அக்னி தேவி (அறிமுகம்)

Akil

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வணக்கம் என் இனிய வாசக உள்ளங்களே..
அக்னி தேவி என் முதல் கதை குழந்தை..
ஏதும் முன்ன பின்ன இருந்தா உங்கவீட்டு பிள்ளையா மன்னித்து குறை நிறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...
இப்படிக்கு உங்கள் அக்னி..


அவள் கைகள் சாதாரணமாக கையாண்டபடி இருந்தன Rolls-Royce Sweptail காரை. சுமார் பதின்மூன்று மில்லியன் காரை ஓடுகிறோமே என்ற கர்வம் இல்லை பெருமை இல்லை. சொல்லப்போனால் அவளிடம் ஒன்றும் இல்லை... உடுத்த உடை கொண்டு ஓடும் கார் வரை வெறும் கறுப்பு...

அலட்சியமாய் வாரி விட்டிருந்தாள் ஆண்களை போல் கத்தரிக்கப்பட்டிருந்த அவள் முடியை.
அவளை போல் அடங்காது அதுவும் சிலிர்த்து நின்றிருந்து..
கரு நிற முழு சேட் அணிந்து அதனை கரு நிற ஜீன்ஸினுள் செருகி பெல்ட் போட்டிருந்தாள்.. கோர்ட் கழற்றப்பட்டு அவள் இருக்கையின் அருகில் அனாதையாய் கிடந்தது..பளபளக்கும் காலணிகளும் அவள் தோற்றத்துக்கு மிடுக்கையே கொடுத்தது..
அவளின் பொது நிற சருமத்தை அவள் போட்டிருக்கும் உடையின் நேர்த்தி மெருகூட்டியது என்றே கூறலாம்...
அவளை அவள் என விளிப்பதா இல்லை அவனென்றா அவள் பேசும் வரை அதை யாரும் கண்டறிதல் இயலாது..
காரின் அசாத்திய வேகத்துக்கு ஏற்ப அவள் கண்கள் மாறுதலை கொண்டுவந்தபடி இருந்தன..
இடையிடையே வெறுமை தோன்றினாலும் அந்த கண்களுள் வேட்டையாடும் சிறுத்தையின் வேகமும் வெறியும் நிதானமும் தெரிந்தது...

இடையே யாருக்கோ அழைப்பெடுத்தாள்...அதனை துண்டிக்கையில் உதடு நெளிந்தது..புன்னகைக்கிறாளா..இல்லைஇல்லை வேட்டைக்கான இரையை நெருங்கி விட்டதில் அவள் செய்யும் ஓர் அசைவு அவ்வளவே தான்....

எதிர்முனையில்...
அடேய் அவள போடுங்கடா எண்டா என்ன செய்து கிழிச்சீங்க.....அவ வந்துட்டிருக்காடா....
அக்னி வந்திட்டிருக்கா..... எனக்கு அஞ்சே நிமிசத்தில எந்த நாட்டுக்கு ரிக்கெற் இருக்குன்னு பாத்து உடனே book பண்ணுடா....டேய் செவிடா உனக்கு கேக்கல்லயா ...என ஆங்கிலத்தில் கத்திக்கொண்டிருந்தான் டேவிட்.
சேர் மன்னிக்கோணும் அக்னி மடம் இங்க வந்து அஞ்சு நிமிசம் ஆயிட்டு..

அக்னி வருவாள்....
 

Attachments

  • 47AA7823-177F-47FA-A217-76CAE3F129F1.jpeg
    47AA7823-177F-47FA-A217-76CAE3F129F1.jpeg
    88 KB · Views: 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆத்தி😲😲😲 என்ன அக்னி மேடம் இப்படி மிளிர்றாங்க😍😍😍😍 ஆரம்பமே அசத்தல இருக்கு டா👏👏👏👏👏 சூப்பர் ம்மா👌👌👌💖💖💖💖💖💐💐💐💐💐
 
OP
Akil

Akil

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆத்தி😲😲😲 என்ன அக்னி மேடம் இப்படி மிளிர்றாங்க😍😍😍😍 ஆரம்பமே அசத்தல இருக்கு டா👏👏👏👏👏 சூப்பர் ம்மா👌👌👌💖💖💖💖💖💐💐💐💐💐
நன்றி அக்கா🌺❤️🌹🌹🌹
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN