அக்னி தேவி 1

Akil

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்று நூறுபேர் தலைமையில்
இரண்டு பேர் இணைந்த நாடகத்தில்
இறுதியாய் உன் வயிற்றில்
உறங்க ஓரிடம் தந்தாய்...
இருண்ட அறைவாசம்
மீண்டும் தொடரும் என அறிந்திருந்தால்
நீ என்னை கருவில் களைந்திருப்பாயோ...
ஒடிந்த சிறகோடு என்னை
சுமக்க நீ கண்ட பெருவலி கண்டேன் நான்
காலனிடம் கோபமும் கொண்டேன்..
காலமோ என்னை கண்டு இன்னும் கோரமாய் பல் இளித்தது.........


துளசி ஓடாத டி ஏய் துளசி ...பிடிச்சனெண்டா பிரம்படி நிச்சயம் ஓடாம நில்லு...
எங்க பிடியன் பாப்பம்...
உனக்கு என்ன பிடிக்க ஏலுமே..ஏலுமெண்டா பிடி ...துளசி என்னடி அம்மாவ வா போ எண்ணு பேசிறா பிடிச்சனெண்டு வை பல்ல தட்டி கைல குடுத்துடுவேன்....
அஸ்கு புஸ்கு ஏலுமெண்டா என்ன பிடி அப்புறம் பாக்கலாம்....கூறிவிட்டு ஓடிக்கொண்டிருந்தாள் க்ருஷ்ணதுளசி.
மூண்டு சுத்து ஓடிட்டேன் துளசிம்மா..அம்மாவுக்கு மூச்சு வாங்குது கண்ணா ...தங்கமெல்ல என்னோட கண்ணல்ல கிட்ட வாம்மா...தல முடிக்கு எண்ண வைக்காட்டா எப்படி தலமுடி வளரும் சொல்லு...
மாட்டேன் போ நீ எண்ண வச்சா கண்ணெல்லாம் வழியும்.. எனக்கு எண்ண வேண்டாம்..
துளசி கண்ணுல்ல அம்மா வழியாம வைக்கிறன் வா தங்கம்..
நீ வேண்டாம் போ.....என ஓட எத்தனித்த துளசி பிறேக் போட்ட போல அந்த இடத்திலேயே நின்றாள் அவள் தாயின் விம்மல் கேட்டு..
உனக்கும் நான் வேணாமா துளசி என கண்ணுள் கண்ணீரை அடக்கி வைத்து உடைந்த குரலில் கேட்ட தாயை நோக்கி திரும்பினாள் ஐந்து வயது துளசி.
ம்மா விளாட்டுக்கு சொன்னேன்மா நீ கண்ணுக்க வழியாம வச்சு விடுறியா என கண் கலங்கியபடி வந்த மகளை வாரிக்கட்டி அணைத்திருந்தாள் தேவி...

க்ருஷ்ணதுளசி ..வாத்சல்யா தேவி செல்வத்தின் திருமண இணைவுக்கான முதல் சான்று.. ..தேவியின் வாழ்வாகி போனவள் துளசி...சொல்லப்போனால் துளசியின் உயிர்த்துடிப்பே அவள் தாய் தேவி தான்....துளசி அப்படியே தாயை வார்த்து வைத்த தோற்றம்..குண்டு குண்டு கன்னம்...குறும்பு ததும்பும் விழிகள் ....ஐந்து வயதிலும் இடை தாண்டி வழியும் இருண்ட கருங்கூந்தல்.....பார்த்தால் அள்ளி கொஞ்ச வைக்கும் தோற்றம் அவளது..
துளசி கல கல என அந்த வீட்டை நிரப்புபவள்...அவள் பேச்சும் கேட்கும் கேள்விகளும் பல சமயங்கள் தேவியையே வியக்க வைக்கும்...

துளசி தாயின் கைக்குள் மெல்ல அசைந்தாள் ..ம்மா.. நீ எண்ண வச்சு விட்டு விடுறியா.. சின்னன் கிழவி...இல்லம்மா சின்னன் பாட்டி பனங்காய் பணியாரம் சுட்டு வைக்கும் நான் சாப்பிட்டு வாறேன்...
தாய் பேச தொடங்கும் முன்..
நான் சொன்னேன்மா அம்மா சொன்னவ வேற எங்கனயும் சாப்பிட கூடான்னு ஆனா அந்த பாட்டி உன்ன போன அழுவுற போல பாக்க நன் வாறேன் எண்டனான் என கோர்வையாய் கூறி முடித்த மகளை முயன்று முறைக்க எண்ணி தோத்துபோனாள் தேவி..
கண்ணா நீ வேற எங்கனையும் எதுவுமே சாப்பிட கூடாது ..யார்ட்டயும் எதுவும் வாங்கவும் கூடாது ..மாட்டேன்மா என்றபடி கன்னத்தில் முத்தமிட்ட மகளை முத்தமிட்டுவிட்டு கண்ணா எண்ண வச்சாச்சு போய் வேகமா வீட்ட வரோணும் போய் வா என தன் வீடு விட்டு இரண்டு வேலி தாண்டி உள்ள சின்னன் பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தாள் தேவி...

மகளையோ தன்னையோ சாப்பிட்டுவிட்டீயளா என ஒரு வார்த்தை கேட்காது காச்சிய சோறு கறியை அடியோடு வழித்து உண்டுவிட்டு சுருட்டிகொண்டு தூங்கும் செல்வத்தை கண்ணீரோடு பார்த்துவிட்டு காய்கறிகளுக்கு தண்ணீர் இறைக்க தோட்டப்பக்கம் நோக்கி நடந்தாள் தேவி பசி அக்னி கொழுந்துவிட்டு எரியும் வயிற்றோடு...

எரியும்......
 

Attachments

  • 5398292F-C4E7-4A74-8889-4C1478F13EF1.jpeg
    5398292F-C4E7-4A74-8889-4C1478F13EF1.jpeg
    109.4 KB · Views: 0

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஏதோ கதையில மர்மம் இருக்கு..🤔🤔🤔அதை சீக்கிரம் உடைங்க writer
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN