நெஞ்சம் 3

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விதுனதிபாகரனின் அப்பா வழி உறவுகள் ஆகட்டும்... அல்லது அவன் அம்மா வழி உறவுகள் ஆகட்டும்... எல்லோருமே வழி வழியாய் வந்த நடுத்தர குடும்பம் தான். ஏதோ படித்தோம்.. ஏதோ வேலைக்கு சென்றோம் என்று வாழ்ந்தவர்கள். அப்படிபட்ட இவர்களின் வம்சத்தில் தப்பி பிறந்தவன் திபாகரன்.

தன் குடும்பத்தில் யாரும் யோசிக்காத தொழில் சாம்ராஜ்ஜியத்தில் நுழைந்து, அதில் உச்சம் தொட்டு.. தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற நினைத்தவன் இவன். அதை மனதில் கொண்டே சிறுவயதிலிருந்து படிப்பில் கவனம் செலுத்தினான்.

இவன் நன்கு படிக்கும் மாணவன் என்பதால்... வகுப்பு ஆசிரியர்களே இவனை இன்னும் மெருகேற்ற, மேல்படிப்புக்கு வழி காட்டினார்கள். அதனால் படிக்கும் போதே பகுதி நேர வேலைக்கு சென்றவன். தனக்கான மேல்படிப்புக்கான பணத்தை இவனே சம்பாதித்து.. கூடவே தொழில் ஆரம்பிக்க... அரசாங்க சலுகைகளையும்.. வங்கி கடன்களையும் முன்பே தீர விசாரித்து வைத்திருந்தான்.

அதே போல் என்ன தான் தாய் தந்தையர்.. தங்கைகள்... என்று குடும்பத்தின் மேல் இவன் பாசம் வைத்திருந்தாலும்... எந்த இடத்திலும் யாருக்காகவும்... அவனுக்கான மரியாதையையும்... சுயகௌரவத்தையும் விட்டுத் தர மாட்டான்.

இவன் இளங்கலை தொழிற்கல்வி எடுத்துப் படிக்க... பின் முதுகலையில் இவன் M.B.A படித்துக் கொண்டிருந்த சமயம் தான் அவன் தந்தை அச்செயலை செய்தார். அதில் இவன் குடும்பமே மீள முடியாத துக்கத்தில் ஆழ்ந்தது. அதன் பொருட்டு இவனுக்கு இருப்பத்தி மூன்று வயது நடக்கும் போதே... இன்னும் படிப்பு கூட முடிந்திடாத நிலையில் தான் இவனுக்கும் தன்யாவுக்கும் திருமணம் நடந்தேறியது. அப்போதைய மனநிலையில்.. தன் லட்சியத்தைக் குழி தோண்டி புதைத்த அத்திருமணத்தை அறவே வெறுத்தான் திபாகரன். ஆனால் மறந்தும் தன்னில் சரிபாதியாய் வந்தவளை வெறுக்கவில்லை இவன்.

அலுவலகம் வந்தவனின் மனமோ மிகவும் சோர்வில் இருந்தது.
‘ஏன் இந்த அம்மா இப்படி பேசுறாங்க! அது எப்படி.. திருமணம் என்பது வாழ்வில் ஒரு முறை தானே? அப்படி ஒரு கோட்பாட்டில் வளர்ந்த என்னிடம் அவளைத் தலை முழுகச் சொன்னால் என்ன அர்த்தம்... அப்போ நான் தனி மரமாக கடைசிவரை நின்றால் இவர்களுக்கு பரவாயில்லையா? எனக்குப் புரியல!...’ என்று நினைத்தவனின் மண்டையோ சூடானது.

அதில் இரு கையால் தலையைத் தாங்கி டேபிளின் முன் குனிந்தவனோ...
“எனக்கு சத்தியமா புரியல மா... இங்கு நானோ.. என் ரிது டார்லிங்கோ என்ன தப்பு செய்தோம்... இல்ல வேறு யாரு செய்தா? அப்படியே மற்றவங்க செய்திருந்தாலும் அதற்கு நாங்க இரண்டு பேரும் எப்படி பொறுப்பாக முடியும்? பொம்மை கல்யாணமாம்... எவ்வளவு சுலபமா சொல்லிட்டீங்க நீங்க... எங்க திருமணம் எந்த காரணத்தின் பொருட்டு வேணா நடந்ததா இருக்கட்டும்... அதற்காக நீங்க எப்படி அந்த வார்த்தையை சொல்லலாம்? அதுவும் நான் உயிரோட இருக்கும் போதே அவளைத் தள்ளி வைக்க சொல்றீங்க...” நேரடியாய் தன் தாயிடம் கேட்க முடியாத கேள்விகளை எல்லாம் இங்கு இவன் தனிமையில் வாய் விட்டே கேட்க… அவனுக்கு பதில் தர தான் அங்கு யாரும் இல்லை.

மனம் தாங்காமல் தன் கைப்பேசியில் உள்ள மனைவியின் புகைப்படத்தைக் கண்டவன்…

“ரிது டார்லிங்... உன்னையும் என்னையும் பிரிக்கப் பார்க்கிறாங்க உன் அம்மாவும் என் அம்மாவும். ஆனா பாவம் இவங்க இரண்டு பேருக்கும் தெரியல... இந்த ஜென்மத்திலே அதற்கான முயற்சி மட்டும் தான் இவர்களால் செய்ய முடியும். நம்ம இரண்டு பேரையும் பிரிக்க முடியாதுன்னு அவங்களுக்கு தெரியல... அதற்கு நாம் இடம் கொடுக்க மாட்டோம்னு. நமக்கு மட்டும் ஏன் டி இப்படி?

நீ மட்டும் கோடீஸ்வரியா பிறக்காம இருந்திருந்தா.. நான் வெளிநாடு போகாம இருந்திருந்தா.... இவங்க எல்லாம் இப்படி பேச முடியுமா?” என்று முதலில்... தன் போக்கில் பேச ஆரம்பித்தவனின் உதடுகளோ பின் மனைவியிடம் ஆதங்கத்தைக் கொட்டியது.

அதன் பின் பெருமூச்சை வெளியிட்டவனோ..
“விடக் கூடாது டார்லிங்.. நாம இரண்டு பேரும் எந்த இடத்திலும் அவங்களுக்கு விட்டுக் கொடுக்காமல்... ஒருத்தர் மேலே ஒருத்தர் எவ்வளவு அன்பு வைத்திருக்கோம் என்றதை நம்ம வீட்டுக்கு காட்டணும்.... இன்னைக்கே வல்லவன் சார் கிட்ட பேசுறேன்... சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு டி.. ஐ மிஸ் யூ ரிது டார்லிங்...” என்று காதலோடு மொழிந்தவனின் இதழ்களோ... அடுத்த நொடியே தன்னவளின் கன்னத்தில் பதிந்தது.

அந்த இதழ் ஒற்றலும் அவனுக்கு பற்றாமல் போக.. இன்னும் இன்னும் தன்னவளின் நெருக்கம் வேண்டும் என்று இவனுள் தோன்ற... அதில் கைப்பேசியைத் தன் நெஞ்சில் பதித்து அழுத்திக் கொண்டவனின் இமைகளோ மெல்ல மெல்ல மூடி கொள்ளவும்.. தன்னை மீறி இருக்கையில் தலை சாய்த்துக் கொண்டான் அவன்.

எப்போதும் அவன் தாய் இப்படி ஏதாவது பேசுவது வழமை தான். ஆனால் இன்று சற்று மிகையாக அவர்கள் பேசியதாக இவனுக்கு தோன்றியது. அதில் மனைவியின் அருகாமையை இவன் அதிகமாய் எதிர்பார்க்க... என்றும் போல் இன்றும் அவனுக்கு கிடைத்தது அவளின் நிழல் தான்.

எவ்வளவு நேரம் இவனால் இப்படியே அமர்ந்திருக்க முடியும்... அவனுடைய அலுவலக வேலைகள் தான் அவன் முன் வரிசை கட்டி காத்திருக்கிறதே... அந்நேரம் கார்த்திக்கிடமிருந்து அழைப்பு வர.. தன் நிலையிலிருந்து மாறியவனோ... அன்றைய அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தான் அவன்.

பின் வேலைகளை முடித்து நிமிர்ந்தவன் நேரத்தை நோக்க.. அது மதியம் ஒன்றரை என்று காட்டியது.
“ஓ... லஞ்ச் டைமா.. அதான் வயிறு இந்த கத்து கத்துது..” என்றவனோ தளர்வாய் இருக்கையில் அமர்ந்து... தன் இரு கரங்களையும் கோர்த்து, உயர்த்தி நெட்டி முறித்தவனின் பார்வையோ... மேஜை மேல் காலையில் இவன் வைத்த கவரில் பதிந்தது.

நேற்று கார்த்திக் தந்த போது.... அவசரமாய் கோட் பாக்கெட்டில் திணித்தான். பின் அது இன்று காலை அவன் கண்ணில் பட.. அதே அவரசரத்துடன் தன் பேண்ட் பாக்கெட்டில் திணித்தவனோ... அலுவலகம் வந்ததும் அதை மேஜை மேல் வைத்தான்… அவனுக்கிருந்த வேலையில் அதை முற்றிலும் மறந்தே போனான்.

தற்போது அந்த கவர் கண்ணில் பட... “அது யாரு டா... நான் சரியா இந்தியா வருவேன்னு தெரிந்து... இதை அனுப்பி இருக்காங்க...” எந்த வித அவசரமும் இல்லாமல் தான் கவரை கையில் எடுத்து பார்த்தான் இவன். ஆனால் அதில் அனுப்புநர் பெயரில் மிஸஸ் விதுனதிபாகரன் என்றிருக்கவும்.. இவன் நெற்றியில் முடிச்சுகள் விழுந்தது.

“என் ரிது டார்லிங் அனுப்பி இருக்கா... அப்படி என்ன?...” இவன் யோசனையுடன் பிரித்துப் பார்க்க... ஒரு விநாடி இதயம் நின்று துடிக்க.. உறைந்து நின்றான் இவன்.

இவ்வளவு நேரம் தன் காதலையும்.. ஆதங்கத்தையும் மானசீகமாக யாரிடம் கொட்டிக் கொண்டிருந்தானோ.. அவனுடைய மனைவி… அவனுடைய ரிது டார்லிங்... அவனிடமிருந்து விவாகரத்து கேட்டு விவாகரத்து பத்திரம் அனுப்பியிருக்கிறாள்.

இதுவரை தான் பார்த்துப் பார்த்து கட்டியிருந்த கனவுக்கோட்டை தன் கண் முன்னே தூள் தூளாக.. அதுவும் அவனின் ரிது டார்லிங்கே அவளின் கைகளால் தகர்ப்பதைக் கண்டவனோ.. தரை அதிர தொம்மென கால்கள் மடித்து அமர்நதவனோ.. முதல் முறையாக தான் யாருமற்று தனித்து நிற்பதாக உணர்ந்தான். பார்வை இழந்தவன் திக்கு திசை தெரியாமல் தவிப்பதை போல் தவித்தவன்.. தன் உயிரே தன்னை விட்டுப் பிரியும் வலியை முதன் முதலாய் உணர்ந்தவனின் கண்கள் அவனையும் மீறி கண்ணீர் சிந்த..

“ஏன் டி.. ஏன் இப்படி செய்த?.. அந்தளவுக்கா நீ என்னை வெறுத்திட்ட.. எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட தானே முதலில் பேசியிருக்கணும்.. எதுவும் பேசாமலே எனக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுத்திட்டியே..” என்று மருகியவனின் மனமோ... தான் கண்டது கனவாகிப் போகாதா என்ற நப்பாசையில் மீண்டும் நோட்டீஸ் தனக்கு வந்தது தானா.. விலாசம் எதுவும் மாறிப்போய் விட்டதோ என்ற நினைப்பில் இவன் சரி பார்க்க.. அதில், அவன் மனைவி சார்பாக அவளின் வக்கீல் வல்லவன் அனுப்பியிருக்கிறார் என்பது உறுதியாக... அதைப் படித்தவனின் உதட்டிலோ ஒரு விரக்தி புன்னகை குடியேறியது.

காலையில் தாயிடம் பேசிய வார்த்தைகளும்... இங்கு வந்த பிறகு மனைவியிடம் மானசீகமாக பேசிய பேச்சுக்களும் இவனைப் பார்த்து கொக்கலி கொட்டி சிரித்தது. இடைவிடாமல் ஓடிய போதும்... வெளிநாட்டில் அனாதையாய் வாழ்ந்த போதெல்லாம்... அவன் ஆருயிர் மனைவியான... அவளின் நிழலைக் கண்டே அனைத்தையும் தாண்டி வந்தவன் இன்று யாரிடம் சென்று நிற்பது என்று தெரியவில்லை இந்த இருப்பத்தைந்து வயது ஆண்மகனுக்கு.

தான் கண்ட கனவெல்லாம் காற்றில் கலைந்த கார்மேகமாய் போனதை ஏற்றுக்கொள்ள முடியாமல்.. உள்ளம் குமுறினான் இந்த அன்புக் கணவன்.

இப்பவும் இவனின் ஒரு மனதோ தன் காதலின் மேலுள்ள நம்பிக்கையில்...
“இருக்காது... இது என் ரிது எடுத்த முடிவாக இருக்காது... இதற்கு பின் அவளின் தாய் தந்தையர் தான் இருக்க வேண்டும்...” என்றே ஓலமிட்டது. அதனின் பொருட்டே இதை தன்னவள் வாய்மொழியாக அறியாமல் தன்னுடைய மனம் அமைதியாகாது என்பது அவனுக்கே புரிந்தது.

அந்நேரம் அவன் அறை கதவை தட்டும் ஓசை கேட்கவும்... அவசரமாய் அக்கவரை அப்புறப்படுத்தி விட்டு... தன்னை சீர் செய்ய. வருவது தன் நண்பன் கார்த்திக் என்று அவனுக்கு தெரியும்... இவ்விஷயத்தை யாரிடமும் பகிர்ந்து... தங்களின் வாழ்வை காட்சிப்பொருளாக்க இவன் விரும்பவில்லை.

“yes... come.. in...” இவனின் அழைப்புக்கு கார்த்திக் உள்ளே வர.

“டேய் மச்சான்.. என்ன இன்னும் உட்கார்ந்திருக்க... பசியில் சிறுகுடல் பெருங்குடலைத் தின்னுது டா... வா சாப்பிட்டு வரலாம்...”

இவனுக்கும் பசி தான்.. ஆனால் அப்போதிருந்த மனநிலை இப்போது இவனுக்கு இல்லையே.. “எனக்கு காலையிலிருந்து வயிறு சரியில்லை டா. Digestion பிராப்ளம் போல... எனக்கு எதுவும் வேணாம்... நீ போ டா...”

நண்பனின் பதிலில், “டேய் உடம்புக்கு என்ன டா செய்யுது... இந்தியா வந்ததும்... காலில் சுடு தண்ணியைக் கொட்டினவன் மாதிரி கம்பெனிக்கு வந்துட்டியே... நீ கிளம்பு டா நான் பார்த்துக்கிறேன்...” கார்த்திக் அக்கறையாய் விசாரிக்க

நண்பனின் அக்கறை எல்லாம் இவனுள் பதியவே இல்லை. ‘அவ ஏன் விவாகரத்து கேட்டா.. பெத்தவங்க சொன்னா செய்துடுவாளா?...’ என்று இதிலேயே உழன்றது.

நண்பனின் வெறித்த பார்வையில், “திபாகரா...” கார்த்திக் அவனின் தோள் தொட...

அதில் விழியை மட்டும் அசைத்து நண்பனைக் கண்டவன், “just stomach upset டா... இப்போ ஏன் இதற்கு இவ்வளவு டென்ஷன் ஆகற? நீ கிளம்பு டா...” இவன் நண்பனைத் தன் பேச்சால் உந்தித் தள்ள...

இவனை ஆழ பார்த்தபடியே தான் விலகிச் சென்றான் அவன். நண்பன் விலகியதும்... இவன் கைகள் கைப்பேசியை எடுத்து,... அவரசமாய் வக்கீல் வல்லவன் பர்சனல் எண்ணை அழுத்தியது. அந்த பக்கம் அவர் எடுத்ததும்... “சார்.. உங்களை நான் இன்னைக்கே மீட் பண்ணனும்... உங்க அப்பாய்ன்மென்ட் தாங்க...” என்று இவன் மொழிய

இவன் குரலிலிருந்தே இவனின் பதட்டத்தை அறிந்தவரோ, “என்ன திபாகர்... கடிதம் கிடைத்த உடனே... நேற்றே அழைப்பீங்கன்னு நினைத்தேன்... எல்லாத்திலும் மெத்தனமா இருக்க கூடாது திபாகர்...”

அவர் குரல் எள்ளி நகையாடியதோ... அப்படி இவன் ஒரு வினாடி யோசிக்க... ஆனால் அவர் குரலில் அக்கறை வழிவதைக் கண்டவன்...
“சார்... pls try to understand me... அவ என்ன இப்படிபட்ட முட்டாள் தனமான காரியம் செய்து வச்சிருக்கா... அதற்கு நீங்க எப்படி துணை போகலாம்.... i cant belive this... எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு... நான் இன்னைக்கு உங்களை சந்தித்தே ஆகணும் சார்...” திபாகரின் குரல் அவஸ்தையில் ஒலித்தது.

“ஒகே... ஒகே.. திபாகர்.. ஈவினிங் ஆறு மணிக்கு என் ஆபீஸுக்கு வந்துடுங்க...” அவர் அனுமதி தரவும்.. சற்றே ஆசுவாசம் ஆனான் இவன்.

“வரேன் டார்லிங் வரேன்... வந்து உனக்கு கச்சேரி வெச்சிக்கிறேன்...” என்று அதிகாரமாய் முணுமுணுத்தவனோ... பின் தன் வேலைகளைப் பார்த்தவனின் மனமோ எப்போதுடா மணி ஆறாகும் என்று காத்திருந்து ஆனதும் கிளம்பினான் இவன்.

வழக்கறிஞர் வல்லவன் புகழும்.. பெயரும்… பெற்ற முண்ணனி வழக்கறிஞர். அவரிடம் அப்பாய்ன்மென்ட் எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் வாங்கிவிட முடியாது. ஆனால் திபாகரன் அவருக்கு வேறு... அந்த வேறு மகிழ்வரதனின் மருமகன் என்பதால்... தன்யாவின் கணவன் என்பதால் வந்தது.
மகிழ்வரதனும், வல்லவனும் குடும்ப நண்பர்கள். அதுவும் இல்லாமல்... மகிழ்வரதனின் தொழில்களில் சட்டரீதியான முடிவுகளுக்கு வல்லவனே சிறந்த ஆலோசகர். தற்போது தன்யாவுக்கும் அவள் கணவனுக்கும் இடையில் கூட சட்டரீதியில் அமர்ந்திருப்பவரும் அவரே.

மாலை, சரியாய் அவர் சொன்ன நேரத்திற்கு வல்லவன் முன் அமர்ந்திருந்தான் திபாகரன். அவனையே ஊடுருவும் பார்வையால் அளந்து கொண்டிருந்தார் வக்கீல் வல்லவன்.

“அப்புறம்.. சொல்லு திபாகர்... என்ன விஷயம்?...” இவரே பேச்சை ஆரம்பிக்க

“என்ன சார் இது... அவ வீட்டில் ஏன் இப்படி செய்யறாங்க... திருமணம் என்ன சாதாரண விஷயமா போச்சா அவங்களுக்கு?”

அவன் பேச்சில் குறுக்கிட்டவர், “முதலில் அந்த அவங்க யாருன்னு எனக்கு தெளிவா சொல்லு...” என்று இவர் கேட்க

“வேறு யாரு சார்... எல்லாம் தன்யாவோட அப்பா, அம்மா தான்... ஏன் இப்படி செய்யறாங்க.. எங்க இரண்டு பேரையும் பற்றி யோசிக்க மாட்டாங்களா... எங்களுக்கும் மனசு இருக்கும்.. அதில் எங்க வாழ்க்கைக்கான கனவு இருக்கும்னு யோசிக்க மாட்டாங்களா... அவங்க அளவுக்கு நான் கோடீஸ்வரன் இல்ல சார். அதற்காக நான் இன்னும் குமாஸ்தா மகன் விதுனதிபாகரனும் இல்ல சார். இப்போ நானும் ஒரு தொழிலதிபர். அத அவங்க நினைவில் வச்சிக்க சொல்லுங்க...” வந்தவன் பொரிய

அவனை ஆழ்ந்து பார்த்தவர், “அதாவது... உனக்கு விவாகரத்து அனுப்பினது... தன்யாவைக் கட்டாயப்படுத்தி உன் மாமனார், மாமியார் செய்த வேலைனு சொல்ற...”

அவரின் கேள்வியில்…
“yes absolutely...” இவன் மொழிய

“see.. மிஸ்டர் திபாகர்… உங்க விவாகரத்து சம்மந்தமா யாரும் தன்யாவை மூளைச்சலவை செய்யல… இது முழுக்க முழுக்க உங்க மனைவியின் முடிவு” அவர் அறிவிக்க

“வாட்!” அதிர்ச்சியில் இருக்கையைத் தள்ளிக் கொண்டு எழுந்தே விட்டான் திபாகர்.

“என்ன சார் சொல்றிங்க?” அவனுக்கு நம்பிக்கை இல்லை.

அதை உணர்ந்தவர், “யாரும் உங்க மனைவியை மிரட்டி பணிய வைக்கல. நான் தான் சொல்கிறேனே.. முழுக்க முழுக்க இது தன்யா சுயமா எடுத்த முடிவு...” என்க

திரும்பவும் இருக்கையில் அமர்ந்தவன், “ஏன் சார்… ஏன் இந்த முடிவை அவ எடுத்தா? இப்போ நானும் ஓரளவுக்கு வசதியில்.. அந்தஸ்தில் என்னை உயர்த்திட்டு வரேனே...” அவனுக்குள் கொதித்தது... ‘இதற்கா கடல் கடந்து எங்கோ போய் நாய் மாதிரி உழைத்தேன்?’

“கணவன்.. மனைவியின் உறவைத் தக்க வைக்க... பணம் மட்டுமே போதும்னு நினைக்கறீங்களா திபாகர்?”

அவரின் கேள்வியில் அப்போது தான் இவனுக்கு... தான் தற்போது பேசிய அபத்தமான பேச்சு புரிந்தது. “இல்ல தான் சார்... என் நிலைமை உங்களுக்கு தெரியும்... அடிமட்டத்திலிருந்து என் கையை, காலை ஊன்றி... மேலே வர முயற்சிக்கிறேன். இது என்னுடைய லட்சியமாக இருந்தாலும்... அவ வீட்டு அளவுக்கு இல்லைனாலும்... ஏதோ அவளை நான் நல்லா பார்த்துக்கணும் என்று நினைத்தது தப்பா?”

“தப்பு இல்ல.. ஆனா இதை நீங்க உங்க மனைவி கிட்ட சொன்னீங்களா?”

அவரின் கேள்வியில் அடி வாங்கியவன் போல் அதிர்ந்தான் இவன். “இதை நான் சொல்லணுமா!... என்னில் சரிபாதி.. அவளுக்கு தெரியாதா சார்?”

“ஹா... ஹா...” வாய் விட்டே சிரித்தவர்,
“திபாகர், இது சினிமா இல்ல... உங்க கண்ணைப் பார்த்து உங்க மனைவி தெரிஞ்சிக்கணும்... நீங்க வாயைத் திறந்து சொல்லாமலே.. உங்க மனசுலே இருக்கிறதை புரிந்து மனைவி நடந்துக்கணும் என்று எதிர்பார்க்க. இது நிஜ வாழ்க்கை. அன்றாடம் நீங்க இருவரும் பல பிரச்சனைகளில் உழலும் நிலையில்... இந்த சினிமா தனமான காட்சிகளை எல்லாம் நீங்க கேட்க கூடாது...”

அவரின் பதிலில் நிதர்சனம் உரைக்க.. இவன் மவுனமாக... அவரே தொடர்ந்தார். “முதலில் உங்க இருவரின் திருமணமும் எப்படி நடந்தது.. எந்த மாதிரி சூழ்நிலையில் நடந்ததுன்னு யோசித்துப் பாருங்க... அதிலும் தன்யா அப்போது பத்தொன்பது வயதுப் பெண்... எல்லாவற்றுக்கும் மேலாக... எந்த வகையிலும் தொடர்பில் இல்லாத... கணவனை வைத்துக் கொண்டு எந்த பெண்ணும் இந்த முடிவைத் தானே எடுப்பாள்?”

“சரி... எனக்கிருந்த வேலைப்பளுவில்... நான் தான் அவ கிட்ட பேசலை. அவ என் கிட்ட பேசி இருக்கலாமே சார்... அப்படி செய்தா நான் என்ன பேசாமலா போகப் போறேன்?”

“உங்களுடைய கைப்பேசி எண் கூட தன்னிடம் இல்லை என்பது தன்யாவுடைய வாதம்”

“வாட்!...” மறுபடியும் அதிர்ந்தான் திபாகரன்.. ‘எங்கு தப்பு செய்தேன்?’ திபாகரன் யோசனையில் மூழ்க

“உண்மை தான் திபாகர்... உங்களின் விவாகரத்து சம்மந்தமாய்.. தன்யா என்னை அழைத்துப் பேசிய போது... உங்க கிட்ட பேசிப் பார்த்து முடிவை எடுக்க சொன்னேன்... அப்போது சொன்ன பதில் தான் இது...”

“என் கிட்ட அவ கேட்டிருக்கலாமே சார்...”

“எப்படி.. முகம் கூட பார்க்காம... தாலி கட்டிய மறுநொடி... அம்மா வீட்டில் விட்டுட்டுப் போன புருஷனைத் தேடிப் பிடித்து... உங்ககிட்டயோ... இல்ல உங்க சார்ந்தவங்ககிட்டயோ நம்பர் வாங்கி இருக்கணும்னு சொல்றீங்களா?”

அவர் கேள்வி சுட.. “நான் பொறுப்பில்லாமல் எங்கோ விட்டுட்டுப் போன மாதிரி பேசுறீங்க... அவளை அவ அம்மா வீட்டில் தானே சார் விட்டேன்...”

“அது தான் நீங்க செய்த தப்பு..”

“என் வீடு அவளுக்கு வசதிப்படாது சார்...”

“அப்படின்னு தன்யா சொன்னாளா?” வல்லவன் எதிர் கேள்வி கேட்க…

இல்லையே.. இவன் தான் அவளிடம் பேசவே இல்லையே... இது குறித்து மட்டும் இல்லை… உண்மையில் இதுவரை இவன் தன் மனைவியிடம் பேசினதே இல்லையே...

அவன் மவுனமாய் அமர்ந்திருக்க, “நீங்க உங்க வீட்டில் விட்டுப் போயிருந்தாலாவது... ஏதோ சில விஷயங்களுக்காக தன்யா உங்க கிட்ட பேசியிருக்கும்... இல்ல நீங்களாவது பேசியிருப்பீங்க. அதற்கும் நீங்க வாய்ப்பு தரவில்லையே... அதான் உங்க மனைவி தண்டனை தராங்க... அப்போ இதை நீங்க ஏத்துக்க வேண்டியது தானே...”

அவர் சுலபமாய் சொல்லி விட... திபாகரனால் அது முடியுமா?...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN