வசந்தம் -2

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிலா வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகிற்று... முன்பு இருந்த லேடீஸ் ஹாஸ்டல் அலுவலகத்திற்கு தொலைவில் இருந்ததால் இப்பொழுது அருகிலேயே வீடு பார்த்தனர்...

பாலா அவனுடைய பிளாட்டில் வீடு ஒன்று காலியாக இருப்பதாக சொல்ல மதுவும் நிலாவும் சென்று பார்த்தனர்... அந்த வீடு அவர்களுக்கும் பிடித்துவிட பாலாவின் உதவியுடன் அங்கு குடியேறினர்...

அங்கு ஆபீஸ் கேப் வர நிலாவும் பாலாவும் அதில் ஒன்றாகவே சென்று விடுவர்... மதுவின் அலுவலகமும் அருகில் தான் என்பதால் தன் வண்டியிலேயே சென்று விடுவாள்..

நிலாவும் பாலாவும் நல்ல நட்புடன் பழகினர்.. மதுவின் மீது பாலாவிற்கு சகோதரத்துவமான அன்பு இருந்தது...

பாலாவிற்கு நிலாவின் மீதான நட்பு அடுத்த கட்டத்திற்கு செல்வது போல் இருந்தது...

அன்று நிலாவின் பிறந்தநாள்.... மதுவும் நிலாவும் கோவிலுக்கு சென்றுவிட்டு நிலாவை அலுவலகத்தில் விட்டுவிட்டு சென்றாள்...

உள்ளே பாலாவும் மற்ற நண்பர்களும் நிலாவிற்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் ரெடி செய்து கொண்டிருந்தனர்....

"ஏய் நிகில் சீக்கிரம் கேக் கொண்டுவா... "

"இதோ கொண்டு வரேன்டா "

"நிகில், பாலா நிலா வந்துட்டா... எல்லாரும் ரெடியா இருங்க... "என்றான் ஹரி.

நிலா உள்ளே நுழையும் நேரம் அனைவரும் தன் கைகளில் இருந்த பலூனை உடைத்து " ஹாப்பி பர்த்டே ஹனிமூன் " என்று கத்தினர்...

"ஹேய் கைஸ்.... தேங்க் யூ.... நான் நிஜமா எதிர் பாக்கவே இல்லை.. "

எல்லோரும் நிலாவிற்கு வாழ்த்து கூற ஓரமாய் நின்ற பாலாவை அப்போது தான் கவனித்தான் நிகில். அவன் கையில் இருந்த பலூனைகூட உடைக்கவில்லை..
அவன் பார்வை நிலாவை விட்டு அகலவில்லை... அந்த பார்வையில் நிச்சயமாய் நட்பு இல்லை....

"ஹ்ம்ம் பையன் மாட்டிகிட்டான் " என்று மனதில் சிரித்து கொண்டான்....

பாலாவின் அருகில் சென்று அவனை அழைத்தான்... ஆனால் அவன் கவனம் தான் நிலாவின் மீதே இருந்ததே...

இள ரோஜா வண்ண சில்க் காட்டன் புடவை..... தளரபின்னிய கூந்தல்..... அதில் இருந்த முல்லைச்சரம் அவள் தோளின் முன்புறம் புரண்டது... அளவான அலங்காரத்துடன் தேவதை என இருந்தவளை விட்டு கண்கள் அகல மறுத்தது....

பாலாவை பார்த்த நிகில் இது தேறாத கேசு என்று அழைத்து சென்றான் கேக் வெட்டும் இடத்திற்கு....

நிலா கேக் வெட்டும் பொழுது அனைவரும் கத்தியதில் சுய உணர்வே பெற்றான்...

அனைவரும் நிலாவிற்கு பரிசு தந்தனர்... பாலா ஒரு கைக்கடிகாரம் பரிசளித்தான்... அப்போது நிலாவிடம் வந்து ஒருவன் மோதிரத்தை கொடுத்து

"உன்னை பாத்த நிமிசத்தில் இருந்து என் மனசு என்கிட்ட இல்லை நிலா.. ஐ லவ் யூ நிலா "

இதை பார்த்த பாலாவிற்கு அவனை கொன்று போடும் அளவு கோவம் வந்தது... ஆனால் நிலா அதற்கு என்ன பதில் சொல்வாள் என்று பயமாகவும் இருந்தது...

"இங்க பாருங்க அசோக்.... என் மனசுல லவ் அப்டிண்றதுக்கே இடம் இல்லை.. நான் உங்களோட நல்ல நட்போட தான் பழகினேன்.. நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்கு என்னை மன்னிச்சிருங்க... அதோட இனிமேல் என்கிட்ட பேசாதீங்க.. உங்களோட நட்பு ரிதியாக கூட இனி நான் பேச விரும்பல "என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.....

இதை கேட்ட பாலாவின் திடுக்கிட்டான்... அவனை பார்த்த நிகில்

"டேய் அவனும் நீயும் ஒண்ணா... நீ சொன்னா நிலா கண்டிப்பா ஒத்துக்குவா "

"இல்லைடா... நான் எந்த காரணம் கொண்டும் நிலாவோட நட்பை இழக்க விரும்பல.. ஒரு வேலை நானும் என் காதலை சொல்லி அப்பவும் இதே மாதிரி சொல்லிட்டு போய்ட்டா என்னால தாங்க முடியாது... என் காதல் என்னோடவே இருக்கட்டும்.... அவ நட்பு மட்டுமாச்சும் எனக்கு வாழ்நாள் முழுக்க வேணும் "

"எல்லாம் சரி ஆகிடும் பாலா... கவலை படாத.... வா உள்ள போகலாம் "......

இருவரும் தன் வேலையை கவனிக்க சென்றனர்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN