வசந்தம் -3

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖💖💖
என்னதான் முடிவு எடுத்து விட்டாலும் அதை நிறைவேற்றுவது அவ்வளவு சுலபமாக இல்லை. ஒன்றாக இருக்கும் நேரங்களில் அவனால் இயல்பாகவே இருக்க முடியவில்லை.
அதனால் கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருக்க ஆரம்பித்தான். ஒன்றாக இருக்கும் நேரங்களை தவிர்த்தான்.
ஆபிஸ் கேப்-இல் வராமல் தவிர்ப்பதற்காகவே முன் கூட்டியே ஆபீஸ் சென்று விடுவான். சாப்பிடும் சமயமும் வெளியே சென்றுவிடுவான்.
மாலை நேரத்தில் கிளம்பாமல் வேலை இருப்பதாக சொல்லி லேட்டாக வருவான். வார இறுதி நாட்களிலும் பிளாட்டிற்கு வராமல் வெளியே சுற்ற ஆரம்பித்தான்.
எல்லா வழிகளிலும் தவிர்க்க நினைத்தாலும் மனதின் எண்ணங்களை தவிர்க்க முடிவதில்லை. இரவு நேரங்களில் அவளுடைய போட்டோக்களுடன் பகிர்ந்து கொண்டான். தன் கற்பனைகளை கவிதைகளாக வடித்திருந்தான்.
பாலா அவனுடைய தவிப்பில் அலைமோத நிலாவோ அவனிற்கு சற்றும் எதிர்மாறான குழப்பத்தில் இருந்தான்.
பாலா ஏனோ தன்னை தவிர்ப்பது போல் தோன்றவே நிகிலிடம்,
"என்ன நிகில் இப்பவெல்லாம் பாலாவை அதிகம் பார்க்க முடியல. நேர்ல பேசலாம்னா நின்னு பேசக்கூட நேரம் இல்லாத மாதிரி சுத்தறான்.போன்லயும் பேச முடியல".
"அவனுக்கு கொஞ்சம் ஒர்க் லோட் அதிகமா இருக்கு நிலா.டார்கெட் நிறைய இருக்கு. அதனால தான் இப்படி இருக்கான். இன்னும் ஒரு ஒன் மன்த்ல எல்லாம் சாரி ஆகிடும் "என்று கூறி தன் நண்பனை காப்பாற்றினான்.
பின்னர் "மச்சி நீ கிட்ட வந்தாலும் மாட்டிக்குவ.எட்ட போனாலும் மாட்டிக்குற. உன் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான் கண்ணா "என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.
நிகில் கூறிய பதிலில் கொஞ்சம் சமாதானம் அடைந்தாலும் ஏனோ கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது.
அந்த உறுத்தலுக்கு விடை கிடைக்கும் நிகழ்ச்சி அடுத்து வந்த நாட்களில் கிடைத்தது. ஆனால் அந்த விடை மேலும் குழப்பத்தையே தரும் என்று அவள் அறியவில்லை.
💖💖💖
ஒரு நாள் காலை நேரத்தில் நிலா அலுவலகத்திற்க்கு கிளம்பி கொண்டிருந்தாள். அப்பொழுது வெளியே செக்யூரிடியிட சென்று பேசிவிட்டு உள்ளே வந்த மது நிலாவிடம்,
"என்ன நிலா பாலா ஊருக்கு ஏதாச்சும் போயிருக்கரா"
"இல்லை மது.நான் நேத்து ஆபீஸ்ல பார்த்தேன் "
"ஒருவேளை காலையில் போயிருக்கலாமே"

"இல்லை மது.இன்னைக்கு ஆபீஸ்ல முக்கியமான ஒர்க் இருக்கு. அதனால ஊருக்கெல்லாம் போயிருக்க மாட்டான். நீ ஏன் திடீர்னு இப்படி கேக்கற"
"பாலா பிளாட்-கு வெளியே நியூஸ் பேப்பர் எடுக்கல. இவ்ளோ நேரம் எடுக்காம இருக்க மாட்டார். அதான் கேட்டேன் ".
"சரிடி இரு நான் கால் பண்ணி பாக்கறேன் " என்று கூறிவிட்டு பாலாவை அழைத்தாள். ஆனால் ரிங் போனதே தவிர எடுக்கவில்லை.
"பாலா போன் எடுக்கல மது. நீ கிளம்பு ஆபீஸ் -கு லேட்டாகிடுச்சு. நான் போய் பாலாவை பார்க்கறேன்".
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN