மாயம் 57

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பகல் தூங்கி எழுந்த ஶ்ரீயிற்கு மனதை அழுத்திய பாரமொன்று குறைந்தது போன்றதொரு உணர்வு.... படுக்கையிலிருந்து எழுந்தவள் பிரஸ்ஸாகிவிட்டு ஹாலிற்கு வந்தாள்....
ஹாலில் அமர்ந்து டிவியை ஆன் செய்தவள் அதில் கவனம் பதிக்க டிவி சத்தம் கேட்டு வெளியே வந்த காமாட்சியம்மா அவளுக்கு சாப்பாடு எடுத்துவர அதை வாங்கி சாப்பிட்டவள் டிவியில் கவனம் பதிப்பதாய் பாவனை செய்துகொண்டு வேறெதோவொரு யோசனையில் இருக்க அவள் அருகில் வந்த காமாட்சி
“தான்யா மா... என்னம்மா யோசிக்கிறீங்க???” என்று அவள் கையை பிடித்தபடி கேட்க ஶ்ரீயோ
“அதெல்லாம் ஒன்னும் இல்லை காமுமா... நான் சும்மா டிவி தான் பார்த்துட்டு இருக்கேன்...”
“உங்க பார்வை தான் அங்க இருக்குமா.. உங்க சிந்தனை எல்லாம் வேற எங்கயோ இருக்கு.. நீங்க இங்க வந்ததுல இருந்து நான் உங்களை பார்க்குறேன்... உங்க மனசுல ஏதோ ஒரு வலி இருக்கு.... அது எப்பவும் உங்க கண்ணுல தெரியும்... அதை நான் கவனிக்க கூடாதுனு நீங்க மறைக்கிறதும் எனக்கு தெரியும்.... இப்போவாவது சொல்லுங்க தான்யாமா.... எதுக்காக இப்படி தனியாக இருந்து கஷ்டப்படுறீங்க... ??? உங்களை தாங்குறதுக்கு அவ்வளவு பேர் இருக்கும் போது எதனால இப்படி தனியாக வந்து கஷ்டப்படுறீங்க??? சொல்லுங்கமா....” என்று காமாட்சி கேட்க ஶ்ரீயின் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் அருவி பெருக்கெடுத்தது..... அதை கண்டவர் அவளை அணைத்துக்கொண்டு
“மனசுல உள்ள பாரம் எல்லாத்தையும் இறக்கிடுங்க மா.... என்னை நீங்க அம்மானு மனசால கூப்பிடுறது உண்மைனா உங்க பிரச்சினையை எங்கிட்ட சொல்லுங்க...” என்று கேட்க ஶ்ரீ தன் கதையை கூறத்தொடங்கினாள்.....
அன்று இன்டர்ன்சிப்பிற்காக தன் கல்லூரி தோழிகளுடன் அந்த சி.டி. ஆஸ்பிடலுக்கு வந்திருந்தாள் அனு. அங்கே அவள் சீப் டாக்டருடன் ஏதோ உரையாடிக்கொண்டிருக்கும் போது கைனோ சர்ஜன் டாக்டர். அமிர்தவர்ஷினியின் அறையிலிருந்து ரிஷி வெளியேறுவதை பார்த்தாள்... ரிஷி தன் தமக்கையோடு வந்திருப்பான் என்றெண்ணி அறையிலிருந்து ஶ்ரீ வருவாள் என்று அவள் பார்த்திருக்க வேறு யாரும் வராமல் போக அது அனுவிற்கு சந்தேகத்தை கிளப்பியது.. சீப் டாக்டரிடம் கூறிக்கொண்டு அந்த கைனோ சர்ஜன் அறைக்கு கதவை தட்டி அனுமதி பெற்றபின் சென்றாள்....
“ஹலோ டாக்டர்... ஐயம் அனன்யா... இங்க இன்டர்சிப்பிற்காக ஆர்.எச் மெடிக்கல் காலேஜில் இருந்து வந்திருக்கேன்...”
“ஹாய் அனன்யா... நைஸ் டூ மீட் யூ... நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா???”
“ஆமா மேம்... இப்போ வந்துட்டு போனாரே.. அவரு எதுக்கு வந்துட்டு போனாருனு சொல்லுமுடியுமா???”
“அதை எதுக்கு நீங்க கேட்குறீங்க அனன்யா...??”
“அவரு என்னோட பிரதர்- இன்- லா.... அக்கா இப்போ ப்ரெக்னென்டா இருக்கா... அதான் அவளுக்கு ஏதும் பிராப்ளம்மானு தெரிஞ்சிக்க தான் கேட்டேன்..”
“மிசஸ்.ரிஷிராஜ் உங்க சிஸ்டரா???”
“ஆமா மேம்... அக்காவுக்கு ஏதும் ப்ராப்ளமா மேம்...??”
“ஆமா அனன்யா.... அவங்களுக்கு ப்ரிஎக்கிளெம்சியா...”
“என்ன மேம் சொல்லுறீங்க...???”
“ஆமா... அவங்களுக்கு ஆல்ரெடி இதய வால்விலும் பிரச்சினை இருந்திருக்கு.... இப்போ ப்ரிக்கிளம்சியா... அவங்க டெலிவரியில சிக்கல் இருக்கு....”
ப்ரிக்கிளம்சியா இது பிரசவகாலத்தில் ஏற்படும் ஒரு நோய்.. இது வெகு சிலருக்கு ஏற்படுகின்றது...இதன் தாக்கம் கர்ப்பகாலத்தில் 20 கிழமைகளின் பின்னே வெளிப்படும்... இது இதயம் தொடர்பான பிரச்சனைகள், உயர் குருதியழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது... அதோடு இது குறிப்பாக முதல் முறை தாய்மை அடைந்திருக்கும் பெண்களுக்கும், பரம்பரை வழியே இந்த நோய் கடத்தப்பட்ட பெண்களுக்குமே ஏற்படுகிறது...
இந்நோயானது உடலின் முக்கிய பாகங்களான மூளை, சிறுநீரகம், ஈரல் ஆகியவற்றை பாதிக்கின்றது..
இந்நோய்க்கான அறிகுறியாக சிறுநீரில் அதிகளவான புரதம் வெளியேறல் , கடுமையான தலைவலி, உயர் குருதியமுக்கம், அதிகபடியான சோர்வு என்பவற்றை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
“மேம் இது அக்காவுக்கு தெரியுமா???”
“இல்லை அனன்யா..... மிஸ்டர் ரிஷிராஜ் யாருக்கும் தெரிய வேணாம்னு சொன்னாரு... இப்போ கூட நான் உங்களுக்கு இதை சொன்னதுக்கு காரணம் மெடிக்கல் பத்தி தெரிந்த நீங்க அவங்க பக்கத்துல இருந்தா அவங்க ஹெல்த் பத்தின அப்டேட்சை கலெக்ட் பண்ணமுடியும்.... அது அவங்களை நம்ம கண்காணிப்புல வைத்திருக்கிறதுக்கு சமம்...”
“மேம்... டெலிவரியில ஏன் சிக்கல் வரும்னு சொல்லுறீங்க??”
“இவங்களுக்கு ப்ரிக்கிளம்சியா மட்டும் இருந்தால் சீக்கிரமாகவே சீசர் பண்ணி குழந்தையை எடுத்துடலாம்... ஆனா இவங்களுக்கு வால்வுகளிலும் பிராப்ளம் இருக்கு... டெலிவரி நேரத்துல ப்ரெஷர் அதிகரித்து அது தாய்க்கும் சேய்க்கும் உயிர்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் இருக்கு... சீசர் பண்ணாலும் அது சக்சஸ் ஆகி தாயும் சேயும் நல்லபடியாக மீண்டு வருவதற்கான பாசிபிலிட்டிஸ் ரொம்ப குறைவு....”
“அப்போ மேம்...”
“ஆமாம் அனன்யா.... கடவுளால மட்டும் தான் உங்க அக்காவைவும் அவங்க குழந்தையையும் காப்பாற்றமுடியும்..” என்று டாக்டர் கூற கண்கள் கரித்துக்கொண்டு வர அனுவோ அடுத்த என்ன செய்வது என்று புரியாமல் இருக்க டாக்டரிடம் சில ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு வெளியே வந்தவள் அங்கு போடப்பட்டிருந்த நாற்கலியில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கினாள் .... தன் அக்காவின் நிலையை எண்ணி அழுதவளுக்கு தன் மாமாவின் நிலை என்னவென்று யூகிக்கமுடியவில்லை.... தன் மொபைலை எடுத்தவள் ரிஷியிற்கு அழைத்து அவனுடம் தனித்தது உரையாடவேண்டுமென கூறியவள் மாலை காபி ஷாப்பில் சந்திப்பதாக கூறிவிட்டு தன் வேலையில் ஈடுபட்டாள்...
மாலை அனு சொல்லியிருந்த காபி ஷாப்பில் ரிஷி அவளுக்காக காத்திருக்க அனுவோ சில கோப்புக்களுடன் வந்தாள்..
“என்ன அனு ஏதோ பேசனும்னு சொன்ன??” என்று ரிஷி கேட்க அவன் முன் அந்த கோப்புக்களை வைத்தாள்.. அதை பார்த்ததும் அதிர்ந்தவன் அனுவை பார்க்க
“ஏன் மாமா மறைச்சீங்க???”
“அனு...”
“சொல்லுங்க மாமா... ஏன் மறைச்சீங்க???”
“உனக்கு எப்படி இந்த விஷயம்??” என்று ரிஷி கேட்க காலையில் நடந்ததை கூறினாள் அனு..
“என்னை என்ன பண்ண சொல்லுற அனு??? இதை யாருகிட்ட சொல்ல சொல்லுற?? இதை சொல்லி யாரை கஷ்டப்படுத்த சொல்லுற??? உங்க அக்காவையா?? இல்லை நம்ம வீட்டாளுங்களையா???”
“எப்படி மாமா இவ்வளவு பெரிய விஷயத்தை உங்க மனசுக்குள்ளேயே வைத்து புளுங்கிட்டு இருக்கீங்க??? இதோட பின்விளைவுகள் பத்தி தெரிஞ்சும் உங்களால எப்படி மாமா நார்மலாக இருக்க முடியிது?”
“வேற என்ன அனு பண்ணுறது?? எதையுமே மாற்ற முடியாதுனு தெரிஞ்ச பிறகு அதை பற்றி கவலைபட்டு இருப்பதையும் கெடுத்துக்கொள்ள சொல்லுறியா???”
“மாமா இது அக்காவுக்கு தெரிஞ்சா???”
“தெரிஞ்சா அவ தாங்க மாட்டா.. அதனால தான் இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாதுனு ரொம்ப கவனமாக இருக்கேன்..... எனக்கு என்னோட தான்யா நல்லா இருக்கனும்.... டாக்டர் என்ன வேணாலும் சொல்லட்டும்... என்னோட காதல் என்னோட தான்யாவை என்கிட்ட கொண்டு வந்திடும்... எனக்கு குழந்தைகூட வேண்டாம்.. என்னோட தான்யா மட்டும் திரும்பி என்கிட்ட வந்தா போதும்....” என்று ரிஷி கூற அதை கேட்டவளுக்கு தன் அக்காவை எண்ணி அழுவதா தன் மாமாவை எண்ணி கவலை கொள்வதா என்று தெரியவில்லை...
அன்றைய நாளுக்கு பின் அனு தினமும் மாலை ரிஷியின் வீட்டிற்கு செல்வாள்.. அங்கு சென்று ரிஷி கூறியதாக கூறி ஶ்ரீயின் குருதியழுத்தத்தை சோதிப்பவள் அதை பற்றி டாக்டருக்கு தெரிவிப்பாள்..ஶ்ரீ
அன்றும் அது போல் ஶ்ரீயின் வீட்டிற்கு வந்தவள் ரிஷியோடு உரையாடிக்கொண்டிருந்தாள். ரிஷியோ தன் கவலையை அனுவிடம் பகிர அதற்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள் அனன்யா.
“என்னால முடியலை அனு.... கடக்கின்ற ஒவ்வொரு நொடியும் என்னோட பயத்தை அதிகரிச்சிக்கிட்டே இருக்கு...ஏதாவது தப்பா நடந்திருமோனு பயமா இருக்கு.....உங்க அக்காகிட்ட இன்னும் எவ்வளவு நாள் நடிக்கமுடியும்னு எனக்கு தெரியலை... ஆனா அவகிட்ட ஒன்னுமில்லாதது போல் நடிக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை... இப்பவெல்லாம் அவளை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு...” என்று அனுவிடம் புலம்பிய ரிஷியை ஆறுதல் படுத்தினாள் அனு.
“மாமா உங்க நிலைமை எனக்கு புரியிது... ஆனா இதைத்தவிர வேறு வழியில்லை...நாம இந்த விஷயத்தை மறைத்து வைத்திருப்பது தான் எல்லாருக்கும் நல்லது... ஏதும் தப்பா நடக்காது மாமா... நல்லதே நடக்கும்னு நினைப்போம் மாமா...”
“எப்படிமா நினைக்கிறது??? எல்லாமே நெகடிவ் ரிசால்டா இருக்கும் போது பொசிடிவ்வா நினைக்க தோன்றவில்லையே... என்னதான் மனது நல்லதே நினை என்று சொன்னாலும் மூளை அந்த அபாயத்தை நினைவூட்டி பயமுறுத்துதே... ஒருகட்டத்துல செத்துர்லாம்னு தோனுது...” என்று விரக்தியின் உச்சத்தில் ரிஷி பேச அவனது பேச்சில் பதறிய அனு
“ஐயோ மாமா... என்ன பேசுறீங்க... நீங்களே இப்படி தளர்ந்துட்டீங்கனா நாங்க என்ன பண்ணுவோம்??? நீங்க தான் மாமா எங்களோட பலம்... இந்த விஷயம் நம் வீட்டுல தெரிஞ்சிருந்தா இன்னேரம் என்னென்ன அசம்பாவிதம் நடந்திருக்கும்னு என்னால யூகிக்க கூட முடியல... உங்களால தான் வீட்டுல எல்லோரும் நிம்மதியா இருக்காங்க.... அக்கா கூட தன்னோட பிரச்சனைகள் எதுவும் தெரியாது பாப்பா வரப்போகுது அப்படீங்கிற சந்தோஷத்துல இருக்கா... இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான்...இதுவரை எல்லாம் நல்லபடியா தான் போய்கிட்டு இருக்கு.. இனிமேலும் அப்படியே போகும்னு நம்புவோம் மாமா... உங்களோட காதல் அக்காவை அந்த ஆபத்திலிருந்து மீட்டுரும் மாமா... என்னை நம்புங்க... இந்த மெடிக்கல் மிராக்கல் அப்படீனு சொல்லுவாங்களே... அதே மாதிரி அக்காவும் பிழைத்து வருவா.... நீங்க பயப்படாதீங்க...”
“எனக்கு உங்க அக்காவை பார்க்கும் போது ஏதோ அவ என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமா தூரமாகிட்டு போறதாவே தோணிட்டே இருக்கு.... நைட்டில் இதை நினைச்சாலே தூக்கம் வர மாட்டேன்குது..... அதைவிட கொடுமை உங்க அக்கா பாப்பா பற்றி பேசும் போது என்னால் அவ அனுபவிக்கிற சந்தோஷத்தை பார்த்து வெளிவரும் என்னோட உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு.... எனக்கு வாரிசை விட உங்க அக்கா தான் முக்கியம்... அதனால தான் ஆரம்பத்துலேயே அபார்ட் பண்ணலாம்னு சொன்னேன்... ஆனா அவ தான் பிடிவாதம் பிடித்து அந்த கருவை தன் வயிற்றில் சுமந்திட்டு இருக்கா... ஆனா அது இவளுக்கு எமனாகப்போகுது....... இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது..... அவ சிரிக்கும் போதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சிரிப்பை பார்க்கும் கொடுப்பினை இருக்கு அப்படினு தோன்றி என்னை சித்தம் கலங்க வைக்கின்றது... ஏதோ ஒரு கூடை நெருப்பை யாரோ அள்ளி என் தலையில் போட்ட மாதிரி இருக்கு... ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ ஏது நடக்குமோனு பயந்து பயந்தே நாட்கள் போகுது...ஆனால் ஒன்று சொல்லுறேன்....உங்க அக்காவுக்கு ஏதும் நடந்தா அடுத்த நிமிஷம் நான் உயிரோடு இருக்க மாட்டேன்...”
“ஐயோ மாமா... ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க... ஏதும் தப்பா நடக்காது என்னை நம்புங்க... அக்காவும் பாப்பாவும் நல்லபடியா திரும்பி வருவாங்க....”
“எனக்கு என் தானு நல்லபடியா திரும்பி வந்தா போதும்.... வேற எதுவும் வேணாம்...” என்று அவன் அதீதக்காதல் அவன் பேச்சில் வெளிப்பட அதைக்கேட்டு நெகிழ்ந்துவிட்டாள் அனு...
“அனு உன்னோட சீப் தானுவோட ரிப்போர்ட்சை பார்த்துட்டு என்ன சொன்னாங்க?? ஏதும் ஆல்டனேட்டிவ் சஜஸ்ட் பண்ணாங்களா??” என்று ஏதேனும் வைத்தியம் அவளை சரிப்படுத்திவிடாதா என்ற நப்பாசையில் கேட்க அனுவோ
“இல்லை மாமா... ஆல்ரெடி சொன்னது தான் டுவென்டி பர்சன்ட் தான் பிழைப்பதற்கு சான்சஸ் இருக்குனு சொல்லிட்டாங்க... அப்புறம் மாமா அவுஸ்ரேலியாவில் கய்னோ சர்ஜன் ஒருத்தவங்களை காண்டக்ட் பண்ணிருக்காங்க.... அவங்க இன்னும் ஏதும் சொல்லை... அவங்களோட ஸ்டேட்மன்டை வைத்து தான் முடிவு பண்ணனும்னு சொல்லிருக்காங்க... அக்காவோட பிளட் பிரஷரையும் அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னாங்க... அவங்க டென்ஷன் ஆகக்கூடாது... ரொம்ப கவனமாக பார்த்துக்க சொன்னாங்க மாமா... நான் பிரஷர் மெஷின் கொண்டு வந்துருக்கேன்...நீங்க அடிக்கடி செக் பண்ணி எனக்கு அப்டேட் பண்ணுங்க...”
“ஓகே அனு.... நான் உனக்கு அப்டேட் பண்ணுறேன்... இன்னும் வேற யாருக்காவது இந்த விஷயம் தெரியுமா??”
“இல்லை மாமா உங்களையும் என்னையும் தவிர வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியாது... வேறு யார் மூலமும் அக்காவுக்கு விஷயம் தெரிஞ்சிரக்கூடாதுனு சொல்லலை மாமா...”
“அது தான் சேப்டீ... உங்க அக்கா கேள்வி கேட்டே எல்லா உண்மையையும் கறந்திருவா... அப்புறம் விஷயம் கைமீறி போயிரும்..”
“இன்னும் மூன்று மாதம் தான் மாமா... அதுவரைக்கும் அக்காவை சமாளிங்க... இதை உங்ககிட்ட சொல்லத் தேவையில்லை... உங்களை விட யார் அக்காவை இவ்வளவு ஸ்மார்ட்டா சமாளிக்க முடியும் சொல்லுங்க..” என்று சூழ்நிலையை மாற்ற அனு தன் அக்கா புராணத்தை தொடங்க
“அது மறுக்க முடியாத உண்மை... அவளை சமாளிக்க ஒரு நாளைக்கு பத்து போத்தல் ரெட்புல் குடுத்தாலும் பத்தாது...”
“அதுதான் மாமா அக்கா....அவ எதை எப்போ எப்படி செய்வானு யாராலேயும் கெஸ் பண்ணமுடியாது... ஆனா நம்மை சுத்தலில் விட்டுருவா...” என்று ஶ்ரீ பற்றிய நியாபகத்தில் பேசினாள் அனு..
இவர்களது உரையாடலை கதவின் மறைவில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தாள் ஶ்ரீ....
ஶ்ரீயிற்குமோ சில நாட்களாய் ரிஷியின் நடவடிக்கையிலும் அனுவின் திடீர் வரவிலும் சந்தேகம் எழுந்தது... ஆனால் அதற்கு பின்புலமாக தனக்கு வந்துள்ள ஏதோவொரு உடல்நலக்குறைவு காரணமாகயிருக்குமென்று அவர்களது பேச்சிலிருந்து அறிந்தவள் அவள் ரிப்போர்ட்டினை வேறொரு டாக்டரிடம் காட்டி உண்மையை அறிந்து கொண்டாள்... அதை அறிந்தவளுக்கு தான் உயிர் வாழப்போவது இன்னும் கொஞ்ச நாட்களே என்று உறுதியாகிவிட ரிஷியை பிரிவதென்று முடிவு செய்தவள் அவனுக்கு தெரியாது தன் வங்கிக்கணக்கிலிருந்த பணத்தை விட்றோ செய்து கொண்டு அவனுக்கு மெயிலின் மூலம் அவனை பிரிந்து செல்வதாகவும் குழந்தை பிறந்ததும் குழந்தை அவன் கைகளுக்கு வந்து சேரும் என்று செய்தியனுப்பியவள் வீட்டாருக்கு தெரியாமல் சாமர்த்தியமாய் வீட்டிலிருந்து வெளியேறு இங்கு ஒரு டாக்டரின் நிழலில் அவரது வீட்டில் தங்கியிருக்கிறாள்....
ஆனால் அவள் அறியாத விஷயம் இந்தநொடிவரை அவள் எப்படி இருக்கிறாள் என்ன செய்கிறாள் என்று அனைத்தும் ரிஷி அறிவான் என்பதே....
காமாட்சியம்மாவிடம் தன் கதையை கூறிமுடித்தவள்
“காமுமா ரிஷி அத்தான் எப்பவுமே சந்தோஷமாக இருக்கனும்னு தான் அவரை பிரிந்து வந்தேன்.. நான் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. நீங்க எனக்கு ஒரு உதவி மட்டும் பண்ணுறீங்களா??”
“சொல்லுங்கமா..”
“குழந்தை பிறந்ததும் எனக்கு ஏதாவது நடந்துச்சுனா குழந்தையை எங்கவீட்டுல கொண்டு போய் சேர்த்துடுவீங்களா??? இந்த குழந்தை என் அத்தானோட வாரிசு... அது அந்த குடும்பத்துல தான் வளரனும்.. இதை மட்டும் எனக்காக பண்ணுறீங்களா??”
“என்னம்மா இப்படி பேசுறீங்க.. உங்களுக்கு எதுவும் நடக்காது... நீங்களும் குழந்தையும் ஐயாவோட சேருவீங்க.. நீங்களும் ஐயாவும் நூறு வருஷம் சந்தோஷமாக வாழுவீங்க.. அதை இந்த கண்ணால பார்த்து நான் ரசிப்பேன்...” என்று காமாட்சி சொல்ல விரக்தியாய் ஒரு புன்னகையை சிந்திவிட்டு ஶ்ரீ அவர் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN