வசந்தம் -21

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖💖💖

நிலாவும் பாலாவும் வீட்டிற்கு வந்தவுடன் கோதையிடம் நிகில் மது விஷயத்தை கூறினர்...

நிகிலும் மதுவும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்... அன்றய பொழுது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அமர்க்களமாய் சென்றது.... நிலா இங்கு வந்ததில் இருந்து இந்த சூழ்நிலையோடு ஒன்றிவிட்டாள்... அவள் தந்தையை பாலாவின் காதலை மறுத்ததை அனைத்தையும் மறந்து விட்டாள்...

இன்றய இனிய நிகழ்வுகள் அவளை தூங்க விடவில்லை... நிகில் மதுவின் சிற்சில ரகசிய சில்மிஷங்களை கண்ட தருணத்தில் எல்லாம் அவள் பார்வை அவளையும் அறியாமல் பாலாவை தான் தேடும் ....

அந்த தேடல் சில நேரங்களில் பாலாவின் கண்ணோடு கலந்து விட்டால் வரும் படபடப்பில் சில நேரம் அவன் கண்ணில் படாமல் ஓடி ஒளிந்து கொள்வாள்...

இப்பொழுதும் அப்படித்தான் சாப்பிடும் போது யாரும் அறியாமல் நிகில் மதுவின் தட்டை எடுத்து மதுக்கு அவனுடைய தட்டை மாற்றி விட்டான்... மது நிகிலை பார்த்து முறைக்க அவன் காற்றில் முத்தத்தை பறக்க விட மதுவும் வெட்கப்பட்டு அதையே சாப்பிட ஆரம்பித்தாள்..

இதை பார்த்த நிலாவின் பார்வை பாலாவை நோக்க அவனும் நிலாவை தான் பார்த்து கொண்டிருந்தான்....

மேலும் நாமும் மாற்றி கொள்ளலாம் என்பது போல சைகை செய்ய அவ்வளவுதான் நிலா தான் தட்டை இருக்கி பிடித்து கொண்டு வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்... தலை நிமிரவே இல்லை ...
சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு தூக்கம் வருகிறது என்று தன் அறைக்கு வந்து விட்டாள்.. படபடப்பு இன்னும் நீங்கிய பாடில்லை....

யாரோ வரும் சத்தம் கேட்க அவசரமாய் தூங்குவது போல் பாவனை செய்தாள்...

பாலா தான் வந்தது... பாலா நிலாவின் அருகில் வந்து மண்டியிட்டவாறு அமர்ந்தான்...

அவள் நெற்றியில் விழுந்த முடியினை தன் ஒற்றை விரலால் காதோரத்தில் ஒதுக்கினான்..

" தேனும்மா சாரி செல்லம்... நான் சும்மா தான் அப்டி சொன்னேன்... நீ சரியா சாப்பிடாம கூட வந்துட்ட.... நான் பால் கொண்டு வந்துருக்கேன்... நீ எழுந்து சாப்பிடு.. " என்று சொல்ல அதற்கும் கண் திறவாமல் தூங்குவது போல் கண்ணை இறுக்கி மூடி இருந்தாள்...

பாலா மெல்ல குனிந்து நிலாவின் மூடிய இமைகளில் முத்தத்தை பதித்திட... இந்த செயலால் அதிர்ந்து கண் திறந்து பார்க்க அவள் கண்டது மிக நெருக்கத்தில் இருந்த பாலாவின் கண்களை தான்...

ஹாப்பா இதென்ன கண்ணா காந்தமா.. மூச்சு விடவும் மறந்தவளாய் இருந்த நிலாவை மேலும் மூழ்கடிக்க அவள் இதழோரம் குனிந்தவன் என்ன நினைத்தானோ சட்டென எழுந்து கொண்டான்.... தலையை அழுந்த கோதி கொண்டே அவள் முகம் பார்க்காமல் பாலை சாப்பிட சொல்லிவிட்டு சென்று விட்டான்.

அவனின் இந்த செயலால் நிலாவின் மனதில் ஏற்பட்டது ஏமாற்றமா இல்லை தப்பித்தோம் என்ற உணர்வா என்று தெரியவில்லை...

இனி தூங்க முடியாது என்று நினைத்தவள் கீழே வந்தாள்.... அங்கு கோதை மட்டும் இருக்க மற்றவர்கள் வெளியே இருப்பதாக சொன்னார்கள்..
நிலாவும் சென்றாள்....

அங்கு கேம்ப் ஃபயர் போல் செய்து நிகில் அடுத்து மது கொஞ்சம் தள்ளி பாலா அமர்ந்திருந்தான்.... நிலா சென்று பாலாவின் அருகில் அமர்ந்தாள்....

மது "எல்லாரும் ஏதாச்சும் பாட்டு பாடலாம் "
நிகில் " எதுக்கு மதுக்குட்டி இந்த வேண்டாத வேலை... இந்த ஊர்ல கழுதைங்க அதிகம்டா... நாம பாடினா ஏதோ நம்ம தோஸ்த் தான் நம்மள கூப்பிடுதுனு எல்லாம் இங்க வந்துரும்.. வேணும்னா பாலா சூப்பரா பாடுவான்.. அவன் பாடட்டும்... "

"நான் லாம் பாடல "

" ப்ளீஸ் ண்ணா எனக்காக "

" வேண்டாம் மதும்மா.. மூட் இல்லை "

"ரொம்பத்தான் பிகு பண்ணாத டா... ஒழுங்கா பாடு.. இல்லன்னா... உன் டைரியை கொண்டு வந்து நிலா கிட்ட கொடுத்துருவேன் " என்று சொல்ல

நிலா பாலாவை பார்க்க பாலா நிகிலை முறைத்து கொண்டிருந்தான்...

"சரி சரி நான் படறேன் .... டைரிக்காக இல்லை.. அதை நிலா படிக்கணும்னு தான் காத்திருக்கேன்.. சமயம் வரும் போது நிலா கிட்ட தந்துடுவேன்... "என்று சொல்லி விட்டு பாட ஆரம்பித்தான்...


ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க

காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்

பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் தேக்கி வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
என்னை இங்கு தொலைத்தேனே....

பாலா பாடி முடித்ததும் நிலா தன் கண்களை மற்றவர் அறியாமல் துடைத்து கொண்டாள்...
மதுவும் நிகிலும் கூட பாலாவின் வருத்தத்தை புரிந்து கொண்டனர் .. இருந்தும் வெளியே காட்டி கொள்ளாமல்
கை தட்டி பாராட்டினர்..

"சரி பாலா நிலா நாங்க கொஞ்சம் நடந்துட்டு வர்றோம்.. "

"ம் ம்... நடத்துங்க நடத்துங்க... "என்று பாலா சொல்ல...

"நைட் டைம் பாத்து போங்க "என்று நிலா சொன்னாள்...

"இதுதான் இந்த அக்கறை தன் நிலாவோட ஸ்பெஷல்.. நீயுந்தா இருக்கியே...வாடா மது செல்லம் நாம போகலாம்.. " என்று அழைத்து கொண்டு சென்றான்... சிறிது தூரம் சென்றதும் நிகில் மதுவின் கன்னத்தில் முத்தம் வைக்க..

"ச்சீ எருமை எருமை அவங்க பாத்துருப்பாங்க.. உனக்கு அறிவே இல்லை நீக்கி... "

" அதெல்லாம் மாட்டாங்க டார்லிங்... இப்ப நீ ஒன்னு குடுப்பியாம்.. நானு ஒன்னு குடுப்பேனாம்.... கடைசில யாரு அதிகம் குடுத்துருக்காங்கனு பாக்கலாம்... "

"இனி கிட்ட வந்த கொன்றுவேன் நிக்கி. நானே பாலாவையும் நிலாவையும் நினச்சு கவலையா இருக்கேன்.. அவங்களுக்கு தனிமை கொடுக்கணும்னு தான் உன் கூட வந்தேன் "

" நானும் அதுக்கு தான் செல்லம் வந்தேன்.. சரி வீட்ல எல்லாரும் உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க.. இந்தா பேசு " என்று போனை தர மது வாங்கி பேசினாள்... அனைவரும் மாத்தி மாத்தி போனிலேயே அன்பை கொட்ட மது அழுதுவிட்டாள்...

நிகில் மறுபடியும் போன் செய்வதாக சொல்லி விட்டு மதுவை அணைத்து சமாதானம் செய்தான்...

இங்கு நிகிலின் செயலை கண்ட பாலா "பிசாசு இப்படி கண்ணு முன்னாடியே கொஞ்சி கண்டாக்குது.. வரட்டும் அவனுக்கு இருக்கு " என்று முனகி விட்டு அவ்விடத்தை விட்டு எழுந்தான்...

"நிலா நான் ரூம்க்கு போறேன்.. அவங்க வந்தா சொல்லிடு... " என்று அவள் முகம் பார்க்காமலே கூறிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றவனை நிலா கை பிடுத்து தடுத்தாள்..

"ப்ச் வேண்டாம் நிலா... ஏனோ என்னால என்னை கண்ட்ரோல் பண்ணவே முடில.. இப்ப கூட இந்த நெருப்போட வெளிச்சத்துல உன் முகத்தை பார்த்த எனக்கு என்னென்னவோ தோணுது... சில நேரம் நீ கிட்ட வர்ற... சில நேரம் நீ தூர போற என்னால இதையெல்லாம் ஏத்துக்க முடில.... நான் சும்மா எதையாச்சும் பண்ணா கூட உன்னால விளையாட்டா கூட ஏத்துக்க முடில.... "

"பாலா அது நான் பிடிக்காம எழுந்து போகல... எனக்கு... அது... ஒரு மாதிரி பீலிங் டா ... எப்படி சொல்றதுன்னு தெரில.. கொஞ்சம் படபடப்பா இருந்துச்சு... மத்த படி
நீ சொல்ற மாதிரிலாம் இல்லை.. "

நிலாவின் முன் அமர்ந்தான் பாலா... "சரி உன் முடிவுல எதும் மாற்றம் இருக்கா... உங்க அப்பா கிட்ட என்ன பத்தி பேசுவியா "

நிலா பதில் சொல்ல வில்லை .... "பாத்தியா உன்னால பேச முடில... வேண்டாம் நிலா இது வரைக்கும் நான் உணர்ச்சி வசத்துல நடந்துக்கிட்டதுக்கு என்னை மன்னிச்சுடு... உன்னோட மனசுலயும் நான் நிறைய பாதிப்பை ஏற்படுத்திட்டேன்... உன்னை முத்தமிட வரப்ப நீ எந்த எதிர்ப்பயும் காட்டாதிருக்கும் போது தான் புரிஞ்சுக்கிட்டேன்... உன் மனசுல எந்த அளவுக்கு என்னய கொண்டு போயிருக்கேன்னு.... நம்ம காதல் கை கூடாதுங்கற பட்சத்துல நீ உங்க அப்பா சொல்ற பையன நீ கலயாணம் செஞ்சுக்கிட்டா எல்லாம் உனக்கு குற்ற வுணர்ச்சிய தரும்... வேண்டாம்டா.... உன்னை இங்க கூட்டிட்டு வந்துருக்கவே கூடாது.... " என்று கூறிவிட்டு கடகடவென்று உள்ளே சென்றுவிட்டான்...

பாலாவின் பேச்சில் உறைந்து நின்றாள்... தன் அருகில் வந்த நிகில் மதுவிடம் எதுவும் பேசாமல் தன் அறைக்கு வந்த நிலா அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை கொட்டி தீர்த்தாள்... அழுது களைத்து உறங்கி போனாள்...

நிகிலும் மதுவும் தங்கள் எண்ணத்திற்கு நேர்மாறாக ஏதோ நடந்திருப்பதை உணர்ந்தனர்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN