Review - உறவாக வேண்டுமடி நீயே...

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காஞ்சனா என்ற வாசகி இக்கதைக்கு கொடுத்த review smile 9 smile 9 smile 9 smile 9


யுவனிகாவின் அடுத்த படைப்பான “உறவாக வேண்டுமடி நீயே” கதையின் விமர்சனத்தோடு வந்து விட்டேன் தோழிகளே!

நாயகன் : அபிரஞ்சன்

நாயகி : யுகநந்திதா


இவருக்கு மட்டும் எப்படி தான் நாயகன் நாயகிக்கு இவ்வளவு அழகாக பெயர் வைக்க முடிகிறதோ தெரியவில்லை.
கதைக்குள் செல்வோம்… வழக்கமான கதைக்கரு என்றாலும் அதை அவர் கையாண்ட விதமும் எழுத்து நடையும் அருமை 👌👌👌.
நாயகன் அபி ஆரம்பத்திலேயே வெளிநாட்டில் மேல்தட்டு மக்களின் கலாசாரத்துடன் அறிமுகமாகிறார். தான் விரும்புவதை அடாவடியாக அதிரடியாக செய்து முடிக்கும் குணம். நாயகியை சந்தித்து காரியத்தை முடிக்க ஆவேசமாக இந்தியா வருகிறார்.


நாயகி நந்திதா நாயகன் அபிக்கு ஈடாக கம்பீரமாக ஆனால் அமைதியான அறிமுகம். இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பிலேயே மோதல் வெடிக்கிறது. கடைசியில் இருவரும் சவால் விட்டுக் கொள்கிறார்கள். இந்த சவாலில் ஜெயிக்கப் போவது யார் என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிய படி நகர்கிறது கதை. தாயைத் தவிர மற்ற பெண்களையே வெறுக்கும் அபிக்கு திருமணம் செய்யத் துடிக்கிறார் அவனின் அம்மா மேகலை. அவரின் ஆசை நிறைவேறுகிறது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு ஒரு திருப்பத்தை வைக்கிறார் ஆசிரியர். அபியின் திமிரும் அடங்காத்தனமும் அதிகப்படியாக இருந்தாலும் நாயகன் என்பதாலோ என்னவோ ரசிக்கவே வைக்கிறது. திருமணத்திற்குப் பின் நந்திதாவிடம் மாறுவது இயல்பு. நந்திதாவிடம் காதலிக்க வேண்டும் என்பதைக் கூட அதிகாரத்துடன் சொல்வது ரசனை. குழந்தை வேணியிடம் காட்டும் தந்தைப் பாசம் வானையே மிஞ்சுகிறது.


வேணியும் ‘அபிப்பா’ என்று அழைப்பதும், பேசுவதும், நடந்து கொள்வதும் அழகு. கதை முழுக்க அபியே மிளிர்கிறான். ஒவ்வொரு இடத்திலும் அதிரடியாய் செயல்பட்டு ஒவ்வொருவரையும் காப்பது சபாஷ் போட வைக்கிறது. முதலில் நந்திதாவை எதிரியாய் பாவித்து அதிரடியாய் தாலி கட்டி பின் அன்பு காட்டி அவளிடம் காதலை வெளிப்படுத்தும் இடங்கள் நெகிழ்ச்சி. அதிலும் மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று தருவது காதலின் முழு வெளிப்பாடு. கடைசியில் நந்திதாவிடம் பேசும் வார்த்தைகள் எல்லாம் மனதைத் தொடுகிறது. நாயகி நந்திதா அமைதியான ஆனால் கம்பீரமாக மிளிர்கிறார். அபி ஆணவத்தோடு அதிகாரமாக பேசும் போது எல்லாம் தன் அலட்சிய பார்வையாலும் வார்த்தைகளாலும் பதிலடி தருகிறாள். தான் சபதமிட்டபடியே அபியை எல்லாமே சொல்ல வைப்பது சபாஷ் போட வைக்கிறது. ஜமீன்தாரிணியாக இருந்தாலும் சமூக சிந்தனையோடு பல நல்ல காரியங்கள் செய்வது ஆசிரியரின் நாயகிக்கே உண்டான தனித்துவம். தன்னை வளர்த்த தங்கத்தை தன் அன்னைக்கு ஈடாக பாவிப்பதிலும் குழந்தை வேணியிடம் காட்டும் பாசத்திலும் விண்ணைத் தொடுகிறாள். தன் தோழன் பப்ளுவின் காதலை நிராகரித்து பக்குவமாக எடுத்துச் சொல்லி கடைசி வரை நட்பைத் தொடர்வது நட்பின் இலக்கணம். பிடிக்காத வாழ்க்கையை குழந்தைக்காக ஏற்று பிறகு அதில் பிடிப்பு ஏற்பட்டு அதுவே காதலாக மாறி கணவனிடம் ஒன்றுகையில் பெண்களின் இயல்பு வெளிப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் அபியைத் தேடும் போதெல்லாம் அவளுக்கே தெரியாமல் அபியின் மீதான காதல் வெடிக்கிறது.


இறுதியில் கணவனையே உயிராக நினைப்பது சுபம். சுமங்கலி பூஜையைத் தொடர்ந்து நடக்கும் லூட்டிகளும் நிகழ்ச்சிகளும் கலகல ரகம். பப்ளு நாயகியின் நண்பனாக வந்து கலகலக்க வைக்கிறான். தன் தோழிக்காக அவள் காட்டும் பெண்ணைத் திருமணம் செய்து நட்புக்கு மரியாதை செய்கிறான். அபியின் தம்பி துருவன் அண்ணனுக்கு பக்கபலமாக தொழிலிலும் உறவிலும் கை கொடுக்கிறான். பாரதியிடம் மனதைப் பறிகொடுத்து அவளே அவனை சந்தேகிக்கும் சூழ்நிலையில் தன் காதலைச் சொல்வது சோகம். அதே அவளை இக்கட்டான சூழ்நிலையில் அண்ணனின் துணையோடு காப்பாற்றி திருமணம் செய்து அவனது உண்மையான காதலை நிரூபிப்பது அருமை. அண்ணன் வாழ்வுக்காக அவன் வாழ்க்கையைக் கூட சந்தோஷமாக வாழ தயங்குவது சகோரப் பாசத்தைக் காட்டுகிறது. அண்ணனுக்காக அண்ணியிடம் பேசுவது அருமை.


மற்ற படி நாயகியின் வளர்ப்புத் தாய் தங்கம், பாரதி, போதும்பொண்ணு என அனைவரும் நிறைவான கதாபாத்திரம். மொத்தத்தில் அழகான நிறைவான கதையைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். அவர் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்💐💐💐
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மற்றும் ஒரு தோழி அபி கதைக்கு கொடுத்த review heart beat heart beat heart beat heart beat heart beat


ஹாய் யுவனிகா மேம்.....

நான் சைலண்ட் ரீடர் உங்க கதை பிரதிபலியில் படித்து‌ இருக்கேன். இப்போது நீங்கள் பிரதிபலியில் கதை போடுவது இல்லையா மேம். அமேசானில் உங்கள் கதையை படித்தேன் மேம் "உறவாக வேண்டுமடி‌ நீயே" அழகான ‌தலைப்பு மேம் கதையும் அதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகா கையாண்டு இருக்கீங்க.

அபிரஞ்சன் திமிரா கர்வமா இருக்கிறான் ஆனா‌ காதல் செய்யும் போது மட்டும் ரொம்பவே அமைதியாகி விடுகிறான்.
அவனுக்கு ஹுரோயினோட அறிமுகமே மோதலில் ஆரம்பிக்கிறது.
அணை ஆடை பற்றி சொல்லி‌ இருக்கீங்க இப்பொதெல்லாம்‌ மாறிவரும் ‌நாகரிகத்தில் எல்லோரும் செயற்கையே தேடியே செல்கிறார்கள். அதைதான் அபி செய்து இருக்கான் மக்கள் விரும்புவதை தானே செய்ய முடியும். அவனின் கருத்தும் சரி தான்.

அவனை முறியடிப்பது போல் யுகா அவனின் ஓவ்வொரு செயலிலும் அமைதியா தோற்கடித்து தன்னவனின் மனதில் காட்டுபூச்சியா பதிந்து விடுகிறாள். அது தான் உங்கள் ஹீரோயின்கள் ஸ்பெஷல். நாங்கள் உங்கள் கதைகளை தேடி படிப்பதும் அதனால் தான்.

முதலில் அவனுடைய பிரியமான முயல்குட்டியுடன் (வேணி) தன்னவளை அவள் குழந்தையுடன் இருப்பதை பார்த்தவன் ஏதோவொரு வெறுமை அவனுள்.
ஆனாலும் தன் குழந்தைக்காக அதிரடியாக யுகாவை திருமணம் செய்து வா... நாம் காதலிப்போம் என்று‌ அவன் மனைவியை சீண்டும் இடம் சூப்பர். அது தான் உங்க கதையின் ஹீரோ அபி.

அபி தான் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்காமல் தான் இப்படிதான் என்றும் என்றவனாக.
யுகாவுக்கு அன்பையும் காதலையும் தன்னுடைய சிறு சிறு செய்கை மூலம் உணர்த்தி தன்னவளுக்காக சேர்த்து இவனின் காதலை ஆர்பாட்டம் இல்லாமல் கொடுப்பதில் வல்லவனாக இருக்கிறான் அபி.

பாரதி துருவன் காதல் அதிரடியாக இருக்கு மேம்.அதேமாதிரி யுகாவுடைய நண்பன் பப்லு அவனுடைய தோழிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேனு தாயா‌.. அண்ணனா.. நண்பனா... அழகா காட்டி இருக்கீங்க மேம்.
பப்லு போதும் பொண்ணு சூப்பரு. அபியுடைய அம்மா, யுகா அம்மா‌ தங்கம் எல்லொருடைய‌ கதா பாத்திரமும் சூப்பரா‌கொடுத்திருக்கீங்க மேம்.‌

ஆனாலும் ‌அபிக்கும்‌ யுகாக்கும்‌ இன்னும்‌ கொஞ்சமே கொஞ்சம் ரொமன்ஸ் கொடுத்திருக்கலாம் மேம். இருந்தாலும் மனதை வருடும் மெல்லிய காதலை கொடுத்து அணை ஆடை பற்றிய சிறு‌ விழிப்புணர்வு கொடுத்து அழகா தந்து இருக்கீங்க சூப்பர் மேம். இன்னும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் மேம்.

மேம் சின்ன ரிக்வஸ்ட் இதற்கு முன்னே எழுதின‌ கதை "என்னை துரத்தும் உன்‌ நினைவுகள்" பிரதிபலியில்‌ படித்தேன் நல்ல கலகலப்பா ஓரே குடும்பமா அழகா தந்து இருக்கீங்க அதுமாதிரி ‌ஜாலியா காமெடியா ஒரு கதை‌ தாங்களேன் மேம். இல்லைனாலும் இந்தகதையையே‌ இரண்டாம் பாகமாக கொடுங்க மேம்

சுவேஷ்நந்தன் கீதயாழினி இருவரும் எனக்கு மறக்க முடியாத‌ ஃபேர் சீக்கிரமே முடிச்சிட்டிங்களே வருத்தமா இருக்கு மேம்.
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒரு தோழி... heart beat heart beat heart beat வாசகி :love::love::love::love:கொடுத்த review smile 9smile 9smile 9smile 9பொக்கிஷமாய் இருக்கவே இங்கு பதிவிடுகிறேன்...kiss heartkiss heartkiss heartkiss heart

What a lovely story ma ❤😍 solla vaarthaigalal illa avlooo alagana thelivana oru kathai 🥰🥰🥰🥰🥰 ellaroda nameum semma ji🤩🤩🤩 ovvoru charecter um apdiye manasila nikkuthu,, story fulla complete pannittu than sapida ponan ❤❤❤ real ah nadantha Pola oru feeling😘😘😘😘 Vera level 🔥 outstanding ☺😍 innum sollitte pogalam ❤🥰 you are unique person my dear 😘😘😘 go ahead 🎊❤ my best wishes for you great future ❤❤ innum innum different way la story ethir paakuran ❤😊 ovvoru epikum apdiye manasula nikkuthu 🥰🥰🥰 kanna kooduna kooda kathai than mindla poitu iruku ❤🥰 avlooo rasichu padichan ❤❤❤😊😊😊 lovely kanna ❤❤❤❤❤
 
Last edited:
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மற்றும் ஒரு தோழி கொடுத்த கமெண்ட் :love::love::love:heart beatheart beatheart beatheart beat

செம்ம கதை க்கா
அபி சூப்பர் கேரக்டர்
யுகா ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவ்ளோ அருமையாக இருந்தது
யுகா லவ்லி க்கா
இது மாதிரி கேரக்டருக்கு நிஜத்தில் மனது ஏங்குது
அனையாடைகள் பத்தி நெறைய தெரிந்தது
நன்றி க்கா
ரொம்ப கண்ணியமான கதை
வாழ்த்துக்கள் அக்கா
போதும் பொண்ணு பேர்க்கு பப்லுவ விட நான் ரொம்ப யோசிச்சேன் ஒரு வேல கேரளாவில் இந்த மாதிரி பேர் வைப்பாங்க னு நெனச்சேன்
பார்த்தா நம்ம ஊரு வேண்டா , வேண்டாமல்லி போல இருக்கு... செம்ம பல்ப் எனக்கு
போதும் பொண்ணு கதை மனசுக்கு பாரமா இருந்தது க்கா
ஆனாலும் பப்லு குடுத்து ஈக்வல் பன்னிட்டிங்க
மணிமேகலை நிமிர்ந்து நிற்கும் இடங்கள் அவ்ளோ நிறைவு க்கா 😍😍
பாரதி துருவன் க்யூட் க்கா
எவ்ளோ கதைகள் படிக்றோம் ஐந்து எபி படிக்கும் போதே ஒரு சலிப்பு or ஒவ்வாமை வந்துடுது ஆனா ஒரு சிலர் கதைகள் எல்லாம் படிக்கும் ஆவலை தூண்டுவதாக இருக்கும் அதில் உங்கள் கதைகள் இரண்டாம் ரகம்

வாழ்த்துக்கள் அக்கா.... லவ் யூ க்கா 😍😍😍😍
 

Devi

New member
நானே... நானே... இதோ வந்துடேன்... ஒரு கதையின் review ஓட...

இது நான் கொடுக்கும் முதல் review... யுவனிகா சிஸ் சைட் ஓபன் செய்தா.. நான் தான் முதல் review கொடுப்பேன் என்று சொன்னேன்... அதன்படியே வந்துடேன்... என்ன எங்க மாம்ஸ் தேவ் கதைக்கு முதலில் review கொடுக்க நினைத்தேன்... அக்கதை சைட்டில் முழுமையாக பதிவிடாததால்... தற்போது அபி கதையுடன் வந்து உள்ளேன்... சரி கதைக்கு போகலாம் வாங்க...

"உறவாக வேண்டுமடி நீயே..." 😂😂😂 Writer ji.. எப்படி இருந்த எங்க சிங்கத்தை.. இப்படி 😏😏 நீ தான் வேணும்.. நீ தான் வேணும்னு புலம்ப வச்சிடிங்களே😒😒😒 கெத்தான ஹீரோ வேணும்னு கேட்கறவங்க இந்த கதையை படிங்க பா❣❣

திமிருக்கும்... அடாவடித்தனத்துக்கும்.. எங்கள் அரசன் அபிரஞ்சன்😍😍😍 அரசர் மட்டும் தாங்க அவர்😁😁 ஆனா செங்கோல் எல்லாம் எங்கள் ஜமீன் ராணி யுகநந்திதாவிடம் தாங்க இருக்கு😛😛😛 யுகநந்திதா அதிகம் கர்ஜனை இடாத பெண் சிங்கம்... அப்படி ஒரு தோரணை😍😍

அப்படி பட்ட ராணியாம்மாவையே... அபி இவனுடைய பிடிவாதத்தால்... பெண்கள் மேல் உள்ள வெறுப்பால்... அவர்களுக்கு செய்வது அநியாயம்😤😤😤😓😓😓 ஆனாலும் விடுவார்களா எங்கள் ராணியம்மா... செய்த அநியாயத்துக்கு நியாயம் கேட்டு.. யாருக்கும் தெரியாமல் அபி செய்ததை... அவன் வாய் மொழியாவே... கூடி இருக்கும் சபையோர் முன் சொல்ல வச்சிடுவாங்க இல்ல நம்ம நந்திதா❤❤❤💃💃💃💃💃💃

இப்படி

பெண்களையே வெறுக்கும்.. அபியின் காதல் தான் எப்படி பட்டது❣❣ வேணி அவள் யாருடைய குழந்தை 🍫🍫 கடைசி வரை அவளை நான் அபி - நந்திதா இவர்களோட குழந்தையினு தான் நினைத்தேன்... ஆனால்😎😎😷😷😷 அணை ஆடை பற்றிய விஷயம் பிடித்து இருந்தது👌👌👏👏 அபிரஞ்சன் மணிமேகலை🌺🌺 தன் பெயருக்கு பின்னால் தன் தாயின் பெயரை சேர்த்து மொழியும் அபி எனக்கு பிடித்து இருந்தது❤❤

இவர்கள் இல்லாமல் பப்ளு.. தங்கம்.. துருவன்.. பாரதி.. மணிமேகலை.. இப்படி எல்லோருடைய கதாபாத்திரமும் அருமை💝💝💝 மொத்தத்தில் அழகான காதல் கதை🎈🎈🎉🎉🎉வாழ்த்துகள் writer ji💐💐💐😘😘😘😘
 
Last edited by a moderator:
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நானே... நானே... இதோ வந்துடேன்... ஒரு கதையின் review ஓட...

இது நான் கொடுக்கும் முதல் review... யுவனிகா சிஸ் சைட் ஓபன் செய்தா.. நான் தான் முதல் review கொடுப்பேன் என்று சொன்னேன்... அதன்படியே வந்துடேன்... என்ன எங்க மாம்ஸ் தேவ் கதைக்கு முதலில் review கொடுக்க நினைத்தேன்... அக்கதை சைட்டில் முழுமையாக பதிவிடாததால்... தற்போது அபி கதையுடன் வந்து உள்ளேன்... சரி கதைக்கு போகலாம் வாங்க...

"உறவாக வேண்டுமடி நீயே..." 😂😂😂 Writer ji.. எப்படி இருந்த எங்க சிங்கத்தை.. இப்படி 😏😏 நீ தான் வேணும்.. நீ தான் வேணும்னு புலம்ப வச்சிடிங்களே😒😒😒 கெத்தான ஹீரோ வேணும்னு கேட்கறவங்க இந்த கதையை படிங்க பா❣❣

திமிருக்கும்... அடாவடித்தனத்துக்கும்.. எங்கள் அரசன் அபிரஞ்சன்😍😍😍 அரசர் மட்டும் தாங்க அவர்😁😁 ஆனா செங்கோல் எல்லாம் எங்கள் ஜமீன் ராணி யுகநந்திதாவிடம் தாங்க இருக்கு😛😛😛 யுகநந்திதா அதிகம் கர்ஜனை இடாத பெண் சிங்கம்... அப்படி ஒரு தோரணை😍😍

அப்படி பட்ட ராணியாம்மாவையே... அபி இவனுடைய பிடிவாதத்தால்... பெண்கள் மேல் உள்ள வெறுப்பால்... அவர்களுக்கு செய்வது அநியாயம்😤😤😤😓😓😓 ஆனாலும் விடுவார்களா எங்கள் ராணியம்மா... செய்த அநியாயத்துக்கு நியாயம் கேட்டு.. யாருக்கும் தெரியாமல் அபி செய்ததை... அவன் வாய் மொழியாவே... கூடி இருக்கும் சபையோர் முன் சொல்ல வச்சிடுவாங்க இல்ல நம்ம நந்திதா❤❤❤💃💃💃💃💃💃

இப்படி

பெண்களையே வெறுக்கும்.. அபியின் காதல் தான் எப்படி பட்டது❣❣ வேணி அவள் யாருடைய குழந்தை 🍫🍫 கடைசி வரை அவளை நான் அபி - நந்திதா இவர்களோட குழந்தையினு தான் நினைத்தேன்... ஆனால்😎😎😷😷😷 அணை ஆடை பற்றிய விஷயம் பிடித்து இருந்தது👌👌👏👏 அபிரஞ்சன் மணிமேகலை🌺🌺 தன் பெயருக்கு பின்னால் தன் தாயின் பெயரை சேர்த்து மொழியும் அபி எனக்கு பிடித்து இருந்தது❤❤


இவர்கள் இல்லாமல் பப்ளு.. தங்கம்.. துருவன்.. பாரதி.. மணிமேகலை.. இப்படி எல்லோருடைய கதாபாத்திரமும் அருமை💝💝💝 மொத்தத்தில் அழகான காதல் கதை🎈🎈🎉🎉🎉வாழ்த்துகள் writer ji💐💐💐😘😘😘😘

உங்கள் பேரன்புக்கு நன்றி மா kiss heart kiss heart kiss heart அழகான review pasmilie 18smilie 18smilie 18
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தனு செல்லம் Flying kissFlying kissFlying kissகொடுத்த reviewsmilie 15smilie 15smilie 15 love you dasmilie 13smilie 13smilie 13smilie 13

வணக்கம் லட்டூஸ்,

என்னோட அடுத்த விமர்சனத்துடன் வந்துட்டேன்.

அப்பப்பா ஒரு இடத்தை விட்டு நகர விடாம படிக்க வைத்த கதை இது...
கதை முழுவதும் ரசிக்க மட்டும் தான் செஞ்சேன் ரஞ்சனை...
இப்போ தெரிஞ்சிருக்குமே என்ன கதைனு...

நம்ம தலைவி யுவனிகா அக்காவோட உறவாக வேண்டுமடி நீயே தான்❤.

யக்கோவ் அபியை எங்கே கா இத்தனை நாள் ஒளிச்சு வெச்சிருந்த...
அவன் என்ன பண்ணாலும் ரசிச்சேன் கா😍.
பேபே னு வாயைப் பிளந்துட்டு பாத்துட்டு இருந்தேன்...
நீங்க வேற ரஜினி ஸ்டைல்னு இமேஜின் பண்ணிக்கோங்கனு லாம் சொன்னீங்க...
ஒவ்வொரு சீன் படிக்குறப்போவும் பேக் ரௌண்ட்ல பிஜிஎம் ஓடுது...
அய்யோ அழகு அவன்.

அழகோ அழகு என் ரஞ்சன் அழகு
அவன் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவன் திமிர் அழகு
மயக்கி இழுக்கும் அவன் காதல் அழகு

அவனை பத்தி கேட்டா நான் சொல்லிட்டே போவேன்...
அப்படியே சும்மா செதுக்கிருக்கீங்க கா...

காதலிக்கலாமா? அவன் யுகாவை நெருங்கி கேட்குறப்போ எனக்குள்ள ஒரு படபடப்பு சம்திங் சம்திங் போங்க😍🙈.

அடுத்து நம்ம யுகா...
வேற லெவல் கா...
ஜாடிக்கேத்த மூடி மாதிரி ரஞ்சனுக்கேத்த சண்டிராணி தான்.
அம்மா கிட்ட காட்டுற பாசம், அபி கிட்ட போடுற சண்டை, நட்பு, தாய்மைனு எல்லாத்துலையும் பட்டையை கிளப்பிட்டா...

எங்க ஆளும் மட்டும் அதுக்கு சலைத்தவரில்லை...
காதலை கொட்டோ கொட்டுனு கொட்டிட்டாரு...

நம்ம வேணிக்குட்டி...
அய்யோ அது அபிப்பா சொல்லுறப்போவே அத்தனை அழகு😍

மேகலை,தங்கம் இரண்டு அம்மாங்களும் சொக்கத்தங்கங்கள்.
மேகலை நிஜமாவே ஒரு இரும்பு மனிசி தான்.மனசுல நீங்கா இடம் பிடிச்சுட்டாங்க.

துருவன்,பாரதி கூட சூப்பர்.
அவளுக்கு என்ன ஆனாலும் நான் இருப்பேனு அந்த ஹோட்டல் சீன்ல சொன்னது செமையா இருந்துச்சு...
உடனே அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் சூப்பர்.

ஆனால் அண்ணாவுக்காக அவன் பண்ணது முட்டாள்தனம்.
அவன் காதல் குறைந்தது இல்லை...
அண்ணா மேல இம்புட்டு பாசமா டா அப்படினு நானே ஷாக் ஆகிட்டேனா பாத்துக்கோங்க.

பபுலு,போதும்பொண்ணு க்யூட் பேர்.
நாம எப்போமே பரிதாபத்தை காதல்னு நினைக்கக்கூடாது சரியா சொன்னீங்க.

கடைசியில ஒரு குறள் சொல்லி கணவன் , மனைவி பத்தி சொன்னது வேற லெவல் கா.
புரிதல் கண்டிப்பா வேணும் அது இல்லைனா வாழ்க்கை கஷ்டம்...
அழகா சொல்லிட்டிங்க.

யுவாக்கா கதைனா ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும் அது வீண் போகலை...

ஞாயிறு கிழமை சிக்கனு ஆசையா போன சஷ்டி அது இதுனு சொல்லி மனசை கஷ்டப்படுத்திட்டு வடை ,பாயசம்னு ஒரு புல் மீல்ஸ் போட்டா எப்படி இருக்கும்...எனக்கு அதுதான் பிடிக்கும் பா😍
அப்படி இருந்துச்சு கா உங்க கதை...
அங்கங்கே எட்டிப்பார்த்த ரொமான்ஸ் சூப்பர்🤗.

அழகான மற்றும் அற்புதமான படைப்பு அக்கா...
வாழ்த்துகள்👏👏

இன்னும் நிறைய எழுதி எல்லா ஹூரோவையும் லவ் பண்ண வைங்க...
ஆனால் அபி கவுத்துப்புட்டான் கா😍😍பால் ஆயிட்டேன்....

ப்ரியமுடன்

தனு❤
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
nathan sha sis கொடுத்த review smile 9 smile 9 smile 9 heart beat heart beat heart beat

“யுவனிகாவின்”

“உறவாக வேண்டுமடி நீயே”

அபிரஞ்சன்-யுகநந்திதா

இது just 1-19 அத்திய்யாயங்கள் கொண்ட நாவல் தான். ஆனால் இடை நிறுத்தாது வாசிக்கத் தூண்டும் கதை. வாசகர் பாஷையில் செம story

அபிக்கு அனபான , அழகான ,்அம்மா , அவனுக்கு அன்பால் அடங்கும் தம்பி துருவன். இவர்களின் பாசப் பிணைப்பும் தாயன்பின் குழைவும் அழகோ அழகு.

31 வயதிலும் தாய் மடி தேடும் வளர்ந்த குழந்தையவன்,

படிப்படியாக அழகாக நட்பு, காதல், மோதல் என வேறு பல கதாபாத்திர இணைப்புக்களுடன் நகரும் கதையின் கனம் அருமை.

3 வயது குட்டி “ வேணியின் “ சுட்டித் தனம் இன்னும் கண்ணுக்குள்...

முழுக் கதையையும் சொல்ல ஆசை தான் but இத்தோட நிறுத்திறன் pls வாசிச்சு பாருங்க..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN