வசந்தம் -9

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலாவின் அறைக்குள் நுழைந்த நிலாவிற்கு ஆச்சிரியமாக இருந்தது...
"ச்ச பாலா கலக்கிட்ட போ... என் ரூமை விட நீட்ட வச்சிருக்க... இத மட்டும் எங்க அம்மா பாத்துருக்கணுமே.... ஆம்பள பைய ரூமை எப்படி சுத்தமா வச்சிருக்கு.... பொட்டப்புள்ள நீயுந்தா வச்சிருக்கியே அலங்கோலமான்னு வறுத்து எடுத்துருப்பாங்க... "
"நானும் சுசிம்மா உன் வளர்ப்பு சரி இல்லைனு சொல்லிருப்பேன்.... "
என்று தன் அன்னையை பற்றி நினைத்துக்கொண்டே பைலை எடுக்க போனவள் தடுமாறி விழுந்து விட கபோர்டில் இருந்த பொருட்களும் விழுந்து விட்டன..
"ஐயோ போச்சு!! போச்சு !! பாலா வந்து கத்த போறான் " என்று புலம்பிக்கொண்டே எல்லாவற்றையும் எடுத்து வைக்க போனவள் அப்பொழுது தான் ஒரு டைரியில் இருந்து சிதறி இருந்த போட்டோக்களை பார்த்தாள்...
நடுங்கும் விரல்களுடன் அந்த போட்டோக்களை எடுத்து திருப்பி பார்த்தவளுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது...
பிறந்தநாளின் போது எடுத்த படம்.....
யாருடனோ சிரித்து பேசிக்கொண்டு இருந்த பொது அவளை மட்டும் தனியாக எடுத்திருந்தான்...
அருகில் கிடந்த டைரியை கையில் எடுத்தாள்... அடுத்தவரின் டைரியை படிப்பது நிலாவிற்கு பிடிக்காத ஒன்று... ஆனால் இன்று அதையெல்லாம் யோசிக்க முடியவில்லை....
அந்த டைரியை படபடக்கும் இதயத்தோடு தன்னை பற்றி இருக்க கூடாது என்று வேண்டிகொண்டே தான் திறந்தாள்.... ஆனால் பாவம் அவளின் வேண்டுதல் தான் பலிக்கவில்லை.....
அதன் முதல் பக்கத்தில்,
உன் இடையை தொட்ட கார்குழலில்
நான் முழ்கி தொலைத்தேனடி !!!
உன் முகம் அது முழுமதியோ இல்லை
செந்தாமரையோ என
நான் குழம்பி தவித்தேனடி !!!!
உன் குரலோ அது யாழோ அதில்
நான் மயங்கி தொலைத்தேனடி !!!
உன் பெயரோ தேன் நிலாவோ
நான் என்னையே உன்னிடம்
இழந்தேனடி கண்ணம்மா !!!!
நீ என் காதிலியோ என்னில்
சரிபாதியோ வாராயோ என்
தேவதையே தேன்நிலவே!!!!
அந்த ஒரு நிமிடத்தில் அவனிடத்தில் அவள் கரைந்து விடத்தான் நினைத்தாள்..
ஆனால் நிலாவிற்கு தெரியும் தன்னால் இதை செய்ய முடியாது என்று...
அவன் காதலில் திளைக்க துடித்த மனதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை....
அதுவும் பாலாவின் முன்னாள் தன் கட்டுப்பாடு தோற்றுவிடும்.... அவனை கட்டிக்கொண்டு ஓவென்று கதறி விடுவாள்..
சீக்கரம் இங்கு இருந்து சென்று விடவேண்டும் என்று அங்கு இருந்து கிளம்பி சென்றுவிட்டாள்....
குளித்து விட்டு ரெடியாகி தன் அறைக்கு வந்த பாலாவிற்கு அங்கு நிலா இல்லாததும் விரிந்து கிடந்த டைரியும் சிதறிக்கிடந்த போட்டோக்களும் நடந்ததை சொல்லிவிட்டன.......
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN