மாயம் 56

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பிரிவின் வலி
மரண வலியிலும்
கொடுமையென்று
உன் பிரிவு
உணர்த்தியதடி......

வழமை போல் கையில் காபி கப்புடன் ஶ்ரீயை எழுப்பினார் அந்த வீட்டில் வேலைபார்க்கும் காமாட்சி அம்மா...
கண்விழித்த ஶ்ரீ
“குட்மார்னிங் காமு மா...”
“குட்டு மார்னிங் மா... இந்தாங்க காபி....” என்று காமாட்சி கொடுத்த காபியை வாங்கிய ஶ்ரீ அதை ருசித்தபடியே
“தாங்ஸ் காமுமா.... உங்க மகளுக்கு பேசுனீங்களா?? பையன் எப்படி இருக்கானாம்???”
“இப்போ பரவாயில்லையாம்மா....நீங்க காபி குடிச்சிட்டு வாங்க... நான் அதுக்குள்ள வெண்ணீர் போட்டு எடுத்துட்டு வர்றேன்...” என்று செல்லத்திரும்பியவர் மறுபடியும் ஶ்ரீயிடம்
“அம்மா கால் வத்திடுச்சா???” என்று ஶ்ரீயிடம் கேட்க அவளோ காலை மறைத்திருந்த பெட்சீட்டை விலக்கி பார்த்தவள்
“இப்போ கொஞ்சம் பரவாயில்லைமா...”
“எங்க மா... இன்னும் அப்படியே தான் இருக்கு.... நீங்க அப்படியே இருங்க.. நான் ஒத்தடம் கொடுக்க சுடுதண்ணி எடுத்துட்டு வர்றேன்...” என்றவர் கிச்சனுக்கு சென்று ஒத்தடம் கொடுக்க பொருட்கள் கொண்டு வந்தவர் ஶ்ரீ வசதியாக அமர வழி செய்துவிட்டு அவளுக்கு சுடுநீரில் ஒத்தடம் கொடுத்தார்.... இரவெல்லாம் கால்வலியால் அவஸ்தைபட்டவளுக்கு அந்த ஒத்தடம் சுகமாயிருந்தது.. ஒத்தடம் கொடுத்து முடிந்ததும் ஶ்ரீயை சிறிது நேரம் ஓய்வெடுக்கச்சொன்னார். ஶ்ரீயோ
“இல்லை காமுமா... இன்னைக்கு முடிக்க வேண்டிய கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.... அதனால கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும்..” என்று கூற
“அம்மா நீங்க இப்போ இரண்டு உசுரு.... அதுவும் பிரசவ நேரம் நெருங்குற நேரத்துல இப்படி மாய்ச்சல் படக்கூடாது.. நான் டாக்டரம்மாட்ட சொல்றேன்... நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க...” என்று காமாட்சியம்மா சற்று உறுதியான குரலில் கூற ஶ்ரீயிற்கு ரிஷியின் நினைவு வந்தது... அவனும் இப்படி தான்..தான் பிடிவாதம் பிடிக்கும் சமயத்தில் இவ்வாறு தான் கட்டென் ரைட்டாக சொல்லுவான்... எந்நேரமும் தன் நலமே அவனுக்கு பிரதானமாக இருக்கும்... ஆனால் இப்போ என்று நினைத்தவளுக்கு கண்கள் கரிக்க அதை காமாட்சியம்மா தெரியாதவாறு மறைத்தவள் போலியாக ஒரு புன்னகையை சுமந்தபடி அவரின் வேண்டுகோளை ஏற்றாள்....
அரை மணிநேரத்திற்கு பின் குளிக்க தயாரானவளுக்கு சுடுநீர் எடுத்து வந்த காமாட்சியம்மா அவள் குளிப்பதற்கு ஏதுவாக அனைத்தையும் தயார் செய்ய ஶ்ரீயோ
“என்ன காமுமா.. நான் என்ன சின்ன குழந்தையா?? இதெல்லாம் நான் செய்துக்க மாட்டேனா??”
“அம்மா உங்களை மாய்ச்சல் படாம பார்த்துக்க சொல்லி டாக்டரம்மா சொல்லியிருக்காங்க... அதனால நீங்க எதுவும் சொல்ல கூடாது...” என்று காமாட்சி சொல்ல சிரித்தபடியே அவர் செய்பவற்றை பார்த்தவளுக்கு ரிஷியின் நியாபகங்களே நிறைந்திருந்தது..
அவர் சென்றதும் குளித்து முடித்து உடைமாற்றி சாரியில் வந்தவளை அமரச்செய்த காமாட்சியம்மா அவளது தலையை நன்றாக துவட்டிவிட்டு சாம்பிராணி புகை பிடித்தவர் அவளை உணவுண்ண வைத்தபிறகே அவளை விட்டார்...
உணவருந்தியதும் அவளுக்கு பால் கொண்டு வந்து கொடுத்த காமாட்சியம்மா
“ஶ்ரீமா... டாக்டரம்மா இப்போ தான் கால் பண்ணாங்க....உங்களை வீட்டுலயே இருக்க சொன்னாங்க... அவங்க இங்க தான் வந்துட்டு இருக்காங்களாம்”
“சரி காமுமா.. என்னோட லாப்டொப்பை எங்க எடுத்து வச்சீங்க...??”
“உங்க ரூம்ல தான் வச்சிருக்கேன்... இருங்க எடுத்துட்டு வர்றேன்..” என்று அறைக்கு செல்ல முயன்றவரை தடுத்தவள்
“நீங்க உங்க வேலையை கவனிங்கமா... நான் போயிட்டு எடுத்துக்கிறேன்... டாக்டர் வந்ததும் என்னை கூப்பிடுங்க....” என்றவள் கஷ்டப்பட்டு எழுந்து தன் வயிற்றில் ஒரு கையை வைத்தபடி அறைக்கு சென்றாள் ஶ்ரீ....
அறைக்கு சென்று டேபிளின் மீதிருந்த லாப்டொப்பினை எடுத்துக்கொண்டு கட்டிலுக்கு சென்றவள் முதுகிற்கு தலையணையை வாகாய் வைத்துக்கொண்டு அமர்ந்து லாப்டொப்பினை ஆன் செய்தாள்...
தன்னுடைய பேஸ்புக் ஐடியை லாக்இன் செய்தவள் அதில் ஹேமாவின் அக்கவுண்டினை சர்ச் செய்து அதில் அவள் அப்லோட் செய்திருந்த பிராபைல் பிக்சரை பெரிதாக்கினாள்.
அதில் ஹேமா, ரித்வி, ரிஷி, ஹேமாவின் பெற்றோர், ரிஷியின் பெற்றோர் மற்றும் ஹேமாவின் குழந்தை அனைவரும் அந்த படத்தில் இருந்தனர்.... அதை பார்த்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது... தனது குடும்பத்தில் தான் மட்டும் இல்லையே என்ற கவலையே அவளது அழுகைக்கான காரணம்... அவள் ஆசையோடு எதிர்பார்த்திருந்த நாளைகூட குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாட முடியாதபடி இந்த விதி சதி செய்துவிட்டதே...ஏன் எனக்கு மட்டும் இப்படி.. இன்று போல் எப்போதும் தன்னால் தன் குடும்பத்துடன் இணையமுடியாதா??? இல்லை கடவுளுக்கு என்மேல் சற்று கருணை வரப்பெற்று என்னை என் அத்தானுடனும் குடும்பத்துடன் மீண்டும் இணைப்பாரா??? என்று எண்ணியவளுக்கு கண்ணீர் மட்டுமே பதிலும் துணையுமாகியது.... அந்த படத்தை கிளோஸ் பண்ணியவள் அடுத்து ரிஷியின் பிராபைலிற்கு சென்று தங்களது திருமண படத்தை எடுத்து பார்த்தவளுக்கு ரிஷியின் பிரிவின் துயரம் மிகவும் வாட்டியது... அந்த படத்தை பார்த்தபடி
“சாரி அத்தான்.. என்னை மன்னிச்சிருங்க... எனக்கு வேற வழி தெரியலை... அதான் இப்படி பண்ணேன்... இது உங்களை எவ்வளவு ஹர்ட் பண்ணியிருக்கும்னு எனக்கு தெரியும்..... ஆனா எனக்கு ஏதாவது நடந்துட்டா நீங்களும் உயிரோட இருக்கமாட்டேன்னு நீங்க சொன்னதை கேட்ட பிறகு என்னால சும்மா இருக்கமுடியலை... எனக்கு எல்லாரையும் விட நீங்க ரொம்ப முக்கியம் அத்தான்.... நான் எப்பவும் கடவுள்ட வேண்டுவது ஒன்னே ஒன்று தான்... நீங்க நல்லா இருக்கனும்... நான் இல்லாம போனால் கூட நம்ம குழந்தையை காரணம் காட்டியாவது நீங்க இன்னொரு நல்ல வாழ்க்கையை வாழனும்.... நான் உங்க பக்கத்துல இருந்து எனக்கு ஏதாவது நடந்துச்சுனா நிச்சயம் நீங்க சொன்னதை செய்வீங்க... அந்த கொடுமை உங்களுக்கு வேணாம்னு தான் வலிக்கும்னு தெரிஞ்சும் உங்களை பிரிஞ்சு வந்தேன்... ஆனா தினம் தினம் உங்க அருகாமைக்காக மனசு ஏங்கும் போது அதுக்கு ஆறுதல் சொல்ல என்னால முடியலை... நாம மறுபடியும் சேருவோமா இல்லையானு தெரியலை... ஆனா நீங்க எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் அத்தான்... அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்...” என்று புகைப்படத்தோடு பேசியபடியிருந்தவள் அந்த புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்துவிட்டு
“மிஸ் யூ சோ மச் அத்தான்....” என்றவள் கண்ணீரை துடைக்க மறந்து அந்த புகைப்படத்தை பார்த்தபடியிருந்தாள்.
அப்போது வெளியே டாக்டர் வந்த சத்தம் கேட்க சூழ்நிலை உணர்ந்து தன் கண்களை துடைத்துக்கொண்டவள் லாப்டொப்பினை மூடி வைத்துவிட்டு கீழே இறங்க யத்தனித்த சமயம் உள்ளே வந்த டாக்டர்
“ஹாய் தான்யா... எப்படி இருக்கீங்க...” என்று விசாரிக்க அமர்ந்தபடியே
“ஐயம் பைண் டாக்டர்... நீங்க எப்போ வந்தீங்க...??”
“நான் இப்போ தான் வந்தேன்... காமாட்சியம்மா கால் வீங்கியிருக்குனு சொன்னாங்க... இப்போ நல்லமா??”
“ஆமா டாக்டர்... இப்போ பரவாயில்லை....”
“சரி நீங்க அப்படியே படுங்க... நான் உங்களை செக் பண்ணுறேன்...” என்று டாக்டர் கூற மெதுவாய் கட்டிலில் படுத்தவளை பரிசோதித்தவர் அவளது குருதியழுத்தத்தையும் பரிசோதித்துவிட்டு
“தான்யா நாளைக்கு நீங்க அட்மிட் ஆகுறது நல்லதுனு தோனுது....”
“டாக்டர் நீங்க கொடுத்த டேட்டுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கே டாக்டர்..”
“இருக்கு தான் தான்யா... ஆனா உங்க ஹெல்த் கண்டிஷன் நமக்கு பேவரா இல்லை... பேபியை சீக்கிரம் சீசர் பண்ணு எடுக்கிறது நல்லதுனு படுது.. நீங்க நாளைக்கு காலையில ரெடியா இருங்க.... நான் வந்து உங்களை ஆஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போறேன்.. அங்கே சில டெஸ்டெல்லாம் எடுத்த பிறகு தான் எப்போ சீசர் பண்ணலாம்னு சரியாக சொல்லமுடியும்....நீங்க கொஞ்சம் கவனமாக இருங்க... இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க... மனசை போட்டு குழப்பிக்காதீங்க.. எல்லாம் நல்லதாவே நடக்கும்னு நம்புவோம்.. “ என்றவர் காமாட்சியம்மாவை அழைத்து சில குறிப்புக்களை சொன்னவர் ஶ்ரீயை மீண்டும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு ஆஸ்பிடலுக்கு கிளம்பினர்...
ஶ்ரீயிற்கோ தன் வாழ்வின் கடைசிநாளா இன்று என்ற பயமும் நாளை என்ன நடக்கப்போகின்றது என்ற கவலையும் ஒரு சேர வாட்டியது... தன் அறையிலேயே ரிஷியின் படத்தை பார்த்தபடி படுத்திருந்தவளுக்கு காமாட்சியம்மாவே சற்று ஆறுதலாக இருந்தார்.... அவள் மனம் இப்போது ரிஷியை பெரிதும் தேடியது... கடைசியாக ஒரு முறை அவன் மார்பில் துயில் கொள்ளமாட்டோமா என்று அவள் மனம் வருந்தியது..... கண்களில் கண்ணீர் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்க அது தந்த அயர்ச்சியில் கண்மூடினாள் ஶ்ரீ... அவள் உறங்கியதை உறுதிப்படுத்திக்கொண்ட காமாட்சியம்மா ரிஷியிற்கு அழைத்து
“தம்பி தான்யா அம்மா ரொம்ப நேரம் அழுதுட்டு இப்போ தான் தூங்குனாங்க... அவங்க உங்களை ரொம்ப தேடுறாங்க... அவங்க கண்ணுல உங்களுக்கான தேடல் இருக்கு... இந்த மாதிரி சமயத்துல ரொம்ப கஷ்டப்படக்கூடாது... நீங்க ஒருக்கா வந்துட்டு போனீங்கனா நல்லா இருக்கும்...” என்று கூற பத்து நிமிடத்தில் அங்கிருந்தான் ரிஷி...
ஶ்ரீயின் அறைக்கு சென்றவன் கண்களில் கண்ணீர் கோடுகளுடன் உறங்கிக்கொண்டிருந்தவளின் அருகில் சென்று அமர்ந்தான். அவள் இறுக்கியணைத்திருந்த தன்னுடைய புகைபடத்தை அவள் கையிலிருந்து எடுத்துவிட்டு அவளை எடுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் உறக்கம் கலையாதவாறு அவள் தலையை கோதியபடி
“ஏன் அம்லு உன்னையும் கஷ்டப்படுத்திகிட்டு என்னையும் கஷ்டப்படுத்துற??? இப்படி நீ எதுவும் சொல்லாமல் என்னை பிரிஞ்சி வந்துட்டா எல்லாம் சரியாகிடுமா?? அப்படி உன்னை நான் விட்டுடுவேனா??? நீ தான்டி என்னோட சந்தோஷம் துக்கம் எல்லாமே... உன்னோட கண்ணாடி மாதிரிடி நான்.... எப்படி அம்லு உன்னால என்னை பிரிய முடிஞ்சிச்சு??? இப்போ கூட உனக்கு எதுவும் நடந்துருமோனு நீ பயந்ததை விட என்னை கடைசி வரைக்கும் பார்க்கமுடியாமல் போயிடுமோனு தான் பயந்து அழுதிருப்ப... இதுனால தான் உனக்கு தெரியக்கூடாதுனு அவ்வளவு கவனமாக இருந்தேன்..... ஆனா இப்போ... கஷ்டமா இருக்கு அம்லு... உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்மா..நான் இருக்கும் வரைக்கும் உனக்கு எதுவும் நடக்காது அம்லு...இது உன்மேல பிராமிஸ்...” என்றவன் அவள் முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்டு அவளை விட்டு விலக முயலும் போது ஒரு கையால் அவன் சட்டையின் பற்றியிருந்தாள் ஶ்ரீ... இத்தனை நாட்களாக அவன் அருகாமைக்கு ஏங்கியிருந்த அவளது மனம் அவனது அருகாமையை உணர்ந்ததும் அது தந்த சுகத்தில் அவன் சட்டையை பிடித்தபடி அவனுக்கே உரிய ப்ரத்தியேக வாசனை முகர்ந்தபடி அவளை ஆழ்ந்த நித்திரைக்கு எடுத்துச்சென்றிருந்தது... நெடுநாட்களுக்கு பின் அவள் நிம்மதியாக உறங்குகிறாள் என்று உணர்ந்தவன் அவள் கையிலிருந்து தன் சட்டையை விடுவித்துக்கொண்டு காமாட்சியம்மாவிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி டாக்டரை சந்திக்க சென்றான்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN