மாயம் 37

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யாருமறியா
உன் துன்பம்
என் மனதை
ஆட்டிப்படைக்க
அதன் சுவட்டினை
இல்லாதழிக்க
உயிரை பணயம்
வைக்க தயங்கவில்லை
காதல் மனம்...

ம். எச் ஹாஸ்பிடலில் அறை எண் இருபத்திமூன்றில் கையில் கட்டுடனும் காலிலொரு கட்டுடனும் தலையில் ஒரு பிளாஸ்திரியுடனும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான் ரித்வி.. அவனருகே அமர்ந்திருந்து நலம் விசாரித்துக்கொண்டிருந்தான் ரிஷி...

“எப்படிடா ஆக்சிடண்ட் ஆச்சு?? நீ கால் பண்ணதும் பதறி போய் வந்தேன்... இது ப்ரி பிளான்டா ரித்வி???”

“ஆமா அண்ணா.... இது அந்த பொறுக்கியோட வேலை... என்னை ஆக்சிடண்ட் பண்ண லாரி அரேன்ஜ் பண்ணியிருக்கான்... அந்த லாரி ரொம்ப நேரமா பாலோ பண்ணுறதா தோனிச்சு... கவனிச்சப்போ அது நான் வந்த காரை டார்கட் பண்ணதா இருந்தது.. பாதையும் சிக்சேக்கா இருந்ததால பள்ளத்துல காரை தள்ளிவிடுறது தான் பிளானா இருந்திருக்கு.... நானும் அதுதான் அவங்களோட பிளான இருக்கும்னு கெஸ் பண்ணி அந்த லாரிக்காரனுக்கு தெரியாம கீழ குதிச்சிட்டேன்.. சடுனா குதிச்சதால இப்படி எசகுபிசகா அடிப்பட்டிருச்சு.. அந்த லாரிக்காரனும் நான் விழுந்தது தெரியாம காரை இடிச்சு பள்ளத்துல தள்ளிட்டு போய்ட்டான்.. அப்புறம் அங்க வந்த ஒரு கார்காரரோட உதவியோட ஹாஸ்பிடலுக்கு வந்துட்டேன்...”

“அவனை போலிஸ்ல பிடிச்சுகொடுத்தும் அவன் அடங்கலையா?? அவனுக்கு பாவம் பார்த்தது ரொம்ப தப்பா போச்சு.... என் தம்பி மேலேயே கை வைத்த பிறகு அவனை நான் சும்மா விடப்போறதில்லை... இனி அவனை நான் பார்த்துக்கிறேன்.. எப்படியும் அவன் ஜாமினில் வந்திடுவான்.... ஆனா அவனுக்கு இனி ஜென்மத்துக்கும் ஜாமின் கிடைக்குதபடி நான் அவனுக்கு செக் வைக்கிறேன்... மை ப்ளே ஸ்டார்ட்ஸ் நௌ....”

“என்ன அண்ணா சொல்லுறீங்க...?? அவன் ஜாமினில் வந்திடுவானா??”

“ஆமா ரித்வி.... அவனுக்கு பொலிட்டிக்கல் இன்ப்ளூவன்ஸ் இருக்குனு உனக்கு தெரியும்... எப்படியும் அந்த பவரை வைத்து அவன் ஜாமினில் வந்திடுவான்.. ஆனா அவனோட ஜாமினை கோட் அப்ஜெக்ட் பண்ணுறமாதிரி அவன்மேல ஒரு கேஸ் பைலாகனும்.. அதை நான் பார்த்துக்கிறேன்.... நீ கவலைப்படாத....”

“தேங்ஸ் அண்ணா... இவனுக்கு மொத்தமா ஒரு முடிவு கட்டுனா தான் எனக்கு மனசுக்கு நிம்மதி...”

“அது சரி நீ எதுக்கு அவனோட ஊருக்கு போன???”

“அவனை பத்தி விசாரிக்கத்தான் போனேன்.. ஆட் ஸூட்டிங்கிற்கு லொக்கேஷன் பார்க்க வந்தேன்னு சொல்லி அவன் வீட்டுலயே தங்கிட்டேன்... அங்கயிருந்து தான் அவனை போலிஸில் மாட்டி விடுறதுக்கான எல்லா ஆதரத்தையும் கலெக்ட் பண்ணேன்....அவனுக்கு ஏற்கனமே மேரேஜாகி அந்த பொண்ணை இவனே கொன்னுட்டு அந்த பொண்ணு ஓடிபோயிருச்சுனு கதை கட்டிவிட்டுட்டான்... இது மட்டும் இல்லை இவன் காமபசிக்கு கண்ணுல காண்கின்ற எல்லா பொண்ணுங்களையும் இரையாக்கியிருக்கான்... இவனை எதிர்த்தவங்களை உருத்தெரியாம அழிச்சிருக்கான்..... இவனை சரியான எவிடன்சோட லாக் பண்ணனும்னு தான் நானே இறங்கினேன்... ஹேமாவுக்கு நடந்த கொடுமைக்கு நானே அவனுக்கு தண்டனை கொடுக்கனும்னு எல்லா எவிடன்சையும் நானே கலெக்ட் பண்ணி போலிஸ்கிட்ட ஒப்படைச்சேன்.... அப்பவும் அவனுக்கு எகென்ஸ்ட்டா ஆக்ஷன் எடுக்காம என்னை டைவட் பண்ணதான் ட்ரை பண்ணாங்க... நீங்க சொன்னபடி கமிஸ்னர் அங்கிளுக்கு கால் பண்ணதும் அவரு டிரெக்டா இன்வால் ஆகினதும் தான் அந்த பொறுக்கிய அரெஸ்ட் பண்ணாங்க.. நான்தான் அவனை போலிஸில் மாட்டிவிட்டுருக்கேன்னு அவனுக்கு தெரிஞ்சதும் என்னை கொல்ல லாரியை அனுப்பியிருக்கான்..”

“இருந்தாலும் நீ இவ்வளவு தூரம் இன்வால்வ் ஆகியிருக்க தேவையில்லை ரித்வி... இதை செய்றதுக்கு தான் நம்மகிட்ட நிறைய பேர் இருக்காங்களே...”

“ஆனா அண்ணா ஹேமாவோட அழுகை, பயத்தை நேருல பார்த்தபின்பும் அதற்கு காரணமானவனை நானே தண்டிக்காட்டி என்னோட மனசுக்கு நிம்மதி இருக்காதுனா... என்னோட கேரக்டரையே மாத்திட்டானா அந்த பொறுக்கி...”

“நீ நினைக்கிறது சரி தான் ரித்வி....ஆனா நம்ம பாதுகாப்பை உறுதிப்படுத்திக்க வேண்டியது நம்ம கடமை தானே... ஏதோ நீ கொஞ்சம் கவனமா இருந்ததால சின்ன அடியோட தப்பிச்சிட்ட... இல்லைனா...???”

“புரியிதுனா... இனி கொஞ்சம் கவனமா இருக்கேன்..”

“ம்ம்...” என்று ரிஷி கூறியபோது அவனது மொபைல் ஒலித்தது..

அதை எடுத்து காதில் வைத்தவன்
“சொல்லு அம்லு...”

“.......”

“என்ன சொல்லுற அம்லு??? என்னாச்சு...??”

“......”

“ஓ மை காட்... இப்போ எப்படி இருக்கா???”

“........”

“சரி நீ அவளை கவனமா பார்த்துக்கோ... ரித்வியை ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க.. நைட்டுக்குள்ள வந்திடுவோம்... நீ கவனமா பார்த்துக்கோ... ஏதாவது தேவைனா என்னை கூப்பிடு...”

“.....”

“ஓகே பாய்..” என்று ரிஷி அழைப்பை துண்டிக்க ரித்வி என்னவென்று பார்த்திருந்தான்...

ஹேமாவை ஆஸ்பிடலில் அட்மிட் செய்திருப்பதை கூறியவன் ட்ரீட்மெண்ட் நடந்துகொண்டிருப்பதையும் கூறினான்..

“ஐயோ அண்ணா.. டாக்டர் அவளை ரொம்ப கவனமா பார்த்துக்க சொன்னாங்க... அவ ரொம்ப வீக்கா இருக்கதால அவளோட மனசை பாதிக்காத மாதிரி பாத்துக்க சொன்னாங்க.. இப்போ எப்படி இருக்கா அண்ணா?? எனக்கு உடனே அவளை பார்க்கனும்ம்... இந்த ஒருவாரம் அவகூட பேசல.... அது வேற அவளுக்கு கஷ்டமா இருந்திருக்கும்.. இப்போ எனக்கு அடிப்பட்டது தெரிஞ்சதும் இன்னும் உடைஞ்சி போயிருப்பா.. அண்ணா என்னை உடனே டிஸ்சார்ஜ் பண்ணுறதுக்கு அரேன்ஜ் பண்ணுங்க அண்ணா... ப்ளீஸ்.. எனக்கு உடனே ஹேமாவை பார்க்கனும்.. ப்ளீஸ்..” என்று பதைபதைத்தவனை

“அவசரப்படாத ரித்வி... இப்போ நீ ஸ்ரெயின் பண்ணிக்கிட்டா உனக்கு தான் கஷ்டம்... அங்க அத்தை ஹேமாவோட பேரண்ட்ஸ் ஶ்ரீ, அனுனு எல்லாரும் இருக்காங்க... நீ கவலைப்படாத....”

“இல்லணா... எனக்கு அவளை பார்த்தா தான் நிம்மதியா இருக்கும்... ப்ளீஸ்னா புரிஞ்சிக்கோங்க...”

“சரி நான் டிஸ்சார்ஜ் பண்ணுறதை பத்தி டாக்டர்கிட்ட கேட்டுட்டு வர்றேன்... நீ அதுவரைக்கும் ரெஸ்ட் எடு...” என்றுவிட்டு ரிஷி டாக்டரை காணச்சென்றான்..
ஒருவாறு டிஸ்சார்ஜாகி காரில் ஏறியதும் ரித்வி மருந்தின் வேகத்தால் கண்ணயர ரிஷியோ அந்த மூன்று மணிநேர பயணத்தின் பின் ஹாஸ்பிடலை அடைந்தான்...
ஹாஸ்பிடலில் இறங்கியதும் ரித்வியை வீல் சாரின் உதவியுடன் ஹேமாவிருந்த அறைக்கு அழைத்து சென்றான் ரிஷி... ராஜேஷ்குமாரும் ராஜரட்ணமும் அறைக்கு வெளியே இருக்க அவர்களருகே சகோதரர்களிருவரும் சென்றனர்...

ரித்வியை கண்டதும அவர்களிருவரும் என்னவென்று விசாரிக்க சிறு விபத்து என்று கூறியவன் அவனுக்கு பெரிதாய் ஒன்றுமில்லை என்று உறதிப்படுத்தினான் ரிஷி...
ஹேமா பற்றி விசாரிக்க அவள் உயர் இரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்ததாகவும் இனிமேல் இது போன்று நடந்தால் அது குழந்தைக்கும் ஹேமாவுக்கும் பாதகமாக அமையுமென்று டாக்டர் எச்சரித்ததையும் கூறினர்...

ரிஷி ரித்வியிருந்த வீல் சாரினை தள்ளிக்கொண்டு அறைக்கதவினை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான்... உள்ளே ஹேமாவை சுற்றி அவளது அன்னையும், ஶ்ரீயும், ராதாவும் நின்றிருந்தனர்...

ரித்வியும் ரிஷியும் உள்ளே வர ரித்வியை நலம் விசாரித்த ஶ்ரீயும் ராதாவும் அவனை திட்டவும் தவறவில்லை... அடிப்பட்டிருக்கும் இந்த நிலையில் ரித்விக்கு ஓய்வு தேவை என்று வலியுறுத்தியவர்கள் ஹேமாவிடம் பேசிவிட்டு வருமாறு கூறிவிட்டு வெளியே செல்ல அவர்களை பின் தொடர்ந்தனர் சிவரஞ்சனியும் ரிஷியும்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN