teaser

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“இதில் இருக்கிற புத்தகம் எல்லாம் நான் மட்டும் படிக்க மாட்டேன். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் வாசிக்கற அறை இது” என்று தன் கணீர் குரலில் சொல்லியபடி வந்து அமர்ந்தார் எழுபது வயது பாட்டி. இல்லை இல்லை… பரசுராம் சொல்லி விட்டுப் போன அம்மா.

“இவங்க எப்போது வந்தாங்க… அவங்க வந்தது கூட தெரியாமையா… வாய் பிளந்து நின்றேன்… அச்சோ! நம்மளை கண்டு கொண்டார்களே’ என்ற எண்ணத்தில் இவள் அவசரமாய் அவருக்கு வணக்கம் சொல்ல... அவரோ அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்த படி அதை ஒரு தலை அசைப்புடன் ஏற்றார்.

“என் பெயர் தான் தேனாட்சி. என்னுடைய பெயர்லிருந்து நீ இங்கு வேலைக்கு வரலாம்னு சொல்லி உனக்கு ஒரு உத்தரவு கடிதம் வந்திருக்குமே” அவரின் கேள்வியில் இவள் அவசரமாய் தன் கைப்பையை திறந்து அதிலிருந்த கடித்ததை எடுத்து அவர் முன் இவள் நீட்ட...

வாங்கிப் பார்த்தவர், “உன் பெயர்” கேட்க

“மதுவிஷாகா… மேம்”

“வயது”

‘எல்லாம் அதிலேயே இருக்குமே’ என்று நினைத்தபடி, “இருபத்தி ஆறு” என்று இவள் பதில் தர

“ம்ம்ம்... நான் தான் இந்த வீட்டில் மூத்த தலைமுறை மனுஷி. என் மகன் கண்ணப்பன். அவன் பேத்தி அதாவது, என் கொள்ளுப் பேத்தி தாராவைத் தான் நீ பார்த்துக்கணும். ஏதோ ஸ்பெஷல் கேர் சைல்ட்டுக்கு அதை பற்றி நீ படித்திருக்கியாமே... என் மகன் சொன்னான். அதனால் தான் உன்னை வேலையிலே சேர்த்துக்க ஒத்துகிட்டேன். நாங்க மூன்று பேர் மட்டும் தான் இந்த வீட்டில். அதனால் நீ இங்கேயே தங்கிக்கலாம்.
வாரத்தில் ஒரு நாள் உனக்கு லீவ். அந்த நாள் உனக்கு எந்த நாள்னு நீயே முடிவு செய்துக்கோ. சாப்பாட்டில் உனக்குப் பிடித்தது நீ சாப்பிட சைவம், அசைவம்னு எதுவா இருந்தாலும் சமையல்காரங்க கிட்ட முந்தின நாளே சொன்னா செய்து தந்துடுவாங்க. நீ என்ன வேணும்னாலும் உனக்கு வேண்டியதை சாப்பிடலாம். முழுக்க முழுக்க உன் வேலை தாராவைப் பார்த்துக் கொள்ள தான். அவளை சாப்பிட வைத்து, குளிக்க வைத்து, உணவு, மாத்திரை, எக்ஸர்சைஸ்… இப்படி எல்லாம் உன் பொறுப்பு.” அந்த காலத்து டிகிரி என்பதால் ஆங்கிலம் சரளமாகவே வந்தது அவருக்கு.

“இன்னும் சொல்லப்போனா, அவ ஏதாவது பங்ஷனுக்கு எங்க கூட வரணும்னா கூட நீ தான் அவளுக்கு அழகா டிரஸ் செய்து விட்டு, நீயும் அவ கூட வரணும்” இதைச் சொல்லும்போதே அவர் பார்வை மதுவின் முகத்தை அப்படி அவதானித்தது.

heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat heart beat

“ஹலோ இந்திரன்... ஹவ் ஆர் யூ? என்ன ஞாபகம் வைத்துப் போன் செய்திருக்கீங்களே” அவ்வளவு தான்... அடுத்த நொடி அதிர்ச்சியில் முகம் வெளுக்க தான் எங்கு இருக்கிறோம் என்பதையும் மறந்தவளாக, உடல் விறைக்க, அந்த பெயரை விட்டு தூர ஓட்டமும் நடையுமாக பதட்டத்துடன் மறுபக்கம் விரைந்தாள் அவள்.

‘என்ன மாதிரி பெயர் இது… ஏன் என் வாழ்வில் இந்த பெயர் நுழைந்தது? ஏன் இத்தனை வருடம் கழித்தும் எனக்கு இப்படி ஒரு பாதிப்பை இந்தப் பெயர் கொடுக்கிறது’ என்ற எண்ணத்துடன் விரைந்த அவள் முகமோ சொல்லொனாத வேதனையைக் காட்டியது.

இவள் தன் நடையில் வேகம் கூட்டி வந்ததால், ஒரு திருப்பத்தில் எதிர்பாராமல் இவள் ஒருவன் மேல் மோதி விட, இவளுக்கு என்ன நேரமோ... அப்போது அவன் கையில் வைத்திருந்த பொருள் ஒன்று தவறி விழுந்து சுக்கு நூறாய் உடைந்து சிதற, அதில் இன்னும் பதறியவள், “சாரி சார்... சாரி சார்” என்றபடி அவன் முகத்தையும் பார்க்காமல் இவள் விலக நினைக்க

அவனோ அவளின் நோக்கம் புரிந்து அதை தடுப்பது போல் அவள் கையை எட்டிப் பிடித்தவன், “அறிவு இருக்கா உனக்கு? எவ்வளவு காஸ்ட்லியான பொருள் இது தெரியுமா. அதிலும் நான் பார்த்துப் பார்த்து வாங்கின பொருள். இதைப் போய் உடைச்சிட்டீயே” என்று அவன் கத்தவில்லை என்றாலும் அழுத்தமாய் வார்த்தைகளை அவளை நோக்கி வீச

இவளுக்கு உடம்பு உதறியது. அதற்குள் சத்ததில் சிலபேர் அங்கு கூடிவிட, அங்கு வந்த ரஞ்சித், “ஹலோ மிஸ்டர், என்ன பிரச்சனை இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். உடைந்த பொருளுக்கு நான் பணம் தரேன். முதலில் மது கையை விடுங்க. பொது இடத்தில் ஒரு அந்நிய ஆண் இப்படி தான் முன்ன பின்னே அறியாத பெண்ணின் கை பிடிப்பாங்களா?” இவன் புதியவனிடம் அதிகாரம் செய்ய

அவனோ, ‘நீ யார்டா என்ன அதிகாரம் பண்றதுக்கு?’ என்பது போல் அவனைப் பார்த்தவன், மதுவின் கையை இன்னும் அழுத்திப் பிடித்து, “உடைந்த பொருளுக்கு பணம் தரீயா? சரி தான்… எல்லாத்தையும் பணத்தால் அளவு கோலா பார்ப்ப போல... இது என் லவ்வருக்காக என் ஹனிக்காக நான் பார்த்துப் பார்த்து வாங்கியது. அப்போ இதோட மதிப்பு என்னனு உனக்குத் தெரியுமா? முதலில் காதலாவது நீ செய்திருக்கீயா?” என்று அவன் ஏளனமாய் கேட்க

பல்லைக் கடித்தான் ரஞ்சித். உடனே தனக்கு இருந்த மனநிலையில் மது, “சார்... என் மேல் தான் தப்பு. அதான் நான் மன்னிப்பும் கேட்டுட்டனே... இப்போ உங்களுக்கு உடைந்த அதே பொருள் தானே வேணும்? இங்க வேற பீஸ் இருக்கான்னு கேட்கிறேன். இல்லனா, எங்கு கிடைத்தாலும் எவ்வளவு நாள் ஆனாலும் உங்களுக்கு வாங்கி தந்திடுறேன்” இவளின் பதிலில்,

“ஹேய் மது... செய்த தப்புக்கு தான் பணம் கொடுக்க..” அடுத்த நொடி ரஞ்சித்தின் கையை அழுத்தப் பற்றி அவனின் பேச்சை நிறுத்தியிருந்தாள் அவள்.

இவள் ரஞ்சித்தின் கை பிடித்த, அதே நேரம் தான் பிடித்திருந்த அவளின் கையை விடுவித்தான் அந்த புதியவன். பின் அங்கேயே அவன் கேட்ட பொருள் வேறு ஒன்று இருக்கவும் அதைப் பேசி பில் போட்டு என்று அவள் பதட்டத்துடனே இருக்கவும்… அவளுக்கு அதரவாக ரஞ்சித் அவளின் தோள் மேல் தன் கையை படற விட மது அதை எல்லாம் உணராமல் அந்தப் புதியவன் கையில் பொருளை கொடுக்க, அவன் பார்வையோ மதுவின் தோளைச் சுற்றிப் படர விட்டிருந்த ரஞ்சித்தின் கை மீதே இருந்தது.

பின் அவளிடமிருந்து பொருளை வாங்கியவன், “பொது இடத்திலே நீங்க மட்டும் இப்படி இருக்கலாமா மிஸ்டர்?” என்று கண்ணாலேயே மதுவின் தோளை சுட்டிக் காட்டி செய்தி சொன்னவன், பின் விரைந்து அங்கிருந்து சென்று விட

ரஞ்சித்தோ, அவனின் கேள்வியில் ‘இவனும் நானும் ஒன்றா?’ என்ற நிலையில் முறைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் மது இல்லை. அவள் நினைவு முழுக்க, கேட்ட அந்த பெயரே ஓட... எந்த சலனமும் இல்லாமல் ரஞ்சித்துடன் நடந்தாள் அவள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN