வசந்தம் -15

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖💖💖

நிலாவின் பேச்சினால் மிகவும் வேதனை அடைந்த பாலா 'அடி பட்டால் ஓடிச்சென்று அன்னையை அணைத்துக் கொள்ளும் குழந்தை போல' தன் தாயின் மடியிலே சென்று தஞ்சம் அடைந்தான்..

மனம் எதோ ஒரு வகையில் சமன் பட்டாலும் துருவி துருவி கேட்கும் தாயிடம் இருந்து தப்பிப்பதற்காகவே மீண்டும் சென்னை வந்தான்...

வீட்டிற்குள் அடைபட பிடிக்காமல் தான் அவன் அஷ்ட லட்சுமி கோவிலுக்கு வந்ததே.. சாமி கும்பிட்டுவிட்டு பிரகாரத்தில் உட்கார்ந்தான்.... பக்கத்தில் நிலா வின் குரல் கேட்டதும் சட்டென கோவம் துளிர்விட எழுந்து செல்லத்தான் நினைத்தான்....

ஆனால் நிலா அவனுடைய அம்மா போன் பண்ணுவதாக சொல்லவும், எதற்கு என்று அறியவே மீண்டும் அமர்ந்தான். நடுவில் தூண் இருந்ததால் இவன் இருப்பதை அவர்கள் அறியவில்லை....

அவர்கள் தன் அன்னை சொன்னதை கேட்ட பொழுது அவர்களை கவலை கொள்ள செய்துவிட்டோம் என்று தோன்றியது.... எதையும் மறைக்காத அன்னையிடம் இதையும் சொல்லி தெளிவு பெற வேண்டும். பின் அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அவர்கள் கவலையை போக்க வேண்டும் என்று நினைத்தான்....

பின் நிலா அன்று பேசியது பற்றி நிலா வாயிலாகவே கேட்டவனுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது... நிலா தன்னை மிகவும் விரும்புகிறாள்.... ஆனால் எதற்காகவோ தள்ளி செல்கிறாள்... என்று நன்றாக புரிந்தது....

அந்த நேரத்தில் மிகவும் சந்தோஷமாகவே உணர்ந்தான்.....

"தேனும்மா ரொம்பவே கஷ்ட படுத்திட்டடி... இதுக்கு மேல நீ எந்த பால் போட்டாலும் மாமா சிக்ஸர் அடிக்கறேன் பாரு..... " என்று மனதிற்குள் நினைத்து புன்னகைத்து கொண்டான்...

பிறகு நிலா அழுவதையும் மது தனக்காக பேசுவதையும் கேட்ட பாலா மதுவின் பாசத்தை நினைத்து சந்தோஷப்பட்டாலும் நிலா அழுவதை பொறுக்க முடியாமல் அவர்கள் முன் போய் நின்றே விட்டான்...

அப்படி திடீரென வந்து நின்ற பாலாவை கண்டதும் வந்து அதிர்ச்சியில் நிலாவின் அழுகை சட்டென நின்றது... இவன் எப்ப இங்க வந்தான்.... ஐயோ பேசினதெல்லாம் கேட்ருப்பானோ.... என அறிந்து கொள்ள அவன் முகத்தையே பார்த்தாள்... ம்க்கும் ஒன்னும் கண்டுபிடிக்க முடிலயே....
முஞ்சியை வேற இப்படியே ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாறி வச்சிருக்கான்.. கோவமா இருப்பானோ... அப்புறம் நீ பண்ண வேளைக்கு அவன் பின்ன எப்படி இருப்பான் என்று மனசாட்சி கேள்வி கேட்க சட்டென தலையை குனிந்து கொண்டாள்.. குற்ற உணர்ச்சியாய் இருந்தது..

அழுது கசங்கி இருந்த விழிகளை கண்ட பாலாவிற்கு சட்டென நிலாவை அணைத்து சமாதானப் படுத்த கைகள் பரபரத்தன...

சட்டென கைகளை இருகியவரே முகத்தையும் சற்று கோவம் போல் வைத்து கொண்டான்.. பின் மதுவிடம்

" மது நான் உன் பிரண்ட் கிட்ட கொஞ்சம் தனியாக பேசணும்... "

"சரி பாலா நா முன்னாடி வீட்டுக்கு போறேன்.. நீங்க பேசிட்டு வாங்க... " என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்...

"இல்லை நானும் போறேன் "என்று சொல்ல வந்த வார்த்தை பாலாவின் முறைப்பை பார்த்ததும் தொண்டை குழியிலேயே நான் வேளி வரமாட்டேன்பா என்று ஒளிந்து கொண்டது....

பிறகென்ன பாலா முன்னே செல்ல போச்சு வசமாக மாட்டிக்கொண்டேன்... எப்படி சமாளிப்பது என்று புலம்பியவாறே பின்னே சென்றாள்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN