்டு வந்த ராதாத அதை பார்த்து விட்டு என்னாடா என்னச்சி என் புள்ளைக்கு நல்லா இருந்துனே மகராசா மாதிரி அய்யோ வேலை வேலைன்னு இப்போ என்னவோ மாதிரி தனியா உட்காந்து பேசுறானே..... மருதமலை முருகா உனக்கு பால் காவடி எடுக்குறேன் பா எந்த காத்து கருப்பு அடிச்சுதுன்னு தெரியலையே என் மவன நல்லா ஆக்கி கொடுத்துடு சாமி என்று அறட்டியபடியே வேண்ட

அம்மா, அம்மா.... .கொஞ்சம் சும்மா இருக்கியா இல்லையா இன்னும் முழு லூசு ஆகல இப்படியே இருந்தா கொஞ்ச நாள்ள நான் முழு லூசு ஆகிடுவேன் என்று தாயிடம் கடுபடித்தவன் முதல்ல காபிய வைச்சிட்டு போமா என்று அவரை விரட்டியவன் மெத்தையில் அலுப்பாய் சாய்ந்தான்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 24
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN