மாயம் 27

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதலனாய்
சீராட்ட வேண்டியவன்
காமுகனாய்
உன் வதைத்து
உன் வாழ்வை
சூனியமாக்கியது
ஏனோ....????

அங்கு ஶ்ரீயின் வீட்டில் ஹேமாவை நலம் விசாரித்துக்கொண்டிருந்தார் ராதா..

“ஹேமா எழுந்துட்டியா???இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு??? நைட்டு ஏதும் சாப்பிட்டியாமா?? மறுபடியும் வாமிட் வந்துச்சா???”

“இப்போ பரவாயில்லை ஆண்டி.... ஆனா தலைசுத்தல் மட்டும் இருக்கு.... நைட்டு நீங்க வச்சிருந்த இட்லியை சாப்பிட்டேன்...வாமிட் எதுவும் வரலை.”

“சரிமா... நீ பிரஸ் பண்ணிட்டுவா... நான் உனக்கு பால் எடுத்துட்டு வர்றேன்...” என்றுவிட்ட ராதா எழுந்து செல்ல உள்ளே வந்தாள் ஶ்ரீ...

“குட்மார்னிங் பப்ளி... எழுந்துட்டியா??”

“குட்மார்னிங் டி... என்னை எழுப்பாம நீ எங்கடி போன??”

“நீ ரொம்ப அசந்து தூங்கிட்டு இருந்தியா அதான் எழுப்பலை... உன்னை டிஸ்டர்ப் பண்ணா என்னோட குட்டிப்பையனும் டிஸ்டப்பாவானே... அதான்...” என்று ஶ்ரீ கூற ஒரு வறட்சி புன்னகையை சிந்திவிட்டு வாஷ்ரூம் சென்றாள் ஹேமா....

தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்த ஹேமா கட்டிலில் அமர்ந்தாள்....அவள் வந்ததும் கையில் டீகோப்பையுடன் ராதாவும் கூடவே வந்து சேர்ந்தார்...
கையிலிருந்த டீ கோப்பையை ஹேமாவிடம் கொடுத்தவர் தன் மறுகையில் வைத்திருந்த பேரீச்சம்பழம் இரண்டையும் கொடுத்தார்... அதை வாங்கிய ஹேமா டீ கோப்பையை வாயில் வைக்க வேறு சுவையை உணர்ந்தாள்...

“என்ன ஆண்டி இது... வேறு டேஸ்ட் வருது??”

“இது புதினா டீ மா..இந்த மாதிரி மசக்கை நேரத்துல இது குடிச்சா கொஞ்சம் தெம்பா இருக்கும்... அதுல சுகர் கம்மியா தான் போட்டுருக்கேன்.. இந்த பேரீச்சம்பழத்தையும் ஒரு கடி கடிச்சிக்கோ...” என்று ராதா விளக்கம் கூற

“அம்மா எனக்கு ஒரு டவுட்டு.... உனக்கே டீய சரியா போடவராது.. நீ எப்படி புதினா டீ போட்ட??”

“சரியா போடாத டீய தான் அப்படி உறிஞ்சி உறிஞ்சி குடிச்சியா??”

“சூடு தாங்க முடியாம உறிஞ்சி குடிச்சேன்.. அதுக்காக நீ போட்டு தந்த அந்த மொக்க டீ நல்ல டீ ஆகிருமா??”

“இவ்வளவு பேசுறவ வேணும்னா நீயே போட்டு குடிச்சிக்கிற வேண்டியது தானே?? எதுக்கு காலையில என்னை வந்து சுரண்டுன???”

“நீ சொன்னதால தான் வந்து சுரண்டுனேன்..”

“நான் என்ன சொன்னேன்...??”

“அந்த பிளாஷ்பேக்கை விவரமா சொன்னா தான் உங்களுக்கு நியாபகம் வரும்.. சரி எல்லாரும் அப்படியே மேல பாருங்க...” என்று சொல்லிவிட்டு ஶ்ரீ விட்டத்தை பார்க்க ராதா ஶ்ரீயை பார்த்து முறைக்க அவர்களிருவரையும் பார்த்து சிரித்தாள் ஹேமா..

ஹேமாவின் சிரிப்பில் தன் அன்னையை பார்த்த ஶ்ரீ அவரது கண்களில் அனல் பறப்பதை உணர்ந்துகொண்டு
“இல்ல மம்மி டீடெய்லா சொன்னா இன்னும் நல்லா நியாபகம் வருமேனு பார்த்தேன்.. சரி விடுங்க...நான் பிளாஷ்பேக்கா சொல்லாம ஷாட் பேக்கா சொல்லிர்றேன்.. எனக்கு ஆறு வயசா இருக்கும் போது கிச்சனுக்கு வந்த என்னை பார்த்து நீங்க ஏதும் வேணும்னா அம்மாவை கேளு... நீயா எதுவும் செய்யாதனு சொன்னீங்களே..... நியாபகம் இருக்கா??? நீங்க சொன்ன அந்த ஒரு வார்த்தையை... அந்த ஒரு வார்த்தையை இன்னும் வரை காப்பாத்துறாள் இந்த ஶ்ரீ... நீங்க பெத்த செல்ல புத்திரி...”

“ஏன்டி தெரியாமல் தான் கேட்குறேன்... தாண்டி குதிக்குமாம் மீனு.. தயாரா இருக்குமாம் எண்ண சட்டி அந்த கதையாயில்லையா இருக்கு?? என்னமோ நான் சொன்ன எல்லாத்தையும் கேட்டு நடக்குறவ மாதிரி பேசுற???”

“ஆம் தாய்குலமே ஆமா... தங்கள் கட்டளையை எப்போதும் சிரமேற்கொண்டு செய்து முடிப்பாள் தங்கள் அன்பு புத்திரி..”

“சும்மா கதையளக்காத... உனக்கு இன்னும் சுடுதண்ணி வைக்கவே சரியா தெரியாது.. நீ நான் சொன்னதுக்காக கிச்சன் பக்கம் வராம இருக்கியா??”

“ஆமா தாய்க்குலமே... அன்னைக்கு நீங்க அப்படி ஒரு வார்த்தையை மட்டும் சொல்லாமல் இருந்திருந்தா இந்நேரம் உங்க மக சமையல்ல பி.எச்.டி வாங்கியிருப்பா..”

“ஆமாமா... வாங்கி வாசல்ல தொங்கவிட்டுருப்ப... நொண்டி குதிரைக்கு சறுக்குனது ஒரு சாக்காம்.. அடிப்போடி.. என் மாப்பிள்ளையையும் அவங்க குடும்பத்தையும் நினைச்சா தான் எனக்கு கவலையா இருக்கு...இத்தனை நாளா நாங்க பட்ட பாட்டை அந்த மனுஷன் வாழ்நாள் பூரா அனுபவிக்கப்போறத நினைத்தா தான் பாவமா இருக்கு...” என்று ராதா வருந்த அதை பார்த்துக்கொண்டிருந்த ஹேமாவுக்கோ சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை..

தன்னை மறந்து சிரித்தவளை ஶ்ரீயும் ராதாவும் மனநிறைவுடன் பார்த்தனர்...அவர்களிருவரும் அர்த்தமான ஒரு பார்வையை பரிமாறிக்கொள்ள ஹேமாவோ
“ஏண்டி உனக்கு ஆண்டி சமையலை ஏதாவது சொல்லாட்டி தூக்கம் வராதா?? எப்போ பார்த்தாலும் ஆண்டி சமையலை குத்தம் சொல்லுற?? ஒரு நாள் பாரு நீ சமைச்சதை நீயே சாப்பிடமுடியாம முழி பிதுங்கி நிற்க போற... அப்போ தெரியும் உனக்கு....ஆண்டி அவ கிடக்குற... உங்க சமையல் எப்பவும் டேஸ்ட் தான்..அவ சும்ம உங்களை கிண்டல் பண்ணுறா...ஆபிஸில சஞ்சு, ரவி,சுந்தர் எல்லாருமே உங்க சமையலுக்கு அடிமை..”

“அம்மா உன்னோட அடிமைக்கூட்டம் அவ்வளவும் இன்னைக்கு லன்சிற்கு நம்ம வீட்டுக்கு வருது... அதனால தடல்புடலா விருந்து ரெடிபண்ணிரு...ஹெல்புக்கு அப்பாவை கூப்பிட்டுக்கோ...”

“ஏன் அம்மணி வரமாட்டீங்களோ..”

“எப்படி தாய்குலமே உங்களுக்கு கொடுத்த வாக்கை மீறி...”

“போதும்டியம்மா... தெரியாமல் கேட்டுட்டேன்...” என்றுவிட்டு ராதா ஹேமா கையிலிருந்த கோப்பையை வாங்கிக்கொண்டு ஶ்ரீயை முறைத்தபடி சென்றார்...
அவர் சென்றதும் ஹேமா

“அவங்க எல்லாரும் எதுக்கு வர்றாங்க??? “

“உன்னையும் குட்டிப்பையனையும் பார்க்கத்தான்... குட்டிப்பையனை நம்ம ஸ்டைல்ல வெல்கம் பண்ண வேண்டாமா அதான்...”

“நான் இந்த குழந்தையே வேணாம்னு சொல்லிட்டு இருக்கேன்.. நீ வெல்கம் பார்ட்டி வைக்கிறதை பத்தி பேசிட்டு இருக்க...”

“இங்கப்பாரு பப்ளி... உனக்கு குட்டிப்பையன் வேணாம்னா பெத்து மட்டும் குடுத்துட்டு நீ பாட்டுக்கு உன் வழியில போ... நான் இந்த குட்டிப்பையனை என்னோட பிள்ளையா வளர்த்துக்கிறேன்... ரிஷி அத்தானும் நானும் குட்டிப்பையனை எங்க பிள்ளையா தத்து எடுத்துக்கிறோம்...”

“வேணாம் ஶ்ரீ... இது அந்த அயோக்கியனோட புள்ள... இதுவும் அவனை மாதிரி தான் இருக்கும்... என்னோட நிலைமை இன்னொரு பொண்ணுக்கு வரவேணாம்...”என்று அழுதவளை

“லூசாடி நீ.... இது அவனுக்கு மட்டும் பிள்ளை இல்லை... உனக்கும் பிள்ளை... சொல்லப்போனா அவனைவிட உனக்கு தான் குட்டிப்பையன் மேல உரிமை அதிகம்... அதோட குட்டிப்பையன் நம்மகிட்ட வளரப்போறான்... அவனுக்கு எப்படி அவனோட அப்பா புத்தி வரும்... நான் சொல்லுறேன்னு பாரு... அவன் உன்ன மாதிரி தான் ஸ்வீட்டா க்யூட்டா இருப்பான்....”

“இல்லைடி..வேணாம்.. அவனோட இரத்தம் எனக்குள்ள வளர வேணாம்..”

“ஹேமா நீ பேசுறது... சுத்த முட்டாள் தனம்.. யாரோ பண்ண தப்புக்கு நீ எதுக்கு உன் பிள்ளையை தண்டிக்கிற??”

“ஆமா அவன் எனக்கு பண்ண கொடுமையால உருவான இந்த குழந்தை எனக்கு வேணாம்... என்னோட விரும்பமில்லாம என்னை கதற கதற கற்பழிச்சு உருவான இந்த குழந்தை எனக்கு வேணாம்.. அது பிறந்து அது உருவான கதையை அது கேட்கும் கொடுமை அந்த குழந்தைக்கு வேணாம்...” என்று அழுதவளை ஆறுதலாக அணைத்துகொண்ட ஶ்ரீ

“வேணாம்டி... இதுக்கு மேல மனசுல கஷ்டத்தை சுமக்காத.. சொல்லிரு.. எல்லாத்தையும் சொல்லிரு.. இவ்வளவு நாள் நீ பட்ட கஷ்டம் எல்லாத்தையும் சொல்லி அழுதுரு.. உனக்கு துணையா நான் இருக்கேன்.. என்கிட்ட சொல்லு..” என்று ஹேமாவை ஶ்ரீ ஊக்குவிக்க அவளது கதையை கூறத்தொடங்கினாள்...

ஊரில் திருமணத்திற்கு சென்றிருந்த ஹேமா அங்கு உறவுக்கார பெண்களுடன் கோயிலுக்கு செல்லும் வழியில் தன் சகாக்களுடன் வந்தான் வேந்தன் என்றழைக்கப்படும் ராகவேந்தன்... அவனை கண்டதும் ஹேமா முறைத்துவிட்டு செல்ல வேந்தனோ அவள் அனல் பறக்கும் பார்வையொன்றை அவள்மீது வீசிவிட்டு எதிர்புறம் நடக்க ஆரம்பித்தான்..

“என்ன வேந்தா அவ அந்த முறை முறைச்சிட்டு போறா... நீயும் பேசாம வர்றே... உன்னை முறைச்சவங்க யாரும் நல்லாயிருந்ததா சரித்திரமில்ல.. இவளை மட்டும் எப்படி விட்டு வச்சிருக்க??” என்று அவனது சகாக்கள் வினவ

“இவ வெளியூர்ல இருக்கதால இவ்வளவு நாள் தப்பிச்சிட்டா...அத்தனை பொட்டசிறுக்கிங்க முன்னுக்கு என்னை அசிங்கப்படுத்துனது மட்டுமில்லாமல் கைநீட்டி அடிச்சவளை நான் எப்படி சும்மா விடுவேன்.. இன்னைக்கு பொழுது சாஞ்சதும் அவளுக்கு வைக்கிறேன் பாரு வேட்டு...”

“நாளைக்கு கல்யாணத்தை வச்சிக்கிட்டு ஏதாவது கோக்குமாக்கா பண்ணிடாதடா..”

“ஹாஹா.. நாளைக்கு கல்யாணத்துக்கு தான்டா இந்த பலி...” என்று குரூரமாய் சிரித்தவன் சகாக்களை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்...
பல தந்திரம் செய்து ஹேமாவை மணமேடையில் அமரவைத்தவன் அவளது கழுத்தில் மங்கலநாண் என்ற பெயரில் ஒரு விலங்கை கட்டினான்... அது படுத்தப்போகும் பாட்டை அந்நேரத்தில் உணராத ஹேமா ரித்விக்கு தான் துரோகம் இழைத்துவிட்டதை எண்ணி வருந்திக்கொண்டிருந்தாள்....

திருமணம் முடிந்ததுமே ஹேமாவின் பெற்றோர் சென்றுவிட்டனர்.. தாம் ஆசையாய் சீராட்டி வளர்த்த செல்லமகள் புதைக்குழிக்குள் மூழ்கி துடிக்கப்போவதை அந்த பெற்ற மனம் காண விரும்பவில்லை.. கண்ணில் நீருடன் யாரிடமும் கூறாமல் சென்றுவிட்டனர் பெற்றவர்கள்...

சடங்குகள் அனைத்தும் முடிந்து இரவு சாந்திமுகூர்த்தத்திற்காக அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள் ஹேமா.. கையில் பால்செம்புடன் இறுக்கமான முகத்துடன் உள்ளே வந்தவளை வரவேற்றது வேந்தனது கொக்கரிக்கும் சிரிப்பு... அவனது சிரிப்பில் தலையை உயர்த்தி பார்த்தவள் கண்டது கையில் மது போத்தலுடன் வேஷ்டியை தூக்கிக்கட்டியபடி நின்றிருந்த வேந்தனை... அவனது அந்த தோற்றம் முகம் சுழிக்க வைக்க பார்வையை மறுபுறம் திருப்பிக்கொண்டாள் ஹேமா...

“என்னடி இவ்வளவு நடந்தும் உன் திமிரு அடங்கலையா?? விறைச்சிக்கிட்டு நிக்கிற... இது என்னோட ஊரு.. இங்க நா சொல்லுறது தான் சட்டம்.. பெரிய இவளாட்டம் என்னை அத்தனை சிறுக்கிங்க இருக்கும் போது அடிச்சல்ல... அதுக்கு உன்னை பழிவாங்க தான் இத்தனை நாடகம் போட்டு உன் கழுத்துல அந்த மஞ்சக்கயிற கட்டுனேன்... இப்போ உன்னை என்னோட இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க போறேன்... எவனும் கேட்டமுடியாது... அன்னைக்கு அந்த கழுதைய தொட்டேன்னு தானே என்னை அடிச்ச... இனி தினம் தினம் ஒவ்வொருத்தியா கூட்டிட்டு வந்து உன் கண்ணு முன்னாடியே தொட்டு அனுபவிக்கிறேன்...அதை உன் கண்ணால பார்ரத்து அனுபவி... .இன்னும் விதம்விதமா உன்னை பழிவாங்க போறேன்... அதுவும் என்னானு உனக்கு போகப்போக தெரியும்... சாகமலே நரகம்னா என்னான்னு உனக்கு காட்டுறேன்டி.. என்னை அடிச்சதுக்கு நீ சாகும்வரை நல்லா அனுபவிப்ப...இப்போ நான் உன்னை அனுபவிக்க போறேன்... “ என்று குடிபோதையில் உளறியவன் ஹேமாவை இழுக்க அவளோ தன்பலம் கொண்டு அவனை தூரத்தள்ளினான்.. நன்றாக போதையில் இருந்ததால் தூரமாய் விழுந்தவன் போதையில் மயங்கிவிட்டான்...
அவனை வெறித்தவளுக்கு அவன் மயங்கியது தெரிந்ததும் அழுகை கட்டுக்கடங்காமல் வெளிவந்தது.. தன் வாழ்வு சூன்யமாகியதை அந்தநொடி உணர்ந்துகொண்டாள் ஹேமா...

இவ்வாறு அவளது திருமணவாழ்வு எனும் கங்குல்காலம் தொடங்கியது.. தினம் தினம் ஒவ்வொரு பெண்களை வீட்டிற்கு அழைத்து வருபவன் வீட்டில் குடியும் குடித்தனமுமாய் இருந்தான்... அதோடு அந்த பெண்கள் முன் அவளை கெட்ட வார்த்தைகளால் சாடுவதும் அவளை இன்னும் மோசமான விதத்திலும் நடத்தினான்... ஒரு கட்டத்தில் தன் சகாக்களில் ஒருவனிடம் ஹேமாவை அனுபவித்து மகிழ் என்று கூற அந்த சகாவோ குடிபோதையில் ஹேமாவை நெறுங்க முயல ஹேமா கையில் கிடைத்த எதையோ கொண்டு அந்த சகாவை அடித்து சாய்த்துவிட்டு தன் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டாள்..

அதில் மூரக்கமான வேந்தன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அவளை தலைமுடியை பிடித்து கொத்தாக இழுத்து வந்தவன் அவளை வீட்டிற்கு பின்புறமிருந்த குடோனினுள் தள்ளினான்... மெல்லிய இலாம்பொன்று மட்டும் எரிந்துகொண்டிருக்க பெண்ணவளை அடித்து வதைத்து அவள் கதற கதற காமுகனாய் அவள் கற்பை சூறையாடினான்... வலியில் முனங்கியவளை பொருட்படுத்தாது அவனது வெறியடங்கும் வரை ஆண்டுமுடித்துவிட்டே அவளை விட்டு நகன்றான்...
புயலில் சிக்கியபூவாய் துவண்டவளை அந்த காமுகன் கண்களுக்கு தெரியவில்லை. எழுந்து அமரக்கூட திராணியற்று கிடந்தவளது கண்களோ கண்ணீரை மட்டும் சொறிந்த வண்ணமிருந்தது...

அந்த காமுகனின் ஆக்கிரமிப்பால் காய்ச்சல் கண்டது பெண்ணவளுக்கு... நேரத்திற்கு சரியாக உணவுமட்டும் அந்த குடோனிற்கு வந்தபடியிருந்தது... மூன்றாம் நாள் ஒரு மருத்துவிச்சி வந்து ஏதோ வைத்தியம் செய்துவிட்டு போக கொஞ்சம் தெம்பானாள் ஹேமா.. தெம்பானவள் வெளியே செல்ல முயல குடோன் கதவு பூட்டப்பட்டிருந்தது... அவள் சத்தம் போட்டும் யாரும் கதவை திறக்கவில்லை... எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் தப்பிக்க வழி தேடி நின்றவளை உலுக்கியது வேந்தனது வரவு.

“என் பொண்டாட்டி... தப்பிக்க வழி தேடுறியா??? இங்க இருந்து என்னோட அனுமதியில்லாமல் உன்னால எங்கேயும் தப்பிக்க முடியாது...உன்னை இவ்வளவு சீக்கிரம் தப்பிக்கவிடவா உன்னை கல்யாணம் பண்ணேன்...??? நீ இன்னும் அனுபவிக்கனும்டி.... நிறைய அனுபவிக்கனும்... அதெல்லாம் அனுபவிக்காம உன்னை சாகவிடமாட்டேன்..” என்று சூளுரைத்தவன் வெளியே சென்றுவிட நிலத்தில் அமர்ந்துவிட்டாள் ஹேமா..

அவன் அடுத்த என்ன விபரீதமாக செய்யப்போறானோ என்ன பயமே அவளுள் மேலோங்கியிருந்தது.. எப்படியேனும் இவ்விடத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டாள் ஹேமா... ஆனால் காயச்சல் கண்ட உடம்பு அதற்கே ஒத்துழைக்க மறுக்க சுருண்டு படுத்திவிட்டாள்...
வேந்தன் கூறிய அந்த சித்ரவதை அவனது சகா ஒருவனின் உருவில் வந்தது...

வந்தவனை கையில் கிடைத்த பொருளால் அடித்து துவைத்துவிட்டாள்... அடிக்கு பயந்து வந்தவன் ஓடிவிட கொலைவெறியுடன் உள்ளே வந்த வேந்தனையும் ஹேமா சராமாரியாக தாக்க அவளை தடுப்பதற்காக அவள் பிடித்து கீழே தள்ளிவிட்டுவிட்டு தலையில் சொட்டும் உதரத்தோடு வெளியே வந்தவன் குடோனை அடைத்துவிட்டான்...

அதன்பிறகு யாரையும் அந்த குடோனுக்கு செல்லவிடவில்லை..... கேட்பவர்களிடம் தன் மனைவிக்கு சித்தம் கலங்கியிருப்பதாகவும் அதனால் அவளை உள்ளே கட்டி வைத்திருப்பதாகவும் கூறினான்... உள்ளே அடைபட்டிருந்த ஹேமா வெளியே செல்வதற்காக சத்தமிட்டு யாரையாவது துணைக்கு அழைக்க யாரும் உதவிக்கு வரவில்லை.. நாட்கள் செல்ல செல்ல உண்மையாய் பித்துபிடிக்கும் நிலைக்கு ஆளாகியிருந்தவளை மீட்க வந்தான் வேந்தனின் தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு சிறுவன்... குடோன் கதவை திறந்தவனை அடிக்க தயாராயிருந்தவளை தடுத்து அவளை அங்கிருந்து மீட்டு தன் கையிலிருந்த சொற்ப பணத்தை கொடுத்து அவளை பஸ் ஏற்றிவிட்டான்...

“அங்கயிருந்து பஸ்ஸில வரும்போது அந்தாளோட ஆளுங்க பஸ்ஸை மடக்கி என்னை தேடுனாங்க. நான் ஒரு மாதிரி சமாளிச்சு தப்பிச்சிட்டேன்... அன்னைக்குகூட அவனோட ஆளுங்க துரத்தினாங்க.... அவங்களுக்கு பயந்து ரோட் கிறாஸ் பண்ணும் போது தான் ஆக்சிடன்ட் ஆச்சு... இப்போ சொல்லு அவனோட இந்த வாரிசை நான் சுமக்கனுமா சொல்லு ... சொல்லுடி..” என்று கேள்வியெழுப்பி அழுதவளுக்கு ஶ்ரீயால் பதில் கூறமுடியவில்லை...
 

Vijayalakshmi 15

New member
ஹேமாவின் வாழ்க்கை நடந்த கொடுமையை போல் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது.😭😭😭
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN