மாயம் 48

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன் சிரிப்பினில்
மயங்கி
கிறங்கியவனுக்கு
இன்னும் போதை
தெளியவில்லையடி.....

ரித்வியினது காரில் சென்றுக்கொண்டிருந்த ஹேமா எதுவும் பேசாது ஏதோ சிந்தனையில் உழன்றபடியே வர அதை கவனித்த ரித்வி தன் கையை அவள் கைமீது வைக்க அதில் சிந்தனை கலைந்தவள் ரித்வியை பார்க்க அவனோ கண்களாலேயே என்னவென்று கேட்க அவன் தோளில் சாய்ந்தாள் ஹேமா...
அவளது கன்னத்தில் தன் கரம் பதித்தவன்

“மிக்கி உன் மனசுல என்ன ஓடுதுனு எனக்கு தெரியும்.... உன் எல்லா கேள்விக்கும் நான் வீட்டுக்கு போனதும் நிச்சயம் பதில் சொல்லுறேன்... இப்போ எதை பத்தியும் கவலை படாம கொஞ்சம் நேரம் தூங்கு... எப்படியும் வீட்டுக்கு போய் சேர டூ ஹவர்ஸ் ஆகும்... அதனால.... ஓ கோட் பார்த்தியா மறந்துட்டேன்....” என்றவன் காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன் காரின் டிக்கியிலிருந்து ஒரு உணவுப்பொதியை எடுத்து வந்தான்.... அந்த பையில் ஒரு சிறிய ப்ளாஸ்கும், ஒரு டிப்பன் கெரியரும் இருந்தது... பிளாஸ்கின் மேல் மூடியை திறந்தவன் பிளாஸ்குள் இருந்த பாலினை அதில் ஊற்றி ஹேமா கையில் கொடுத்த அதை கையில் வாங்கியவள் அவனை முறைத்தாள்...
அவள் முறைப்பதை பார்த்தவன் மனதினுள் “ இவ எதுக்கு இப்போ முறைக்கிறா??? நாம பால் தானே கொடுத்தோம்... இதுல என்ன.... இருக்கு.....??” என்று குழம்பியவன்
அவளிடமே தன் சந்தேகத்தை கேட்டு தெளிவுபெறலாம் என்று முடிவு செய்தவன்

“எதுக்கு மிக்கி என்னை முறைக்கிற?? நான் என்ன தப்பு பண்ணேன்...???”

“நமக்கு இப்போ கொஞ்சநேரத்துக்கு முதல்ல தான் கல்யாணம் நடந்துச்சீங்கிறது நியாபகத்துல இருக்கா??”

“அது எப்படி மறக்கும்?? சரி எதுக்கு இப்போ இந்த கேள்வி...??”

“வேணாடா ஏதாவது செல்லிடுவேன் பார்த்துக்கோ...”

“ஓய் என்னான்னு சொன்னா தானே தெரியும்....”

“நீ நிஜமாகவே என்னை லவ் பண்ணியா???”

“உனக்கு எதுனால இப்படி பல டவுட்டு வருதுனு தெரிஞ்சிக்கலாமா??”

“ஆமா தெரிஞ்சிக்கிட்டு அப்படியே வெட்டி வீழ்த்திருவ....”

“அய்யோ கடவுளே.. என் பொண்டாட்டிக்கு என்னமோ நடந்திருச்சு..... என்னை எப்படியாவது அவகிட்டு இருந்து காப்பாத்து...”

“நீ லவ் பண்ண லட்சணத்துக்கு அவரை எதுக்கு துணைக்கு கூப்பிடுற??”

“மிக்கி ப்ளீஸ்மா... சத்தியமா நீ எதுக்கு கோபப்படுறனு எனக்கு புரியலைமா.. பால் கொடுத்தது குத்தமா???”

“ஆமா... குத்தம் தான்... நான் உனக்கு செம்புல கொடுக்க வேண்டிய பாலை நீ எதுக்குடா எனக்கு கொடுத்த??” என்று ஹேமா கேட்க முதலில் அவளை விசித்திர பிறவிபோல் பார்த்த ரித்வி பின் அவளது வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் சிரித்தபடி

“அது என்ன செம்புல பாலு??” என்று விஷமமாக வினவ அவனை மீண்டும் திட்ட முயல அவன் கண்களில் தெரிந்த விஷமம் அவன் புரிந்துகொண்டான் என்றதை உணர்த்த அதில் வெட்கம் வரப்பெற்று முகம் நாணிச்சிவக்க அதை மறைக்க தலை குனிந்து கொண்டாள் ஹேமா...
அவளது வெட்கத்தை கண்டு ரசித்தவன் அவளை சீண்டு பொருட்டு

“சொல்லு மிக்கி அது என்ன பால் செம்பு?? அதை எதுக்கு நீ எனக்கும் தரணும்...??” என்று மீண்டும் வினவ அவனுக்கு பதிலளிக்க முடியாது திண்டாடியவள் அவனை சமாளிக்கும் பொருட்டு

“இதெல்லாம் சாருக்கு புரிஞ்சிரும்... ஆனா மத்ததெல்லாம் புரியாது. நீ எல்லாம் ஐந்து வருஷம் லவ் பண்ணேன்னு வெளியில சொல்லிராத..”

“ப்ளீஸ் மிக்கி...எனக்கு சத்தியமா புரியலை... அதனால என்னான்னு நீயே சொல்லிரு...”என்று ரித்வி மீண்டும் கெஞ்ச அவனை முறைத்தவள் அவன் கையிலிருந்த பால் கப்பினை கையில் வாங்கியவள் அவன் எதிர்பாரா நேரத்தில் அவனது கையில் நறுக்கென்று கிள்ளினாள்...

அதில் இருந்தபடி துள்ளிக்குதித்தவன் தன் கையை தேய்த்தபடி
“ஆ... வலிக்குதுடி மிக்கி மவுஸ்... இப்போ எதுக்குடி என்னை கிள்ளுன??”

“என்னை மிக்கி மவுசுனு கூப்புடாதனு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...??”

“இப்போ எதுக்கு என்னை கிள்ளுன??”

“உனக்கு ரொமேன்சுனா என்னானு தெரியுமா??”

“யாரை பார்த்து இப்படியொரு கேள்வி கேட்டுட்ட???”

“ஆ... உன்னை பார்த்து தான் கேட்டேன்...”

“என்ன மிக்கி இப்படி படக்குனு சொல்லிட்ட...நான் எப்படியெல்லாம் ரொமேன்ஸ் பண்ணுவேன்னு மேடமுக்கு தெரியாதா???” என்று சிரித்தபடி கண்ணடிக்க அதில் வெட்கம் வந்த போதிலும் அதை மறைத்தவள் கோபமாக முகத்தை வைத்தபடி அவனை முறைத்தபடி

“ஆமா நீ பண்ண அழகை தான் நாங்க பார்த்தோமே... மேரேஜ் முடிந்ததும் இரண்டு பேரும் ஒன்னா ட்ராவல் பண்ணுற ஜேர்னியில நீ பண்ணுற ரோமேன்சை தான் நாங்க பார்த்தோமா....” என்று ஹேமா கூறியதும் தான் அவளது கோபத்துக்கான காரணம் புரிந்தது... அதை எண்ணி சிரித்தவன்

“ஓ மேடமுக்கு அது தான் இம்புட்டு கோபமா??? சரி முதல்ல இந்த சான்விச்சை சாப்பிட்டுட்டு அந்த பாலை குடிச்சுமுடி....” என்றவன் அந்த டிபன் கெரியரிலிருந்த சான்விச்சை எடுத்து கொடுத்தவனை முறைத்துவிட்டு அவன் கூறியபடி செய்தாள் ஹேமா....
சாப்பிடும் போது அவனும் இன்னும் சாப்பிடவில்லை என்று நினைவு வர சான்விச்சை அவன்புறம் நீட்ட அவனோ

“நான் வீட்டுக்கு போயிட்டு சாப்பிடுறேன்... நீ சாப்பிடு...” என்று மறுத்துவிட்டான்... ஹேமா சாப்பிட்டதும்
பொருட்களை டிக்கியில் வைத்துவிட்டு வந்தவன் அவள் வயிற்றினருகே சென்
றவன்

“குட்டிமா... சாரிமா... உங்களையும் சீக்கிரம் எழுப்பி விட்டுட்டேன்...நீங்க சாப்பிட்டீங்களா??? இப்போ நீங்க சமத்தா தூங்வீங்கலாம்.... அப்பா ஈவினிங் உங்ககிட்ட பேசுறேன்...” என்றவன் ஹேமாவின் வயிற்றில் முத்தமிட அதில் உடல் கூசியவள் அவன் தலையில் கைவைக்க அதில் தலையுயர்த்தியவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவளது இதழ்கை கவ்வினான்...

எதிர்பாராதது என்றபோதிலும் அதை எதிர்பார்த்திருந்தவளாய் அவனது இதழொற்றலில் சுகமாய் கரைந்தாள் ஹேமா... சில நிமிடங்கள் நீடித்த இதழொற்றல் இருவருக்கும் மூச்சு முட்டிட செய்திட இருவரும் தன்னிலையுணர்ந்து பிரிந்தனர்... அந்த இதழொற்றலை இருவரும் தத்தம்முள் ரசித்திருந்த இருவரும் தம்மல மீட்டுக்கொள்ள சிலநொடிகளானது... தன்னிலை மீண்ட ஹேமா ரித்வியை பார்க்க வெட்கி தலை குனிந்தபடி தன் புடவை முந்தானையை சுற்றியபடியிருக்க அவளை கண்ட ரித்விக்கு ரவிவர்மனின் ஓவியம் எழுந்து வந்தது போல் ஒரு உணர்வு...

அவளது அந்த வெட்கிய நிலையை கண்டு கிறங்கியவன் அவள் காதருகே சென்று
“மிக்கி செம்ம அழகா இருக்க டி.. நீ வெட்கப்படும் போதும் சிவக்குற உன் கன்னத்தை அப்படியே கடிச்சு சாப்பிடத்தோனுது.. ப்பா.... இந்த அழகியை படைக்க அந்த பிரம்மன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்னு மனசு வியக்குது டி... உன்ன பார்க்கும் போதும் உன் கண்கள் பேசுறதை பார்க்கும் போதும் அப்டியொரு கிக்கா இருக்குடி... உன்னை பஸ்ட் டைம் காலேஜில் பார்க்கும் போது உன்னேல ஒரு க்ரஸ் தான்... ஆனா அந்த க்ரஸ் இப்படி ஒரு காதலை தரும்னு நான் கனவுல கூட நினைக்கலை...நான் உனக்கு ப்ரபோஸ் பண்ணதும் நீ யோசிச்சு சொல்லுறேன்னு சொன்னதும் எனக்கு அப்படியொரு சந்தோஷம்... அதை எப்படி சொல்லுறதுனு தெரியலை...”

“ஹாஹா யோசிச்சு சொல்லுறேனு சொன்னதுல உங்களுக்கு என்ன அப்படியொரு சந்தோஷம்??? நானும் கவனிச்சேன்... உங்க ப்ரெண்ட்ஸ்கிட்ட நீங்க நான் யோசிச்சு சொல்லுறேன்னு சொன்னதை ரொம்ப சந்தோஷமா சொல்லிட்டு இருந்தீங்க... இதுல சந்தோஷப்பட என்ன இருக்கு.. நான் முடியாதுனு சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க..??”

“ஹாஹா.. நீ தான் கன்சிடர் பண்ணுறேனு ஹின்ட் கொடுத்துட்டே போயிட்டியே.. பிறகு நான் எதுக்கு கவலைப்படனும்??”

“நான் எப்போ உங்களுக்கு ஹிண்ட் கொடுத்தேன்....??”

“உனக்கு விருப்பம் இல்லாதிருந்திருந்தால் உடனே நோ சொல்லியிருந்திருப்ப .... உனக்கும் என்மேல ஒரு க்ரஸ் இருந்ததால தானே யோசிச்சு சொல்லுறேன்னு சொன்ன??”

“ஆமா.. ஆனா அது எப்படி உங்களுக்கு...??”

“இது தானே பொண்ணுங்க சைக்கோலஜி.. எத்தனை பேரை பார்த்திருப்போம்..”

“ஓ... முன் அனுபவம் நிறைய இருக்கோ...”என்று ஹேமா ரித்வியை முறைத்தபடி கேட்க அதை கவனிக்காத ரித்வி

“ஆமா... நிறைய...” என்று தொடங்கியவன் திருதிருவென விழித்தபடி ஹேவாமை பார்க்க அவளோ அவனை சிக்கிட்டியா சேகரு என்ற ரேஞ்சில் கோபமாய் முறைக்க

ரித்வியோ மனதினுள்
“டேய் உனக்கு வாயில தான்டா சனி... இப்போ உன்னை வச்சி செய்ய போறா நல்லா அனுபவி..” என்றவன் ஹேமாவிடம்

“இல்லை மிக்கி நான் என்ன சொல்ல வந்தேன்னா ..”

“நீ எதுவும் சொல்லாத...அந்த ரம்யா சொன்னா... நீ அவகிட்ட ஜொள்ளு விட்டதை.. நான் தான் நம்பலை... அவ மட்டுமா இன்னும் ஒரு லிஸ்டே இருக்கா??”

“ஐயோ இல்லை மிக்கி.. அந்த ரம்யா எனக்கு தங்கச்சி மாதிரி... நான் சும்மா பேசுனதை அவ அப்படி உன்கிட்ட வத்தி வச்சிட்டா.. உன் ராஜ் எவ்வளவு நல்லவனு உனக்கு தெரியதா??”

“அதான் உன் வாயாலயே உன் வண்டவாளத்தை சொன்னியே..”

“அது... ஒரு ப்ளோல வந்திருச்சு மா....”

“வரும் வரும்... ஏன் வராது...” என்று ஹேமா மீண்டும் தொடர முயல அதை தடுக்கும் முயற்சியாக அவள் கன்னத்தில் முத்தமிட்டவன்

“லவ் யூடி பொண்டாட்டி..” என்ற ஒரு முத்தத்தில் அவளை வாயடைக்கச்செய்துவிட்டான் ரித்வி.. அவனை செல்லமாக அடித்தவள் அவனை அணைத்தபடி அவனது தோளில் சாய்ந்து கொள்ள அவளது தலையில் செல்லமாக முட்டியவன் தன் காரை ஸ்டார் செய்தான்.. அவனது தோளிலேயே தூங்கியவளை ஒரு கையால் அணைத்தபடி காரை ஓட்டிச்சென்றான் ரித்வி..

கொஞ்சம் உளறல்
கொஞ்சம் சிணுங்கல்
ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ

கொஞ்சம் சிணுங்கல்
கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ

அய்யோ அய்யய்யோ என் மீசைக்கும் பூவாசம் நீ தந்து போனாயடி
பையா ஏ பையா என் சுவாசத்தில்
ஆண் வாசம் நீயென்று ஆனாயடா
அடிபோடி குறும்புக்காரி
அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை

கொஞ்சம் சிரித்தாய்
கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக்கவிதை நீ நீ நீ

கொஞ்சம் துடித்தாய்
கொஞ்சம் நடித்தாய்
ரெட்டைப்பிறவி நீ நீ நீ

அம்மா அம்மம்மா
என் தாயோடும்
பேசாத மௌனத்தை நீயே சொன்னாய்
அப்பா அப்பப்பா
நான் யாரோடும்
பேசாத முத்தத்தை நீயே தந்தாய்

அஞ்சு வயதுப் பிள்ளைபோலே
அச்சச்சோ கூச்சத்தாலே
கொஞ்சிக் கொஞ்சி
என்னைக் கொன்றால் பரவாயில்லை
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN