வசந்தம் -14

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖💖💖

ஒரு நாள் சிரித்தேன் மறுநாள்

வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல் கொன்று

புதைத்தேனே

மன்னிப்பாயா..... மன்னிப்பாயா.....

என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க அந்த வரிகளை தானும் உச்சரித்துக்கொண்டே பால்கனியில் நின்றிருந்தாள் நிலா....

அவளருகில் இருந்த சேரில் மது உட்காந்திருந்தாள்...

"என்ன நிலா ஊருக்கு போயிருக்க பாலாக்கு பாட்டு மூலமா சாரி கேக்கறயா .. "

"பாலா ஊருக்கு போய்ட்டானா.. எப்ப போனான்... உனக்கு எப்படி தெரியும்.. "

"நேத்து மதியம் போல இருக்கு.... செக்யூரிட்டி அண்ணா நேத்து பாலா கிட்ட போறப்ப ஊருக்கா தம்பி போறீங்கன்னு கேட்ருப்பாங்க போல.... பாலா கோவத்துல போயிருப்பாங்க போல... அவர கண்டுக்காம போய்ட்டாரு.... இந்த அண்ணா எங்கிட்ட சொன்னாரு.. இந்த பாலா தம்பி என்கிட்ட நல்லா பேசும்..
நேத்து கண்டுக்காம போய்டுச்சு பாப்பா.. ஆட்டோ காரர் கிட்ட ரயில்வே ஸ்டேஷன் போகணும்னு சொல்லுச்சு.. அத வச்சு தான் அவசரமா ஊருக்கு போகுதுனு நினைச்சேன்.. "

"அப்டினு சொன்னாரு நிலா... உன் மேல உள்ள கோவத்துல தான் இப்படி கிளம்பி போயிருக்காரு.. "

நிலா எதுவும் பேசாமல் வெளியே வானத்தை வேடிக்கை பார்த்தாள்.. பின் மதுவிடம் திரும்பி " ஹ்ம்.. ஊருக்கு போய்ட்டு வந்தா சரி ஆகிடுவான்.... "


அன்று ஞாயிறு... பகல் பொழுதில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது.. வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்து முடித்து மாலை அஷ்ட லட்சுமி கோவிலுக்கு கிளம்பினர் மதுவும் நிலாவும்....

கோவிலில் தரிசனம் எல்லாம் முடிந்து பிரகாரத்தில் தூணின் அருகில் அமர்ந்தனர்....

"அடிக்கடி இங்க வரணும் மது... இந்த அம்மனோட முகத்தை பார்த்தாலே நம்ம கஷ்டம் எல்லாம் காணாம போய்டும் "

"ஆமாம் நிலா... "

அப்போது நிலாவிற்கு பாலாவின் அம்மா கோதையிடம் இருந்து போன் வந்தது...

அதை பார்த்த நிலா மதுவிடம் "ஆன்ட்டி கால் பன்றாங்க மது... ஏதாச்சும் பிரச்னையானு தெரியலடி.. பயமா இருக்கு.. என்னால பேச முடியாது... இந்தா நீ பேசு...

மதுவும் போனை வாங்கி அட்டென்ட் செய்து பேசினாள்... நிலா பிரசாதம் வாங்க சென்றிருப்பதாக பொய் சொன்னாள்..

பிறகு கோதை என்னை பேசினாரோ மதுவின் முகம் கவலையை பூசிக்கொண்டது..

பின்னர் மதுவும் பதிலுக்கு " அப்படிலாம் ஏதும் இல்ல ஆன்ட்டி.. பாலா ரொம்ப டேலேண்ட்... அவர யாரும் குறை சொல்லாத மாதிரி நடந்துப்பாரு...

வேற பிரச்சனை ஒன்னும் இல்ல ஆன்ட்டி...

சரி ஆன்ட்டி நான் நிலா கிட்ட எதுக்கும் கேட்டு பாக்கறேன்.. பாலா கிட்டயும் பேசிக்கறேன் ... என்று சொல்லி விட்டு வைத்தி விட்டாள்...

"என்ன ஆச்சு மது... பாலாவுக்கு ஒன்னும் இல்லையே " என்று பதறியவளை பார்க்க பாவமாகவும் கோவமாவும் இருந்தது.....

இருந்தாலும் பாலாவின் அன்னை பேசியதை கூறினாள்... கோதை கூறியது இது தான்,

பாலா நேத்து இங்க வந்தான்மா.... வரப்பவே கோவமா இருந்தா மாறி இருந்துச்சு.. என்கிட்ட கூட நல்லா பேசல.. உடனே ரூம்க்கு போனவன் சாப்பிட கூட வரல... சரி வந்த அலைச்சல் தூங்குவான் போல விட்டுட்டேன்...

நானும் வேலைய முடிச்சுட்டு என் ரூம்ல இருக்கறப்ப வந்தான்... கண் எல்லாம் செவந்து கிடந்துச்சு.. என்னப்பா ஆச்சுன்னு கேட்டேன்... ஒண்ணுமில்லமா.. நா கொஞ்ச நேரம் உங்க மடில படுத்துக்கறேன்னு படுத்துகிட்டான்...

நானும் எவ்ளவோ கேட்டு பாத்துட்டேன் ஒன்னும் சொல்ல மாட்டிங்குறான்... அவங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் அவனை இப்ப தான் மா அப்படி பார்க்கிறேன்... அதான் ஆபீஸ் ல ஏதாச்சும் பிரச்னையா... இல்ல வேற ஏதாச்சும் பிரச்னையா "

"அப்டினு கேக்கறாங்க.... அப்படி என்ன தாண்டி சொல்லி தொலச்ச"

நிலாவிற்கு கண்ணீர் நிற்கவே இல்லை. சிறு குழந்தை போல தேம்பி தேம்பி அழுதவாறே "நான்... பாலாவிற்கு கோவம் வரணும்னு...வேணுமின்னே..... அவர்.... என்னை... முத்...... "

மது " நீ என்ன சொன்னீனு மட்டும் சொல்லு..... "

நிலா "நான் ...தனியா.... இருந்ததை யூஸ் பண்ணிட்டாருன்னு சொல்லிட்டேன் மது.. "

" அறிவிருக்காடி... நீ பேசி இருக்கறது பாலாவை எவ்வளவு கஷ்டப்படுத்தும்னு தெரியாத "

"ப்ளீஸ்டி... என் நிலைமை.. புரிஞ்சிக்கோ.."

"நீ சுயநலவாதி... உன் பிரச்சனை மட்டும் தான் பாக்கற.. அன்னிக்கு நீ சொன்ன காரணம் கூட சுயநலம் தான் " என்று திட்டிக்கொண்டிருக்க,

"ப்ளீஸ் மது... நிலாவை திட்ட வேண்டாம்... "

என்று கூறியது வேறு யாருமல்ல நம் பாலாவே தான்....................
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN