மாயம் 35

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன் துக்கம்
தீரும் வரை
காத்திருக்கவிரும்புகின்றேன்...
ஆனால் நீயோ
என் காத்திருப்பை
பிரிவாய்
புரிந்துகொண்டு
உன்னை நீயே
எதற்காக
வதைக்கின்றாய்???

ஸ்டேஷனுக்கு செல்லும் வழி நெடுகிலும் தன் தோளில் சாய்ந்திருந்தவளை ஒருகையால் தட்டிக்கொடுத்தப்படியே காரை ஓட்டிச்சென்றான் ரித்வி... மனமோ ஹேமாவின் நிலையை எண்ணி வருந்தியபடியிருக்க மூளையோ அடுத்து செய்யவேண்டியவற்றை பட்டியலிட்டப்படியிருந்தது.... ஸ்டேஷன் வாசலிற்கு வந்தவன் தன் தோளில் சாய்ந்தபடியே பயத்தில் கண்ணீர் வடித்தப்படியிருந்தவளை மெதுவாக அழைத்தான்...

“ஹேமா... எந்திரிமா... ஸ்டேஷனுக்கு வந்துட்டோம்... நான் போய் கம்ப்ளைண்ட் குடுத்துட்டு வர்றேன்...” என்றவனது கையை இறுக பிடித்துக்கொண்ட ஹேமா

“வேணா ராஜ்... என்னை தனியா விட்டுட்டு போகாதீங்க... மறுபடியும் அவனோட ஆளுங்க வந்துடுவாங்க... ப்ளீஸ்.... என்னை விட்டுட்டு போகாதீங்க...” என்று அழுதவளை இறுக அணைத்துக்கொண்ட ரித்விக்கு உள்ளுக்குள் வலித்தது....

தன் உயிருக்குயிரானவளின் துன்பத்தை முற்றும் முழுதாய் நீக்கமுடியாததை எண்ணி அவனுக்கு தன்மீதே கோபம் வந்தது.... ஆயினும் அதை வெளிக்காட்டமுடியாத நிலையில் தான் இருப்பதை உணர்ந்தவன் ஹேமாவை ஆறுதலாக தடவியவன் தன் குரலில் காதலை மொத்தமாய் தேங்கியபடி

“மிக்கி இங்கே பாரு...” என்று அழைக்க நெடுகாலத்திற்கு பின் அந்த பெயரை கேட்டவள் அவன் தன்னை தான் அழைக்கின்றான் என்று உணர சில நொடிகள் பிடித்தது.. உணர்ந்தவளுக்கு மனதில் அத்தனை பரவசம்... மீண்டுமொருமுறை கேட்பதற்காக எந்த அசைவுமின்றி இருந்தாள் ஹேமா... ரித்விக்கு ஹேமாவின் அழுகை நின்றதுமே அவனது அழைப்பு அவளது காதில் விழுந்ததென்று புரிந்துவிட்டது...

ஆயினும் அவளிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போக என்னவென்று யோசித்தவனுக்கு என்னவென்று புரிந்து போக குனிந்து அவளது காதினருகே

“ஹேய் மிக்கி மவுஸ்... நிமிர்ந்து என்னை பாரு.....” என்றதும் விருட்டென அவனிடமிருந்து விலகியவள் ரித்வியை முறைத்தாள்..

“உன்னை எத்தனை தரம் மிக்கி மவுஸ்னு கூப்பிடாதனு சொல்லிருக்கேன்... கேட்கமாட்டியா நீ...??” என்று அவனை ஹேமா அடிக்கத்தொடங்க அவ்வளவு நேரம் இருந்த சூழ்நிலை மாறி அங்கொரு இலகுத்தன்மை குடிகொண்டது...

சிரித்துக்கொண்டே அவளை தடுத்தவன்
“ஹேய் அடிக்காதடி வலிக்கிது.. நான் கூப்பிட கூப்பிட நீ கேட்கல... அதான் அப்படி கூப்பிட்டேன்..”

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்த நீ அப்படி கூப்பிடுவ??” என்று மீண்டும் அடிக்க ரித்வியோ

“தைரியமா???? எனக்கா??? ஹாஹா...அதெல்லாம் இல்லைனா உன்னை சமாளிக்கமுடியாதுனு கிலோ கணக்குல வாங்கி எங்க வீட்டு குடேன்ல அடுக்கி வச்சிருக்கேன்.. “

“நக்கலா பண்ணுற??? உன்ன..??” என்று ஹேமா மீண்டும் ரித்வியை அடிக்கத்தொடங்க அவனோ

“ஐயோ அடிக்காத மிக்கி... வலிக்கிது... இப்போதைக்கு என்னை கொஞ்சம் ரிலீவ் பண்ணு.. நான் இன்ஸ்பெக்டரை பார்த்துட்டு வந்ததும் உன் அடிப்பிரசாதத்தை கொடு.. தாராளமா வாங்கிக்கிறேன்...”

(நம்ம ரித்வி அடிப்பிரசாதம்னு சொன்னது அடியை தான் மக்களே... 😂😂 அவனோட மிக்கி அவனுக்கு கொடுக்கிற ஒவ்வொரு அடியும் சாருக்கு பிரசாதமாம்.. அதை தான் நம்ம ரித்வி சார் அப்படி சொல்லுறாரு...)

ரித்வி அவ்வாறு கூறியதும் மறுபடியும் ஹேமாவின் முகம் பயத்தால் வெளுக்கத்தொடங்கியது... ரித்வியின் கைகளை இறுக பற்றிக்கொண்டவள்

“வேணா ராஜ்... என்னை தனியா விட்டுட்டு போகாத... ப்ளீஸ்... எனக்கு பயமா இருக்கு.. நானும் உன்கூட வர்றேன்..”

“இல்லை மிக்கி.. உன்னை இந்த நிலைமையில போலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போக முடியாது... சொன்னா புரிஞ்சிக்கோ.. இது போலிஸ் ஸ்டேஷன்.... யாரும் உன்னை எதுவும் பண்ணமுடியாது..நான் சீக்கிரம் போய்ட்டு இன்ஸ்பெக்டரை மீட் பண்ணிட்டு வர்றேன்மா...”

“ப்ளீஸ் ராஜ்.. நானும் வர்றேன்.. என்னையும் கூட கூட்டிட்டு போங்க..” என்று கண்களில் நீருடன் கூறியவளை கஷ்டப்படுத்த ரித்வி விரும்பவில்லை.. ஆயினும் போலிஸ் ஸ்டேஷனுக்கு அவளை அழைத்து செல்வதும் உசிதமல்ல என்று எண்ணியவன் தன் மொபைலை எடுத்து யாருடனோ பேசிவிட்டு காரை எடுக்கச்செல்ல ஹேமாவோ என்னவென்று பார்க்க

“அண்ணா பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாரு... நாம போகலாம்.. இன்ஸ்பெக்டர் அண்ணாவோட ப்ரெண்ட் கிஷோரோட அப்பா.. அண்ணா அவர்கிட்ட பேசுறதா சொல்லிட்டாரு.. நாம கிளம்பலாம்...” என்று காரை கிளப்ப விலகி அமர்ந்துகொண்டாள் ஹேமா.. அதை கண்டும் காணாது இருந்த ரித்வி காரை எடுத்தான்...
கார் வீட்டுக்கு செல்லும் பாதையில் செல்லாது வேறெங்கோ செல்ல ஹேமா ரித்வியிடம்

“இப்போ எங்க போறோம்?? இது வீட்டுக்கு போற ரூட் இல்லையே...”

“பசிக்கிது... மிக்கி சாப்பிட்டு போகலாம்... நீயும் ரொம்ப டயர்டா இருக்க... சாப்பிட்டுட்டு வீட்டுல ட்ராப் பண்ணுறேன்....”

“ம்ம்ம்.. சரி ஆண்டிக்கு சொல்லிடுங்க..”

“ம்... இந்தா அத்தைக்கு கால் பண்ணி சொல்லிரு...” என்றபடி தன் மொபைலை ஹேமாவின் புறம் நீட்டினான்...

அதை வாங்கி ஶ்ரீயிற்கு அழைத்தவள் தான் ரித்வியுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்... காரை ஒரு டெஸ்டோரன்டில் நிறுத்தியவன் காரிலிருந்து இறங்கி ஹேமாவை அழைத்துக்கொண்டு ரெஸ்டோரண்டிற்கு சென்றவன் சுவரோரமாய் இருந்த இருக்கையை தேர்ந்தெடுத்தவன் ஹேமா அமருவதற்கு ஏதுவாய் வழிசெய்துவிட்டு தானும் அவளின் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவன் மெனு கார்ட்டை புரட்டத்தொடங்கினான்...

அதிலிருந்து வெஜிடபள் சூப்பினை தனக்கும் ஹேமாவிற்கு ஆர்டர் செய்தவன் ஹேமாவை பார்த்து
“மிக்கி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்...”

“சொல்லுங்க ராஜ்..”

“நாம மேரேஜ் பண்ணிக்கலாமா??” என்று ரித்வி கேட்க

“ராஜ்.....” என்று அதிர்ச்சியோடு ஹேமா சத்தமிட

“ஹேய் மிக்கி..... கூல்... இப்போ எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுற?? பாரு எல்லோரும் நம்மையே ஒருமாதிரி பார்க்குறாங்க..” என்றதும் ஹேமா சுற்றும் முற்றும் பார்க்க அருகிலிருந்த மேசையில் அமர்ந்திருந்தவர்கள் இவர்களல கவனிப்பதை அறிந்தவள் ரித்வி புறம் திரும்பி

“நீங்க என்ன பேசுறீங்கனு புரிஞ்சி தான் பேசுறீங்களா???”

“புரியாம பேச நான் என்ன முட்டாளா?? புரிஞ்சி தான் பேசுறேன்... என்னோட கேள்விக்கு பதில் சொல்லு..” என்று ரித்வி அலட்சியமாய் பதில் சொல்ல

“என்ன புரிஞ்சி பேசுறீங்க...?? எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சி... அதுக்கு சாட்சியா இதோ இந்த குழந்தை என்னோட வயிற்றுல வளருது..”

“சரி... அதுக்கு இப்போ என்ன பண்ண சொல்லுற??? “

“ராஜ் விளையாடாதீங்க... இது உங்க லைப்.. “

“என்னோட லைப் தான்... ஐ வாண்ட் யூ என்ட் பேபி டூபி பாட் ஒப் இட்..”

“ஸ்டாப் இட் ராஜ்... நீங்க ஹேபேசுறது நடக்காத ஒன்று... நான் உங்க லைப்பில் இருக்க ஒரு காலத்தில் ஆசைபட்டேன்.. ஆனா அதெல்லாம் நிராசையாகி பலநாட்களாகிவிட்டது.. ப்ளீஸ் ப்ரிங் திஸ் டாபிக் டூ என் எண்ட்...”

“எல்லாம் நடக்கும் மிக்கி... நீ மனசு வைத்தால்.. ஆனால் ஒன்றை மட்டும் உனக்கு தெளிவுபடுத்த விரும்புறேன்...எனக்கு லைப்னா அது நீயும் பேபியும் மட்டும் தான்... நீங்க இரண்டு பேரும் இல்லைனா நான் இப்படியே தான் இருப்பேன்.. உன்னை தவிர வேறொரு பொண்ணுக்கு என் வாழ்க்கையில இடமில்லை...” என்று ரித்வி கூற அப்போது பேரரும் வந்துவிட இருவரும் அமைதியை கையிலெடுத்துக்கொண்டனர்....

பேரர் சென்றதும் ஹேமா கூற ஏதோ முயல அதை தடுத்த ரித்வி
“சாப்பிட்டு பேசலாம்மா... பசில காது இரண்டும் அடைச்சிருச்சு...” என்று கூற ஹேமாவும் தனக்காக அவன் வரவழைத்திருந்த வெஜிடபிள் சூப்பினை அருந்தத்தொடங்கினாள்...... சூப்பினை அருந்திமுடிக்கும்போது உணவும் வந்துவிட மீண்டும் ஹேமாவால் ஏதும் பேசமுடியாதபடி சென்றது... ரித்வியும் எதுவும் பேச முயற்சிக்கவில்லை..

உணவை முடித்துக்கொண்டு காரிற்கு வந்ததும் ஹேமா ஏதோ பேச முயல அதை தடுத்த ரித்வி
“இங்க பாரு மிக்கி... நீ என்னைக்கும் என்னோட மிக்கி தான்... ஒரு பொறுக்கியோட சதியால ஏதோ கொஞ்சகாலத்திற்கு நாம பிரிஞ்சி இருந்திருக்கலாம்... ஆனா அது சதியாக இருக்கும் பட்சத்தில் உன்னை அதிலிருந்து மீட்கவேண்டியது என்னோட கடமை.... முதல்முறை நம்மை மீறி நடந்த அந்த தப்பு மறுமுறையும் நடக்க நான் விடமாட்டேன்.... நாம ஆசைப்பட்ட வாழ்க்கையை நான் வாழனும்னு நினைக்கிறேன் மிக்கி... நீ ஏன் அதை புரிஞ்சிக்கமாட்டேங்குற???? ஒருவேளை நான் அனுதாபத்தால இப்படி நினைக்கிறியா?? அப்படினா நான் ஒன்றை தெளிவுபடுத்துறேன்.... உன் மேல உள்ள காதலால தான் நாம மேரேஜ் பண்ணிக்கலாமானு கேட்கிறேன்... அதுவும் உன்னோட வயிற்றுல வளர்ற நம்ம குழந்தை மத்தவங்க வாய்க்கு அவலாவதை நா விரும்பலை.... என்றைக்கும் என்னோட குழந்தையா இருக்கனும் அப்படிங்கிறத மனசுல வைத்து தான் உன்கிட்ட கேட்டேன்..... இந்த சமூகம் நம்ம கஷ்ட நஷ்டத்தை கண்டுக்காது.. நம்மகிட்ட உள்ள தவறை தான் ஒரு தலைப்பா எடுத்து பேசும்.... உனக்கு அந்த இக்கட்டான நிலைமை உருவாகுறத நான் விரும்பலை... ப்ளீஸ் புரிஞ்சிக்கோ மிக்கி...” என்று ரித்வி தன் தரப்பு நியாயத்தை கூற ஹேமாவோ

“எல்லாத்தையும் யோசிச்ச நீங்க எனக்குனு ஒரு மனசு இருக்கு.... அதிலயும் சில உணர்வுகள் இருக்கும்னு ஏன் நினைக்கல ராஜ்.... அப்போ என்னோட உணர்வுகளுக்கு இங்க எந்த மதிப்பும் இல்லையா?? என்னோட வலி வேதனை எல்லாத்தையும் மீறி என்னோட மனசை கல்லாக்கிக்கிட்டு இன்னொரு பந்தத்துல இணையச் சொல்லுறீங்களா??? அப்படினா நான் எல்லோருக்கும் ஒரு கைப்பாவைதானே.....??? எனக்கென எந்த விறுப்பு வெறுப்பும் இருக்கக்கூடாது அப்படி தானே ராஜ்???” என்று ஹேமா கேட்க என்ன பதில் சொல்வதென்று ரித்விக்கு புரியவில்லை..... அவனோ இந்த கோணத்திலிருந்து யோசிக்கவில்லை.....

பெண்ணின் மெல்லிய உணர்வுகளில் இதுவும் ஒன்று.... என்னதான் எதுவுமில்லை என்பதாய் காட்டிக்கொண்டாலும் அவர்களுள் எவரும் அறியாது வலியொன்றிருக்கும்... அதை வெளிப்படுத்தாமல் இருப்பதால் அவர்களின் ரணங்களை யாரும் புரிந்துகொள்வதில்லை..

ஹேமாவிற்குமே அப்படியொரு வலி மனதினுள் இருந்தது... அது அவளாய் வெளிப்படுத்தும் வரை எவரும் அறியமாட்டார்...அதில் ரித்வியும் அடக்கம்...
இப்போது ரித்விக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை... ஆனால் அதிரடியாக முடிவெடுப்பதால் பாதிக்கப்படுவது இருவரது வாழ்க்கை தான்.... அதனால் ஹேமாவிற்கு யோசிக்க சற்று காலம் தேவை என்பதை உணர்ந்தவன்

“சரி மிக்கி.... இப்போதைக்கு இந்த டாபிக்கை விடு.... ஆனா நான் சொன்னதை கொஞ்சம் யோசி...” என்றுவிட்டு காரை எடுத்தான் ரித்வி...
ஹேமாவை ஶ்ரீயின் வீட்டில் இறக்கிவிட்ட ரித்வி “மிக்கி நான் மறுபடியும் ரஷ்யா போறேன்... வருவதற்கு இன்னும் ஒரு கிழமையாகும் ... நீ பத்திரமா இரு.... அத்தையோ ஶ்ரீயோ இல்லாமல் வெளியே எங்கேயும் போகாத சரியா??? அப்புறம் டைமிற்கு சாப்பிடு... டாப்பிலட்சை சரியா எடுத்துக்கோ. ... கவனமா இருந்துக்கோ சரியா??” என்று கூறியவன் அங்கிருந்து கிளம்பினான்....
அவனது கார் மறையும்வரை வாசலிலேயே நின்றவளை வந்து அழைத்து சென்றாள் ஶ்ரீ.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN