காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி25

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பகுதி 26

மலேஷியா

ஜெயந்த்தின் நீண்ட நாள் கனவான மலேஷியா ஏஷியன் அரை இறுதி போட்டிக்கு தேர்வான போது அவனின் மகிழ்ச்சியின் அளவை சொல்லவும் வேண்டுமோ ஏஷியன் சேம்பியன் ஷிப் என்றால் சும்மாவா சுமார் 200 நூருக்கும் மேற்பட்ட போட்டியளர்கள் கலந்துக்கொண்டு இருக்கையில் இதில் அரையிறுத்திக்கு முன்னேற எவ்வளவு பாடுபட்டு இருப்பான் கடுமையான பயிற்சி அதையும் தாண்டி வெறியே என்றே சொல்ல வேண்டும்.

இரவு பகல் பாரமலேயே உழைத்ததின் பலன் கை மேலே காண வேண்டும் என்றால் உடல் ஆரோக்கியம் மட்டும் அல்லாது மன ஆரோக்கியமும் முக்கியம்.... இன்னும் 15 நாட்களில் தன் கனவு கைகூடும் என்று மகிழ்ச்சிகடலில் இருந்த நிலையில் மனதிற்கு மாற்றத்தையும் புது உற்சாகத்தையும் வேண்டி அறையையும் மைதானத்தையும் விட்டு வெளியே வந்தவன் மலேஷியநகரின் அழகில் சிலச் சுற்றுளா தளங்களை சுற்றி பார்க்க விழைந்த போது மனமோ முதலில் இறைவனின் சன்னிதானத்தை நாடியது.

அழகான முருகர் கோவில் அமைதியே வடிவான அழகு முருகன் பாலதண்டாயுதபானி எனும் நாமத்தில் அருள்பாளித்து கொண்டிருந்தார்... ஆறுமுகன் ஒரு முகமாக இரு தேவியருடன் காட்சி தர கண்மூடி அமைதியாய் மட்டும் நின்றிருந்தான் ஜெயந்த்.

அவனுக்கு கோவில் வருவதற்கு பிடிக்கும் மற்றபடி
எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று வணங்காமல் அமைதியாய் கண் மூடி அந்த நிமிடத்தை மனதில் இருக்கும் அனைத்தையும் இறக்கி விட்டு அமைதியை நாடுவான் இன்றும் அதே போல் தான் இருந்தான். பின்பு பக்கத்தில் இருக்கும் ஷாபிங் மாலுக்குள் நுழைந்தவன் கடிகாரத்தை பார்க்க மணி 1 யை நெருங்கி இருந்தது. இந்தியன் உணவக்திற்குள் நுழைந்தவன் காலியாய் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அந்த விரும்பத்தகாத சம்பம் நடந்து இன்றோடு 1 வாரம் கடந்த நிலையிலும் இன்றும். அவள் மனம் உலைகளத்திற்கு இணையாகக் கொதித்துக் கொண்டு தான் இருந்தது. அவள் கேட்ட அமில வார்த்தைகளின் வீரியம் இன்னும் அடங்கிய பாடில்லை மனது ரணமாய் கந்தியது என்ன அறுதல் சொல்லியும் தன் மனவலியை மதுவந்தியால் விலக்க முடியவில்லை.

வலிகளை முகத்தில் மறைத்தாலும் கண்களில் மறைக்க முடியுமா உண்மையை பேசும் கண்களல்லவா சேம் செய்யவிருந்த கொடுமையில் இருந்து தப்பித்தவள். பாம்புக்கு பயந்து பருந்திடம் அல்லவா சிக்கியது வார்த்தைகளில் அவளை கொன்று புதைத்துவிட்டது… அதிலிருந்து அங்கு வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு ஒரு இந்திய உணவகத்தில் பகுதி நேர வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறாள் அங்குதான் ஜெயந்தும் வந்து அமர்ந்தான்.

ஜெய் வந்து அமர்ந்ததும் பவ்யமாக முறையாய் தொப்பி மற்றும் அதற்கான உடைகள் அணிந்து வந்த ஒருவன் ஆடர்களை எடுக்க அவனுக்கு எதிர்புறத்து டேபுளில் இருப்பவருக்கு உணவினை கொண்டு வந்த மதுவந்திக்கு அருகில் வரவர தலை சுற்றுவது போல் இருந்தது.

அவன் டேபுள் அருகில் வந்தவள் எவ்வளவு முயன்று சுதாரிக்கும் முன்னே அவன் மீதே கொண்டு வந்த டிரேயை சரித்து விட்டு கீழே விழ இருந்தாள் மது. இந்த எதிர்பாரத விபத்தில் கொஞ்சம் அதிர்ந்து போய் இருந்தாலும் அவளை விழாமல் தாங்கி பிடித்து நேர நிறுத்தி வைக்க... விழ இருந்த அதிர்ச்சியில் இரு கைகளையும் முகத்தில் பொத்தி பயந்தில் நின்றிருந்தவள் தான் விழவில்லை என்றதும் கைகளை விலக்கி எதிரில் இருவரை பார்க்க விழி விரித்து அதிர்ந்து போய் இருந்தாள்.

இது இவர் இவர் என்று நினைத்தாலும் மற்றதை யோசிக்காமல் சாரி சாரி சார் ஐயம் எக்ஸிரிலிமி சாரி சார்... என்று ஆங்கிலத்தில் சரளமாக செய்துவிட்ட தவறுக்காக மன்னிப்பு கேட்டாள் மதுவந்தி.

அவள் மேல் கோபம் வரவில்லை... எதிபாராமல் நடந்துவிட்டது என யூகித்து இருந்தான். அவனும் மதுவந்தியை எங்கே பார்த்தோம் என்பதனை நினைவு வந்தவுடன் ஒரு சுவாரஸ்யம் வந்துவிட ட்ஸ் ஒகே.. ட்ஸ் ஒகே ஜஸ்ட் ரிலக்ஸ் என்று அவளை சமாதனபடுத்த அவனின் சட்டையில் ஏற்பட்ட கரையை டிஷியூவால் துடைத்துக்கொண்டே கூறினான்.

சாரி சார் என்று மீண்டும் மன்னிப்பு கேட்டு இன்னொரு டீஷியுவால் அவளும் துடைக்க முற்பட
பரவாயில்லைங்க பரவாயில்லை நீங்க பயப்படாதிங்க என்று அவன் கூறியதும் துடைங்க வந்த அவளின் கைகள் அந்தரத்தில் நின்றது

இவருக்கு தமிழ் தெரியுமா அப்போ அன்னைக்கு நடந்தது எல்லாம் தெரிஞ்சிதான் சும்மா இருந்தாரா என்று நினைத்தபடியே தயங்கி தயங்கி "உங்களுக்கு தமிழ் தெரியுமா?" என்று கேட்டு விட்டாள் மதுவந்தி.

அவளை புரியாமல் பார்த்தவன்.. அவள் கேட்டதற்கான அர்த்தம் விலங்க அன்று அவள் தோழி பேசியதை நினைத்துதான் கேட்கிறாள் என்று அறிந்தவன் சிறு முறுவளுடனே ம் தெரியும் மா.... நான் சுத்த அக்கமார்க் தமிழ் நாட்டு பிராடக்ட் மா என்றவன் தன் சட்டையை ஒரு முறை பார்க்க அது அழகிய ஆகாய நீல வண்ண டீ ஷர்ட் இங்கு ஏற்பட்ட குளறுபடியால் சிவப்பு மற்றும் அங்காங்கே மஞ்சளுமாய் காட்சி அளிக்க என்ன ஒன்னு பிளைனா இருந்த சட்டை கொஞ்சம் டிசைன் ஆகிடுச்சி என்ற கேலியுடனே எழுந்து கொண்டான். ஜெயந்த் எப்பவும் இப்படி எல்லாம் பேச மாட்டான் யாராய் இருந்தாலும் பேச்சில் ஒரு முதிர்ச்சி இருக்கும் ஆனால் இன்று இவளிடம் இவ்வளவு கேலியாய் பேசியது அவனுக்குமே வியப்பு.

அட கடவுளே அவனுக்கு தமிழ் தெரியும் என்ற அவஸ்தையில் இருந்தவள் அவன் சட்டைக்கான காரணத்தை சொல்லவும் கொஞ்சம் வருத்தமாய் உணர்ந்தாள்.அவன் அவ்விடத்தை விட்டு நகரவும் சார் சாரி சார் எங்க போறிங்க? என்றாள்.

அவளை புருவம் உயர்த்தி பார்த்தவன் சட்டையை காட்டி "இப்படியே வெளியே எப்படி போறது வாஷ்ரூம் போயிட்டு வரேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.

தன் சூப்பர்வைசரிடம் கூறிவிட்டு வெளியே சென்றவள் சிறிது நேரத்திற்கெல்லாம் கையில் ஒரு பார்சலுடன் வந்தாள். கண்களால் ஜெயந்தை தேட அவன் சாப்பிடவது தெரியவும் அருகில் சென்றவள் அந்த பார்சலை நீட்டி "இதை வாங்கிக்கோங்க சார்" என்று கூறவும் அவளை என்ன இது என்ற கேள்வியை சுமந்து வந்தது அவன் பார்வை.

அவனின் கேள்வியை கிரகித்தவள் "அது உங்களுக்கு ஷர்ட் என்று தவிப்பாய் கூற" முதலில் மறுக்க நினைத்தவன் அவளின் முகம் அவன் வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற பரிதவிப்பை காணவும் ஏதோ உந்துதலில் அதை வாங்கி கொண்டவன் கை கழுவும் இடத்திற்கு சென்று மாற்றி வர அவனுக்கு கச்சிதமாய் அவள் தேர்ந்தெடுத்திருந்த உடை பொருந்தியதை பார்த்ததும் கன்னியவள் ஆச்சர்யமாய் பார்த்தாள்.

"ரொம்ப நன்றிங்க ஷர்ட் ரொம்ப நல்லா இருக்கு எப்படி எனக்கு பார்பக்ட்டா பிட் ஆகரா மாதிரி எடுத்திங்க கலர் கூட சூப்பர் எங்க அம்மாக்கு அப்புறம் எனக்கு நீங்க நல்லா செலக்ட் பண்ணி இருக்கிங்க" என்று அவளை பாராட்டவும் மறக்கவில்லை...

இது என்னடா பார்த்த இரண்டாம் சந்திப்பிலேயே அம்மாவுடன் ஒப்பிட்டு பேசிவிட்டோமே என்று நினைவு எதுவும் இல்லை அளந்து பேசுபவன் பேச்சு இன்று அருவி போலிருந்தது. இவ்வளவு நேரம் பேசுறோம் இப்யூ டோன்ட் மைன்ட் உங்க பெயர் என்னன்னு?" என்று ஆரம்பித்ததன் பலனாய்

"ஹோ... சோ சாரி சார்" என்று தவையை தட்டிக் கொண்டு இன்னும் நான் என் பெயரை சொல்லவே இல்லைல என்றவள் தன்னை அறிமுகபடுத்தி கொண்டாள்.

அவனும் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டு தான் வந்ததன் நோக்கத்தையும் கூற அந்த சந்திப்பு நல்லபடிகயாகவே நிறைவு பெற்றது... என்ன ஒன்று உள்ளங்கள் மாறவேண்டிய இடத்தில் இப்போது சட்டைகள் மட்டும் மாறிக் கொண்டது.

______________________________________

கோயம்பத்தூர்.

அவன் நெஞ்சத்தையே மஞ்சம் ஆக்கியவளுக்கு அடுத்த நாள் அவன் முகம் பார்க்க முடியாமல் நாணம் வந்து அவளை படாய் படுத்தியது. ஏதோ ஒரு குறுகுறுப்பு அழையா விருந்தாளியாய் அவள் மனதில் ஒட்டிக்கொண்டு அவளை சுகமான இம்சை செய்தது.

அவளின் காதல் கள்ளவன் விழிக்கும் முன்னே எழுந்தவள் அவனின் முகம் பார்த்தாள் பிடிவதமாய் படுத்து இருக்கும் முரட்டு குழந்தையாய் அவள் கண்களுக்கு தெரிந்தான் அவளின் கட்டிளம் காளை. அலையலையாய் இருந்த கேசத்தில் விரல் கொண்டு விளையாட ஆசை கொண்ட விரல்களை அடக்கியவள் அவன் மீசை அவளை இம்சிக்க அழகனாய் தெரிந்தான். இந்த முறை அவள் கைகள் குறுகுறுத்தது இருந்தும் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத தடை அவளை நெருங்க விடாமல் விலக்க இப்போது அவனிடத்தில் சிறு அசைவு தெரியவே எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் குளித்து விட்டு வெளியே வந்த பிறகும் எழாதவனின் அருகில் சென்றவள் ஆசை தீர ஒரு முறை அவனை பார்த்தாள். தனக்கு தானே சிரித்தபடி. என்னை பேசியே கரைச்சிட்டியேடா நீ என்ன எவ்வளவு சீண்டினாலும் என்னால உன்னை ஒதுக்கவே முடியல டா.... உன்கிட்ட வம்புக்கு வம்பு பேசியாவது உன்கூடவே இருந்திட தோனும் ஆனா அதுக்கு இப்போ தான் விடையே கிடைச்சி இருக்கு... உனக்கு அப்படி தோனி இருக்கா... என்னை உனக்கு பிடிக்குமா என்று எதிர்பார்ப்புடன் காதலுடனும் அவனிடம் கேள்வியை எழுப்பியவள் சிறிது நேரத்தில் கிழே சென்று விட்டாள்.

கிழே வந்தவள் நேராய் கிச்சனுக்குள் நுழையவும் சீக்கிரம் எழுந்துட்டியா டா என்று கேட்டபடியே அவளுக்கு கபியை கலந்து கொண்டிருந்தார் ஆதி.

ஆமா அத்த.... இன்னைக்கு லைப்ரரில நோட்ஸ் எடுக்கனும் கொஞ்சம் படிக்க வேற இருக்கு என்று கூறி அவரிடம் இருந்து காபியை பெற்றுக் கொண்டவள். அத்த நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா என்று பக்கத்திலேயே நிற்க அவளின் முதுகுபுறத்தில் கையை வைத்து வெளியே அழைத்து வந்தவர் உனக்கு நிறைய படிக்க இருக்கன்னு சொன்னல்ல உட்காந்து படி என்றவர் மறுபடி காலை உணவை தயாரிக்க சமயலறைக்குள் சென்றார்.

கையில் அன்றைய நாளிதழுடன் அமர்ந்த ராஜாராமன் மருமகளை பார்த்ததும் குட் மார்னிங் டா என்று கூற சிரித்த முகமாகவே குட் மார்னிங் மாமா என்றவள் கையில் புத்தகத்துடன் சோபாவில் அமரந்தாள்.

கவி மா எப்படி இருக்கான் டா உன் அப்பன்... என்ன சொல்றான் இன்னும் வேலை வேலைன்னு தான் இருக்கானா... ஒரு தரம் வீட்டுக்கு வந்துட்டு போகலாம் இல்ல என்றார் தினசரியை புரட்டியபடியே

அதற்கு கவி பதில் கூறும் முன்பே ஹ அவரு ஒரு வக்கீல். அண்ணனுக்கு அயிரெத்தெட்டு வேலை இருக்கும் நீங்கதான் ஒரு எட்டு பார்த்துட்டு வர்ரது சும்மா எங்கள உருட்டி மிரட்டரதுக்கு அங்க போயிட்டு வரலாம்ல என்று அவருக்கு காபியை நீட்டியபடியே பேசினார்.

எப்படி உன் சின்ன மகன் கூட சேர்ந்து அவனோட பேச்சும் ஒட்டிக்கிச்சா என்னை எதிர்த்து பேசுரது அவன் மட்டுமா தான் நினைச்சேன்.... இப்போ நீயுமா??? என்று அவரும் சிம்மகுரலில் ஆரம்பித்து நலிந்த குரலில் சிரிக்க

காலையில அவனை சொல்லலனா உங்களுக்கு பொழுது போகாதே என்னமோ எனக்கு உங்கள பார்த்து பயம்ன்ற மாதிரி அவனாலதான் பேசுறேன் சொல்லறிங்க என்றவர் நொடித்தார்.

அப்போ என் மேல பயம் இல்லங்கறியா இப்பதானடி சொன்ன மிரட்டி உருட்டுரேனு

கேலிகலந்த குரலில் அஹ் நினப்புதான் பொழப்ப கெடுக்குமாம் வேலைய பாருங்க ஒன்னு சொல்லிட கூடாது அதையே பிடிச்சிக்க வேண்டியது... நீங்க ரிட்டேயர்டு ஆகியாச்சி இன்னும் அதே பழைய நினைப்பு ல இருக்கிங்க என்று முகவாயை தோளில் இடத்து கொண்டு வெளியே சென்றார் ஆதி

அத்தையும் மாமாவும் கேலியாக பேசி கொண்டதில் மெல்ல புன்னகை செய்தாள் பெண்ணவள்.

மனைவி இந்த பக்கம் சென்றதும் மாடிபக்கம் பார்வையை செலுத்திய ராஜாராமன் இன்னும் அவன் எழுந்துக்கலையா என்றார் மருமகளிடம் ஜாடையாக
மாமியாரை வெளியே எட்டி பார்த்து இல்லை என்று அவளும் ஜாடை காட்டினாள்

ம்..... என்று தவையை ஆட்டியவர் அடுத்த பக்கத்தை படிக்க துவங்கிவிட்டார். ஏதோ அப்பா மகன் வழக்கு என்று அவளும் கண்டு கொள்ள வில்லை முக்கியமான விஷயம் என்றால் கட்டாயம் கூறுவார்கள் என்று நினைத்தவள் தந்தை மகனுக்குள் ஆயிரம் இருக்கும். இதற்கு நடுவில் தான் யார் என்ற எண்ணத்தில் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை ஒரு வேலை ஏன் எதற்கு என்று கேள்வி எழுப்பி இருந்தாள் கணவன் மனைவிக்குள் விரிசலை உருவாகமல் தடுத்து இருக்கலாம்.

அரைமணி நேரம் கழிந்து வீட்டுக்குள் வந்த ஆதி மணியை பார்த்து சமையலறையில் சென்று சுட சுட காபியுடன் வந்தவர் நேராக கவியிடம் காபியை நீட்டி கவிமா இந்த காபியை கேஷவுக்கு கொடுத்துட்டு வரியா என்று கேட்கவும் அவனை பார்க்க வெட்கபட்டவள் தலையை நிமிர்த்தாமல் காபியை வாங்கிய விதத்திலையே ஆதி மறைமுகமாக சிரித்துக்கொண்டு மறுபடி பூஜை அறைக்கு செல்ல

கொஞ்சம் நில்லு ஆதி என்ற ராஜாராமன் எதுக்கு இப்போ படிக்கிர பொண்ண எழுப்பி அனுப்பின நம்ம வேலன் கிட்ட கொடுத்து அனுப்புறது புள்ள பாவம் இப்போதான் படிக்க உட்காந்தது என்று கவிக்கு நிலமை தெரியாமல் வக்காலத்து வாங்கினார் அந்த பெரியவர்.

அவரை ஒரு பார்வை பார்த்தவர் அவங்களுக்கு கல்யாணம் ஆகி 15 நாள் தான் ஆகுது சின்ஞ்சிறுசுங்க இன்னும் சரியாகூட பேசிக்கல அவனும் ஆபீஸ கட்டிகிட்டு அழுகுறான் இவ எதிலயும் ஒட்டுனா போல தெரியலங்க அவங்களுக்கு சந்தர்பத்த நாமதான் கொடுக்கனும். இதுபோல சின்ன சின்ன விஷயத்தை செய்ய வைச்ச அவங்களுக்கு நெருக்கமும் அதிகம் ஆகும்... ஒருத்தர ஒருத்தர் சார்ந்து இருக்க பழகிக்குவாங்க என்றார் அர்த்தமான பார்வையுடம்

மனவியின் அறிவை கண்டு வியந்தவர் பார்வையாவே அவரை மெச்சிக்கொண்டு நல்லதே நடக்கும் ஆதிமா என்றார் கனிவான குரலில். மனைவியின் பால் அவரின் நெகிழ்ச்சி புரிய சீக்கிரமே நீங்க நினைச்சதும் நடக்கும்ங்க என்றார் ஆதியும் பூடகமாக.

என்ன மறைத்தும் கொஞ்சம் படபடவென அடித்து கொண்ட மனதையும் அவளின் சொல்பேச்சை மறந்து அலைபாய்ந்த கண்களையும். அடக்க முடியவில்லை அவளுக்கு அவனை பிடிக்கும் என்று தெரிந்த பின்னே அவளால் காதலை மூடி மறைக்க முடியவில்லை.

அவள் அறையில் நுழையும் போதே அவன் மெத்தையில் இல்லை. குளியலறையில் இருந்து சத்தம் வர அங்கே தான் இருப்பான் என்று யூகித்துக் கொண்டவளின் மனம் இன்று அவன் அணியும் ஆடையை தேர்ந்தொடுக்க ஆசை கொண்டது.

ஒவ்வொரு நாள் உடையிலும் கேஷவின் கம்பீரம் அளூமை அழகு வசிகரம் என அனைத்தையும் கண்டும் காணமலும் அவனை ரசிப்பவள் இன்று ஏனோ அதை தான் தேர்ந்தெடுக்க ஆகாயத்தில் பறந்து கொண்டு இருந்ததாலும் கூடவே பரபரப்புமும் வந்து ஒட்டிக்
கொண்டது.

அதே பரபரப்புடன் அவனின் கபோர்டை திறக்க அழகிய கருநீல நிற கோட் அவளை ஈர்த்தது. அதற்கு பொருந்தும் வகையில் வெள்ளை நிற சட்டையை கையில் எடுத்தவள் கற்பனையில் அவனுக்கு அணிந்து பார்க்க உள்ளம் அழகன் டா நீ என்று சொல்லிய நேரம் சற்றும் எதிர்பாரத நிகழ்வு நடந்தேறியது.

குளியலறையில் இருந்து வெளியே வந்தவனின் கண்களுக்கு மோனநிலையில் தனக்கு தானே சிரித்துக் கொள்ளும் மனைவியே பட சத்தமிடமல் மெல்ல எட்டு வைத்து அவள் அருகில் வந்தவன். அவளின் மோனநிலையை கலைக்கும் பொருட்டு அவனின் மூச்சு காற்று அவள் மேனியில் பட மெல்ல குனிந்து அவள் செவிகளில் ஆட்டோ பாம் நீ ரொம்ப அழகா இருக்கடி என்று கூற சட்டென அருகில் அவன் குரல் கேட்கவும் திடுக்கிட்டு விலக அவள் கால் இடறி பதட்டத்தில் பிடிமானம் இல்லாமல் அவன் மேலேயே சரிந்து இருந்தாள்.

அவள் மேலே விழுவாள் என்று எதிர்பாக்கதவன் அவள் விழந்த வேகத்திலேயே பின்னல் இருந்த கட்டிலில் விழந்தான். கண்களோடு கண்கள் கலந்திருந்தது இதழ்களோ அதன் இணையை அழுத்தமாக சிறை செய்திருந்தது. அவனின் இந்த அருகாமை அணைப்பு எல்லாமே அவள் கருத்தில் பதிந்தாலும் எழுந்துகொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை. எதிர்பாரத இந்த முத்த விபத்தில் இருவருமே சற்று தடுமாறி அதனிலேயே கரைந்தும் விட்டனர்.

முதலில் சுதாரித்தது அவனே அவள் மூச்சு விட சிறிது இடைவெளி விட்டவன் அவள் முகத்தினை காண அவளின் பளிங்கு கன்னங்கள் வெக்கத்தில் சிவந்து இருந்தது. அவள் செம்மையில் மேலும் மயக்கம் கொள்ள ஆட்டோ பாம் பீளிஸ் டீ என்று அவன் கைகள் அவள் மென்மைகளில் அத்துமீறி விளையாடியது

அவள் மயக்கத்தில் இருந்து விழித்து கொண்டவள் போல் பட்டென அவன் மீது இருந்து எழுந்து கொள்ள இருதயம் தாறுமாறாய் அடித்து கொண்டது கைகள் நடுங்கியது கால்கள் துவண்டது நிற்கமுடியாமல் நிற்பவள் போல் தள்ளாடியவள் சா... சாரி என்றவள் அவனை காண முடியாமல் திரும்பி நின்றாள்.

அவளின் நடுக்கம் பதட்டம் தள்ளாட்டம் என அனைத்தையும் உற்று நோக்கியவன் அனைத்தும் தன் தொடுகையால் தான் என அறிந்து அவளின் நிலையை சமன்படுத்த மெல்ல அவளை தொட்டு தன் பக்கம் திருப்பினான்.

இப்போ எதுக்கு சாரி சொல்ற ஆட்டோ பாம் என்ற அவன் குரல் இளகி ஏனோ குழைந்து ஒலித்தது போல் இருந்தது அவளுக்கு... இந்த செர்ரிபழ உதட்டை எனக்கு கொடுத்ததுக்கு நான் தான் உனக்கு தெங்க்ஸ் சொல்லனும் என்று அவள் உதடுகளை வருட மெல்ல அந்த வருடலில் கண்களை மூடிக்கொண்டாள்... சில கணம் அவன் தொடுகையே தன்னை இவ்வளவு மயக்கம் கொள்ள வைக்குமா... என்ற எண்ணத்தில் இருக்க அவன் பேச்சுமே அவளை கிறங்கடித்தது இது எல்லாம் சில மணித்துளிகள் தான். அந்நேரம் பார்த்து கேஷவின் போன் ஒலிக்க பச் என்று சலித்தவன் அது அடிக்கட்டும் நீ வா என்று மையலுடனே அவளை அருகில் அழைக்க கேஷவின் மொபைல் விடாமல் ஒலி எழுப்பிக் கொண்டு இருந்தது.

அதில் தன்னிலை பெற்றவள் பக் என்று சிரித்துவிட்டு போனை எடுத்து அவன் கரங்களில் திணித்து பேசுங்க...
இவினிங் கண்டீனியூ பண்ணலாம் என்று சலனமே இல்லாமல் கிழே இறங்கி சென்றுவிட்டாள்.

திரையில் ஒளிர்ந்த எண்களை பார்த்தவன் அவள் சென்று விட்டாளே என்று கடுகடுத்த முகத்துடனே சொல்லு கரடி என ஆரம்பித்தான்.

கேஷவ் கரடி என்று கூறியதில் குழம்பியவன் "என்ன கேஷவ் கரடியா நான் கார்த்திக் டா" என்றான்

"பற்களை கடித்தபடியே டங்க் லிப் ஆகிடுச்சி சொல்லு கார்த்தி"

"இன்னைக்கு டீலர்ஸ் மீட்டிங் இருக்கு மறந்துட்டியா" என்று அவனுக்கு நியாபகபடுத்தினான்.

ஷிட் என்று கடிகாரத்தை பார்த்தவன் இன்னும் 15 நிமிஷத்துல அங்க இருப்பேன் என்று கூறி காலை கட் செய்து அவள் எடுத்து வைத்திருந்த ஆடைகளை பார்த்தவன். மனது மகிழ்ச்சியில் துள்ள அதை அணிந்துகொண்டு காலை உணவையும் துறந்து அலுவலகத்திற்கு சென்று விட்டான்.

அவளுக்குதான் என்னவோ போல் ஆனது அவனுடனான இந்த பயணத்தை எண்ணி மகிழ்வாய் இருக்க அவன் அவசரமாய் கிளம்பி சென்றது அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி25
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN