அக்னி தேவி 2

Akil

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அக்னி தேவி பகுதி 2
நீ
ஆர்ப்பரித்து ஓடும் காட்டாறு
உன் பாதையில் எண்ணற்ற விருட்சங்களை நீ வேரோடுசாய்த்திருக்கலாம்
ஆனால் எங்கோ பற்றி பிடித்திருக்கும்
ஒற்றை வேர் மீண்டும் விருட்சத்தை துளிர்க்க செய்யலாம்..
உன் ஆர்ப்பரிப்பை நிமிர்ந்து தடுக்கவும் செய்யலாம்
மறவாதே.....

வெட்ட வெளியில் வேகும் வெய்யிலில் வேலை செய்ததேவியின் சிவந்த முகம் சுண்டி சிவந்திருந்தது. கழுத்து, கை,கால் என வடிந்த வியர்வையை தன் சேலை தலப்பால்துடைத்தபடி பூத்து குலுங்கிய அந்த கொன்றை மர நிழலில்அமர்ந்தாள்...

அந்த கொன்றையிடம் தன் ஆசையெல்லாம், கொட்டியதும்,அழுததும், பூரித்து சிரித்ததும் எத்துணை அழகான நினைவுகள்அதனோடு...அதனை வெட்டவென செல்வம் முயன்ற போதுதுடித்து போய்விட்டாள் அவள்.
“வேணாங்க அது என்னோட ஆத்தா போல வேணாங்க” எனஅவனிடம் கெஞ்சி மன்றாடிய கணங்களை நினைத்துகண்கலங்கினாள் தேவி....

கண்மூடிய அவளுள் கடந்த காலம் விரிந்து நீண்டது.

‘தேவி உனக்கு உன்ன போல செவலயா புருசன் வரோணுமோஇல்ல கன்னங்கரேல் எண்டு நம்ம ஐயனார் சாமியாட்டம்கறுப்பா வரோணுமோ..’கேட்ட சுமதியிடம் “என்னயஇப்பிடியே ஆத்தா கூட இருக்க விட்டாலே போதும்புள்ள..எனக்கு கண்ணாலம் கட்ட எல்லாம்விருப்பமில்ல...அப்பிடி கட்டினாலும் அவுக மனசு நல்லாஇருந்தா காணும் இந்த அழகு அம்சம் எல்லாம் எதுக்கு..?” எனகூறிக்கொண்டிருந்தாள் பதினெட்டு வயது தேவி.

‘எதுக்குடி இப்பிடி சலிச்சுக்கிற? எனக்கு சும்மா வெள்ளவெளேரெண்டு மின்னுற மாப்பிள்ள தா வேணும்டு அப்பரிட்டசொல்லிட்டன் ..’ என கண்களில் கனவு மின்ன கூறியபடிஇருந்தாள் சுமா. “ஐத்த வீட்டு சுவத்துக்கு இப்ப தான்சுண்ணாம்பு தடவினவ...சும்மா பள பளன்னு மின்னுதுசுமா..கட்டிக்கிறியா? ம்ம்..” என கேட்ட தேவியை
‘அடி கழுத ஏன் ஐத்த வீட்டு சுவரு ஐத்தானகட்டிக்கிறேனே...ஹ்ம் அவுக தான் உனக்கு பின்னாடியேசுத்துறாகளே..’என்ற படி அவளின் கார்மேக
மூன்றுமுழகூந்தலை பிடித்து இழுத்தாள் சுமா....

‘டி தேவி நீ ஏன் கதிர் மச்சான கட்டிக்க கூடா..அவுகளுக்குஎன்னடி கொறவு...கவர்மென்டு உத்தியோகம் ,கண்ணுக்குஅம்சமான தோற்றம்.. ஏன்டி வேணாண்றே..’ “இல்லடி அவுகளநா அண்ண மாதிரி தா பாக்குறே..அவகள கண்ணாளம்கட்டிக்க ஏலாது.. அதவிட ஐத்த என்ன அப்பன முழுங்கினவஎண்டு தான திட்டுற. அவக வீட்டில பான உடஞ்சாலும் என்னயதான் பழி போடும். இந்த பேச்சு வேணாமே சுமா”என்றுகண்கலங்கியபடி நா நெசமாத்தா செல்லுறவ எனக்குகண்ணாலம் பற்றி கனவவல்லாம் இல்ல புள்ள ; நிம்மதி தான் வேணும். இப்பிடியே ஆத்தா கூடவே காலத்த கழிச்சுபோடணும் சுமதி..அப்பிடியே செத்து போனாலும் பறவால்ல” என வானத்தை வெறித்தபடி பேசிக்கொண்டிருந்தாள் தேவி.

‘என்ன புள்ள சொல்லுறவ ?பொட்ட புள்ள பூமிக்கு பாரம் எண்டுஎவனோ ஒருத்தனுக்கு கட்டி குடுக்க தானல போறாக..உன்னஇந்த கரிசிலப்பட்டில எத்தின பேரு கட்டிக்க ஆசப்படுறாகதெரியுமா? உனக்கு என்ன புள்ள குறவு? அச்சில வாத்த அம்மன்செலயாட்டம் இருக்கிற...அஞ்சு அண்ணன்களுக்கு ஒரே ஒருதங்கச்சி வேற..’ என கூறிய சுமதியிடம்
“ம்ச் என்னய பாத்து என்ன கொறவு எண்ணு கேக்க உனக்குஎப்படி வந்தது சுமா.. பெத்துப்போட்டு அப்பரு செத்துபோயிட்டாக.. அண்ணங்க என்ன தங்கச்சின்னு எப்பயாலும்பாசமா பாத்திருக்கா? பாரேன் அண்ணிகளோட பாசத்த”எனவெழுத்து போய் அவர்கள் கழித்த சட்டையை ஏதோ கவசகுண்டலங்களை கழற்றி கொடுத்த கர்ணனை போல் பாவித்துதன்னிடம் கொடுக்கும் அண்ணிகளின் செய்கைகளைஎண்ணியபடி சட்டைகளை சுட்டிக்காட்டி கூறினாள் தேவி.

‘சும்மா வெசனபடாத டி உனக்கு நல்ல ராசகுமாரனாட்டம்ஒருவ வருவாக..அவக உன்ன அழுகைன்னா என்ன? என நீகேக்கிற போல பாத்துக்க போறக..நானும் பாக்க தானபோறேன்’ என்ற சுமதியை கட்டிக்கொண்டு கொன்றை மரநிழிலிருந்து சிரித்த தேவியை கண்டு விதியும் சிரித்தது.

விதி வலியது தானே..






“அண்ணே இருவது ரூவா இருந்தா குடுண்ண.. என் வகுப்புகாறனுக எல்லாம் கணித வகுப்புக்குபோகுதுண்ண..எப்படியாச்சும் இந்த தடவபாசாயிடுவன்....உனக்கு தெரியும் தான எங்கட பள்ளிகூடத்திலகணக்குவாத்தியார் இல்லேண்டு.. நா ராசாத்தியக்கா வீட்டுதென்னம்பிள்ளைக்கு தண்ணி ஊத்தி கொஞ்சம் கொஞ்சமாகுடுத்துடுறேன்...”என தனது கடைசி அண்ணன் வீட்டிலகடைசி முயற்சியாக அழாக்குறையாகேட்டுக்கொண்டிருந்தாள் தேவி.

“ஓகோ மகாராணிக்கு படிப்பு தான் ஒரு கேடு..இங்க கஞ்சிவடிக்க கூட காசில்ல இவளுக்கு இருவது ரூவாகேக்குதா...ச்சி பீட பீட இந்த முகர கட்டேல முழிச்சாமூதேவிய பாத்ததுக்கு சமன்...இஞ்சாரு படிக்கிறன்பணியாரஞ்சுடுறன் எண்டு இந்த பக்கம் வந்தாஅவ்வளோதான்...” சின்ன அண்ணி அமுதா விசமாய்கொட்டினாள். அதற்கு எந்த மறுப்பும் சொல்லாது நின்றஅண்ணனை கண்ட தேவியின் நெஞ்சு விம்மி வெடித்தது. படிக்க வேண்டும் என்ற ஏக்கத்தை கண்ணில் தேக்கிவைத்தபடி பார்த்த தேவியை கண்டு அருளுக்கு ஒருகணம்உதைத்தது ஏதோ உண்மைதான் ஆனால் மறுகணம்மனைவியின் பேய் ஆட்டத்துக்கு பயந்து கதவை அடித்துசாத்தினான் அவளின் ஆசை அண்ணன்.

தேவி படிப்பில சுட்டி தான் .ஆனா இந்த கணக்கு மட்டும்அவளை கைவிட்டு விட்டது. கண்ணீர் வழிய வீடு திரும்பிகொண்டிருந்த தேவியை வழிமறித்தான் குமார். “ தேவிக்கண்ணு நீ மட்டும் ம்எண்டு சொல்லு உன்னராணியாட்டம் வச்சிருப்பேன்.என்ன கண்ணாளம் கட்டுறியா”என கண்ணால் துகிலுரிந்த படி அவளின் தோளில் கைவைத்தான் குமார்.

கைய எடுடா நாயே...நான் கேக்க பாக்க ஆளில்லாதவ தான்..அப்பிடி இல்லன்னா நீ நடு றோட்டில வச்சு என்னதொட்டிருப்பியாடா?.. ஆனா நான் இருக்கிறன்டா என்னயபாக்க .. நானிருக்கிறன்.உன்னோட பத்தோட பதினொண்டாஎன்ன நினச்சியா? கஞ்சி குடிக்காம செத்தாலும் சாவனே தவிரஉன்ன கண்ணாலம் கட்டுவனெண்டு கனவிலயும்நெனக்காத...வழிய விடு மரியாத கெட்டுடும்”. கண்ணில்கனலோடு கண்ணீர்வழிய கத்திக்கொண்டிருந்தாள் தேவி.

ச்சீ அடங்கடி உன் அண்ணன்மாரிட்ட ஒரு வார்த்த கேட்டாபோதும். உன்னய என் கைல குடுத்துட்டு தான் மறுவேலகாப்பானுக..நான் சொல்ற புரியுதா...உன்ன வப்பாட்டியா கூடவச்சிருக்க சொல்லுவானுக..றொம்ப தான் துள்ளுற...மாமனசகிச்சுக்க பழகிக்கோ..வரட்டா..” என்றபடி கடந்து சென்றகுமாரின் வார்த்தைகளை கேட்ட அக்கணமே மண்ணில்புதையுண்டு போக மாட்டோமா என துடிதுடித்தது தேவியின்மனம்...

அந்த கொதிமணலில் துவண்டு விழுந்தாள் தேவி..”ஏன்பா ? ஏதுக்கு சாவுற காலம்என்ன பெத்தா? பிறந்த நாளில இருந்துபோட்டுக்க துணி இல்லாம, சாப்பிட சாப்பாடு இல்லாம ,அரவயிறு கஞ்சியோட , கண்ட கண்ட சனத்தின்ர வசைவையலோட, எதுக்கு இந்த வாழ்க்க? நான் என்னபாவஞ்செஞ்சே?.. காணாததுக்கு கண்டவன்கைவைக்கிறான்..அத கூட பிறந்தவங்க கூட கேக்கிறாங்கஇல்லயே..முடில்லப்பா”...என கதறி துடித்தாள் ..

எரியும்...
 

Attachments

  • 18D4B7E5-05C2-4307-AF72-6B8BE5DE5FDA.jpeg
    18D4B7E5-05C2-4307-AF72-6B8BE5DE5FDA.jpeg
    109.4 KB · Views: 0
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN