மண்ணில் தோன்றிய வைரம் 2

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முதல் நாள் வேலைக்கு கிளம்பிய அஸ்வினை அவனது குடும்பத்தார் அனைவரும் வாழ்த்து மழையால் நனைத்தனர். அவனது சித்தி மற்றும் தாத்தாவின் ஆலோசனைக்கிணங்க அவனது சித்தப்பா அவனை ட்ராப் பண்ணுவது என்று முடிவானது.

அஸ்வினை அவனது வேலைத்தளத்தில் இறக்கி விட்ட அவனது சித்தப்பா

"கண்ணா நீ உன்னோட அப்பா பெருமை படுகிற மாதிரி பெரிய இடத்துக்கு வரணும். அதான் இந்த சித்தப்பாவோட ஆசை."

"சித்தப்பா நீங்க ஆசைப்படுற மாதிரி பெரிய இடத்துக்கு வருவேன். ஆனால் அப்பவும் நான் உங்கள் மகன் அஸ்வின் தான்" என்று தன் சித்தப்பாவின் கூற்றை நேரடியாக மறுக்காது தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினான்.

காரியாலயத்தில் ரிசப்ஷனை அடைந்த அஸ்வின் மேனேஜரின் அறையை கேட்டு அறிந்து கொண்டு அவரது அறையை நோக்கி நகர்ந்தான். கதவை தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே நுழைந்த அஸ்வின் தன்னுடைய அபாயின்மன்ட் ஆடரை மேனேஜரிடம் கையளித்தான். அதனை வாங்கிய மேனேஜர் வாசித்து விட்டு அவனை வரவேற்றார். மேலும் சில நிமிட உரையாடலுக்கு பிறகு அஸ்வினை சார்மன் அறைக்கு அழைத்து சென்றார் மேனேஜர்.

கதவை தட்டிவிட்டு உள்நுழைந்த அஸ்வின் மற்றும் மேனேஜரை காலை வணக்கத்துடன் வரவேற்று அமருமாறு பணித்துவிட்டு வேலை சம்பந்தமான சிறு அறிமுறையை மேனேஜரின் உதவியுடன் விளக்கிவிட்டு மேனேஜரை அவரது அறைக்கு திரும்புமாறு பணித்தாள் சாரு.

பின் அஸ்வினிடம்
"மிஸ்டர் தேஜஸ்வின் இந்த ஜாப் நிச்சயம் உங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். உங்களது திறமையை வெளிக்காட்டுவதற்கான ஒரு களமாக இதை நீங்க பயன்படுத்துவீங்கனு நம்புகின்றேன். ரொம்ப முக்கியமான விடயம் உங்களுடைய உழைப்பும் நம்ம கம்பனியோட வளர்ச்சிக்கு ரொம்ப அவசியம். சோ கீப் தட் இன்யோ மைன்ட். அன்ட் பீல் பிரி டு ஸ்யார் யோர் ஐடியாஸ் வித் மீ. தட்ஸ் ஆல். நௌ யூ கேன் லீவ்."

"கட்டாயமாக என்னுடைய முழு ஒத்தழைப்பும் நம் கம்பனிக்கு உண்டு மேம். இப்போ நான் என்னோட சீட்டுக்கு செல்கின்றேன் மேம்" என்று கிளம்பிய அஸ்வினை

"அப்புறம் மிஸ்டர் தேஜஸ்வின் நேற்று டின்னரை பாமிலியோட நல்லா என்ஜாய் பண்ணீங்களா??""

"மேம் உங்களுக்கு எப்படி..."

"நேற்று நானும் ஒரு கிளையண்டை மீட் பண்ண அங்க வந்திருந்தேன் அப்போ தான் நீங்க பாமிலியோட வந்திருந்ததை பார்த்தேன். ஆனா நீங்க என்னை கவனிக்கவில்லை."

"ஐயம் வெரி சாரி மேம் நான் சத்தியமாக உங்களை கவனிக்கவில்லை" என்று மன்னிப்பு கேட்ட அஸ்வினிடம்

"ஹேய் கூல் .நோ வொரிஸ்"

"தாங்யூ மேம். ஷல் ஐ லீவ் நௌ??" என்று அனுமதி கேட்டு நின்ற அஸ்வினிற்கு அனுமதி வழங்கினாள் சாரு.
அனுமதி வழங்கினாள் சாரு.

அஸ்வின் வேளையில் சேர்ந்த நாள் முதல் தன் நேரத்தை சரியாக பங்கிட்டு கொண்டான். சிறுவயதிலிருந்தே நேர ஒழுங்கை கடைபிடிப்பவனாகையால் அஸ்வினிற்கு இப்போது அது கஷ்டமாக இருக்கவில்லை. காலை முதல் தன் வேலையில் அர்ப்பணிப்புடன் இருப்பவன் இரவினை உடன்பிறவா உடன்பிறப்புகளுடனான சேட்டை,படிப்புடனும் , அன்னையாய் அரவணைக்கும் தன் குடும்பத்துடனும் செலவிட்டு தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் வரமாக எண்ணி மகிழ்வுடன் களித்தான். வீட்டில் மட்டுமல்லாது பணியிடத்திலும் அவனை அனைவரும் கொண்டாடினர்.

அவன் வேலையில் புலி என்றாலும் பிறரும் அதை பின்பற்ற மறைமுகமாக வலியுறுத்தி தட்டிக்கொடுத்த விதம், நட்பு பாராட்ட வேண்டிய இடத்தில் உச்ச கட்ட சேட்டைகளுடனும் வேலை என்று வரும்போது எறும்பின் கடமையுணர்ச்சியுடன் இருந்தது மட்டுமல்லாது பெண்களுடன் அவன் கண்ணியமாய் பழகும் விதம் கண்டு கடைநிலை ஊழியர்கள் முதல் மேலதிகாரிகள் வரை அனைவரின் நன்மதிப்பினையும் பெற்றுக்கொண்டான். அவனது சிரித்த முகமும் அவனது நகைச்சுவை கலந்த பேச்சும் அவனை வெறுப்பவர்களை கூட அவன் முன் மண்டியிட வைத்து விடும். குணத்தில் மட்டுமல்லாது நடை உடை பாவனையிலும் பாலிவுட் ஹீரோ போல் அட்டகாசமாக இருந்தவனுக்கு ஆபிஸில் பெண் விசிறிகள் தாராளம். இருந்தும் அளவுக்கதிகமாக தன்னை நெருங்க முற்படுபவர்களை தன் அக்கா தங்கை என்ற வார்த்தையிலேயே தள்ளி நிறுத்தினான். தனது அணுகு முறை சரியானதல்ல என்று அறிந்தும் கூட அவன் அதை திருத்திக்கொள்ள முயலாமைக்கு காரணம் அவனுக்கு வந்த புதிதில் கிடைத்த சில மொக்கை வாங்கிய அனுபவங்கள்....

வேலைக்கு சேர்ந்த இரு மாதத்திலேயே மேனேஜர் ஓய்வு பெற அஸ்வின் மேனேஜராக பதவி உயர்த்த பட்டான். அவனது விவேகம் மற்றும் ஆளுமையினை அறிந்த சாரு பதவி உயர்வில் எந்தவிதத்திலும் ஆட்சேபிக்க வில்லை. இப்படியே படிப்படியாக தன்னிலையினை உயர்த்திய அஸ்வின் தன் குடும்பத்தாருடன் நேரம் செலவளிக்கவும் தவறவில்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தன் உடன்பிறப்புக்களுடன் தன் நண்பனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு ஊர் சுற்றினான். தன் சித்தி மற்றும் பாட்டி கோயிலுக்கு அழைக்கும் போது மறுக்காது அவர்களுடன் சென்றான். தினமும் தாத்தா மற்றும் சித்தப்பாவுடன் ஜாகிங் என்று அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியினையும் வரமாய் எண்ணி மகிழ்ந்து வாழ்ந்தான்.ஆனால் அவனது மகிழ்ச்சியை கண்டு பொறாமையுற்ற விதி அவனது வாழ்வில் சித்தப்பாவின் உருவில் ஒரு புயலை கிளப்பியது.

வழமை போல் தன் கேபினில் அமர்ந்து பிசியில் கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை தன் புறம் திருப்ப சிணுங்கியது அஸ்வினின் மொபைல்.
மொபைலில் புது இலக்க தோன்ற டுரூ காலரின் உதவியினால் அது ஜி.எச் ஹாஸ்பிடல் என்று காட்டிக்கொடுக்க அவசரம் என்று உணர்ந்து காலை அட்டன்ட் செய்தான் அஸ்வின்.

அவன் பேசுவதற்கு முன்பே

" கண்ணா சித்தி பேசுறேன் டா. சித்தப்பாவ ஜி.எச் இல் அட்மிட் பண்ணி இருக்கோம். நீ உடனே வாட. டாக்டர்ஸ் எல்லாம் என்னன்னவோ சொல்லுறாங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. என் செய்றதுனு தெரியலடா சீக்கிரம் வாட.." என்று அழுதவாறு பேசிய சித்ராவிடம்

"சித்தி நீங்க பதட்டபடாம இருங்க. நான் இன்னும் அரை மணித்தியாலயத்தில் அங்க இருப்பேன்." என்று போனை அணைத்து விட்டு பர்மிசன் கேட்பதற்காக சாருவை காண அவளது அறை நோக்கி சென்றான்.

"எக்ஸ்கியூஸ்மி மேம்"

"எஸ் கம் இன்"

" மேம் எனக்கு ஒரு ஹாப் டே லீவ் கிடைக்குமா??"

" ஏன் அஸ்வின் எனிதிங் சீரியஸ்??"

"ஆமா மேம். சித்தப்பாவ ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கதா இப்போ தான் கோல் வந்தது. சித்தியால அங்க தனியா மேனேஜ் பண்ண முடியாது. சோ மேம்.."

"ஓகே அஸ்வின் உங்களை ரிலீவ் பண்ணுறேன். யூ கேன் லீவ். எந்த ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்காங்க??"

"இங்க ஜி.எச் ல தான் மேம் நான் கிளம்புறேன்."

" ஓகே நீங்க போய் பார்த்துட்டு என்ன ஏதுனு விவரம் சொல்லுங்க. ஏதும் ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளுங்க."
"தாங்கியூ மேம். நான் இப்போ கிளம்புறேன்." என்றவாறு ஆஸ்பிடல் நோக்கி கிளம்பினான் அஸ்வின்.

பயணப்படும் முன் வருணை அழைத்த அஸ்வின்

"வருண் ஒரு எமர்ஜன்சி. உன்னால உடனே உன்னோட ஆபிஸ் பக்கத்தில இருக்க ஜி.எச் வரைக்கும் போக முடியுமா?? சித்தப்பாவை ஜி.எச் இல் அட்மிட் பண்ணி இருக்கதா இப்போ தான் சித்தி கால் பண்ணாங்க. நான் இங்க இருந்து வர எப்படியும் வன் அவர் ஆகும். நீ அங்க போய் பார்த்துட்டு என்னனு கால் பண்ணுறியா??"

"ஓகே கூல் டா நான் இன்னும் பத்து நிமிடத்தில் அங்க இருப்பேன். நீ பதட்டப்படாம வா. நான் அங்கே என்னான்னு பார்த்துட்டு உனக்கு கால் பண்ணுறேன்."

"தாங்ஸ் டா. " என்று செல்லை அணைத்து விட்டு தன்னுடைய காரில் ஆஸ்பிடல் நோக்கி விரைந்தான்.

ஆஸ்பிடலினுள் நுழைந்த அஸ்வின் ரிசப்ஷனில் விசாரித்து ஐ.சி.யூ வினை நோக்கி சென்றான். ஐ.சி.யூ வாசலில் அழுது ஓய்ந்து போய் இருந்த சித்ராவினை கண்டவுடன் அவனது மனதில் வேரூன்றி இருந்த பயம் கிளை பரப்ப ஆரம்பித்தது. தனது சித்தியின் வேதனையை காணச்சகிக்காது தன் சித்தப்பாவின் உடல் நிலையினை அறியும் பொருட்டு சித்ராவிற்கு துணையாய் நின்றிருந்த வருணிடம் விரைந்தான்.

"வருண். சித்தப்பாவிற்கு என்னாச்சி?? டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க??"

அஸ்வினின் குரல் கேட்டு தலையை திருப்பிய சித்ரா அவனிடம் விரைந்து
"கண்ணா டாக்டர்ஸ் என்னன்னமோ சொல்லுகிறார்கள் டா. எனக்கு பயமா இருக்கு பா. சித்தப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுல?" என்று பயத்தால் அழும் சிறுபிள்ளையாய் மாறி தன்னிடம் வினவிய தன் சித்தியை ஆறுதல் படுத்தும் முகமாக

"சித்தி சித்தப்பாவிற்கு ஒன்றும் இல்லை.இன்னும் கொஞ்ச நேரத்தில் பாருங்க சித்தப்பாவிற்கு ஒன்னும் இல்லை. ஹீஸ் ஆல்ரைட் னு டாக்டர் சொல்ல போகிறாங்க" என்று தன் சிற்றன்னையை சமாதானப்படுத்துவதாக எண்ணி அலைப்புறும் தன் மனதையும் சமாதான படுத்த விளைந்தான். சித்ராவினை ஆறுதல் படுத்திய அவனது வார்த்தைகளால் அவனை ஆறுதல் படுத்தமுடியவில்லை. ஏனெனில் வருண் போனில் கூறிய வார்த்தைகள் அவனை கதி கலங்க வைத்திருந்தது.

போனில் வருண் கூறியதாவது
"அஸ்வின் அங்கிளுக்கு ஹாட் அட்டக்னு சொல்லுறாங்க. அதுவும் இது இரண்டாவது அட்டாக்காம். இமிடியேட்டா பைபாஸ் பண்ணணும்னு சொல்லுறாங்க. நீ சீக்கிரம் வந்தனா டாக்டரை மீட் பண்ணி தெரிந்து கொள்ளலாம்."

"ஓகே டா நான் இன்னும் பத்து நிமிடத்தில் அங்க இருப்பேன்.சித்திக்கு இதெல்லாம் தெரியுமா??"

"இல்லடா நான் இன்னும் ஏதும் சொல்லவில்லை."

"ஓகேடா. நீ ஏதும் சொல்லாத. நான் வந்து பார்த்துக்கொள்கிறேன்." என்று தனக்கு வருண் கூறியதை நினைத்தவனுக்கு தன் குடும்பத்தாரை நினைத்து நெஞ்சம் பதறியது.

வருணுடன் டாக்டரை காண சென்றவனுக்கு அவர் கூறிய செய்தி தலையில் இடியை இறக்கியது.

"மிஸ்டர் தேஜஸ்வின் உங்க அப்பாவோட ரிப்போர்ட்டை பார்த்தப்போ அவரோட இதயம் ரொம்ப வீக்கா இருப்பது தெரிய வந்தது. இதை சரிப்படுத்தினா தான் ஆப்பரேஷனை தாங்குற வலு அவரோட இதயத்திற்கு கிடைக்கும். இது ரொம்ப வயசானவங்களுக்கு செய்றது அவங்களோட உயிருக்கு ரிஸ்க். ஆனா உங்க அப்பாவுக்கு ஒரு வன் மன்த் டிரீட்மன்ட் கண்டினுயூ பண்ணோம்னா அவரோட இதயத்தை வலுப்படுத்தலாம். ஆனால் அந்த ஒரு மாதத்தில் அவரை ரொம்ப கவனமா பார்த்துக்கனும். பூட் டயட் மற்றும் ரெகுலர் எக்ஸர்சைஸ் , ரெகுலர் செக்கப் இதெல்லாம் சரியா பாலோ பண்ணனும். அப்புறம் அவரோட மென்டல் ஹெல்த்திலும் கவனம் எடுத்துக்கோங்க. பிறகு அவரோட இம்ப்ரூமண்டை பார்த்துட்டு ஆப்பரேஷனுக்கு டேட் பிக்ஸ் பண்ணலாம்."
என்று டாக்டர் கூறியதை கேட்டுவிட்டு வந்தவனுக்கு மனது தாளவில்லை.

என்னதான் குணப்படுத்தி விடலாம் என்று டாக்டர் கூறிய போதும் மறைமுகமாக அவர் உயிருக்கு அபாயம் உண்டு என்று எச்சரித்தது போலவே இருந்தது. என்னதான் மனம் நன்மையே நடக்கும் என்று சமாதானப்பட்டாலும் மூளையோ பாதகமான நிலையில் நின்று யோசிப்பதை நிறுத்தவில்லை. டாக்டரின் அறிவுறுத்தலுக்கமைய மாலை கிருஷ்ணன் ஐ.சி.யூ வில் இருந்து நார்மல் வாடிற்கு மாற்றப்பட்டார். அஸ்வின் அவ்விடைவேளையில் தன் சித்தியிடம் கிருஷ்ணரின் உடல் நிலையை பற்றி கூறினான்.

அவனை தடுத்த வருணிடம்
" இல்லை வருண். சித்திக்கு சித்தப்பாவின் உடல்நிலை பற்றி தெரிந்தா தான் அவங்க ரொம்ப கேர் எடுத்து பார்த்துப்பாங்க. அவங்க தான் எப்பவும் சித்தப்பா கூட இருப்பாங்க.சோ ஒரு எமர்ஜன்சினாலும் ஏதும் செய்வதற்கு அவங்களுக்கு சித்தப்பா ஹெல்த்தை பற்றி தெரிந்து இருக்கனும். சோ என்னை தடுக்காதே."

கிருஷ்ணரின் உடல்நிலை பற்றி அறிந்த சித்ரா முதலில் பயந்து அழுதாலும் அஸ்வினின் பேச்சாற்றலால் சித்ராவே அவனுக்கு தைரியம் சொல்லும் அளவிற்கு அவரை தைரியமூட்டியிருந்தான்.

கிருஷ்ணரை அறைக்கு மாற்றிய பின் அவருக்கு துணையாய் இருக்கின்றேன் என்று அடம்பிடித்த சித்ராவை சில பல காரணங்கள் கூறி வற்புறுத்தி அஸ்வின் வீட்டிற்கு அழைத்து செல்ல வருண் கிருஷ்ணருக்கு துணையாய் ஆஸ்பிடலில் இருந்தான். வீட்டிற்கு சென்றவுடன் குடும்பத்தாரை உரிய முறையில் சமாதானப்படுத்தி விட்டு சித்ராவிடம் கிருஷ்ணருக்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்குமாறு கூறி விட்டு தன் அறை நோக்கி நகர்ந்தான். குளித்து தயாராகிக்கொண்டிருந்தவனது கவனத்தை கலைத்தது சாருவின் அழைப்பு.

"ஹலோ அஸ்வின். நான் சாருணி பேசுறேன். அங்கிள் இப்போ எப்படி இருக்காரு??"

"ஹலோ மாம். ஈஸ் பைன் நௌ"

"ஓகே. என்னாச்சி அவருக்கு??"

"ஹார்ட் அட்டாக் மேம். பைபாஸ் பண்ணனும்னு டாக்டர் சொன்னாரு.ஆனால் அவரோட ஹார்ட்டுக்கு ஆப்பரேஷனை தாங்குறதுக்கான வலு இல்லையாம். சோ வன் மண்த் டிரீட்மன்ட் கொடுத்து ஹார்ட்டை வலுபடுத்திவிட்டு பிறகு பைபாஸ் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க"

"ஹோ.. அஸ்வின் நீங்க பயப்படாதீங்க அங்கள் சீக்கிரம் ரிகவர் ஆகிருவாரு. இப்போ நீங்க எங்க இருக்கீங்க ??"

"நான் சித்தப்பாவோட திங்ஸை எடுத்துட்டு போகலாம்னு வீட்டுக்கு வந்தேன்.ஏன் மேம் ??"

"அந்தப்பக்கம் வருகின்ற வேலை ஒன்று இருந்தது. அதான் அப்படியே அங்கிளையும் பார்த்துட்டு போகலாம்னு பார்த்தேன்."

"சாரி மேம். நைட் விசிட்டர்ஸ் நாட் அலாவ்ட்."

"ஒகே அஸ்வின் நாளைக்கு வந்து பார்க்கின்றேன்."

"ஓகே மாம். அப்புறம் ஒரு ரிக்வஸ்ட். ஒரு டூ டேஸ் எனக்கு லீவ் அப்ரூவ் பண்ணனும். நான் உங்களது மெயிலுக்கு என்னோட லீவ் ரிக்வெஸ்ட் லெட்டரை சென்ட் பண்ணுறேன்."

"ஓகே அஸ்வின் ரிக்வஸ்ட் அப்ரூவ்ட்."

"தாங்கியூ மேம். டேக் கேர்"

"ஓகே பாய்."
என்று போனை அணைத்த சாருவை பார்த்தவாறு அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தான் சஞ்சய்.

"என்ன சஞ்சய் அப்படி பார்க்கிறாய். ஏதோ பார்க்காததை பார்த்தது மாதிரி பார்க்கிற??"

"அதான் நீயே சொல்லிட்டியே இதுவரைக்கும் பார்க்காததை பார்த்தேன்னு"

"என்னடா நான் சொன்னதையே எனக்கு ரீவைன் பண்ணுறியா??"

"இல்லையே.. நீ கேட்டதுக்கு பதில் சொன்னேன்."

"மிஸ்டர். சஞ்சய் நீங்க பேசுவது எனக்கு சத்தியமா புரியல. கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க."

"யாரு உனக்கா புரியவில்லையா?? இதை நான் நம்பனுமா??"

"ஆமா சஞ்சய்.. நீ நம்பி தான் ஆகனும். சரி சொல்லு ஒன்றும் இல்லாத உன் மண்டைக்குள் என்ன ஓடுது??"

"என்ன சொன்ன ?? என்னோட மண்டையில் ஒன்றும் இல்லையா?? "

"ஐயோ சஞ்சய் அதை பிறகு சொல்கின்றேன். இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு"

"அந்த பயம் இருக்கட்டும். சரி இப்போ உன்னோட மேட்டருக்கு வருவோம். இப்போ ஜி.எச் போற வழியில் உனக்கு என்ன வேலை இருக்கு?? அதுவும் எனக்கு தெரியாம??"

" உனக்கு தெரியாமல் என்ன இருக்கும். சரி அதையேன் நீ கேட்கிறாய்.??"


"இப்போ மேடம் தானே போனில் சொன்னீங்க அதான் கேட்டேன்"

"அதுவா.. சும்மா ஒரு பார்மாலிட்டிக்காக சொன்னேன்." என்று மழுப்பிய சாருவை

"சாரு நீ என்னதான் ட்ரை பண்ணாலும் உனக்கு நடிக்க வரவில்லை. சோ உண்மையை சொல்லு.."

"டேய் நான் உண்மையை தான் சொல்றேன்."

"ஓ அப்போ நீ அஸ்வினை லவ் பண்ணுற உண்மையை சொல்ல மாட்ட??" இந்த வார்த்தைகளை கேட்டதும் தன் நண்பனை உச்ச கட்ட அதிர்ச்சியில் பார்த்தாள் சாரு.

"என்ன அப்படி பார்க்குற அதானே உண்மை??"

"சஞ்சய் உனக்கு எப்படி..."

"சாரு உன் கண்ணசைவிலே நீ என்ன நினைக்கிறனு தெரிந்து நடப்பவன் நான். என் கண்ணில் உன்னோட மாற்றங்கள் தென்படாம போகும்னு நீ எப்படி நினைத்தாய்?? நீ என் உயிர்த்தோழி சாரு. எல்லாரையும் விட உன்னை பற்றி எனக்கு தான் நல்லா தெரியும்." என்று தன்னுடனான உண்மையான நட்பினை உணர்த்திய சஞ்சயின் பேச்சு சாருவை கண் கலங்க வைத்தது.
"சஞ்சு இவ்வளவு நாளும் எனக்குனு யாரும் இல்லையே அப்படிங்கிற ஒரு உணர்வு என்னை வாட்டி வதைக்கும். ஆனால் எனக்காக ஒரு தோழனா ஒரு அப்பா ஸ்தானத்தில நீ இருக்கனு நினைக்கும் போது என்னை விட யாரும் அதிஷ்டசாலியா இருக்க மாட்டாங்கனு தோனுது." என்று கண்கலங்கிய சாருவை அமைதிப்படுத்தும் முகமாக

"அடிப்பாவி உன்னை ஒரு கேள்வி கேட்டேனு அப்பானு அங்கிள் ரேஞ்சிற்கு கொண்டு போய்ட்டியே?? இப்படி ஒரு பழியை போட்டு என்னை பேச்சுலராவே சாவதற்கு சதி செய்றியா?? இந்த அபாண்டமான பழிச்சொல்லில் இருந்து என்னை காப்பாற்ற யாருமே இல்லையா??" என்று போலியாய் புலம்பிய சஞ்சயிடம் "இப்போ உனக்கு உண்மை கதையை சொல்லனுமா வேணாமா??" என்ற கேள்வியை கேட்டு வாயடைக்க வைத்தாள் சாரு.

"சரி சொல்லு" என்றவாறு கதை கேட்க தொடங்கினான் சஞ்சய்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN