மாயம் 47

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஹாய் நட்பூகளே....

ரிஷி ஶ்ரீயை இம்ப்ரெஸ் பண்ணுற மாதிரி ஒரு கவிதை கேட்டிருந்தேன்... அதுக்கு Mohamad Mushfiq sahana சகோ அனுப்பியிருந்த கவிதையை தான் ரிஷியோட கவிதையாக எழுதியிருக்கேன்....
ரொம்ப நன்றி சகோ....😘😘😘
இந்த எபியையும் படிச்சிபார்த்துட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்கள் மக்களே....


உனக்கான
உனக்கானவனாய்
உன் இதயம்தனில்
வசிக்க
தவமிருக்கான்
உன் மனம்தனை
களவாடியவன்...

ரித்வி மற்றும் ஹேமாவின் கார் முன்னே செல்ல ரிஷி தன் காரினை ஸ்டார் செய்யாது இருக்க அவனருகே அமர்ந்திருந்த ஶ்ரீ அவனை என்னவென்று பார்க்க அவனோ அவளை பார்த்து ரசித்தபடியிருந்தான்.... அவனது பார்வையிலிருந்த ரசனையை பார்த்தவளுக்கு வெட்கம் வந்து சூழ்ந்துகொள்ள அதை மறைக்க வேறுபுறம் திரும்பியவள்

“என்ன அத்தான் புதுசா பார்க்கிற மாதிரி இப்படி பார்க்கிறீங்க??”

“எப்படி பார்க்கிறேன் அம்லு???” என்று குரலில் கேலியுடன் கேட்டவனிடம் வாயாட ஶ்ரீயிற்கு நா எழவில்லை. புதுப்பெண்ணிற்கு உரிய வெட்கம் வந்து அவளை சிறையெடுத்திட அவளால் பதில் கூற முடியவில்லை...

அவளது அமைதியை விரும்பாது ரிஷி
“என்ன அம்லு.... பதிலையே காணோம்??? ம்ம்ம்...”

“அத்தான்...” என்று சற்று வெட்கத்துடன் கூறியவளை

“பார்டா என் பொண்டாட்டி வெட்கமெல்லாம் படுறா...” என்று மேலும் ரிஷி சீண்ட அமர்ந்த நிலையிலேயே நாணிகோணி நின்றாள் ஶ்ரீ...

அதை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்துவிட
“ஓகே ஓகே... அம்லு.... ஹாப்பி தேர்ட் வெட்டிங் டே அம்லு....” என்று வாழ்த்து கூறியவனை விழி விழித்து பார்த்திருந்தாள் ஶ்ரீ..

“என்னது தேர்ட்டா???”

“ஆமா... என்கேஜ்மண்ட் அன்னைக்கு ரெஜிஸ்ரேஷன் நடந்தது... அப்போ நீயும் நானும் லீகலி ஹஸ்பண்ட் என்ட் வைப்...சோ அது பஸ்ட் வெடிங் டே... செகெண்ட் நாம திருட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டது... அது செகண்ட் வெடிங் டே...இன்னைக்கு கோயில்ல மேரேஜ் பண்ணிக்கிட்டது. இது தேர்ட்... சரிதானே...”

“அட ஆமா... நான் நம்ம என்கேஜ்மண்ட் அப்போ நடந்த ரெஜிஸ்டேஷனை மறந்துட்டேன் அத்தான்..... வாவ் அப்போ நமக்கு மூன்று வெடிங் டே ஆ....???சூப்பர்...ஹாப்பி தேர்ட் வெடிங் டே அத்தான்....”

“விஷ் யூ த சேம் அம்லு.... உனக்கு ஒரு சின்ன கிப்ட் வைத்திருக்கேன் அம்லு...”

“கிப்டா...”

“ஆமா... கொஞ்சம் வெயிட் பண்ணு என்றவன் காரிலிருந்து இறங்கிச்சென்று டிக்கியினை திறந்து எதையோ எடுத்தவன் டிக்கியை மூடிவிட்டு காரினுள் ஏறினான்...
அவன் கையிலிருந்து பொருட்களை பார்த்த ஶ்ரீ

“என்ன அத்தான் பிஸாக்கெல்லாம் எடுத்துட்டு வர்றீங்க??”

“உனக்கு அது மட்டும் தான் கண்ணுல தெரியிதா???” என்றவன் அவள் கையில் ஒரு பரிசுப்பொதியை கொடுத்து திறந்து பார்க்கச்சொன்னான்...
அதை ஆர்வத்தோடு பிரித்து பார்த்தவளது இதழ்களில் புன்னகை ஒட்டிக்கொண்டது...

அதில் ஒரு போட்டோ பிரேம் இருந்தது... அந்த பிரேமில் அவளும் ரிஷியும் ரிஷியினது பிறந்தநாளன்று ஶ்ரீயும் ரிஷியும் ஒருவரை மற்றொருவர் அணைத்தபடியெடுத்த ஒரு புகைப்படமிருக்க அதன் ஓரத்தில் ஓர் அழகிய கவிதையொன்றுடன் ரிஷியின் கையொப்பமிருந்தது.. அந்த கவிதையை ஶ்ரீ வாசிக்கத்தொடங்கவும் ரிஷி அதனை அழகாய் தன் காதல் மனைவியிடம் எடுத்துரைத்தான்...

கண்மனி....
நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்னடி ....
கண்மனீ.....
என் காதல் தீவில் வாழுகின்ற தேவதை... நீயடி...
தமிழ் இனிக்குதடி... உன் பெயர் மொழிகையிலே...
கணங்களும் ரணங்களடி
நின் முகம் சுழித்து விட்டால்
கரம் பிடி கண்மனியே...
காலம் முழுவதும் கைகோர்ப்போம்..
என் சுவாசக் காற்றினிலும் உன் நினைவுகள் கலக்குகிறாய்...
மாயவிப் பெண்ணா.. நீ...!
காதலின் அகராதியே...
என் தவிப்புகளின் அர்த்தம் தான்
காதலா...?
நம் பெயர்
ஒன்றாகும் நாள் எதடி...
உன் சம்மதம் கேட்டிடவே மனம்
யாசகம் செய்யுதடி....
என் காதல் கண்மனியே....!

என்று அக்கவிதை முடிவுபெற்றிருக்க அதன் வரிகளை ரிஷி தன் குரலால் அழகாய் உரைத்தவனின் காதலில் கட்டுண்டு நின்றாள் ஶ்ரீ....
ஒற்றை கவிதையில் தன் மொத்தக்காதலையும் உரைத்தவனின் கண்களில் தெரிந்த காதலின் மோகம் அவளுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.....

ரிஷியோ
“அம்லு உனக்கு இந்த கிப்ட் பிடிச்சிருக்கா???”

“ஹூம்... எனக்கு எல்லாத்தையும் விட இந்த அத்தானை தான் ரொம்ப பிடிச்சிருக்கு..... அவரோட கண்ணுல உள்ள காதல் மட்டுமே இந்த ஆயுள் முழுதுக்கும் போதும்னு மனசு சொல்லுது... எனக்காக.... எனக்காக மட்டுமே எல்லாத்தையும் செய்யிற அவரோட அன்பு மட்டும் போதும்னு மனசு சொல்லுது..... நாம கொஞ்ச நாள் தான் காதலிச்சிருக்கோம்... ஆனா இந்த நொடி ஏதோ பல நூற்றாண்டுகளா வாழ்ந்த மாதிரி ஒரு சந்தோஷம்.... எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் நீங்க என்ன விரும்புனீங்க....இந்த காதல் மட்டும் போதும்னு தோணுது... ஐ லவ் யூ மோர் தேன் எனிவன் அத்தான்... சத்தியமா எனக்கு எப்படி என்னோட லவ்வை எக்ஸ்ப்ரஸ் பண்ணுறதுனு தெரியலை... உங்களை நினைக்கும் போது ஏதோ ஒரு டப் ஐஸ்கிரீமை சாப்பிட்ட மாதிரி சும்மா குளுகுளுனு இருக்கும்... நீங்த ஹாலோனு சொல்லும் போதா மைசூர்பாகு சாப்பிட்டா எவ்வளவு ஸ்வீட்டா இருக்குமோ அப்படி ஒரு பீல்...நீங்க ஐ லவ்யூனு சொல்லும் போது நெல்லிக்காய் சாப்பிட்டா ஒரு பீல் வருமே அப்படி இருக்கும்...இப்படி...” என்று ஶ்ரீ கூறிக்கொண்டிருக்க ரிஷி தன் சிரிப்பை கட்டுப்படுத்த பெரும்பாடுபட்டுக்கொண்டிருந்தான்...
அவனை முறைத்த ஶ்ரீ “எதுக்கு அத்தான் இப்போ சிரிக்கிறீங்க...??”

“ஏன் அம்லு உனக்கு உதாரணம் சொல்லும் போது கூட சாப்பாடு தான் நியாபகத்துல வருமா??? எப்படி அம்லு உன்னால மட்டும் இதெல்லாம் முடியிது???” என்றவன் மீண்டும் சிரிக்க அவனை தன் கைகளால் மொத்தியவள்

“போங்க அத்தான்... நீங்க ரொம்ப மோசம்...”

“பார்டா என் பொண்டாட்டிக்கு கோபம் வந்திடுச்சி... சரி... சில் அம்லு...” என்றவன் தன் கையிலிருந்த இன்னொரு பொதியை ஶ்ரீயின் கையில் கொடுத்து அதையும் பிரிக்கச்சொன்னான்...

அதனுள் இரண்டு தேநீர் கோப்பைகள் இருந்தன...

“எதுக்கு அத்தான் இந்த மக்கு??”

“டீ குடிக்கத்தான் அம்லு... மக்கை பிடி அம்லு...” என்று ரிஷி கூற இரு கைகளிலும் அந்த தேநீர் கோப்பைகளை ஶ்ரீ வைத்திருக்க ரிஷி பிளாஸ்கினை திறந்து அதிலிருந்த தேநீரை அந்த இரு கோப்பையிலும் ஊற்றினார்.. தேநீர் நிறைந்ததும் அந்த இரு கோப்பைகளும் ஒளிரத்தொடங்கியது..

அது மெஜிக் மக்.. அவை கறுப்பு நிறத்திலிருக்கும்... சூடான திரவம் ஏதேனும் அதனுள் இடும் போது அதன் உண்மையான முகத்தோற்றத்தை காட்டும்.. ரிஷி ஒரு கோப்பையில் “ரிஷி” என்ற எழுத்துக்களும் பாதி இதயமும் மற்றைய கோப்பையில் “தானு” என்றும் மறுபாதி இதயமும் என்று சொல்லி செய்திருந்தான்.. தேநீரின் வெப்பம் பட்டதும் அந்த கோப்பைகள் கறுப்பு நிறத்திலிருந்து உண்மையான நிறத்திற்கு மாறத்தொடங்க அதை பார்த்த ஶ்ரீ இரண்டு கோப்பைகளையும் காரின் டேஸ் போடின் மீது வைத்து இரண்டு இதயங்களும் இணையும் வகையில் சரிசெய்து ரிஷியின் மொபைலின் உதவியால் அதையொரு புகைப்படமாய் பதிவுசெய்தாள்.
பின் ரிஷி என்றிருந்த தேநீர் கோப்பையை அவளெடுத்துக்கொண்டு மற்றையதை ரிஷியிடம் நீட்ட அதை சிரித்தபடிகையில் வாங்கிக்கொண்டவன் அவள் கையிலிருந்த தன் மொபைலை வாங்கியவன் இருவரும் கைகளை பின்னிக்கொண்டு மற்றவருக்கு தேநீர் அருந்தக்கொடுப்பதாய் செல்பி எடுத்தான்...

“அத்தான் எப்படி அத்தான் இப்படியெல்லாம் யோசிக்கிற?? பா சான்சே இல்லை... பஸ்ட் காபி வித் மை ஹபி.... சான்சே இல்லை போ... இதெல்லாம் மெமரிஸ் இல்லையா?? நான் இப்படியொரு ரொமேண்டிக் மூமண்டை எதிர்பார்க்கவேயில்லை அத்தான்... லவ் யூ சோ மச் ஹபி....”

“ஹாஹா... இதெல்லாம் வாழ்க்கையில ஒருமுறை கிடைக்கிற சான்ஸ்... மிஸ் பண்ண கூடாது.. எவ்வளவு என்ஜாய் பண்ண முடியுமோ அவ்வளவு அனுபவிக்கனும்.... நீ என்ஜோய் பண்ண தானே...”

“ஆமா அத்தான்.. தாங்க்யூ சோ மச்...லவ் யூடா புருஷா...” என்று அவன் கன்னத்தில் இதழ் பதிக்க அவனோ கண்ணடித்துவிட்டு

“லவ் யூடி பொண்டாட்டி..” என்றவன் தேநீரை அருந்திமுடித்தான்...
மறுபடியும் அந்த கோப்பைகள் கறுப்பாய் மாறிவிட ரிஷி இருவரின் கோப்பைகளையும் காரில் இருந்த நீரின் உதவியால் கழுவியவன் டிக்கியில் அவற்றை வைத்துவிட்டு வந்து தன் இருக்கையில் அமர அவன் கையை தன் கைகளால் வளைத்தவள் அவன் தோளில் சாய்ந்து கொள்ள அவள் முன்னுச்சியில் இதழ் பதித்தவன் காரை ஸ்டார்ட் செய்து சீடி பிளேயாரை ஒலிக்கச்செய்தான்... அதுவோ அழகாய் பாடியது...

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்

ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
தோளில் தூங்கிடுவேன்
உனக்காக உனக்காக

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

எச கேட்டா நீதானோ
நெரமெல்லாம் நீதானோ

தெனம் நீ தூங்கும் வரத்தான்
என் வாழ்க்கையே
விடுஞ்சு உன் பேச்சொலி கேட்டாத்தான்
எடுப்பன் மூச்சையே

உன்ன சுமக்கிற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொள்ளாதே கண்ணின் ஓரமா

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

ஒரே மழை அள்ளி நம்ம போதிக்கணும்
கைய குடு கதவாக்கி சாதிக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்

நிலா மழை மொழி அலை
பனி இருள் கீழே கெள
நீயும் நானும்

தெகட்ட தெகட்ட ரசிக்கணும்

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

உனக்காக வாழ நினைக்கிறேன்
பொடவ மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்

ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
தோளில் தூங்கிடுவேன்
உனக்காக உனக்காக

உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN