மழை காலம்

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அடர்ந்த பொழுதில்
சிசுவை காணும்
ஆவலில் மேகம்
பிரசவ வலியாக
இடி முழக்கம்
பதற்றமடையும்
மின்னல் வெட்டு
மகப்பேறும் முடிந்து
இரவும் கடந்து
புலர்ந்த காலையில்
மலர்ந்த இலை
நுனியில் பூத்த
மழை நீர் காட்டும்
மழை காலமும்
கவிதை தானே...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN