மாயம் 45

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தவமிருந்து
எனக்கு வரமாய்
வந்தவளை
நான்
தட்சணையாய்
பெறும் நாள்
இன்று....

அன்று அதிகாலை ஶ்ரீயின் வீட்டில் பெண்கள் அனைவரும் ஒருபுறம் தயாராகிக்கொண்டிருக்க ஆண்கள் அனைவரும் தத்தமது அறைகளில் தயாராகிக்கொண்டிருந்தனர்.

அன்று காலை ஐந்தரை மணியை ரிஷி- ஶ்ரீயின் திருமண முகூர்த்தமாக பெரியவர்கள் குறித்திருந்தனர். திருமணத்தை ரிஷி வீட்டாரின் வழக்கப்படி காட்டுப்பகுதியில் வீற்றிருக்கு அவர்களது குலதெய்வமான வடுவச்சம்மன் சன்னிதானத்தில் நடாத்த முடிவு செய்திருந்தனர். பிரம்ம முகூர்த்த நேரத்தில் அம்மன் சன்னிதானத்தில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு எந்த துன்பமும் அண்டாது என்றும் சகல செல்வமும் பெற்று சிறப்புடன் வாழ்வர் என்றும் அவர்களது குலநம்பிக்கை...

ரிஷி-ஶ்ரீயின் திருமணத்திற்கே அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர். ஶ்ரீயின் அறையில் ஶ்ரீ,அனு,ப்ரீதா,சஞ்சு, ஹேமா என்று அனைவரும் தயாராகிக்கொண்டிருக்க ராதாவின் அறையில் சிவரஞ்சனி,ராதா, ப்ரீதாவின் அன்னை ரமா என்று அம்மாமார் கூட்டம் தயாராகிக்கொண்டிருக்க ராஜேஷ்குமாரின் அறையில் ரவி,சுந்தர்,ஹேமாவின் தந்தை ராஜரட்ணம், ஹரி, ப்ரீதாவின் தந்தை நடராஜன் என்று ஆண்கள் பட்டாளம் தயாராகிக்கொண்டிருந்தது..
இங்கு ஶ்ரீயின் அறையில் ஹேமா ஒரு புறம் அமர்ந்திருக்க ஶ்ரீயை அலங்கரித்துக்கொண்டிருந்தனர் ப்ரீதாவும், அனுவும். கைகளோ அலங்கரிக்கும் வேலையை ஒருபுறம் செய்ய அவர்களனைவரும் ஶ்ரீயை கிண்டலடித்துக்கொண்டிருந்தனர்.

“ப்ரீதா அக்கா... என்ன என்னோட உடன்பிறப்பு ரொம்ப அமைதியா இருக்கு??? மேரேஜினு சொன்னதும் வெட்கம் வந்து வாய்பூட்டு போட்டுக்கொண்டதோ??” என்று அனு தொடங்க அவளுடன் இணைந்து கொண்டாள் சஞ்சு

“அதெல்லாம் சாத்தியமே இல்லை... உங்க அக்காவுக்கு சுட்டுபோட்டாலும் வெட்கப்பட வராது.. எனக்கு என்ன தோனுதுனா அவ கண்ணை திறந்துக்கிட்டே தூங்குறாளோனு தோனுது...” என்று சஞ்சு கூற

“உனக்கு சந்தேகமே வேணாம் சஞ்சு...நான் அடிச்சி சொல்லுறேன்.. அவ தூங்கிட்டா..” என்று ஹேமாவும் இணைந்து கொள்ள சஞ்சு,அனு, ப்ரீதா அனைவரும் ஒரேடியா ஶ்ரீயின் முகத்தினருகே குனிந்து பார்க்க அவளோ கண்மூடியபடி யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். அவள் தனியே பேசிக்கொண்டிருந்ததை பார்த்த மூவரும் சற்று பயந்துவிட அனு

“அக்கா என்ன நடக்குது இங்க?? என்னோட உடன்பிறப்பு யாருகூட பேசிட்டு இருக்கு... அதுவும் தனியா??? நமக்கு தெரியாம இங்க ஏதும் ஆவிகீவி சுத்துதா??? அதுகூட தான் இவ இப்படி கொஞ்சி கொஞ்சி பேசிட்டு இருக்காளோ..?? ஐயோ அக்கா பயமா இருக்கு... எங்க மாமா பாவம் அக்கா.. எப்படியாவது அவரை காப்பாத்துங்க....” என்று புலம்ப ஹேமாவும் தன்னிடத்திலிருந்து எழுந்து வந்து ஶ்ரீயை எட்டிப்பார்க்க அவளது செயலுக்கான அர்த்தம் புரிந்தது..
அதை கண்டு சிரித்தவள் “அனு உங்க அக்கா காது இரண்டையும் கொஞ்சம் பாரு” என்று கூற ப்ரீதா ஶ்ரீயின் காதை மறைத்திருந்த கூந்தலை விலக்கி பார்க்க மூவருக்கும் சப்பென்றானது...

ஶ்ரீ தன்னிரு செவிகளிலும் வயர்லஸ் ஹான்ட்ப்ரீ அணிந்திருந்தவள் அதன் வழியே ரிஷியோடு உரையாடிக்கொண்டிருந்தாள்..அதை பார்த்த மூவரும் தலையில் அடித்துக்கொள்ள சஞ்சுவோ

“இவளுக்கு முத்திப்போச்சு... இன்னும் கொஞ்சநேரத்துல கல்யாணத்தை வச்சிக்கிட்டு ரொமன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கு... அடியேய் ஶ்ரீ... இன்னைக்காவது லீவு விடு... இவ லூட்டி தாங்கலடா...”

“சஞ்சு, அனு அவ காதுல இருக்கதை வெளியில எடுங்கடி..” என்றதும் சஞ்சு ஒருபுறமும் அனு மறுபுற செவியிலிருந்த வயர்லஸ் ஹான்ட்ப்ரீயை வெளியே எடுக்க கண்களை திறந்த ஶ்ரீ சுற்றியுள்ளவர்களை பார்த்தவள்

“ஏய் சஞ்சு, அனு எதுக்குடி அதை எடுத்தீங்க?? குடுங்க இங்க..” என்று அவர்களது கையிலிருந்து பிடிங்க முயற்சித்தவளிடம்

“இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணத்தை வச்சிக்கிட்டு லவ் பண்ணிட்டு இருக்கியா??” என்று சஞ்சு கேட்க

“இல்லையே சும்மா பேசிட்டு இருக்கேன்.. என்னை மட்டும் தான் தூங்கவிடமா எழுப்பிவிட்டுட்டாங்களா இல்லையா அத்தானையும் அப்படி தான் பண்ணாங்களானு விசாரிச்சிட்டு இருந்தேன்..”

“இந்த நேரத்துல இப்படி ஒரு ஆராய்ச்சி ரொம்ப அவசியம் தான்...” என்று ப்ரீதா சலித்துக்கொள்ள

“இல்லையா பின்ன?? கல்யாணம் இரண்டுபேருக்கும் தான்... நான் மட்டும் ஏர்லியா எழும்புறதுல என்ன நியாயம்... அதான் நான் எழும்புனதுமே அத்தானுக்கு கால் பண்ணேன்.... அவரு ரொம்ப அறிவுபூர்வமா யோசிச்சு போனை சைலண்டுல போட்டுட்டு தூங்கிட்டு இருந்தாரு... ஆனா நாங்க விடுவோமா....?? ரித்வி அத்தானுக்கு கால் பண்ணி அத்தானை பேசச் சொன்னேன்...அவரும் அத்தானை எழுப்பி போனை கையில குடுத்திட்டாரு...”

“அடிப்பாவி.. அந்த மனுஷன் கடைசியா இந்த ஒரு நாள் நிம்மதியா தூங்கனும்னு ஆசைப்பட்டு போனை சைலண்டுல போட்டுட்டு தூங்கியிருப்பாரு... அது பொறுக்கலையா உனக்கு?? பாவம் அந்த மனுஷன்.... உன்னை கட்டிக்கிட்டு இன்னும் என்னென்ன அனுபவிக்கபோறாரோ தெரியலை....” என்று ப்ரீதா வருந்த சஞ்சுவும் அனுவும் அதற்கு ஆமாம் போட ஹேமாவோ இவையனைத்தையும் பார்த்து சிரித்தபடியிருந்தாள்...

அப்போது அறைக்கு வந்த ராதா
“அனு அக்கா ரெடியாகிட்டாளா??” என்றபடி அருகில் வந்தவர்

“என்னடி இன்னும் சேலை மாற்றாமல் இருக்க.. நேரமாச்சு சீக்கிரம் ரெடியாகு...” என்றவர் ஹேமா அருகில் வந்து “ஹேமா நீயும் புடவை மாத்திக்கோ... உனக்கு பட்டுப்புடவையும் ஜூவல்சும் ஶ்ரீயோட வாட்ரோப்ல வைத்திருக்கேன்...” என்றவர் சமையலறைக்கு சென்று ஹேமாவிற்கு சுடச்சுட வெஜிடபள் சூப் எடுத்துவந்தார்.
அதை குடித்துமுடித்தவள் உடைமாற்றிக்கொண்டு தயாராகினாள்...

ஶ்ரீ தயாராகி முடிந்ததும் ஹேமாவை ட்ரெசிங் டேபளின் முன் அமரச் செய்த ஶ்ரீ அவளுக்கும் ஒப்பனை செய்யத்தொடங்க
“ஹேய் ஶ்ரீ.. கல்யாணம் உனக்கு... எதுக்குடி எனக்கு அலங்காரம்..??”

“நீ தான் பொண்ணு தோழி.. அதான் உனக்கு அலங்காரம்..”

“ஹேய் போதும்டி... இருக்க பவுடரை எல்லாம் முகத்துக்கு அடிச்சிராத... பார்க்கிறவங்க பயந்துட போறாங்க...”

“இந்த இருட்டுல யாருக்குடி கண்ணு தெரியபோகுது... விடியிறதுக்குள்ள முகத்துல உள்ள பவுடர் எல்லாம் காணாமல் போயிரும்..”

“நல்லா போயிரும் போ...” என்று சலித்துக்கொண்ட ஹேமாவிற்கு அலங்காரத்தை முடித்த பின்பு தான் அவ்விடத்தைவிட்டு அசையவிட்டாள் ஶ்ரீ.
மறுபடியும் அறைக்கு வந்த ராதா, ரமா, மற்றும் ரஞ்சனி தம் பிள்ளைகளை பார்த்ததும் வாயடைத்துநின்றனர்.
ஶ்ரீயும் ஹேமாவும் தத்தமது உடைகளில் தேவதைகளாய் ஜொலித்தனர்...

ஶ்ரீ தங்கநிற ஜரிகையுடைய மென்சிவப்பு மற்றும் குருத்துபச்சை கலந்த நிறத்தினுடைய சற்று பாரமான பட்டுடுத்தி அழகுப்பதுமையாயிருந்தாள்.முந்தானை ஒன்பது சிறிய கொசுவங்களாய் மடிக்கப்பட்டு ஊசியின் உதவியோடு தோள்பட்டையில் இணைக்கப்பட்டிருக்க முந்தானையோ நிலத்திற்கு சற்று மேலே ஊசலாடிக்கொண்டிருந்தது. அந்த பச்சைநிற ரவிக்கையானது முத்துக்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்க கைப்பகுதி கைமூட்டு வரை நீண்டுக்கொண்டிருந்தது... சேலை மட்டுமே இத்தனை ரம்மியமாயிருக்க அதனை மெருகூட்டுவதற்காக ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டிருந்தது... நெற்றியில் சேலையின் நிறத்துக்கேற்றாற் போல் சற்று பெரிய நெற்றிச்சுட்டியும், கழுத்தில் பச்சை மற்றும் பொன்னிற கற்களால் ஆன மாம்பழ வடிவ நீண்ட ஆரமும், பொன்னிறத்தாலான கழுத்தை முழுதாய் அரணிடும் வகையில் ஒரு அட்டியலும் அணிந்திருந்தாள். காதில் பொன்னிறத்தாலான ஜிமிக்கிகள் ஊஞ்சலாடிக்கொண்டிருக்க கைகளிலும் பச்சையும் மென்சிவப்பு கலந்தவாறு வளையல் அடுக்கப்பட்டிருந்தது... கைகளிரண்டிலும் கையின் மூட்டுவரை மருதாணி கோலம் இடம்பெற்றிருந்தது.. அதோடு இடக்கையில் ரிஷி அணிவித்திருந்த நிச்சயதார்த்த மோதிரமும் வலக்கையில் ரிஷி அணிவித்த மற்றைய மோதிரமும் அணிந்திருந்தாள். இடுப்பை இறுகப்பிடித்திருந்தது ஒட்டியாணம் முதல் காலை அரணிட்டிருந்த வெள்ளிக்கொலுசு, அந்த சற்று மட்டமாயிருந்த நாசியில் ஒய்யாரமாய் வீற்றிருந்த ஒற்றைக்கல் மூக்குத்தி வரை அனைத்தும் அவள் அழகை மெருகூட்டிக்கொண்டிருந்தது.. கூந்தல் உயர்த்தி முடியப்பட்டு மல்லிக்கைப்பூ மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.. அதோடு கண்களில் வரையப்பட்டிருந்த கண்மையும், உதடுகளை சிவக்கச்செய்திருந்த உதட்டுப்பூச்சும் அவளது அழகை முழுதாய் எடுத்துக்காட்டியது...

தன் மகளருகே வந்து ராதா சற்று கண் கலங்கியபடி
“என் கண்ணே பட்டுரும் போல இருக்கு.. அவ்வளவு அழகா இருக்க தான்யா...இன்னைக்கு மாதிரி என்னைக்கும் நீ சந்தோஷமா இருக்கனும்... யார் கண்ணும் பட்டுடக்கூடாது...” என்றவறாரு திருஷ்டிமுறித்தவரை பார்த்திருந்த ஶ்ரீ அவரை இறுக அணைத்து

“சாரிமா...இவ்வளவு நாள் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்... இனிமே நீங்க என்னோட தொந்தரவு இல்லாமல் நிம்மதியா இருங்க... “என்று கூறி அழுகையில் குலுங்கியவளை அணைத்துக்கொண்டு ராதாவும் கண்கலங்க அதை சுற்றி நின்று பார்த்திருந்தவர்களுக்கும் கண் கலங்கியது.

தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்த ஶ்ரீயை தன்னிடமிருந்து பிரித்த ராதா
“இங்க பாரு தான்யா... இந்த வீட்டோட மொத்த சந்தோஷமே நீ தான்... உன்னோட லூட்டியும் சலசலப்பும் தான் இந்த குடும்பத்தை உயிர்ப்பா வச்சிருந்தது.... நீ சேட்டை பண்ணும் போதுகூட எனக்கு உன்மேல கோபம் வராது... ஆனா சும்மா கோபப்படுற மாதிரி நடிப்பேன்... என்னோட பொண்ணு என்னைக்குமே என்னை கஷ்டப்படுத்தியதில்லை... நீ இல்லாம நாங்க எப்படி இந்த வீட்டுல இருக்கப்போறோம்னு தெரியலை...நீ எப்படி உன்னோட பிறந்த வீட்டோட சந்தோஷத்துக்கு அடிக்கல்லா இருந்தியோ அதே மாதிரி உன்னோட புகுந்த வீட்டிலயும் அதே சந்தோஷத்தை கொண்டு வரனும்... உன்னோட புகுந்தவீட்டாளுங்க உன்னை அவங்கவீட்டு பொண்ணா பார்த்துப்பாங்க அப்படீங்கிறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை... அதே மாதிரி நீயும் மாப்பிள்ளையோட குடும்பத்தை சந்தோஷமா வைச்சிக்கனும்.... புரியிதா??” என்று தலையை தடவியபடி ராதா கேட்க கண்களை துடைத்தபடி தலையாட்டினாள் ஶ்ரீ.

ஶ்ரீயை சுவாமியறைக்கு வரச்சொன்ன ராதா மற்ற அனைவரையும் சுவாமியறைக்கு அழைத்து வந்தார். சுவாமிப்படத்திற்கு தூபம் காட்டியதும் பெரியவர்கள் அனைவரும் முதலில் ஶ்ரீயிற்கு விபூதியிட பின் சிறியவர்களுக்கு விபூதி பூசி ஆசிர்வாதித்தனர். அதிகாலை மூன்றரை மணிக்கு அனைவரும் புக் செய்திருந்த மினி பஸ்ஸில் கோவிலுக்கு கிளம்பினர். ரிஷியின் வீட்டிலும் அனைவரும் கிளம்பியிருந்தனர்.

ஒன்றரை மணநேர பயணத்தின் பின் ஶ்ரீயின் குடும்பத்தார் கோவிலை வந்தடைய அவர்களை பின்தொடர்ந்து ரிஷியின் குடும்பத்தாரும் கோவிலை வந்தடைந்திருந்தனர். கோவில் பூசாரி அனைத்தையும் ஒழுங்குபடுத்தியிருக்க தாம் கொண்டுவந்திருந்த பொருட்களை இருவீட்டாரும் ஒழுங்கு படுத்தத்தொடங்கினர்...

ஶ்ரீயோ தன் அத்தானை இமைக்க மறந்து சைட் அடித்துக்கொண்டிருந்தாள். பட்டு வேஷ்டி சட்டையில் படு அசத்தலாயிருந்தவன் வலக்கையின் மோதிரவிரலில் நிச்சயமோதிரமும் வலக்கை மணிக்கட்டில் தங்கத்தாலன இதயவடிவங்களால் கோர்க்கப்பட்ட கைச்சங்கிலியுடனும் இடக்கையின் மணிக்கட்டில் ரோலெக்ஸ் வாட்சுடனும் பாலிவிட் பட ஹீரோ மாதிரி நின்றிருந்தவன் அடிக்கடி தன் கேசம் கோதிவிட......

(ஐயோ சத்தியமா முடியலைங்க😍😍😍 பயபுள்ள அப்படியொரு அழகா இருந்தான்🙈🙈🙈 அவன் நிற்கிற ஸ்டைலும் அந்த புல் ஸ்லீவ் பட்டு சட்டையும் அவனுக்கு பாந்தமா பொருந்திவிட ஒரு நிமிஷம் இவனுக்குனே இந்த வேஷ்டி சட்டையை கண்டுபிடிச்சாங்களோனு தோனுது😂😂 ரிஷி கூலிங்கிளாஸ் மட்டும் போட்டான்னு வைங்க அவ்வளவு தான் நம்ம ஶ்ரீ அவனை இழுத்துட்டு ஓடிருவா😂😂😂 பயபுள்ள அவ்வளவு அழகா இருக்கான்.. )

அவனது ஆண்மையின் கர்வமும் நான் ஆணழகன் என்ற தோரணையும் வெளிப்பட்டு எதிரிலிருப்பவரை கிறங்கடித்துவிடும்...
அதோடு அவன் ஶ்ரீயை ஓரக்கண்ணால் சைட் அடிக்கும் போது அவனது கண்கள் சிந்தும் மோகனப்பார்வையும் இதழோரத்தில் தேங்கிநிற்கும் மயக்கும் புன்னகையில் மயங்காதவர் எவரும் இருக்கமுடியாது... ட்ரிம் செய்யப்பட்டிருந்த தாடி அவனை இன்னும் பேரழகனை காட்டிட இமைக்க மறந்து பார்த்திருந்தவள் சுற்றுப்புறம் மறந்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN