வசந்தம் -25(நிறைவு )

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖💖💖

நிலா தேனிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிற்று.... இங்கு ஒரு சிறிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.

பகல் நேரங்களில் வேலையிலும் தன் குடுப்பதினருடன் செலவிடுபவள் இரவு நேரங்களில் பாலாவின் நினைவுகளில் தத்தளித்தாள்.....

மது பாலா நிகில் மட்டுமல்ல சென்னையில் இருந்த யாருடனும் மீண்டும் பேச எந்த முயற்சியும் செய்ய வில்லை... மின்னஞ்சலை கூட திறந்து பார்க்க வில்லை....



இதற்கிடையில் ஒரு நாள் ராகவன் நிலாவிடம் திருமணம் பற்றி பேசினார்...

"நிலாக்குட்டி உனக்கு நிறைய நல்ல வரன்கள் வருதுடா... நாங்களும் ஜாதகம் கொடுத்துருக்கோம்... எப்ப வேணும்னாலும் கல்யாண பேச்சு வார்த்தை ஆரம்பிச்சுரும்டா.... "

ராகவனின் இந்த பேச்சில் திடுக்கிட்டவள் "அ...... அப்பா.. இப்ப எதுக்கு கல்யாணம்.... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் "

"இல்லடா நல்ல வரன்கள் வரப்ப தட்டி கழிக்க கூடாது.. நாம என்ன நாளைக்கேவா கல்யாணம் பண்ணிருவோம்..... எப்படி பொண்ணு பாக்கறது நிச்சயம் கல்யாணம்னு எப்படியும் ஒரு வருஷம் பக்கம் ஓடிரும்டா.... "

"அப்பா அது......... "

"என்னடா அப்பா மேல நம்பிக்கை இல்லையா.... "

"அப்படியெல்லாம் இல்லப்பா... உங்க விருப்பம்பா.... "


என்று கூறிவிட்டு தனது அறைக்கு வந்தவள் சத்தம் வராமல் அழுக பெரும்பாடு பட்டாள்.....

பிறகு வந்த நாட்களில் சரியான சாப்பாடு இன்றி தூக்கம் இன்றி தனது வேளையில் முழு மூச்சாய் இறங்கி விட்டிருந்தாள்...


வீட்டில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வராதிருக்க எப்போதும் அன்னை தங்கையிடம் வம்பிழுத்து சண்டை இடுவாள்...

அவர்களும் அவளின் உடல் மெலிவை கூட வேலை பளுவினால் என்று தான் நினைத்திருந்தனர்...



ராகவன் ஏதோ வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டு அன்று மாலை தான் வந்தார். வரும்போதே மிகவும் சந்தோசமாக இருந்தார்....


நிலாவும் கவியும் வரவேற்பறையில் இருந்தனர்.... அவர்களிடம் சென்று அமர்ந்த ராகவன் நிலாவிடம் இனிப்பை நீட்டினார். பின்.....



"கோதாவரி.... கோதாவரி.... இங்க வா... "

"என்னங்க வந்த உடனே ஏலம் போடறீங்க... இந்தாங்க தண்ணி... இதை முதல்ல குடிங்க "


ராகவன் அதை வாங்கி குடித்து விட்டு பேச ஆரம்பித்தார்....


"நம்ம நிலாவுக்கு நல்ல சம்பந்தம் வந்திருக்கு.... மாப்பிள்ளைக்கு காடு வயல் தோட்டம் எல்லா இருக்கு..... சொந்தமா வீடு... கம்பெனி வச்சிருக்காங்க... அதோட விவசாயமும் பாக்கறாங்க... நல்ல மனுசங்க..... ஜாதகம் கூட நல்லா பொருந்தி இருக்கு...... "

கவி "அப்பா மாப்பிளை போட்டோ இருக்கா "

"இல்லமா.... அவங்க தான் நாளன்னிக்கு நேருலயே வாரங்களே.... நம்ம நிலாவை அவங்களுக்கு புடிச்சி போச்சு... நிலாவுக்கும் புடிச்சிருந்தா அன்னைக்கே நிச்சயம் பண்ணிக்கலாம்னு சொல்லிருக்காங்க.. நான் மாப்பிளையை பார்த்தேன்.... நம்ம நிலாக்குட்டிக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாரு.... ரொம்ப நல்ல குணமும் கூட.... நீ என்னமா நிலா சொல்ற "

அவளிடம் பதில் இல்லை... அவள்தான் ராகவனின் செய்தியில் உறைந்து போய் நிற்கின்றாளே.....


நிலாவின் அருகில் சென்ற கவி "என்ன அக்கா இப்பவே கனவுல மிதக்க ஆரம்பிச்சுட்டியா " என்று நிலாவை பிடித்து உலுக்கியதில் சுய உணர்வு பெற்றாள் நிலா...


"நிலா உனக்கு விருப்பம் தானேம்மா.. அப்பா எது செஞ்சாலும் உனக்கு நல்லதா தான் இருக்குனு நம்பிக்கை இருக்குல்லமா"


அடைத்த தொண்டையை சாரி செய்தவள் "......கண்டிப்பா அப்பா.... நீங்க எது செஞ்சாலும் எனக்கு சரிதான்ப்பா... "
என்று கூறிவிட்டு தன் அறைக்கு வந்து விட்டாள்...


தான் அறை கதவை தாளிட்டவள் அழுது கரைந்தாள்... எதுவும் செய்ய இயலா கையறு நிலையில் தவித்தாள்.... ஏனோ பாலாவின் குரலை கேட்க வேண்டும் என்று தோன்ற நீண்ட நாட்களுக்கு பிறகு போன் செய்தாள்....

"ஹலோ...... பாலா ஹியர்...... நீங்க யார் பேசறது...... ஹலோ கேட்குதா.... ப்ச்.... ஏதோ ராங் கால் போல.... "என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்....

இங்கே நிலாவின் நிலைமை தான் ரொம்ப மோசம்.... "பாலாவின் குரலுக்கு இப்படி கரைந்து போகிறோமே... எப்படி இன்னொருவரை.... ஐயோ முடிய வில்லையே.... "அன்றய நாள் முழுதும் தலைவலி என்று சொல்லி விட்டு அறைக்குள்ளேயே இருந்தாள்...

அடுத்த நாளும் கம்பெனிக்கு லீவு போட்டிருந்தாள்... எவ்வளவு தான் தன் சோகத்தை மறைக்க முயன்றும் முடியவில்லை... ஆனால் விசேஷ பரபரப்பில் யாரும் கண்டு கொள்ளவில்லை....

அன்று மீண்டும் பாலாவிற்கு போன் செய்தாள்...

"ஹலோ..... பாலா ஹியர்..... யார் பேசறது..... ஹலோ......... "சிறிது நேர அமைதிக்கு பின்

"தேனும்மா....... " பாலாவின் இந்த வார்த்தை உயிர் வரை சென்று ஊடுருவியது.... கட்டுப்படுத்த முடியாமல் அழுதவள் போனை கட் செய்து விட்டாள்...


பாலாவும் மேலும் இருமுறை அழைக்க நிலா அதை ஏற்க வில்லை..... அதன் பிறகு பாலாவும் அழைக்கவில்லை...

நீண்ட நேரம் கழித்து அழுகை மட்டுப்பட சோர்வாய் படுக்கையில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள் நிலா...

கைபேசி மீண்டும் அழைக்க நிலா எடுத்து பார்த்தாள்.... புதிய நம்பராக இருந்தது... நிலா அதை எடுக்க வில்லை... அந்த எண்ணில் இருந்து மீண்டும் மீண்டும் அழைக்க வேறு வழியின்றி எடுத்தாள்..


"ஹப்பா ஒரு வழியா எடுத்துடீங்களே "

"ஹலோ யார் பேசறீங்க... யார் கூட பேசணும் "

"தேன் நிலா தான பேசறது "

"ஆமா.. நீங்க? "

"நான் வசந்த் பேசறேங்க "

"யார் வசந்த்... அப்படி யாரையும் தெரியாதே "

"என்னங்க நாளைக்கு நமக்கு நிச்சயமே ஆக போகுது... இப்ப போய் தெரியாதுன்னு சொல்ரீங்க.... "

நிலாவிற்கு அந்த போனை தூக்கி போட்டு உடைக்கும் அளவு கோவம் வந்தது... ஆனாலும் வேறு வழியின்றி பேசி தொலைத்தாள்.....

".....ம்ம் சாரிங்க... எனக்கு சடென்னா நியாபகம் வரல... சரிங்க அம்மா கூப்பிடறாங்க.. நான் வச்சறேன். " என்று சொல்லிவிட்டு வைத்து விட்டாள்...



நாளைய தினத்தை எதிர்கொள்ள தன் மனதை தயார் படுத்தினாள்...




மறுநாள் பொழுது அழகாக விடிந்தது... வீடே அல்லோகல பட்டுக்கொண்டிருந்தது.
நெருங்கிய சொந்தங்கள் மட்டும் வந்திருந்தனர்.... எல்லோரும் மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தனர்...

நிலா அவளுடைய அறையில் தன் போனில் உள்ள பாலாவின் புகைப்படத்தையே பார்த்து கொண்டிருந்தாள்... அப்பொழுது யாரோ வரும் சத்தம் கேட்டு கைப்பேசியை அணைத்தாள்... வந்தது கோதாவரி தான்...

"என்னம்மா இன்னும் குளிக்காம கூட இருக்க.... சீக்கிரம் போய் குளி.... சரி புடவை எது எடுத்து வச்சிருக்க.... "

"நீங்களே எடுத்து வைங்கமா... "


அவர் நிலாவின் அலமாரியை குடைந்து ஒரு புடவையை எடுத்து தந்தார்... அது பாலா குடுத்த புடவை.... கண்ணீர் கண்களில் நிறைய அதை மறைக்க குளியல் அறையில் தஞ்சம் புகுந்தாள்....


சிறிது நேரத்தில் அவளது உறவினர் பெண்களும் கவியும் சேர்ந்து நிலாவை ரெடி ஆக்கினார்.... தேவதை என மின்னியவள் கன்னத்தில் திருஷ்ட்டி போட்டு வைத்தனர்...

மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து விட்டதால் அனைவரும் அவர்களை வரவேற்க சென்று விட்டனர்...

சிறிது நேரத்தில் வந்த கவி நிலாவிடம் " அக்கா மாமா உன்கிட்ட பேசணும்னு உன் ரூமுக்கு வரார்... " என்று சொல்லிவிட்டு ஓடி விட்டாள்...

நிலா ஜன்னலின் ஓரம் வானத்தை
வெறித்து கொண்டிருந்தாள்..











அழுத்தமான காலடி சத்தம் அவன் வருகையை உணர்த்த தன்னிச்சையாக உடல் விறைக்க இறுகி போய் நின்றாள் நிலா..... ஜன்னலின் வெளிப்புறம் பதிந்த தன் பார்வையை விலக்கவும் இல்லை..

"ஹாய் தேன் நிலா.... ஐ ஆம் வசந்த்...... " என்று அவன் ஆரம்பிக்க நிலா குறுக்கிட்டு பேச ஆரம்பித்தாள்....

"சாரி மிஸ்டர் வசந்த்..... எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல... ப்ளீஸ் நீங்களே எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்திடுங்க... "

"ஏன் நீங்களே உங்க வீட்ல சொல்லிருக்கலாமே "

"என்னால சொல்ல முடியாது.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க "

"என்னாலயும் சொல்ல முடியாது.. ஏன்னா எனக்கு உங்களை பிடிச்சிருக்கே.... "

"ஆன என் மனசுல வேற ஒருத்தர் இருக்காங்க........ நீங்க இந்த கல்யாணத்த நிறுத்தலனா நானும் எங்க வீட்ல எதும் சொல்ல மாட்டேன்... ஆனால் கண்டிப்பா என் உயிர் என்கிட்ட இருக்கா...... "என்று சொல்லி முடிக்கும் முன் இரு வலிய கரங்கள் அவளை அணைத்திருந்தன...

முதலில் திடுக்கிட்டாலும் தன்னை அணைத்திருந்தவன் ஸ்பரிசமும் அருகாமையும் அவன் யார் என்பதை உணர்த்த அது தந்த உச்சபச்ச மகிழ்ச்சியில் உதடுகள் தானாக "பாலா "என்று உச்சரித்த அடுத்த கணம் அவன் கைகளில் கொடியென துவண்டு விழுந்தாள்...


நிலாவை தூக்கி படுக்கையில் படுக்க வைத்து முகத்தில் நீர் தெளித்தான்....

குளிர்ந்த நீரின் தீண்டலில் மயக்கம் தெளிந்த நிலா பார்த்தது தன்னவனின் கவலை கொண்ட முகத்தை தான்...

ஒரு நொடி கூட தாமதியாது பாய்ந்து சென்று பாலாவை கட்டி கொண்டாள்..

தன்னை இறுக கட்டிக் கொண்டு விடாமல் அழுது கொண்டிருப்பவளை சமாதானம் செய்யும் வழியறியாது தவித்தான்...

இறுதியில் நிலாவின் முகத்தை நிமிர்த்தி கண் கன்னம் நெற்றி என்று தொடர்ந்த முத்த மருந்து இறுதியில் நிலாவின் இதழில் சற்று இளைப்பாறியது....


முதலில் அமைதி படுத்த ஆரம்பித்த யுத்தம் வன்மையாய் மாறி இத்தனை நாட்கள் பிரிந்து இருந்த ஏக்கத்தை நிறைவு செய்தது....

இறுதியில் சிறைப்பட்ட இதழ்களை மனமே இல்லாமல் விடுவிக்க... இந்த யுத்தம் தந்த நாணத்தில் முகம் செம்மையுற அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்...

"ஹேய் தேனும்மா... கீழ எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க.. "

"ப்ச் போ பாலா... என்று சிணுங்கியவளுக்கு அப்பொழுது தான் இன்றைய நிகழ்வு நியாபகம் வர பதறி விலகியவள் மனதில் எண்ணற்ற கேள்விகள் இருந்தன....

"பாலா நீங்க எப்பிடி இங்க... அந்த வசந்த் எங்க.. "என்றவள் தலையில் செல்லமாக முட்டியவன்......

"ஹேய் மக்கு பொண்டாட்டி.... இன்னுமா புரியல..... சரி என் முழு பேர் என்ன? "

"ஹ்ம்ம்.... அது.......வ.... ஹா..... வசந்தபாலன்.... ஹேய்...... அப்ப அந்த வசந்த் நீ தான..... யூ....ச்சீட்...... " என்று அவனை சரமாரியாக அடிக்க தொடங்கினாள்.....


"ஹேய்... அடிக்காத... வலிக்குது... "


"ஆனால் குரல் வேற மாதிரி இருந்துச்சே... "

"யூ.... நோ.... ஐயம் பேசிக்கலி ஒரு மெமிக்ரி ஆர்ட்டிஸ்ட்... "

"பிராடு.. பிராடு.... ஆனால் இதெல்லாம் எப்படி நடந்துச்சு... அப்பாக்கு எப்படி தெரிஞ்சுது.... ஐயோ மண்டை காயுது.... ப்ளீஸ் என்ன நடந்துச்சுனு சொல்லு பாலா "

நிலாவை இழுத்து தன் மடியில் அமர்த்தியவன்.... அவள் கழுத்து வளைவில் முகத்தை பதித்தவன்.... நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தான்......




மூன்று நாட்களுக்கு முன் பாலா அப்பொழுது தான் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் ..... அப்பொழுது வாசலில் அழைப்பு மணி அழைக்க போய் கதவை திறந்தவனுக்கு நிலாவின் தந்தை ராகவனை கண்டதும் ஆச்சிரியமாக இருந்தது... இருந்தாலும் வாய் தானாக அவரை வரவேற்றது

"வாங்க அங்கிள்....... "

"என்ன பாலா ஆபீஸ் கிளம்பற நேரத்துல தொந்தரவு கொடுத்துட்டேனா.... "


"அப்படிலாம் இல்ல அங்கிள்... இன்னைக்கு கொஞ்சம் பிரீ தான்... அதனால் ஒன்னும் ப்ரோப்லம் இல்லை.. நீங்க உட்காருங்க.. நான் டீ கொண்டு வரேன்... "

"அதெல்லாம் வேண்டாம்பா.. இப்ப தான் குடிச்சிட்டு வந்தேன்.... நான் மதுகிட்டயும் பேசலாம்னு தான் வந்தேன் ஆனால் வீடு பூட்டி இருந்துச்சு... சரிப்பா நான் கேட்கற கேள்விகளுக்கு உண்மையா பதில் சொல்லணும் பாலா "

ஒருவேளை எல்லாம் தெரிந்து விட்டதோ... என்ன கேக்க போறார்னு தெர்லயே என்று குழம்பியவன் " கண்டிப்பா அங்கிள் கேளுங்க.... "


"நிலாவுக்கு இங்க ஏதாச்சும் பிரச்னையா பாலா... "

"அப்படிலாம் இல்லை அங்கிள் "

"நிலாவுக்கு இங்க யாரையாச்சும் பிடிச்சு இருக்கா பாலா " பாலா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.....

"பாலா நீ அமைதியா இருக்கும் போதே பதில் என்னனு தெரியுது..... நிலா ஊருக்கு வந்த அன்னைக்கே ஏதோ பிரச்சனைன்னு புரிஞ்சுக்கிட்டேன்... அவளா சொல்லுவானு நினச்சேன்.... ஆனால் நிலா என்கிட்ட எதுவும் சொல்லல... ஆனால் மனசுக்குள்ள ரொம்ப தவிக்கறானு புரிஞ்சுது... ஒரு நாள் கல்யாணத்த பத்தி பேசுனப்ப அவன் கண்ணுல அப்பிடி ஒரு வேதனை... நான் ஒரு நாள் கூட நிலாவை அப்படி பாத்தது இல்லை.....


அவ கண்ணுல விருப்ப பட்ட பொருள் கிடைக்காதுங்கற வலி தெரிஞ்சுது.. அப்பதான் அவள் மனசுல யாரோ இருக்காங்க... அதை சொல்ல முடியாம தவிக்கிறது புரிஞ்சிது...

"பாலா நிலா மனசுல யாரு இருக்காங்கனு நீ தான் சொல்லணும்.... "

பாலா எதுவும் பேசாமல் எழுந்து சென்று அன்று நிலா எழுதிய கடிதத்தை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான்...

"அங்கிள் நிலா உங்க பொண்ணு.... உங்கள எந்த ஒரு விஷயத்துக்காகவும் வறுத்தப்பட வைக்க கூடாதுனு நினைப்பா... "என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று பால்கனியில் நின்று கொண்டான்

நிலா சென்ற இத்தனை நாட்களில் ஏதோ பேருக்கு உண்டு உறங்கி வேலைக்கு சென்று ஒரு எந்திரம் போல தான் வாழ்க்கை இருந்தது.... நிலாவின் நிலைமையும் அதுதான் என்பது போல் தான் இருந்தது ராகவனின் பேச்சு...

அந்த கடிதத்தை படித்து முடித்த பின் அவரின் செயல் என்னவாக இருக்கும் என்பது வேறு அவனை வருத்தியது...

அங்கு நிலாவின் கடிதத்தை படித்தவரின் மனமோ விவரிக்க முடியாத உணர்வில் நிரம்பி இருந்தது... தன் மகளை பற்றிய பெருமையில் உள்ளம் மகிழ்ந்தது... ஒரு முடிவுடன் பாலாவின் அறைக்கு சென்றார்..


"மாப்பிளை..... "

அவரின் அழைப்பில் திகைத்தவன் அது கூறிய செய்தியில் ஓடி சென்று அவரை அணைத்து கொண்டான்....

"அங்கிள் ரொம்ப...... தேங்க்ஸ்.... எங்களை புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அங்கிள் "

அவன் முதுகை ஆறுதலாய் தட்டி கொடுத்தவர் "இன்னும் என்ன அங்கிள் னு கூப்பிட்டுக்கிட்டு... மாமான்னு சொல்லுங்க மாப்பிள்ளை.... "

"ஹ்ம்ம் சரிங்க மாமா "

"உங்க அம்மா கிட்ட பேசலாம் மாப்பிளை"

"இன்னைக்கே போலாம் மாமா "

இருவரும் கிளம்பி தஞ்சாவூர் சென்றனர்.. அங்கு சென்று கோதையுடன் பேசினர்... பிறகு நாளை மறு நாள் தேனி வருவதாகவும் அன்றே நிச்சயமும் வைத்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்தனர்...

நிலாவிற்கு சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும் என்றும் இப்பாதைக்கு பொண்ணு பார்க்க ஒருவர் வருவதாக மட்டும் சொல்லி வைக்குமாறு பாலா கேட்டு கொண்டான்...

அவரும் இங்கு வந்து அதன் படியே பேசினார்.... நிலா தன் அறைக்கு சென்றதும் மற்றவர்களிடம் நடந்தவற்றை கூறினார்.... அவர்களும் சந்தோச பட்டனர்...



பாலா சொல்லி முடித்ததும் நிலா மீண்டும் அழுது கொண்டிருந்தாள்....


"அப்பா ரொம்பவும் கிரேட் பாலா... இப்படிப்பட்ட அப்பா கிடைக்க நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் பாலா "

"ஆமா தேனும்மா.... எத்தனை பெத்தவங்க தன் பசங்களோட மனச புரிஞ்சுக்கறாங்க... நிஜமாவே மாமா சூப்பர்... "

"ஆனால் பாலா நீங்க தஞ்சாவூர் ல சொந்தமா கம்பெனி வச்சிருக்கீங்கனு சொன்னாங்க... அப்ப சென்னை வேலைய விட்டுடீங்களா "


"அச்ச்சோ.... எத்தனை கேள்விடி கேப்ப"


"ப்ச்.... சொல்லாட்டி போங்க " என்று சொல்லி தன் மடியிலிருந்து எழுந்தவளை இழுத்ததில் மீண்டும் அவன் மேலேயே விழுந்தாள்.....

" நீ இல்லாம சென்னைல இருக்க முடியல.. அதன் தஞ்சாவூர்லேயே சின்னதா ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிருக்கேன்... உங்க அப்பா வந்தப்ப சென்னையில் இருந்தது கூட நம்ம ஆபீஸ்ல சின்ன ஒர்க் முடிச்சு குடுக்க தான் ..... "

என்று கூறி தன் மூக்கால் நிலாவின் காதை நிமிண்ட.... அந்த நேரம் பார்த்து கதவை தட்டும் சத்தம் கேட்டது...

"அண்ணா உங்க டைம் ஓவர்...... நல்ல நேரம் வந்திருச்சு ஹால்கு வாங்க என்று அழைத்த மதுவை நிலா அறையின் உள்ளே இழுத்து வந்தாள்..... அப்போது தான் மதுவை பார்த்தாள் நிலா.... நெற்றியின் உச்சியில் குங்குமம் மின்ன கழுத்தில் புது மஞ்சள் சரடு அவளுக்கு திருமணம் ஆகி விட்டதை கூறியது.....

"ஹேய் மது என்கிட்ட சொல்லவே இல்லை"

"ஆமாடி.... நீ சிம் மாத்திட்டு போய்டுவா.. ஈமெயில் பாக்க மாட்ட.....ஒரு மெசேஜ் கூட பண்ண மாட்ட..நான் எப்படி சொல்றது "

"சாரிடி.... "என்று மீண்டும் அழ முயன்றவளை

" விடுடி..... சரி அதென்ன அன்னிக்கு அண்ணி அண்ணின்னு உருகிட்டு இன்னைக்கு மதுங்கற...... "

"ஈஈஈஈ.. சோ சாரிங்க அண்ணி "

எப்படியோ நிலா சகஜ நிலைக்கு வந்துவிட பாலா வரவேற்பறைக்கு சென்றுவிட மது நிலாவை தயார் செய்து அழைத்து வந்தாள்....

அங்கு தன் தந்தையை பார்த்ததும் ஓடி சென்று அணைத்து கொண்டாள்....


"ரொம்ப சாரிப்பா.... "

"நீ தப்பே செயலையே நிலாக்குட்டி... அப்புறம் எதுக்கு சாரி.... "

"ரொம்ப தேங்க்ஸ்பா "

"ஒன்னு சாரி சொல்ற இல்லனா தேங்க்ஸ் சொல்ற... அப்பா உன் விருப்பத்துக்காக எதுவும் செய்வேன்டா...... அதுலயும் பாலா மாதிரி ஒரு மாப்பிளை னா தேடினாலும் கிடைக்க மாட்டார்.... "

"அக்கா இன்னும் நீ உன் மாமியாரை கண்டுக்கவே இல்லை "என்று கூற கோதாவரி அவளை கிள்ளினார்....

நிலா ஓடிச்சென்று கோதையை அணைத்து கொண்டு கன்னத்தில் முத்த மிட்டாள்....

"அக்கா அம்மா பாரு உன்னை முறச்சிட்டு இருக்காங்க "

"அடியேய் கொஞ்சம் சும்மா தான் இரேன்"

நிலா அவர் அருகில் வந்து இரு கன்னத்திலும் முத்த மிட்டாள்... "தேங்க்ஸ்மா. "என்றும் அணைத்து கொண்டாள்.....

"அக்கா இப்ப மாமா.......... "என்றவள் வாயில் ஒரு லட்டை திணித்தார் கோதாவரி....

பின் அனைவரின் ஆசீர்வாதத்துடன் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர்..





இரு மாதங்களுக்கு பிறகு.....


நிலா பாலா திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆயிற்று...

திருமணம் முடிந்து தஞ்சாவூர் வந்து விட்டு உடனே தேனி சென்றனர்.... பின்னர் குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தனர்...


இன்று தான் நல்ல நாள் என்று சடங்கை இன்று தஞ்சாவூரில் வைத்திருந்தனர்... கோதை தேனியிலேயே தங்கிவிட நிலாவும் பாலாவும் மட்டும் வந்தனர்... நீண்ட தூரம் என்பதால் டிரைவர் அமர்த்திவிட்டு வந்ததால் வரும் வழியில் திருமண அலைச்சல் காரணமாக நன்கு உறங்கி விட்டனர்...

வீட்டிற்கு வந்ததும் முதலில் எழுந்த பாலா நிலாவையும் எழுப்பினான்...

பிறகு காரை விட்டு இறங்கியவர்களை வரவேற்றனர் மதுவும் நிகிலும்........

பின்னர் நால்வரும் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டே சாப்பிட்டனர்.... பிறகு நிலாவை மது தயார் செய்துவிட்டு நிகிலுடன் அவன் வீட்டிற்கு பாலா வந்த காரிலேயே சென்று விட்டனர்....


பாலா முதலில் அறைக்கு சென்று விட்டான்... நிலா கால்கள் பின்ன தயங்கி தயங்கி அவன் அறைக்கு சென்றாள்...

அறைக்கு சென்றவள் பாலாவை காணாமல் தேட பின்னிருந்து அவள் கண்களை மூடினான்....


"ஹேய் என்ன செய்யறீங்க "

"உஸ்ஸ்.... பேசாம வா..... " என்று அழைத்து சென்றவன் எதிலேயோ அமர வைத்து கைகளை எடுத்தான்...

அது ஒரு அழகிய ஊஞ்சல்..... கண்ணாடி ஊஞ்சல்..... நிலா ஆசையுடன் தன் கணவனை பார்த்தாள்.....

பாலாவும் அவள் அருகில் அமர அவன் நெஞ்சினில் சாய்ந்து கொண்டாள்...... பின் பாட ஆரம்பித்தாள்...

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேனே
நீயே அர்த்தம் !!

என்றும் நிலா நிறுத்த பாலா பாடினான். அவன் கைகள் நிலாவின் முகத்தில் கோலம் போட்டன.... .

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கும் நீயும் நானும் மட்டும்
இது கவிதையே !!!!!

என்றும் பாலா நிறுத்த..... நிலா ஒவ்வொரு வார்த்தைக்கும் முத்த மிட்டுக்கொண்டே பாடினாள்........

நீதானே நீதானே
என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையில்
முன் பார் பிம்பம் !!!!

நிலாவை கூந்தலில் முகம் புதைத்தவன் அடுத்த வரிகளை பாடினான்........

நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதல் வெப்பம்
நான் கையில் மாற்றி கொள்ள
பொன் கூந்தல் விழும் !!!!

இறுதியில் நிலாவை கையில் ஏந்திகொண்டு உள்ளே சென்றான்....

நிலாவின் வாழ்வில் பாலா வசந்தத்தை கொண்டு வந்து விட்டான்.....


இனி நம் தேன் நிலா வசந்த பாலனின் வாழ்க்கையில் என்றும் வசந்தமே......


💖💖💖💖💖💖💖💖💖
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN