மாயம் 43

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னவளே
என்னை
தினம் தினம்
காதலெனும்
சுழியில்
மூழ்கடித்து
திணறடிப்பது
ஏனோ...???

கையில் காதலியான மனைவியை ஏந்தியவண்ணம் அவள் விழிகளிலிருந்து பார்வையை அகற்றாது ஏற்றப்பட்டிருந்த அந்த மெழுகுவர்த்தியினை சுற்றி வந்தவன்

“அந்த நிலாவையும், இந்த அக்னியையும் சாட்சியாக வைத்து உன்னை நான் என்னில் சரி பாதியாக ஏத்துக்கிறேன்.. இந்த நொடியிலிருந்து என்னோட இறுதி மூச்சு வரைக்கும் நீ மட்டும் தான் என்னோட மனைவி... சந்தோஷமோ துக்கமோ எல்லாவற்றிலும் உனக்கு நான் துணையா இருப்பேன்.. இந்த கண்ணுல இருக்க காதலும் சந்தோஷமும் எப்பவும் குறையாமல் பார்த்துப்பேன்... உன்னோட அந்த செவ்விதழ்கள் சிந்துகின்ற அந்த புன்னகைக்காக எது வேணாலும் செய்வேன்... எதுவும் உனக்காக, உனக்காக மட்டும் செய்வேன்... உன்னோட குறும்பும் சேட்டைகளும் எப்பவுமே உன்னை விட்டு போகதமாதிரி பார்த்துப்பேன்... நான் உன்னை பார்த்த அந்த நொடியில நீ எப்படி சந்தோஷமா கலகலனு இருந்தியே அதேமாதிரி என்னோட இறுதி மூச்சு வரைக்கும் உன்னை பார்த்துப்பேன்.. எனக்கு நீ ஒரு ப்ராமிஸ் மட்டும் பண்ணித்தரணும்.. எந்த காரணத்துக்காகவும் நீ என்னை தனியா விட்டுட்டு போகக்கூடாது.. கஷ்டமோ நஷ்டமோ எதையும் நீ தனியா சுமக்கக்கூடாது... உனக்காக அதை சேர்ந்து சுமக்க நானும் இருக்கேன்னு நீ எப்பவும் மறக்கமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணித்தா அம்லு..” என்றபடி அவன் யாசகம் கேட்க அவன் கைகளில் இருந்தவள் அவன் முன்னுச்சியில் தன் முத்திரையை பதித்துவிட்டு

“நீ மட்டும் தான் என்னோட வாழ்க்கை..உனக்காக தான் கடவுள் என்னை படைச்சிருக்கான்.. இந்த நொடியில இருந்து நான் மனதாலும் உடலாலும் உனக்கு சொந்தமானவள்.. அதை அந்த கடவுளே நினைச்சா கூட மாத்தமுடியாது.. நான் உன்னை பிரிந்து செல்கின்ற சந்தர்ப்பம் என்னோட மரணமாக மட்டும் தான் இருக்கும்.. யாருக்காகவும் எதற்காகவும் உன்னை பிரியனும்னு நினைக்கமாட்டேன்.. இந்த உடல் கடைசி சுவாசத்தை சுவாசிக்கும் வரை உனக்காக மட்டுமே உயிரோடிருக்கும். எனக்கு நீங்க மட்டும்போதும் அத்தான்... வேறு எதுவும் வேண்டாம்...” என்றவளை அணைத்துக்கொண்டவன் அந்தநிலையிலேயே அவளது காதலில் மயங்கியவன் அதை வெளிப்படுத்தும் வழியாய் அவள் அதரங்களை கவ்வினான்...

முத்தம் எனும் மொழியின் மூலம் தன் காதலை தன்னவளுக்கு வெளிப்படுத்த முயல பெண்ணவளோ அதற்கு அவசியமில்லை என்று உணர்த்தும் வகையில் அந்த முத்தப்போராட்டத்தில் தன் வேகத்தை வெளிப்படுத்தினாள்... அந்த இரவு நேரமும், மெல்லிய கூதல் காற்றும், வானில் குளிர்காய்ந்துகொண்டிருந்த முழுநிலவும், திறந்த வெளியென்று அனைத்தும் அந்த காதல் ஜோடியின் காதல் பரிமாற்றத்திற்கு இன்னிசைபாட அவற்றையுணராது அந்த காதல் ஜோடியும் தம் முத்த யுத்தத்தை தொடர, அயற்சியின் காரணமாய் அது சில நிமிடங்களில் முடிவிற்கு வந்தது...

“போதும் அத்தான்.. கொஞ்சம் மிச்சம் வைங்க.....”

“எனக்கு போதும் அம்லு.... ஆனா என்னோட பொண்டாட்டியோட கண்ணும், லிப்சும் பத்தலைனு சொல்லுதே...”

“அப்படிலாம் இல்லையே...”

“ஆஹா... அப்படியா?? சரி நீ கீழே இறங்கு..”

“ஏனாம்?? உங்க பொண்டாட்டியை தூக்க உங்களுக்கு கஷ்டமா இருக்கா?? ஒரு பேச்சுக்கு சொன்னா போனு சொல்லுவியா அய்த்தான்???”

“ஹாஹா... சரிசரி.. இப்போ என்ன பண்ணனும்???”

“என்னை அந்த டெரஸிற்கு தூக்கிட்டு போ அத்தான்..”

“ம்... வா போகலாம்..” என்றபடி ஶ்ரீயை ஏந்தியவண்ணம் டெரஸிற்கு சென்றவன் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அவளை அமரவைத்தவன் அவளுக்கு எதிரே அமர முயன்றவனது சேர்ட் காலரினை பற்றி தன்புறமிழுத்தவள் அவனது கன்னமிரண்டு மற்றும் முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்டு

“லவ் யூடா புருஷா..” என்றவள் மீண்டும் முன்னுச்சியில் இதழ் பதித்தவளை தன் மார்போடு அணைத்தவன்

“லவ் யூ டூ டி பொண்டாட்டி..”

“லவ் யூ சொன்னா பத்தாது.... ட்ரீட் வை..”

“எதுக்கு அம்லு ட்ரீட்...??”

“உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சில்ல.. அதுக்கு தான்....”

“என்னோட அம்லுக்கு என்ன வேணும்??”

“என்ன கேட்டாலும் வாங்கி தருவியா அத்தான்??”

“என்னோட அம்லு கேட்டு முடியாதுனு சொல்லுவேனா??”

“மட்டன் பிரியாணி வாங்கித்தா.. அதுவும் இப்பவே..”

“இப்போவா?? இப்ப மணி ஒன்னு மா... கடையெல்லாம் மூடியிருப்பாங்களே... இரு ஏதாவது ரெஸ்டாரண்ட் திறந்திருக்குமானு நெட்ல செக் பண்ணுறேன்..” என்றவன் தனது மொபைலை எடுத்து தேடத்தொடங்க

“அத்தான் நீ சுத்த மோசம்...”

“ஏன் அம்லு...??”

“நான் தான் நடுச்சாமத்துல பிரியாணி கேட்குறேன்னா நீயும் வாங்கித்தர கிளம்பிட்ட??”

“நீ ஆசையா கேட்கும் போது எப்படி அம்லு முடியாதுனு சொல்லுறது??”

“அதுக்காக அர்த்த ராத்திரியில எங்க போய் பிரியாணி வாங்குவ?? இப்படியெல்லாம் நீ எனக்கு செல்லம் கொடுக்கக்கூடாது...”

“ஹாஹா.. என்னோட அம்லுக்கு நான் செல்லம் கொடுக்காம வேற யாரு கொடுப்பா?? இரு அம்லு ரெஸ்டாரண்ட் ஏதும் அவேலபல்லானு செக் பண்ணுறேன்...”

“அதெல்லாம் வேணா.. நான் ஆல்ரெடி வாங்கி கிச்சனுல வச்சிருக்கேன்... இருங்க எடுத்துட்டு வர்றேன்.. “என்றவள் கீழே சென்று பிரியாணி பார்சல் மற்றும் மற்றொரு பரிசிப்பொதியை எடுத்து வந்தவள் அதனை டெரஸில் இருந்த மேசை மீது கடை பரப்பினாள்.
அதை பார்த்த ரிஷி “என்ன அம்லு பிரியாணி ஒரு பார்சல் தான் இருக்கு??”

“ஆமா உங்களுக்கு மட்டும்...”

“அப்போ உனக்கு????”

“ நான் ஆல்ரெடி ரெண்டு பார்சல் காலி பண்ணிட்டேன்... இது உங்களுக்கு...”

“ஹாஹா.. அப்போ சும்மா தான் கேட்டியா??? பரவாயில்லை வா இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்...”

“உனக்கு போதாது அத்தான்...”

“ஹே நான் உன்னளவுக்கு பிரியன் இல்லைமா....”

“அது தெரியும்.... ஆனா... நீ பெஸ்ட் சாப்பிடு அத்தான்...” என்றவள் இன்னொரு பரிசுப்பொதியை ரிஷியிடம் கொடுத்து அதை திறக்கச்சொல்ல அவனை அதை திறந்தவன் உள்ளேயிருந்ததை கண்டு வாயடைத்து நின்றான்.

“என்ன அம்லு இது??”

“உனக்கு தான் அத்தான்... இன்னைக்கு ப்ரெண்சோட பர்த்டே செலிபிரேட் பண்ணியிருந்த நல்லா வெரைட்டி வெரைட்டியா சரக்கு அடிச்சிருப்ப... அதான் அதை புல் பில் பண்ணுறமாதிரி ஏதோ என்னால முடிஞ்சது...”

“அம்லு சத்தியமா சொல்லுறேன்...என்னால உன்னை புரிஞ்சிக்கவே முடியலை.... வழமையா பொண்ணுங்களுக்கு பசங்க சரக்கடிக்கிறது பிடிக்காது... ஆனா நீ வாங்கு குடுத்து என்ஜாய் பண்ணுனு சொல்லுற..”

“அத்தான் பசங்க நீங்க லிமிட்டா இருந்தா பொண்ணுங்க நாங்க ஏன் வேணாம்னு சொல்லுறோம்... பிடிக்காதுனு தெரிஞ்சே புல்லா குடிக்கிறீங்க...ஓகேனு சொன்ன என்ன பண்ணுவீங்க...அதான் அப்படி.. ஆனா உங்க ட்ரிங்கிங் லிமிட் பத்தி ரித்வி அத்தான் சொல்லியிருக்காரு... யூஸ்வலி நீங்க ட்ரிங்க் பண்ணமாட்டீங்களாம்... பார்ட்டிஸ் போனாலும் அவாய்ட் பண்ண முடியாம போனால் தான் லைட்டா ட்ரிங்க் பண்ணுவீங்களாம்...அப்படி ட்ரிங் பண்ணுற நேரத்துல நீங்க உங்க பாம் ஹவுசுல தங்கிருவீங்கனும் சொன்னாரு...”

“ஆமா அம்லு... அம்மா அப்பாவுக்கு ட்ரிங்கிங் பிடிக்காது... பார்ட்டிஸ் முடிந்து வீட்டுக்கு வரும் வரைக்கும் அம்மா எனக்காக வெயிட் பண்ணுவாங்க.. ட்ரிங்க் பண்ணதும் அம்மாவ பேஸ் பண்ண தைரியம் இருக்காது... அதுனால வெளியில தங்கிருவேன்... அவங்களுக்கு நான் இதுனால தான் இப்படி பண்றேன்னு தெரியும்... ஆரம்பத்துல வீட்டுக்கு வந்திடுனு சொன்னாங்க... ஆனா எனக்கு தான் ஒருமாதிரி கில்டி பீல்... அதுனால பாம்ஹவுஸ் வந்திடுவேன்.. ஆரம்பத்துல அடிக்கடி பார்ட்டிஸ் போவேன்.. பிறகு ரொம்ப முக்கியமான பார்ட்டிஸ் மட்டும் அட்டென்ட் பண்ண ஆரம்பிச்சேன்.. சோ இப்போ ட்ரிங் பண்ணுறது ரொம்ப ரேயார்...”

“பார்டா... என்னோட அத்தான் குடிக்கிறதுக்கும் பாலிசி வச்சிருக்கு..”

“அதெல்லாம் இல்லாவிடின் நம்ம ருடின் மெஸ்ஸப் ஆகிரும்மா...”

“ஹாஹா.. இன்னைக்கு மட்டும் எதைபத்தியும் கவலைபடாமல் நல்லா என்ஜாய் பண்ணுங்க... ம்ம்ம்... இந்தாங்க...” என்றவள் கீழே சென்று கிளாசினை எடுத்துவந்து அவன் முன் வைத்துவிட்டு ரிஷியை பார்க்க அவனோ இவளை பார்த்து சிரித்தபடி அந்த கிளாசில் கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றி குடித்தான்.. ஶ்ரீயோ அவன் கவனியாத நேரத்தில் தன் கிட்டாரை எடுத்து வந்தவள் அதை இசைக்கத்தொடங்கினாள்.

போதவில்லையே
போதவில்லையே உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே
நாள் முழுக்க
உன்னை கண்கள் தின்ற
பின்னும் உந்தன் சொற்கள்
மீது நான் நனைந்த பின்னும்
இன்னும் இன்னும் பக்கம்
வந்தும் கிட்ட தட்ட ஒட்டி
கொண்டும் மூச்சில் தீயும்
பற்றி கொண்டும் ம்ம்

தேநீரை நாம் உறிஞ்சும் மாலை
போதாதே
கை கோர்த்து போகும் இந்த சாலை
போதாதே
என் எண்ண
விண்கலம் நான் சொல்லவே
கைபேசி மின்கலம் போதாதடி

உன் அழகை பருக
என் கண்கள் போதாதடி என்
நிலையை எழுத வானங்கள்
போதாதடி நேர முள்ளை பின்
இழுத்தும் வாரம் எட்டு நாள்
கொடுத்தும் சுற்றும் பூமியை
தடுத்துமே

கூழாங்கல் கூவுகின்ற
கானம் போதாதே கூசாமல்
கூடுகின்ற நாணம் போதாதே
தொண்ணூறு ஆண்டுகள் நீ
கேட்கிறாய் ஜென்மங்கள்
ஆயிரம் போதாதடா

நம் கனவை
செதுக்க பிறந்தும்
போதாதுடா இவ்வுலகில்
இருக்கும் தெய்வங்கள்
போதாதுடா குட்டி குட்டி
கோவம் கொண்டு கட்டி
முட்டி மோதி கொண்டு
திட்டி திட்டி தீர்த்த பின்னும்

போதவில்லையே
போதவில்லையே
உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே
சுவாச பையில்
உந்தன் வாசம் பூட்டி
வைத்தும் நெஞ்ச ஏட்டில்
இன்னும் உன் பேரை தீட்டி
வைத்தும் பாடல் தீர்ந்து
போன பின்னும் மௌனம்
கூட தீர்ந்த பின்னும் கோடி
முத்தம் வைத்த பின்னும் ம்ம்

போதவில்லையே
போதவில்லையே உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே

என்று ஶ்ரீ ரிஷியின் கண்களை பார்த்தவாறு கிட்டாரை இசைத்து பாட அவளை இமைக்க மறந்து பார்த்தபடியிருந்தான் ரிஷி...

அவனருந்த மதுவைவிட அவளது பாடலும் வரிகளும் விழிபார்வையுமே போதையேற்றியிருந்தது.... அந்த குரலின் வசீகரம் என்றும் போல் இன்றும் அவனை கட்டிப்போட அவளது விழிப்பார்வை தாங்கிநின்ற காதலும் மோகமும் அவனை வேறு உலகத்திற்கு அழைத்துச்சென்றிருந்தது...

“சத்தமின்றி யுத்தமின்றி இங்கு ஓர் போர்களம்.... அதன் பெயர் காதல்...” என்று என்றோ படித்த ஒரு கவிதை நினைவில் வர அது எத்தனை உண்மையான வார்த்தைகள் என்று இன்று உணர்ந்தான் ரிஷி... வார்த்தையோ பார்வையோ இன்றி மனம் விரும்பியவனை தன்முன் மண்டியிட தன் விழிப்பாரவையால் முடியுமென்று தன் மனதுக்கியவள் நிரூபிக்க அதை கண்டவனுக்கு அந்த நொடி ஆண்மகனாய் பிறந்ததற்கான பிறவிப்பயனை அடைந்துவிட்டதாய் உணர்ந்தான்... காதல் என்ற வார்த்தையில் எத்தனை அர்த்தங்கள்... காதலாய் கசிந்துருகுவது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான்... எத்தனை திரைப்படங்கள் பார்த்திருந்தாலும், எத்தனை இலக்கியம் படித்திருந்தாலும், எத்தனை பாடல்கள் கேட்டிருந்தாலும் காதல் என்ற வார்த்தையை உணரும் போதே அதன் மகிழ்ச்சி, வலி, வேதனை அனைத்தும் புரியும்... கவிதைகள் கூட அவரவர் காதலின் ஆழத்தை ஆழந்து உரைக்கும் வல்லமையுள்ளவை.

இந்த விழிப்பார்வை நீண்ட நெடிய நேரம் நீடிக்க அதிலிருந்து மீளவிரும்பாத இருவரையும் மீட்டெடுத்தது எங்கே கேட்ட டமார் என்ற சத்தம்... தன்னிலை மீண்டவர்கள் தங்கள் நிலையை எண்ணி சிரித்துக்கொண்டனர்..

ரிஷி சாப்பிட்டு முடிந்ததும் இருவரும் சேர்ந்து அந்த இடத்தை சுத்தப்படுத்திவிட்டு
“அம்லு இப்போ எப்படி வீட்டுக்கு போவ??”

“இப்போ எப்படி வீட்டுக்கு போக முடியும்..?? மார்னிங் தான் போகனும்...”

“அப்போ இங்க தங்க போறியா?? அத்தையை எப்படி சமாளிப்ப...??”

“அவங்களுக்கு நான் இங்க வந்தது தெரியாதே... நான் சஞ்சு வீட்டுல வர்க் விஷயமா தங்குறதா சொல்லிட்டு தான் வந்தேன்.. நீங்க என்ன பண்ணுறீங்கன மார்னிங் என்னை சஞ்சுவீட்டுல ட்ராப் பண்ணிருங்க...”

“சூப்பரா தான ப்ளான் பண்ணுற.. சரி வா கீழே போகலாம்...”

“அவ்வளவு தானா???”

“வேற என்ன அம்லு...??”

“நான் இவ்வளவு சப்ரைஸ் கொடுத்திருக்கேன்... நீங்க ஒரு தாங்ஸ் கூட சொல்லாம போறீங்க...”

“ஓ... சாரி அம்லு... ரொம்ப தாங்ஸ... ஓகேவா...??”

“பொண்டாட்டிக்கு இப்படி தான் தாங்ஸ் சொல்லுவாங்களா??”
“வேற எப்படி சொல்லுறது??”

“எல்லாம் நானே சொல்லிகொடுக்கனுமா??”

“இப்போ யோசிக்கமுடியல அம்லு... சோ நீயே சொல்லிரு...”

“ம்... எனக்கு இதுவும் தேவை இதுக்கு மேலேயும் வேணும்..”

“சாரி அம்லு... எனக்கு இது தான் பஸ்ட் டைம்...அதான் இப்படி சொதப்புறேன்... நீ சொல்லிக்குடு நான் சரியா செய்றேன்..”

“அப்போ எனக்கு இது எத்தனாவதாம்?? நல்லா வந்துரும் சொல்லிட்டேன்... “

“சரி கோபப்படாத... இப்போ நான் என்ன பண்ணனும்..??”

“இறுக்கி அணைச்சி ஒரு உம்மா தரு...”

“ஏது உம்மாவா?? அதெல்லாம் முடியாது...”

“ஏன் முடியாது..”

“நான் ட்ரிங்க் பண்ணியிருக்கேன் அம்லு...”

“அதுக்கு என்ன?? எனக்கு அதுல எந்த ப்ராப்ளமும் இல்லை...”

“ஹேய் வேணாம்மா.. சொன்னா கேளுமா.”

“நீங்க சரிப்படமாட்டீங்க...” என்றவள் அவன் எதிர்பாரா நேரத்தில் அவனது இதழ் கவ்வினான்...

முதலில் மறுத்தவனோ பின்னர் அதில் விரும்பி வீழ்ந்துவிட அதற்கு இடைவெளிவிடமுடியவில்லை.. ஒரு மாதிரி விலகியவர்கள் தம் துணைகளது முகத்தை நேருக்கு நேர் சந்திக்க வெட்கி கீழே சென்று தத்தமது அறைகளில் அடைந்து கொண்டவர்களுக்கு அன்றைய நாளின் பசுமையான நினைவுகளும், காதல் பரிமாறல்களும் அவர்களது தூக்கத்தை விரட்டியடைத்தது...

ஒருவாறு கண்ணயர்ந்தவர்கள் காலை எழுந்து தத்தமது அலுவல்களை கவனிக்க கிளம்பிவிட்டனர்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN