மாயம் 44

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நீ உயிர்க்க
வேண்டுமானால்
நான்
உனக்கு
வேண்டுமென
உணர்த்தியது
உன்
இதழொற்றல்...

மூன்று நாட்களுக்கு பிறகு மாலை ஐந்து மணியளவில் ஹேமாவை பார்க்க வந்திருந்தான் ரித்வி. வந்தவனை வரவேற்ற ஹேமாவின் அன்னை ரஞ்சனி
“வாங்க தம்பி நல்லா இருக்கீங்களா??”

“நான் நல்லா இருக்கேன் ஆண்டி.. நீங்க எப்படி இருக்கீங்க?? அங்கிள் எங்க??”

“நான் நல்லா இருக்கேன் தம்பி. அவரு வெளியில போயிருக்காரு தம்பி. குடிக்க ஏதாவது கொண்டு வரவா தம்பி??”

“வேணாம் ஆண்டி...நான் ஹேமாவை வெளியில கூட்டிட்டு போகலாம்னு தான் வந்தேன்.. அத்தை எங்க ஆண்டி??”

“ராதா பக்கத்துல உள்ள கோயிலுக்கு போயிட்டு வர்றேன்னு இப்போ கொஞ்ச முதல்ல தான் கிளம்புனா...”

“ஆண்டி ஹேமா எங்க??”

“அவ உள்ள படுத்திருக்கா பா.. இரண்டு நாளா ரொம்ப சோர்வா இருக்கா... என்னன்னு தெரியலை.. எதுவும் கேட்டா சொல்லமாட்டேங்கிறா... ஶ்ரீகிட்ட கேட்டாலும் எதுவும்
சொல்லமாட்டேங்குறா.....”

“டைமுக்கு சாப்பிடுறாளா ஆண்டி...??”

“ராதாவுக்கு பயந்து நேரத்துக்கு சாப்பிடுறா...”

“சரி ஆண்டி நான் அவளை பார்த்து கூட்டிட்டு வர்றேன்..”

“தம்பி ஒரு நிமிஷம்..”

“சொல்லுங்க ஆண்டி..”

“ஹேமா மனசு மாறிடுவாளா தம்பி..?? அவகிட்ட மேரேஜ் பத்தி பேசுனீங்களா தம்பி??”

“ஆண்டி அவ இதுவரை என்னை விரும்புறா... அந்த காதல் எங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்கும்னு நம்புறேன்... மேரஜ் பத்தி கேட்டதுக்கு அவ இன்னும் சரியான ஒரு முடிவை சொல்லலை... இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சிக்க தான் அவளை வெளியில கூட்டிட்டு போறேன்...”

“தம்பி அவ நல்ல பதிலா சொல்லுவாளா??”

“சொல்லுவானு நம்புவோம் ஆண்டி...” என்றவன் ஆதரவாய் ஒரு புன்னகையை சிந்திவிட்டு ரித்வி ஹேமாவின் அறைக்கு செல்ல ரஞ்சனியோ தன் மகள் வாழ்வு சீராகவேண்டுமென மனதால் பிரார்த்தித்துக்கொண்டார்...

ஹேமாவும் ரித்வியும் காலேஜ் காலத்திலேயே காதலிக்கத்தொடங்க அதனை தன் கல்லூரி கல்வி முடிந்ததும் தன் பெற்றோருக்கு தெரியப்படுத்தினாள் ஹேமா..
ஹேமாவின் குணமறிந்த அவளது பெற்றோரும் அவளது காதலிற்கு அனுமதியளித்துவிட ரித்வியை தன் பெற்றோரை சந்திக்க அழைத்து வந்தாள் ஹேமா..
ரித்வியை பற்றி ஏற்கனவே ஹேமா மூலம் அறிந்ததில் அவனை இருவருக்கும் பிடித்திருக்க பெண்ணை பெற்றவர்களாய் அவனுடன் உரையாடி மேலும் அவனை பற்றி தெரிந்து கொண்டவர்கள் தங்கள் முழு சம்மதத்தை தெரிவித்தனர்.

ஆனால் விதியின் சதியால் ஏதேதோ நடந்துவிட மீண்டும் தன் மகளை மணமுடிப்பதாய் கூறி ரித்வி கேட்க பெற்றவர்களுக்கு என்னகூறுவதென்று தெரியவில்லை...
மகளின் மறுவாழ்வுக்காக மனம் ஒருபுறம் துள்ளிக்குதித்தாலும் அவளது தற்போதைய நிலை ரித்விக்கு ஏதாவது இன்னலைக்கொடுத்துவிடுமோ என்று பயந்தனர்... அவர்களது பயமுணர்ந்த ரித்வி தன் நம்பிக்கை பேச்சால் அவர்களது பயத்தை தெளிவித்தான்.. ஆனாலும் அவர்கள் முழு மனதாக ஒப்பவில்லை என்றுணர்ந்து தன் அன்னை தந்தையை ஹேமாவின் பெற்றோருடன் உரையாடச்செய்து அவர்கள் மூலம் தன் முடிவின் உறுதியை தெளிவுபடுத்தினான்...
அது ஹேமாவின் அன்னை தந்தையை திருப்திபடுத்திவிட ஹேமாவிடம் தாங்கள் பேசி சம்மதிக்க வைப்பதாக ஹேமாவின் பெற்றோர் கூற ரித்வி அதை மறுத்துவிட்டு அதை தான் பார்த்துக்கொள்வதாக கூறினான்.

ரித்வி ஹேமா அறைக்கு செல்ல அறைக்கதவு திறந்திருக்க மெதுவாக கதவை திறந்துக்கொண்டு சென்றவன் ஹேமாவை தேட அவளோ கட்டிலின் ஒரு ஓரத்தில் தன் கைகால்களை குறுக்கிக்கொண்டு படுத்திருந்தாள்..

அருகில் சென்ற ரித்வி அவள் உடல் குலுங்குவதை கண்டவன் அவளருகே கட்டிலிற்கு கீழு மண்டியிட்டு அமர்ந்தவன்

“ஹேய் மிக்கி... என்னாச்சு?? எதுக்கு இப்படி அழுற??” என்று தலையை தடவியபடி கேட்ட அவளது அழுகை அதிகமாகியது...
அதில் பதறியவன் “ஏன்மா அழுற?? உடம்புக்கு ஏதும் பண்ணுதா??வா ஆஸ்பிடல் போகலாம்” என்று அவளை அழைக்க அவளோ அழுகையை விட்டபாடில்லை..

“மிக்கி அழாத மிக்கி.. என்னான்னு சொல்லு.. எதுக்கு இப்படி அழுற?? உடம்புக்கு ஏதும் பண்ணுதா?? நான் ஆண்டியை கூப்பிடவா??” என்று கேட்க

“ஏன் ராஜ் உனக்கும் நான் வேணாமா??” என்று கேட்க அவளை புரியாத பார்வை பார்த்த ரித்வி

“என்ன மிக்கி சொல்லுற??”

“கடைசியில உனக்கும் நான் வேண்டாதவளா போய்ட்டேன்ல.. நான் எல்லாருக்கும் பாரமா தானே இருக்கேன்...”

“மிக்கி..நீ பேசுறது சத்தியமா எனக்கு புரியலை..” என்று ரித்வி கூற

“நேத்து ஶ்ரீகிட்ட பேசும் போது என்ன சொன்னீங்க... வேற பொண்ணு பாரு... ஹேமாவை நம்புனா கடைசிவரைக்கும் பிரம்மச்சாரியா தான் இருக்கனும்... எனக்காக இல்லைனாலும் அம்மா அப்பாவுகாக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்... அவ அவ குடும்பத்தோட ஆஸ்ரேலியா போயிருவா... ஆனா நான் தேவதாஸா சுத்தனுமா?? அதெல்லாம் சரிப்படாது... நீயே ஒரு பொண்ணு பாரு ஶ்ரீனு நீங்க போனுல சொன்னதை நான் கேட்டேன்..” என்று ஹேமா சொன்னதும் இது என்னடா புதுசா என்ற ரீதியில் முழுதாய் குழம்பிநின்றான் ரித்வி...

“அப்போ உங்களுக்கும் நான் வேண்டாம்னு தானே அர்த்தம்... அப்போ நீங்க என்னை நேசிக்கிறேன்னு சொன்னதெல்லாம் பொய்யா?? உங்ககூட வாழ ஆசையிருந்தபோதும் என்னால உங்களுக்கு தலை குனிவுனு தானே நம்ம கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு சொன்னேன்... ஆனா நீங்க ..... அப்போ... அப்போ..... உங்களுக்கு என்மேல...” என்று ஹேமா தன் மனதில் இருப்பதை உரைத்ததும் ரித்வி சிரிக்கத்தொடங்கிவிட்டான்..
அதுவரை நேரம் வலியோடு பேசியவள் அவன் சிரிக்கத்தொடங்கியதும் அந்த வதனம் கோபத்தை பூசிக்கொள்ள அவனை முறைக்கத்தொடங்கினாள் ஹேமா...

“ஐயோ மிக்கி... நீ என்கிட்ட உன்னோட விருப்பத்தை வெளிப்படுத்தனும் அப்படீங்கிறதுக்காக ஶ்ரீ போட்ட நாடகம் இது.. இன்னும் தெளிவா சொல்லனும்னா நான் அவகிட்ட பேசியே ஒருவாரம் ஆச்சு...” என்று ரித்வி சொல்ல அவனை சந்தேகத்தோடு பார்த்தாள் ஹேமா...

“என்ன மிக்கி இன்னும் நம்பலையா?? சரி இரு ஶ்ரீகிட்டயே விசாரிச்சிருவோம்...”என்றவன் அவனது மொபைலை எடுத்து ஶ்ரீயிற்கு அழைத்துவிட்டு போனை ஸ்பீக்கரில் இட்டான்....

இரண்டு ரிங்கில் அழைப்பு எடுக்கப்பட
“சொல்லுங்க அத்தான்...”

“பிசியா இருக்கியா ஶ்ரீ...??”

“இல்லை சொல்லுங்க அத்தான்...”

“ஶ்ரீ ஹேமாகிட்ட நீ என்ன சொன்ன???”

“ஓ மேடம் ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களா??”

“ஏதேதோ சொல்றா...நீ என்ன சொன்ன அவகிட்ட??”

“நான் சொல்லலை அத்தான்... நீங்க தான் சொன்னீங்க..” என்று ஶ்ரீ கூறியதும் ஹேமாவின் முகத்தை ரித்வி பார்க்க அவள் சிறுபிள்ளைபோல் அழுவதற்கு தயாராய் உதடுபிதுக்க

“ஹேய் நான் உன்கூட பேசியே ஒரு வாரமாச்சு... நான் சொன்னேன்னு எதுக்கு என்னை கோர்த்துவிடுற...??”

“அத்தான் நீங்க பேசுனீங்கனு சொன்னேனே தவிர நீங்க தான் பேசுனீங்களனு சொல்லலையே.....”

“ஶ்ரீ உன்னை கெஞ்சி கேட்கிறேன்... தயவு செய்து குழப்பாமல் என்னன்னு தெளிவா சொல்லு... இங்க என்னோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு...”

“சொல்றேன்...உங்க லைவ்வரை வழிக்கு கொண்டுவர ஒரு சின்ன ரோல் பிளே பண்ணோம்...”

“பண்ணோம்மா?? யாரு யாரு??”

“வேறயாரு நானும் ரவியும் தான்... அவனுக்கு ஏதோ மெமிக்ரி வரும் அதை வைத்து கொஞ்சம் படம் ஓட்டலாம்னு பார்த்தேன்... அந்த அதிமேதாவியை உங்களை மாதிரி பேச சொன்னா உங்க வாயிசில அவனோட கஷ்டத்தை உளறிட்டான்... ஐயோ சிக்குனோம்னு நினைச்சேன்.... ஆனா உங்க ஹேமா கன்பியூஷன்ல இருந்ததால அதை கவனிக்கலை.... அவன் அடிச்சிவிட்ட பிட்டுக்கு கூட நல்ல ரெஸ்பான்ஸ் இருந்திருக்கு போலயிருக்கு...” என்றவள் அழைப்பிலிருந்தபடியே

“டேய் ரவி உன்னோட ஓவர் ஆக்டிங்குக்கு நல்லா ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்காம்..” என்றவள் மீண்டும் அழைப்பிற்கு வந்தவள்

“இது தான் அத்தான் நடந்துச்சு... இப்போ சொல்லுங்க.. பப்ளி என்ன சொன்னா???” என்று ஶ்ரீ கேட்டதும் அவன் கையிலிருந்த மொபைலை பிடிங்கிய ஹேமா

“வீட்டுக்கு வா.. உனக்கு வடை பாயாசத்தோட விருந்தே போடுறேனு சொன்னா....”

“பப்ளி..”

“என்னம்மா நடிச்ச?? யப்பா சாமி முடியலை..”

“உன்னை நம்ப வைக்கனுமில்லையா.. அதான்..”

“நீ வாடி வீட்டுக்கு.. உன்னை தனியா கவனிக்கிறேன்..”

“ஹிஹிஹி... சும்மா உல்லலாய்க்கு பப்ளி.... நீ ரொம்ப பிடிவாதமா இருந்ததால தான் உன்னை வழிக்கு கொண்டுவர அப்படி ஒரு பிளான் பண்ணேன்.... நீயும் அதே மாதிரி வழிக்கு வந்துட்ட..”

“நான் எப்படி வழிக்கு வந்தேன்..”

“மேடம் அத்தான்கிட்ட கோபப்படடு புலம்புனதால தானே அத்தான் எனக்கு கால் பண்ணாரு... இதுலயிருந்தே புரியலை..”

“ம்ம்ம்.. இந்தா நீ ராஜ் கூட பேசு..” என்ற ஹேமா எழுந்து சென்று குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
ஶ்ரீயுடன் சற்று நேரம் உரையாடிவிட்டு அழைப்பை துண்டித்தவன் ஹேமாவிற்காக காத்திருக்க குளியலறையிலிருந்து புடவையில் வெளியே வந்தவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான் ரித்வி...

இளஞ்சிவப்பு நிற மெல்லிய காட்டன் சாரியில் வந்து நின்றவளில் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.. இவ்வளவு நேரம் அழுததற்கான ஒரு சிறு தடயம் கூட அந்த வதனத்தில் இல்லை.. அவளருகே சென்றவன் அவளது முகத்தினை கைகளிலேந்தி

“உன்னோட இந்த சந்தோஷமான முகத்தை பார்க்க தானே நான் இவ்வளவு பாடுபட்டேன்... எங்க என்னோட பழைய மிக்கி எனக்கு கிடைக்காம போயிருவாளோனோ எவ்வளவு பயந்தேன் தெரியுமா?? இன்னைக்கு தான் அது நடந்திருக்கு.... எனக்கு இது போதும்... உன்னோட இந்த சந்தோஷம் எந்த நொடியும் குறையாம நான் கவனமா பார்த்துப்பேன்..” என்றவன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்... அவனது அணைப்பின் இறுக்கத்திலேயே அவனது கவலை கரைவதை உணரந்தாள் ஹேமா.. அந்த அணைப்பில் காதல் காமமில்லாத ஒரு தாய்மையுணர்வு தேங்கிநின்றது...
எந்த நாள் வராமல் போய்விடும் என்று பயந்தானோ அந்தநாள் இந்நாளாகிவிட அவனுக்கு தலைகால் புரியவில்லை...

“மிக்கி... ஐயம் சோ ஹேப்பி.. இந்த சநதோஷத்தை நாம கொண்டாடியே ஆகனும்... வா வெளியில போகலாம்...”

“ராஜ் நான் இதுவரைக்கும் உங்களுக்கு எந்த பதிலுமே சொல்லலையே??” என்று குறும்புடன் கேட்க

“அப்படியா?? சரி நான் ஶ்ரீயிற்கு கால் பண்ணி வேற பொண்ணு பார்க்க சொல்லுறேன்...” என்று அவனது அலைபேசியை கையிலெடுக்க அதை வெடுக்கென பிடிங்கியவள்

“டேய் புருஷா உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா பொண்டாட்டி நான் இருக்கும் போதே இன்னொரு பொண்ணு பார்க்க சொல்லுவ... உன்னை..” என்று அவனை அடிக்கத்தொடங்க அவனோ சிறிது நேரம் போக்கு காட்டியவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவளை இழுத்து தன் மார்பில் தஞ்சமடையச்செய்தவன்

“நான் இரண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்த கல்யாணத்துலயும் கல்யாணப்பொண்ணா என்னோட பொண்டாட்டி தான் இருப்பா..” என்றவன் அவள் முன்னெற்றியில் முட்டிவிட்டு

“இப்போ நான் எவ்வளவு ஹாப்பியா இருக்கேன் தெரியுமா...?? அதை வார்த்தைகளால சொல்லமுடியாது...”

“அப்படியா?? அப்போ செயல்ல காட்டுங்க... “

“அப்படீங்கிற?? அப்போ செயல்ல காட்டுனா போச்சு...”என்றவன் அவள் இதழ்களை புசிக்கத்தொடங்கினான்...

சற்று நேரத்தில் அவளை விடுவித்தவன் செம்மையை பூசிக்கொண்டிருந்த அவளது வதனத்தை ரசித்தபடியே ரஞ்சனியிடம் சொல்லிக்கொண்டு ஹேமாவை வெளியே அழைத்து சென்றான்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN