வசந்தம் -8

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖💖💖
நாட்கள் வாரங்களாக மாதங்களாக மாறிக்கொண்டே இருந்தன.. பாலா நிலாவிடம் தன் காதலை இன்னும் சொல்லவில்லை..
நிலாவும் பாலாவின் காதலியை கண்டுபிடிக்க எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை.. அலுவலகத்தில் மட்டும் இல்லாது வெளியிலும் பெண்களோடு அளவோடுதான் பழகினான்..
"ச்ச இந்த பாலா யார லவ் பண்றான்னு தெரிஞ்சுக்கலாம்னு நானும் எவ்ளவோ ட்ரை பண்ணிட்டேன். பட் மாட்ட மாட்டிங்குறான்.. "என்று மதுவிடம் புலம்பினாள்.
"லவ் பண்றவன விட்டுட்டு என்னைய போட்டு எதுக்குடி டார்ச்சர் பண்ற... "
"நீயும் பாலாவும் தான் பாசமலர் படமாட்டம் உருகுவீங்களே! நீ போய் பாலா கிட்ட கேட்டா கண்டிப்பா சொல்வான்.. "
மது ஓரளவு உண்மையை அறிந்திருந்தாள்... பாலா நிலாவை பார்க்கும் பார்வையை வைத்து சந்தேகம் கொண்டு, பாலாவிடம் இது பற்றி பேசி இருந்தாள். பாலாவும் நிலாவை விரும்புவதை ஒப்புக்கொண்டான். ஆனால் நிலாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கூறி இருந்ததால் மதுவால் எதுவும் கூற முடியவில்லை..
"பாலகிட்ட நான் எதுவும் கேக்க மாட்டேன். சொல்லணும்னு நினைக்கறப்ப கண்டிப்பா சொல்வாங்க.. ஆள விடு தாயே. நான் போய் தூங்க போறேன்...
அன்று வார இறுதி நாள்...
பாலாவும் நிலாவும் சேர்ந்து கொஞ்சம் வேலைகள் செய்ய வேண்டி இருந்ததால் பாலா நிலாவை அவனுடைய பிளாட்டிற்கு வார சொல்லியிருந்தான்.
நிலா சென்ற போதுதான் பாலா எழுந்திருந்தான்..
வார இறுதி நாட்களில் எப்போதும் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பாள்.. இன்றும் அப்படியே குளித்து விட்டு கூந்தலை இலகுவாக விரித்து விட்டு ஒரு கிளிப் மட்டும் போட்டு இருந்தாள்.
தூய வெண்மை நிறைய டாப்சும் ப்ளூ பேண்ட்டும் போட்டிருந்தாள். எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் தேவதையென வந்தவளை பார்த்த பாலா ஒரு நிமிடம் இமைக்க மறந்தான்.எப்படியோ சமாளித்து நிலாவை வரவேற்றான்.
"சாரி நிலா.. இன்னைக்கு வீகெண்ட்னு கொஞ்சம் அசால்ட்டா தூங்கிட்டேன்"
"இட்ஸ் ஓகே பாலா நீ போய் ரெடி ஆகிட்டு வா. நான் வெயிட் பண்றேன்"
"நிலா நமக்கு தேவையான பைல்ஸ் எல்லாம் என் ரூம்ல கபோர்ட்ல இருக்கு.. கொஞ்சம் அதை மட்டும் எடுத்து வை நான் வந்துர்றேன்.. " என்று சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவன் நீண்ட பெருமூச்சு விட்டான்.. "அச்சோ இன்னைக்கு எப்படி சேர்ந்து வேலை பார்க்க போறோமோ தெர்ல. தள்ளி இருக்கும் போதே கொல்றா... இன்னைக்கு மாட்டிக்குவேன்னு நினைக்கறேன்..
உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் என்று பழனி முருகன் ஆசீர்வாதம் பண்ணி விட்டார்........... 🙂😉
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN