காஞ்சனா என்ற வாசகி இக்கதைக்கு கொடுத்த review
யுவனிகாவின் அடுத்த படைப்பான “உறவாக வேண்டுமடி நீயே” கதையின் விமர்சனத்தோடு வந்து விட்டேன் தோழிகளே!
நாயகன் : அபிரஞ்சன்
நாயகி : யுகநந்திதா
இவருக்கு மட்டும் எப்படி தான் நாயகன் நாயகிக்கு இவ்வளவு அழகாக பெயர் வைக்க முடிகிறதோ தெரியவில்லை.
கதைக்குள் செல்வோம்… வழக்கமான கதைக்கரு என்றாலும் அதை அவர் கையாண்ட விதமும் எழுத்து நடையும் அருமை .
நாயகன் அபி ஆரம்பத்திலேயே வெளிநாட்டில் மேல்தட்டு மக்களின் கலாசாரத்துடன் அறிமுகமாகிறார். தான் விரும்புவதை அடாவடியாக அதிரடியாக செய்து முடிக்கும் குணம். நாயகியை சந்தித்து காரியத்தை முடிக்க ஆவேசமாக இந்தியா வருகிறார்.
நாயகி நந்திதா நாயகன் அபிக்கு ஈடாக கம்பீரமாக ஆனால் அமைதியான அறிமுகம். இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பிலேயே மோதல் வெடிக்கிறது. கடைசியில் இருவரும் சவால் விட்டுக் கொள்கிறார்கள். இந்த சவாலில் ஜெயிக்கப் போவது யார் என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிய படி நகர்கிறது கதை. தாயைத் தவிர மற்ற பெண்களையே வெறுக்கும் அபிக்கு திருமணம் செய்யத் துடிக்கிறார் அவனின் அம்மா மேகலை. அவரின் ஆசை நிறைவேறுகிறது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு ஒரு திருப்பத்தை வைக்கிறார் ஆசிரியர். அபியின் திமிரும் அடங்காத்தனமும் அதிகப்படியாக இருந்தாலும் நாயகன் என்பதாலோ என்னவோ ரசிக்கவே வைக்கிறது. திருமணத்திற்குப் பின் நந்திதாவிடம் மாறுவது இயல்பு. நந்திதாவிடம் காதலிக்க வேண்டும் என்பதைக் கூட அதிகாரத்துடன் சொல்வது ரசனை. குழந்தை வேணியிடம் காட்டும் தந்தைப் பாசம் வானையே மிஞ்சுகிறது.
வேணியும் ‘அபிப்பா’ என்று அழைப்பதும், பேசுவதும், நடந்து கொள்வதும் அழகு. கதை முழுக்க அபியே மிளிர்கிறான். ஒவ்வொரு இடத்திலும் அதிரடியாய் செயல்பட்டு ஒவ்வொருவரையும் காப்பது சபாஷ் போட வைக்கிறது. முதலில் நந்திதாவை எதிரியாய் பாவித்து அதிரடியாய் தாலி கட்டி பின் அன்பு காட்டி அவளிடம் காதலை வெளிப்படுத்தும் இடங்கள் நெகிழ்ச்சி. அதிலும் மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று தருவது காதலின் முழு வெளிப்பாடு. கடைசியில் நந்திதாவிடம் பேசும் வார்த்தைகள் எல்லாம் மனதைத் தொடுகிறது. நாயகி நந்திதா அமைதியான ஆனால் கம்பீரமாக மிளிர்கிறார். அபி ஆணவத்தோடு அதிகாரமாக பேசும் போது எல்லாம் தன் அலட்சிய பார்வையாலும் வார்த்தைகளாலும் பதிலடி தருகிறாள். தான் சபதமிட்டபடியே அபியை எல்லாமே சொல்ல வைப்பது சபாஷ் போட வைக்கிறது. ஜமீன்தாரிணியாக இருந்தாலும் சமூக சிந்தனையோடு பல நல்ல காரியங்கள் செய்வது ஆசிரியரின் நாயகிக்கே உண்டான தனித்துவம். தன்னை வளர்த்த தங்கத்தை தன் அன்னைக்கு ஈடாக பாவிப்பதிலும் குழந்தை வேணியிடம் காட்டும் பாசத்திலும் விண்ணைத் தொடுகிறாள். தன் தோழன் பப்ளுவின் காதலை நிராகரித்து பக்குவமாக எடுத்துச் சொல்லி கடைசி வரை நட்பைத் தொடர்வது நட்பின் இலக்கணம். பிடிக்காத வாழ்க்கையை குழந்தைக்காக ஏற்று பிறகு அதில் பிடிப்பு ஏற்பட்டு அதுவே காதலாக மாறி கணவனிடம் ஒன்றுகையில் பெண்களின் இயல்பு வெளிப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் அபியைத் தேடும் போதெல்லாம் அவளுக்கே தெரியாமல் அபியின் மீதான காதல் வெடிக்கிறது.
இறுதியில் கணவனையே உயிராக நினைப்பது சுபம். சுமங்கலி பூஜையைத் தொடர்ந்து நடக்கும் லூட்டிகளும் நிகழ்ச்சிகளும் கலகல ரகம். பப்ளு நாயகியின் நண்பனாக வந்து கலகலக்க வைக்கிறான். தன் தோழிக்காக அவள் காட்டும் பெண்ணைத் திருமணம் செய்து நட்புக்கு மரியாதை செய்கிறான். அபியின் தம்பி துருவன் அண்ணனுக்கு பக்கபலமாக தொழிலிலும் உறவிலும் கை கொடுக்கிறான். பாரதியிடம் மனதைப் பறிகொடுத்து அவளே அவனை சந்தேகிக்கும் சூழ்நிலையில் தன் காதலைச் சொல்வது சோகம். அதே அவளை இக்கட்டான சூழ்நிலையில் அண்ணனின் துணையோடு காப்பாற்றி திருமணம் செய்து அவனது உண்மையான காதலை நிரூபிப்பது அருமை. அண்ணன் வாழ்வுக்காக அவன் வாழ்க்கையைக் கூட சந்தோஷமாக வாழ தயங்குவது சகோரப் பாசத்தைக் காட்டுகிறது. அண்ணனுக்காக அண்ணியிடம் பேசுவது அருமை.
மற்ற படி நாயகியின் வளர்ப்புத் தாய் தங்கம், பாரதி, போதும்பொண்ணு என அனைவரும் நிறைவான கதாபாத்திரம். மொத்தத்தில் அழகான நிறைவான கதையைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். அவர் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்