மாயம் 60

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன் கோபம்
கூட என்னை பாதிக்கவில்லை
ஆனால் உன் ஒதுக்கமும்
பாராமுகமும்
என்னை
தினம்
வாட்டி வதைக்கிறது...

ரிஷி வெளிநாடு சென்று இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது.. இந்த ஒருவாரமும் அவனிடமிருந்து நேரம் தவறாது அழைப்பு வந்தது... ஆனால் ஶ்ரீயை அழகாக தவிர்த்தான்... தினமும் வீடியோ கால் எடுப்பவன் குழந்தையை பற்றி விசாரித்துவிட்டு குழந்தையை சற்று நேரம் கொஞ்சிவிட்டு ஶ்ரீ ஏதாவது கேட்க முற்படும் வேளையில் வேலையிருப்பதாக கூறி அழைப்பை துண்டித்துவிடுவான். ஒரு நாள் அவள் விடாப்பிடியாக பேச முயல அழைப்பை துண்டித்தவன் அனுவின் இலக்கத்திற்கு அழைத்து குழந்தையை காட்டுமாறு கூற அவளும் அவன் வேண்டுகோளின் படி ஶ்ரீயின் அறையிற்கு சென்று வீடியோவினூடாக குழந்தையோடு பேசச்செய்தாள்... குழந்தையோடு பேசி முடித்ததும் அவன் அனுவோடு உரையாட ஆரம்பித்துவிட்டான்... பின் ஶ்ரீயிடம் பிறகு பேசுவதாக கூறிய ரிஷி அழைப்பை துண்டித்துவிட்டான்....
அனுவின் ஏதும் காட்டிக்கொள்ளாத போதிலும் ஶ்ரீயிற்கு ரிஷியின் ஒதுக்கம் பெரிதும் பாதித்தது... அவன் நேரடியாக திட்டியிருந்தால் கூட ஏதேனும் செய்து அவனை சமாதானப்படுத்தியிருப்பாள்... ஆனால் அவனது இந்த ஒதுக்கம் அவள் எதிர்பாராதது... எப்போதும் போல் ஏதேனும் அதிரடியாக செய்வதற்கு அவளுள் தயக்கம் இருந்தது.. அதற்கு காரணம் தவறு முழுதும் அவள் மீதிருந்ததே...
ஆனாலும் இப்பிரச்சினையை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருவதென்று அவளுக்கு தெரியவில்லை....
இவ்வாறு ஒரு வாரம் சென்றுவிட அன்று ஶ்ரீயை பார்க்க குழந்தையோடு வந்திருந்தனர் சுபாவும் ஹேமாவும்...
வந்தவர்கள் குழந்தையை கொஞ்சிவிட்டு ஶ்ரீயை நலம் விசாரித்தனர்.... எப்போதுமிருக்கும் அந்த துடிதுடிப்பு அவளிடம் இல்லாதிருந்ததை சென்றமுறை வந்தபோது கண்டுகொண்ட சுபா ஹேமாவிடம் கண்ஜாடை காட்ட அவளும் ராதாவிடம் தன் குழந்தையை ஒப்படைத்துவிட்டு ஶ்ரீயை தனியே அழைத்து சென்றாள்...
“என்னடி ஆச்சு..??”
“எதுவும் இல்லை..”
“உன் முகத்தை பார்த்தாலே தெரியுது.. என்னதுனு சொல்லு...”
“அதான் ஒன்னும் இல்லைனு சொல்றேன் தானே...மறுபடியும் என்ன கேட்குற??”
“ஶ்ரீ உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்.. மறைக்காமல் உண்மையை சொல்லு... இல்லைனா உன்கூட பேசமாட்டேன்...”
“நீயும் பேசமாட்டியா??சரி பேசாத... யாரும் என்கூட பேசவேண்டாம்.. எல்லாரும் என்னை ஒதுக்கிடுங்க... நான் எங்கயாவது கண்காணாத இடத்துக்கு போயிடுறேன்...” என்றவளது கண்கள் கலங்கி கண்கள் நீரைச் பொழிய அதில் பதறிய ஹேமா விரைந்து அவளை அணைத்துக்கொண்டு
“ஏய் லூசாடி நீ. . நான் சும்மா ஏதோ சொன்னேன். அதுக்கு போயிட்டு இப்படி சின்ன பசங்க மாதிரி அழுற?? கண்ணை துடை. “ என்ற ஹேமா ஶ்ரீயை தன்னிடமிருந்து விலக்கி அவளது கண்களை துடைத்துவிட
“சொல்லு ஶ்ரீ.. உனக்கும் ரிஷி மாமாவுக்கும் என்ன பிரச்சனை???” என்று ஹேமா வெளிப்படையாகவே கேட்க இத்தனை நாட்களாய் மனதை அழுத்திய பாரத்தை தன் தோழியிடம் இறக்கி வைத்தாள் ஶ்ரீ....
ஶ்ரீ கூறியவற்றை கேட்டவள்
“ஶ்ரீ அத்தான் கொஞ்ச நாள் டைம் தானே கேட்டிருக்காரு... அதை நீ அவருக்கு கொடுக்குறதுல என்ன தப்பு?? இரண்டு பேரோட லைப்பும் நல்லா இருக்கனும்னு தானே அத்தான் டைம் கேட்டாரு.. “
“நீயும் ஏன்டி என் நிலமை புரியாமல் பேசுற??? தப்பு பண்ணதுக்கு நாலு திட்டு திட்டுனா கூட பரவாயில்லை... இப்படி பேசாமல் அவாய்ட் பண்ணும் போது ரொம்ப கஷ்டமாக இருக்குடி.. அதை கூட நான் பண்ண தப்புக்கு தண்டனையாக ஏத்துக்குவேன்.. ஆனா இது எங்க உறவுக்குள்ள இன்னும் விரிசலை கொண்டு வந்திடுமோனு பயமா இருக்கு... உனக்கு ரிஷி அத்தானை பத்தி தெரியாது.... அவரு யாரு தப்பு பண்ணாலும் மன்னிக்கனும்னு நினைச்சா உடனே மன்னிச்சிருவாரு.. ஆனா கொஞ்சம் டைம் வேணும்னு சொன்னாருனா அவங்க மேல அவருக்கு இருந்த நம்பிக்கை பாசம்லாம் குறைஞ்சிடுச்சுனு அர்த்தம்... ஒருமுறை அத்தானோட ஒரு பார்ட்டிக்கு போயிருந்தப்போ அவரோட காலேஜ் மேட் பவித்ராவை மீட் பண்ணேன்.. அத்தானும் அவங்களும் திக் ப்ரெண்ட்ஸ்ஸாம்... இவங்களுக்கு அத்தான் யாரு கூடயும் க்ளோஸா பழகுனா பிடிக்காதாம்.. இதை அவங்க ப்ரெண்ட்ஸ் லவ்னு சொல்லி அவங்களை கன்பியூஸ் பண்ணியிருக்காங்க.. இவங்களும் அதை நம்பி அத்தானுக்கு ப்ரபோஸ் பண்ணியிருக்காங்க... இவங்க ப்ரபோஸ் பண்ணதும் அத்தான் டென்ஷன் ஆகி நல்லா திட்டிட்டு அது லவ் இல்லை பிரண்ட்ஸிப்பில் வருகிற பாஸஸிவ்னஸ்னு புரியவைச்சாராம்... இவங்களும் அதை ரியலைஸ் பண்ணி அத்தான் கிட்ட சாரி கேட்டிருக்காங்க... அத்தான் கொஞ்சம் டைம் தானு சொல்ல இவங்களும் விட்டுட்டாங்களாம்.. ஆனா அதற்கு பிறகு இன்னும் வரை அத்தான் அவங்க கூட முன்னமாதிரி பேச மாட்டாராம்... அதை அவங்க ரொம்ப பீல் பண்ணி சொன்னாங்க... “
“ஏன்டி அவங்க சிட்டிவேஷனும் உன்னோட சிட்டிவேஷனும் ஒன்னா?? எங்க மறுபடியும் முன்ன மாதிரி பழகுன அந்த பொண்ணு மறுபடியும் காதல் கீதல்னு வந்து நிற்குமோனு மாமா பயந்திருப்பாங்க.. அதான் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணியிருப்பாரு..”
“இல்லடி... இப்போ வரைக்கும் அத்தான் அப்படி தான் இருக்காரு... நான் பார்ட்டி முடிந்து வீட்டுக்கு வந்ததும் அத்தான்ட கேட்டப்போ அவரு ஒருத்தங்க கிட்ட மன்னிக்க டைம் கேட்குறேன்னா அவங்களை முழு மனசா என்னால என்னைக்கும் மன்னிக்க முடியாதுனு அர்த்தம்னு சொன்னாரு.. அது மாதிரி எனக்கும் நடந்திடுமோனு பயமா இருக்கு.... அவரு நல்லா இருக்கனும்னு தான் அந்த தப்பை நான் பண்ணேன்...ஆனா அது அத்தான் என்னை இவ்வளவு தூரம் வெறுக்க வைக்கும்னு நினைக்கலை.... இத்தனை நாட்கள்ல அத்தான் இப்படி பேசாமல் இருந்ததில்லை... அடுத்த கிழமை அத்தானோட பர்த்டே வருது..அந்த நாள் இன்னொரு ஸ்பெஷலான நாள்கூட.. அத்தான் இப்படி என்மேல கோபமாக இருந்தா எப்படி டி.. கஷ்டமா இருக்குடி..”
“உன் நிலைமை புரியிதுடி... ஆனா.. எனக்கு என்ன சொல்லுறதுனு தான் தெரியல.. மாமா இங்க இருந்தாலாவது ஏதாவது பண்ணலாம். ஆனா.... ஒரு விஷயம் மட்டும் எனக்கு நிச்சயமாக தெரியும்... நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது.. மாமா அவ்வளவு தூரத்திற்கு ஏதும் தப்பா நடக்கவிடமாட்டாரு... அப்படியிருந்தா நீ யாரும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பினப்போவே உனக்கு நல்லா கொடுத்திருப்பாரு... உனக்காகனு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டவரு எதையும் தப்பா யோசிக்கமாட்டாரு.... உன்னை விட அந்த மனுஷன் தான் உன் நிலைமையை நினைச்சி துடிச்சாரு... நீ எங்க இருக்கனு தெரிஞ்சும்கூட உன்னோட விருப்பத்துக்காக நீ பத்திரமாக இருக்கங்கிறத தவிர வேறு எதையும் எங்க யாருகிட்டயும் செல்லலை...உன்னோட துணைக்கு இருந்த காமாட்சி ஆண்டி கூட ரிஷி மாமாவோட அரேன்ஜ்மண்ட் தான்... நீ வீட்டை விட்டு போனதும் உன்னை காணோம்னு எல்லாரும் தேட ஆரம்பிச்சோம்.. அப்போ மாமா தான் நீ அவரோட பிரண்டோட வைய்ப் ரேகாவோட வீட்டுல தங்கப்போறதா சொன்னாரு... அத்தை ஏன் எதுக்குனு எவ்வளவோ விசாரிச்சும் மாமா சொல்லலை... ரித்வி கூட விசாரிச்சான்... ஆனா மாமா சொல்லலை. உங்க வீட்டுலயும் மாமா அப்படி தான் சொல்லியிருக்காரு... ஆண்டி அழுத ஆர்ப்பாட்டம் பண்ணவும் நீ எங்க இருக்கனு சொல்லாமல் தான் பார்த்துக்கிறதாகவும் உன் டெலிவரி நேரத்துல உன்னை பார்க்ககூட்டிட்டு போறதாகவும் சொல்லி கன்வின்ஸ் பண்ணியிருக்காரு...அனுவுக்கும் உனக்கு இப்படி பிரச்சனையிருக்குனு தெரிஞ்சதால மாமாவுக்கு சப்போர்ட்டா பேசி ஆண்டியை சமாளிச்சிருக்கா...”
“என்ன சொல்லுற?? அப்போ அத்தானுக்கு நான் டாக்டர் ரேகா வீட்டுல இருந்தது தெரியுமா??”
“ஆமா.. இது கூட எனக்கு அனு சொல்லி தான் தெரியும்...நீ ரேகாகிட்ட ரிப்போர்ட்டை காட்டி கன்சல்ட் பண்ணதும் அவங்ககிட்டயே ஏதும் வேக்கன்சி இருக்கானு கேட்டுட்டு வீட்டுல இருந்து யாருகிட்டயும் சொல்லாமல் கிளம்பி போனதும் அவங்க சொல்லி தான் மாமாவுக்கு தெரியுமாம்.... அவங்க சொல்லியிருக்காட்டி நிச்சயம் மாமா தவிச்சு போயிருப்பாங்க... ஏன்டி இப்படி தான் பிரச்சனையை கண்டு ஓடி ஒளிவியா?? உன்னையே தன்னோட உயிராக நினைச்சிட்டு இருக்க மனிஷனை பத்தி ஒரு நிமிஷம் கூட நினைச்சுப்பார்க்க தோணலையா???”
“அவரை பத்தி நினைச்சதால தாண்டி வீட்டை விட்டு கிளம்புனேன்... அத்தான் என்னை கண்மூடித்தனமாக காதலிக்கிறாருடி... எனக்கு இப்படி ஒரு பிரச்சனைனு எனக்கு தெரியவந்தபோது கூட எனக்கு எந்தவித கவலையும் இல்லைடி. ஆனா அவரு சொன்ன அந்த வார்த்தை... எனக்கு எதுவும் நடந்தா உயிரோட இருக்கமாட்டேன்னு அவரு சொன்னது தான்டி என்னை இந்த முடிவை எடுக்கவைத்தது.... அப்போ கூட எதுக்காக இந்த விஷயத்தை முதல்ல அத்தானுக்கு தெரியப்படுத்துனனு தான் நான் அந்த கடவுள்கிட்ட சண்டை போட்டேன்... அத்தானுக்கு முதல்ல எனக்கு இந்த விஷயம் தெரிய வந்திருந்தா நிச்சயம் இந்த விஷயத்தை அத்தானுக்கும் வீட்டாட்களுக்கும் தெரியாமல் மறைத்து கடைசி வரைக்கும் அத்தான் கூடவே இருந்து சந்தோஷமாக வாழ்ந்து பிள்ளையை நல்லபடியா பெத்துகுடுத்துட்டு சந்தோஷமாக செத்துபோயிருப்பேன்....”
“ஶ்ரீ இதை தானே மாமாவும் செய்தாங்க.. எங்க உனக்கு தெரிந்தா பயப்படுவியேனு தான் சொல்லாமல் மறைச்சிருக்காங்க...”
“நீ புரிஞ்சி தான் பேசுறியா?? கடைசி வரைக்கும் எனக்கு எதுவும் தெரியாமல் ஒருவேளை நான் டெலிவரி நேரத்துல இறந்துபோயிருந்தா அத்தானும் நிச்சயம் உயிரோட இருந்திருக்க மாட்டாங்க.... அவங்களுக்கு எப்பவும் நான் தான் பஸ்ட்...”
“நீ பிரிந்து போனதால மட்டும் மாமா ஏதும் தப்பான முடிவு எடுக்கமாட்டாங்கனு நீ எப்படி நினைச்ச??”
“நான் பிரிந்து போனதுக்கு காரணம் என்னோட பிரிவை அத்தான் பழகிக்கனும்னு தான்... அதோடு அந்த மெயில்ல நான் போற விஷயத்தை மட்டும் சொல்லலை... என்மேல நீ வச்சிருந்த காதல் உண்மைனா நான் திரும்பி வந்தாலும் வராவிட்டாலும் நம்ம குழந்தைக்கு நீங்க தான் அம்மா அப்பா எல்லாமாவா இருக்கனும்னு என்னோட கடைசி ஆசையா சொல்லியிருந்தேன்... அதை மீறி அத்தான் ஏதும் செய்யமாட்டாருனு எனக்கு நிச்சயமாக தெரியும்... அந்த நம்பிக்கையில தான் நான் திடமாக இருந்தேன்..”
“எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியலை... உன்னோட நிலையில இருந்து பார்த்தா நீ செய்தது சரினு தோனுது.. அதே மாமாவோட நிலையிலிருந்து பார்த்தா தப்புனு தோனுது... நீங்க இரண்டு பேரும் மனம் விட்டு பேசுனா தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்...”
“நீ சொல்லுறது உண்மை தான்.. ஆனா அத்தான் தான் என்கிட்ட முகம் கொடுக்கமாட்டேங்கிறாரே... நேருல இருந்தாலாவது ஏதாவது தாஜா பண்ணி அவரை மலையிறக்கலாம்...”
“சரி அவரை வரவழைச்சிடலாம்..” என்று ஹேமா கூற ஶ்ரீயோ
“எப்படிடி???”
“அதான் அத்தை இருக்காங்களே... அவங்ககிட்ட ஹெல்ப் கேட்கலாம்...”
“சூப்பர் ஐடியாடி பப்ளி.... வாழ்க்கையில முதல் முறை இன்னைக்கு தான் அந்த மூளையை கரெக்டா யூஸ் பண்ணியிருக்க..” என்று கூறி சிரிக்க ஹேமாவோ ஶ்ரீயை முறைத்தாள்...
இவ்வாறு ரிஷியை நாடுதிரும்ப வைப்பதற்கான வேலையில் இறங்கினர் இருவரும்...
அவர்களது வேண்டுகோளின் பெயரில் சுபா தன் மகனை வரவைக்க நாடுதிரும்பியவன் தன்னறைக்கு செல்ல அவன் எதிர்பாரா நேரத்தில் பின்னிருந்து அணைத்துக்கொண்டது ஶ்ரீயின் கரங்கள்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN