வசந்தம்- 20

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
" கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வள்ளி தெய்வானையம்மா

நெற்றியில் உன் குங்குமமே நிறைய
வேண்டும்........
நெஞ்சில் உன் திருநாமம் வழிய
வேண்டும்........ "

எல். ஆர். ஈஸ்வரி அம்மாவின் கம்பீர குரலில் அந்த ஊரே திருவிழா கோலம் கொண்டிருந்தது...

எங்கு பார்த்தாலும் மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டிருந்தனர்...

வெப்ப மரங்கள் சூழ நடுவில் அழகிய ராஜகோபுரத்துடன் காட்சி அளித்தது மகா மாரியம்மன் கோவில்....

நிலா பாலா மது நிகில் நால்வரும் கோவிலின் உள்ளே சென்றனர்...

ஒற்றை மூக்குத்தி சுடர் விட்டு பிரகாசிக்க புன்னகை முகமும் கருணை வழியும் கண்களுடன் அன்னையை தரிசித்த நால்வரும் மனதினில் ஒரு இனம் புரியாத நிம்மதி பரவ அம்மனை வேண்டினர்...

நாளை தான் விசேஷம் என்பதால் இன்று கோதை அவர்களை மட்டும் அனுப்பி வைத்தார்...

கோவிலை விட்டு வெளியே வந்த நிலா ராட்டினத்தை பார்த்ததும்,

" ஹேய் கைஸ் அங்க பாருங்க ராட்டினம்.. நாமலும் போய் சுத்தலாம் பா... "

மது "நோ நோ எனக்கு ராட்டினம்னா பயம்.. நான் வரல நிலா "

நிகில் "எனக்கு சின்ன வயசிலிருந்தே இதுல போன வாமிட் வரும் நான் வரலப்பா... நீ வாடா மதுக்குட்டி நாம போய் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்... "

பாலா "என்னடா அங்க ஒரு ட்ராக் தனியா போகுது போல "

நிகில் "பின்ன லவ்வ உனக்கு மட்டும் தான் பட்டா போட்டு குடுத்துருக்காங்களா.. நாங்கல்லாம் பண்ண மாட்டோமா. " என்று பேச்சோடு பேச்சாக தன் காதலை மதுவிடம் மறைமுகமாக சொல்ல...

மது திகைத்து பின் விருட்டென அங்கிருந்து சென்றுவிட்டாள்.. அவள் போவதை பார்த்த பாலா சிரித்துக்கொண்டே,

" உலகத்திலேயே லவ்வ இப்படி ப்ரொபோஸ் பண்ணது நீயா தாண்டா இருப்ப.... போய் சமாதான படுத்து "

நிகில் பாலாவின் காதில் ரகசியமாக அதெல்லாம் நான் பாத்துக்கறேன் மச்சி... நீ போய் உங்க ஆள எப்படி ரொமான்ஸ் செய்யறதுன்னு யோசி... நான் வேணுனா டிப்ஸ் தரட்டா "

பாலா நிகிலை அடிக்க கை ஒங்க சிட்டாய் பறந்துவிட்டான் அந்த கள்ளன்...

நிலா " நிகில் மது நல்ல பொருத்தம் பாலா.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.... வா ராட்டினம் சுத்தி அதை கொண்டாடலாம்... "

"நாம கூட நல்ல பேர் தான் நிலா"

நிலா வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள் அவன் சொன்னதை சரியாக கவனியாமல் "என்ன பாலா சொன்னா "

"ம்க்கும்... உனக்கு இது மட்டும் கேட்காதே " என்று நொடித்தவன் "ஒண்ணுமில்ல போலாம்னு சொன்னேன்... "

ராட்டினம் சுற்றும் போது நிலா சற்று பயமாக இருக்க பாலாவினை நெருங்கி உட்காந்து அவன் கையை பிடித்துக் கொண்டாள்....

அவளின் செயலில் திகைத்து பின் பாதுகாப்பிற்காக அணைத்தவாறு பிடித்து கொண்டான்...

நிலா விளையாடும் குஷியில் கவனிக்க வில்லை.. ராட்டினம் சுற்றி முடிந்த பின் தான் உணர்ந்தாள் பாலாவின் அணைப்பிற்குள் இருப்பதை....

சட்டென விலகி அமர்ந்தவள் முகம் செந்தாமரையை ஆனது... பாலா அதை பார்த்ததும் விசில் அடித்தான்....

"பண்றதெல்லாம் பண்ணிட்டு விசில் அடிக்கிறது " என்று முனகினாலும் வேண்டியவனின் காதில் தெளிவாய் விழுந்தன....

"நீ கூட தான் என் கைய இருக்கி பிடிச்சிட்டு இருந்த நான் ஒன்னும் சொல்லலையே "

"அது....அது.... சும்மா பயத்துல பிடிச்சுக்கிட்டேன்... "

" நானும் கூட தான்.....ஒரு சேஃப்டிக்கு தான் அப்படி பிடிச்சேன்.... இப்பக்கூட பாரு கீழ வெறும் சேரா இருக்கு இப்பவும் அதே மாறி பிடிச்சுக்கறேன் என்று தன் இரு கைகளையும் விரிக்க "

"ஹ்ம்ம் ஆசை தான் " என்று நாக்கை துருத்தி அழகு காட்டிவிட்டு ஓடிவிட்டாள்..

பாலாவும் அவள் செய்கையை வியப்பாய் நோக்கி விட்டு அவளை பின் தொடர்ந்தான்...

இங்கு நிகில் மதுவை கெஞ்சி கொண்டிருந்தான்....

மது நிகிலின் செய்கையால் ஏற்பட்ட தாக்கத்தை ஆராய தனிமை நாடி கோவிலுக்கு சிறிது தூரத்தில் இருந்த தென்னந்தோப்பிற்கு வந்தாள்... நிகிலும் பின்னாடியே வந்தான்....

"ஹேய் மதுக்குட்டி சாரி சாரி..... நான் நிறைய பிளான் லாம் வச்சிருந்தேன்.. இன்னைக்கு எதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன்..

மது எதுவும் பேசாமல் ஒரு தென்னை மரத்தின் மீது சாய்ந்தவாறு தலை குனிந்தபடி நகத்தை கடித்து கொண்டிருந்தாள்...

நிகில் மதுவின் அருகில் சென்று அவளின் கைகளை பிடித்தவாறு பேச ஆரம்பித்தான்.....

"மது உன்னை நிலாவோட நிறைய டைம் பாத்துருக்கேன்... அப்பெல்லாம் எதோ ஒரு உணர்வு... அதை காதல்னு சொல்ல தெரியல... அப்புறம் நிலா சொல்லி நான் தெரிஞ்சுக்கிட்டது.... நீ ஆஸ்ரமத்துல வளந்துருக்க.... படிப்பு முடிஞ்சது அங்க இருக்க முடியாது.. சோ நீ தனியாக தங்கி இருக்க... நீ ரொம்ப தைரியமான பொண்ணு.... நிறைய சொந்தங்களோட இருக்க ஆசை படறேனு..

எங்க குடும்பமும் ரொம்ப பெரிசு மது..
எல்லாரும் உன்னை நல்லா பாத்துக்கு வாங்க... அதை விட நான் உன்னை ரொம்ப விரும்பறேன் மது.... உனக்கு நல்ல கணவனா நல்ல நண்பனா உனக்கு எல்லாவுமா நான் இருப்பேன் மதுக்குட்டி. என்னை கல்யாணம் பண்ணிக்கறயா "

நிகிலின் பாசத்தை காதலை அவனின் பேச்சின் மூலம் அறிந்தவள் அதன் பாரத்தை தாங்க முடியாமல் கீழே மண்டியிட்டு அழ ஆரம்பித்தாள்

அவளின் அழுகையில் பதறியவன் " சாரி டா ஏதாச்சும் தப்பா பேசிட்டேனா.. என்னை பிடிக்கலையா பரவாயில்லை டா... நீ ப்ளீஸ் அழாத... அப்புறம் எனக்கும் அழுகை வரும் "
என்று கூற,

மது நிகிலை சட்டென அணைத்து கொண்டாள் .... அவளின் அணைப்பில் அவளுடைய மனதை அறிந்தவன் அவளின் அணைப்பை அவனுடைய தாக்கினான்...
பின் முத்தங்களை வரி இறைக்க கடைசியில் இதழ் அருகே கொண்டு வந்தவன் மதுவின் உதடோடு உரசியவாறே

" கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்புடி செல்லக்குட்டி "

அதுவரை மோன நிலையில் இருந்தவள் அவனது இந்த வசனத்தில் தன் உணர்வு பெற்றாள்... அவளால் நிகிலின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்... நிகில் மதுவின் முகத்தை இரு கைகளாலும் நிமிர்த்தி அவள் கண்ணோடு கண் நோக்கி " ஐ லவ் யூ டி மதுக்குட்டி.... டூ யு லவ் மீ " என்று கேட்க மது ஆமாம் என்று தலையசைத்தாள்...


"நோ நோ உன் வாயால சொல்லணும் "


"நானும் உன்னை லவ் பண்றேன் நிக்கி... ரொம்ப லவ் பண்றேன் " என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட்டாள்...

தூரத்தில் பாலாவும் நிலாவும் வர மது அவர்களிடம் சென்று விட்டாள்... நிலா மதுவை அணைத்து கொண்டு " நான் ரொம்ப ஹாப்பி மது... "

பாலாவும் மதுவின் தலையை தடவியவாறே ரொம்ப சந்தோசம் மது.. உங்க கல்யாணத்துல ஒரு அண்ணனா எல்லா சடங்கையும் செய்வேன் ஓகேவா.. உன் பசங்களுக்கு நான் தான் தாய்மாமா.. இது உன் பிறந்த வீடு "

பாலாவின் பேச்சில் நெகிழ்ந்து அழுத்தவளை நிலா ஆறுதல் படுத்தினாள்.. அவர்கள் அருகில் வந்த நிகில்

" ஏய் என்னடா சொன்னா என் பொண்டாட்டி அழறா... "

"ஆஹ் பொண்டாட்டி யா.... அது சரி.. முதல உன் கன்னத்துல இருக்கற லிப்ஸ்டிக் கரைய தொட... "

நிகில் அவசரமாக தன் கன்னத்தை துடைத்தான்... அதை கண்டு பாலாவும் நிலாவும் சிரிக்க மது அவனை முறைத்து கொண்டிருந்தாள்...

நிகில் அவர்களை புரியாமல் பார்க்க.. பாலா சிரித்து கொண்டே "ஓ அவ்ளோ தூரம் போயாச்சா... இது தாண்டா போட்டு வாங்கறது "என்று சொல்ல மேலும் குழம்பிய நிகிலை பார்த்து மது "அட லூசு நிக்கி... நான் லிப்ஸ்டிக்கே போடறதில்ல... "
என்று சொல்ல நிகில் அசடு வழிந்தான்..

"காதல்ல இதெல்லாம் சாதாரணமப்பா "

என்று சொல்ல அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN