பூ 43

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

கண்களில் தெரிந்த பாதை கருத்தில் பதியவில்லை அவன் இழுப்புக்கு சென்றுக்கொண்டு இருந்தாளே தவிர, மனது எதையும் உணரும் நிலையில் இல்லை… தேவாவின் மனம் முழுவதும் அந்த பெண்ணை பற்றிய எண்ணங்கள் தான் விரவிக்கிடந்தது.


ஏன் அழுகிறாள்? எதற்கு அழுகிறாள்? இவர் ஏன் அதை கண்டு கொள்ளாமல் போகிறார்!! என்ற எண்ணங்களே அவளைசுற்றி ரங்கராட்டினம் போல் சுழல, அவனுடன் நடந்தாலும் அந்த பெண்ணை பார்க்க மனம் உந்தியதால், திரும்பி பார்த்தபடி நடந்தாள்.


அழுதபடி நின்றிருந்த பெண் ஒரு கட்டத்தில் கண்களில் இருந்து மறைந்து போயிருக்க, மனது தெளிவில்லாமல் இருந்தவள் " நான் சாதரணமா அவங்க யாருன்னு தானே கேட்டேன்... அதுக்கு பூ, பூ நாகம்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றிங்க" என்றாள் அவன் சரியான பதிலை கூறவில்லையே என்ற இயலாமையுடன்.


அவள் குரலே அவளுடைய மனதினை எடுத்துரைக்க ஒரு முறைப்புடனே " இப்போ எதுக்குடி இந்த பேச்சு…. அவங்க என்னோட படிச்சவங்க புரியுதா…. படிச்சவங்க மட்டும் தான் சனா…. எனக்கும் அவங்களுக்குள் இடையே உள்ள அறிமுகம்….. அவ்வளவு தான்… என்பதில் அழுத்தம் கொடுத்து கூறியவன் போதுமா…. மத்ததை எல்லாம் அப்புறமா சொல்றேன்…" என்று அழுத்தமான குரலில் அவள் வாய் அடைத்தவன் தேவாவின் கையை மட்டும் விடவே இல்லை அதில் இருந்த இறுக்கம் அவளின் மூளையை வெகுவாய் யோசிக்க வைத்தாலும் அவனுடைய அதட்டல் கொஞ்சம் வேலை செய்தது.


இருவரும் மருத்துவமனை வாயிலை கடந்து நடந்து கொண்டிருக்க கவலையாக பின்புறம் திரும்பிப் பார்த்தாள் தேவா, அவசர அவசரமாக ஓடிவரும் அந்த பெண்ணை பார்த்ததும் தடுமாறிய குரலில் "ஹீரோ ப்ளீஸ் ஒரு... ஒரு நிமிஷம்... கொஞ்சம் இருக்க... அவங்க ஓடி வராங்க பாருங்க" என்று கைகளை பிடித்து நிறுத்தினாள்.


அவள் புறம் திரும்பாமலேயே "அவங்களுக்கு நம்ம கூட பேச எல்லாம் நேரம் இருக்காது சனா... வேற எங்கேயாவது அவசரமா போற வேலை இருந்திருக்கும் நீ அமைதியா வா" என்றபடி கொஞ்சம் கூட இளக்கம் காட்டாமல் முன்னேற அவனுக்கு முன்னால் மூச்சு வாங்க வந்து நின்றாள் அந்த பெண்.


அழுது அழுது சிவப்பேறிய கண்களுடன், ஒடிசலான தேகத்தோடு இருந்த பெண் கையில் குழந்தையை பிடித்தபடி கலங்கிய கண்களுடன் "விகாஸ்" என்று தழுதழுத்த குரலில் அழைத்தாள்.


இறுக்கமாக நின்றிருந்தவன் அவளுடைய அழைப்பில் கண்களை அவள் புறம் திருப்பி "யார் விகாஸ்…. என் பெயர் விசாகன்... நீங்க யாரோன்னு நினைச்சி பேசுறிங்கன்னு நினைக்கிறேன்" என்றான் அன்னியத் தன்மையுடன்.


"எ.. என்னை மறந்துட்டிங்களா விகாஸ்…. நான் நான் அக்ஷ்ரா… எ.. என்னை உங்களுக்கு நிஜமாவே தெரியலையா" என்றாள் திக்கி திணறி தன்னை அவனுக்கு தெரியவில்லையே என்ற தவிப்பில்.


"சே.. சே…. உங்களை மறக்க முடியுமா அக்ஷ்ரா… என் பெயர் விசாகன்னு உங்களுக்கு ஞாபகப்படுத்தினேன்" என்றவனது குரல் ஒரு வித கடினத்தன்மை கலந்து எரிச்சலாய் வெளிப்பட்டது. இதில் பார்வையாளராய் இருந்த தேவாவிற்குத்தான் இதயம் எக்குத்தப்பாய் துடித்தது.


அவன் குரலில் வெளிப்பட்ட வித்தியாசத்தை வைத்தே தன்னிடம் பேச பிரியப்படவில்லை என்பதை அறிந்துக்கொண்ட அக்ஷ்ரா "சாரி விகா… என்று அழைக்க வந்தவள் அவன் முறைப்பை பார்த்ததும் "உங்க பெயரை சொல்ற தகுதி கூட எனக்கு இல்லைன்னு எனக்கு புரியது விசாகன்… என்னை பார்க்க கூட உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும்…. ஆனா உங்க முன்னாடி வந்து நிக்குறதுக்கு காரணம் என்னை மன்னிச்சிடுங்கன்னு கேக்கத்தான்... சாரி சாரி விசாகன்" என்றாள் அழுகையுடன்.


துளி கூட முக மாற்றமின்றி சாதரணமாக நின்றிருந்த விசாகன் "எதுக்கு சாரின்ற பெரிய வார்த்தை எல்லாம் கேக்குறிங்க அக்ஷ்ரா…. நீங்க எது செய்தாலும், அது எனக்கு நல்லதுதான் செய்து இருக்கிங்க... அதுக்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்" என்று அவன் கைகளை குவித்து நன்றியை தெரிவிக்க அப்பெண் துக்கத்தை அடக்க முடியாமல் அழுதாள்.


"அக்ஷ்ரா…. எதுக்கு தேவையில்லாம அழறிங்க? உங்கள அழ வைச்ச பாவம் எனக்கு வேண்டாம்… நீங்க செய்த நல்லது என்னை இப்ப ரொம்ப நல்லா வாழ வைச்சிட்டு இருக்கு... அதுக்கு நீங்க தான் காரணம்... சோ இந்த, மன்னிப்பு படலம் எல்லாம் வேண்டாமே…. இனி நீங்க என்னை பார்க்கவோ, பேசவோ, முயற்சி பண்ணாதிங்க... ப்ளீஸ்…" என்று கூறியவன்


"அப்புறம் இது என் மனைவி தேவசேனா... உங்களுக்கு எப்படின்னு தெரியாது ஆனா எனக்கு இங்க நின்னு எல்லார் முன்னாடியும் காட்சி பொருளா நிக்குறது பிடிக்கல!" என்று அங்கிருந்து நகரப் போனவன் அவளுடைய பெண்ணை பார்த்ததும் நின்றான்


"உங்க பொண்ணா, உடம்பு சரியில்லை போல இருக்கு... போங்க போய் டாக்கடரை பாருங்க... என் கூட பேசி உங்க நேரத்தை வீணடிக்காதிங்க" என்றவன் தேவாவை அழைத்துக்கொண்டு அவளை தாண்டி சென்று விட போகும் அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் அக்ஷ்ரா.


அவன் கோபப்படுவான், திட்டுவான், கேள்வி கேட்பான் என்று நினைத்தவளுக்கு விசாகன் பேசிய பேச்சுக்கள் அதிர்ச்சியாய் இருந்தது… கட்டிய மனைவியை அவன் பார்த்துக்கொள்ளும் அழகை கண்டவளுக்கு கையில் கிடைத்த அரிய பொக்கிஷத்தை இழந்து விட்டோமே!! என்று நினைக்கையிலேயே நெஞ்சம் விம்மியது... 'எல்லாம் என் தலையெழுத்து, நான் செய்த பாவம் என் வாழ் நாள் முழுசும் அனுபவிக்கனும்... உனக்கு பண்ணின துரோகம் என்னை மொத்தமா முழிங்கிடுச்சி விகாஸ்' என்று அழுதவள் நெஞ்சம் கணக்க மகளை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்குள் சென்றாள்.


🌹🌹🌹🌹


வாசலில் வந்து நின்ற புல்லட்டின் சத்ததில் வெளியே எட்டி பார்த்த தில்லை, வந்துக்கொண்டுடிருந்த சுந்தரனை பார்த்தும் "வாயா, வாயா" என்று முகமலர்ந்து அழைத்தார்.


அவரைப்பார்த்ததும் புன்னைகையை உதிர்த்தவன் "வந்துட்டே இருக்கேனே அப்பத்தா... நீ எப்படி இருக்க?" என்று அவரை நோக்கி வந்தான்.


"நான் நல்லா இருக்கேன் ராசா,.நீ எப்படி இருக்க... வாசல்லேயே நிக்கறியே உள்ளார வாயா" என்று வீட்டுற்குள் அழைத்துச் சென்றவர் "பொன்னி, அடியேய் எங்கடி போன?" என்று உள்ளே நோக்கி குரல் கொடுத்ததும் வந்து நின்ற பொன்னியிடம், "மாப்பிள்ளைக்கு காபிய கொண்டாடி... அப்படியே கொள்ளையில இருக்கும் அமுதாவ கூப்பிடு" என்று அனுப்பி வைத்தார்.


"பொன்னி அக்கா," என்று அழைத்து நிறுத்தியவன் "காபிய மட்டும் கொண்டு வா அக்கா... நானே போய் அமுதாவ பாத்துக்கறேன்" என்று கூறி தில்லையை பார்த்தான்.


"ம்" என்று சிரிப்புடனே தலையை ஆட்டிய பொன்னி உள்ளே சென்று விட அவனை குறுகுறுவென்ற தில்லையிடம் "பார்த்துட்டு வரட்டுமா? கல்யாணம் நிச்சயம் ஆனதுலருந்து உன் பேரன் அவளை பார்க்கக்கூட விடல.… மில்லுக்கு அனுப்ப மாட்டுறான்... பாக்டரிக்கும் அனுப்ப மாட்டுறான்... என்னை சுத்தல்ல விடுறான்" என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தான்.


சுந்தரனின் வார்த்தைகள் அவருக்கு சிரிப்பை உண்டாக்க வாய்விட்டு சிரித்தவர் "அப்போ இந்த கிழவிய பாக்க வரலை!?! உனக்கு வரப்போற குமரிய பாக்க வந்து இருக்க!?!" என்று மோவாயில் இடித்து கொண்டவர் கொள்ளையில தான் இருக்கா போய் பாரு என்று அனுப்பி வைத்தார்.


விசாகன் நட்டு வைத்த ரோஜா செடிகளில் இருந்து பூக்கள் பூக்க துவங்கி இருந்தது.. காலை தோட்டத்திற்கு தண்ணீர் விட்டதில் அங்காங்கே ஈரமாகவும் வீசிய காற்றில் அந்த இடமே ஜில்லென்றும் இருந்தது… அதற்கு சற்று அருகிலையே இருந்த திண்ணையில் அமர்ந்தபடி வரவு செலவு கணக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் அமுதா.


மெல்ல அடிமீது அடி வைத்து சத்தம் கொடுக்காமல் வந்தவன் அவள் மும்முரமாய் வேலையில் இருந்ததை பார்த்ததும், பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து அவளுக்கு போனை செய்தான்.


வேலை மும்முரத்தில் அதை இரண்டு மூன்று அழைப்புக்கள் தவற விட்டவள், அது விடாமல் அடிக்கவும் எடுத்து பார்த்தாள். சற்று யோசனையுடன் அதையே பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அழைப்பு நின்று விட, அவள் கண் முன்னே கடுப்புடன் வந்து நின்றவனை பார்த்து திடுக்கிட்டு போனாள் அமுதா.


"நீங்க... நீங்க இங்க எப்படி" என்றாள் சுற்றும் முற்றும் பார்த்து


"ம்... சுவர் ஏறி குதிச்சி வந்தேன்" என்றான் கடுப்பாக


அவன் பொய் தான் பேசுகிறான் என்பதை அறிந்துக் கொண்டவள் "விளையாடாதிங்க... நீ..


நீங்க வந்தது அம்மத்தாக்கு தெரியுமா?" என்றாள் தவிப்புடன்.


"அட நிறுத்துமா... எல்லாம் தெரிஞ்சி அவங்களே போன்னு சொல்லிதான் வந்தேன். ஆனா இங்க வந்த பார்த்த பிறகு தான் ஏன் வந்தேன்னு இருக்கு" என்றான் சோகமாக


"அது அது நான் வேலையா இருந்தேன்... அதான் போன் எடுக்க முடியல" என்று தான் போன் எடுக்காததுக்கு காரணத்தை கூறிட


கை நீட்டி தடுத்தவன் "போதும் இனி இந்த குட்டி மனசு தாங்காது... உனக்கு என்னை பிடிச்சி இருக்கு தானே?... பிடிக்கலன்னு சொல்லி நெஞ்சில நெருப்பை அள்ளி கொட்டிடாதம்மா!?!" என்றான் சற்று பதபதைப்புடன்


"பச் என்ன பேசுறிங்க…. தெரிஞ்சிதான் பேசுறிங்களா…" என்று அவனை கடிந்துக்கொண்டவள் "எதுக்கு எது பேசுறிங்க" என்றாள் முறைப்புடனே


"இந்த முறைச்சி பேச்சி மாத்துற வேலை எல்லாம் வேணா... முதல்ல நான் கேட்டதுக்கு பதிலை சொல்லு?... பிடிச்சி இருக்கா? பிடிக்கலையா?" என்று அதிலேயே குறியாக நின்றான்.


இப்போதைக்கு பதில் தெரியும் வரை விடமாட்டான் என்று புரிந்துக்கொண்வள் அவனை பார்த்து வெட்கம் வர கன்னங்கள் இரண்டும் செம்பருத்தி பூவாய் சிவந்து போக "அது, அது பிடிச்சி இருக்கு…" என்று கூறி முகத்தை மூடிக்கொண்டாள்.


அவனுக்கு வேண்டியதும் இதுதானே அவள் விரும்பித்தான் சம்மதித்தாளா? என்று அறியவே ஆசைக்கொண்டு அவள் வரும் நாளை எதிர் பார்த்து இருந்தவனுக்கு நண்பனின் நல்லெண்ணம் தலையில் மண்ணை கொட்டி, ஏக கடுப்பில் ஏத்தி வைத்து இருந்தது. வீட்டிற்கும் வர சங்கடம் கொண்டு இருந்தவனுக்கு, துணிவு வர இதோ கிளம்பி வந்து அவள் முன்னே நின்று விட்டான்.


அமுதாவின் பதிலில் திக்குமுக்காடி போய் இருந்தவன், அமுதா என்று ஆசையாக அழைத்து பக்கத்தில் வர பொன்னி காபி டம்பளருடன் "அமுதாம்மா" என்று குரலை கொடுத்து அவன் ஆசையில் ஒரு கூடை மண்ணை அள்ளி கொட்டி இருந்தாள்.


"ரொம்ப நேரம் ஆகிடுச்சி, வாங்க… பொன்னி அக்கா கூப்பிடுறாங்க…" என்று அழைத்து விட்டு முன்னே நடக்க மனம் நிறைந்தவளிடம் ஆசையாக ஒரு வார்த்தை பேச முடியவில்லையே என்று பொன்னியை கருவிக்கொண்டே பின்னே நடந்து சென்றான் சுந்தரன்.


🌹🌹🌹🌹🌹


வீட்டை நோக்கி பயணப்பட்ட இருவருக்குள்ளும் கணத்த மௌனம் ஆட்சி செய்ய காரின் சாளரத்தின் வழியே பார்வையை பதிந்து இருந்தவளுக்கு அவனிடம் எப்படி கேட்பது என்று பயமாக இருந்தது.


ஒருமுறை அமுதாவை தவறாக நினைத்து உள்ளுக்குள் வேதனைப்படட்டது அவளுக்கு தானே தெரியும்... அதன் பொருட்டே மண்டையை உடைத்துக்கொண்டு இருந்தவள், அவனிடமே கேட்க முடிவு செய்து அவனையும் சாலையையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு வந்தாள்.


அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை, "க்கூம்" என்று தொண்டையே செருமி தன் இருப்பை அவனுக்கு தெரியபடுத்த அவளை ஒரு பார்வை பார்த்தவன் சாலையில் கவனத்தை பதித்தான்.


"உங்ககிட்ட பேசனும்".


"பேசு"


"அவங்க... அவங்க யாரு?"


"கூட படிச்சவங்க"


"அதுதான் செல்லிட்டிங்களே... அதை கேட்கல"


"வேற எதைக்கேக்குற?"


"ஏன் அழுதாங்க? ஏன் சாரி கேக்குறாங்க?" என்றாள் சற்று கோபம் கலந்த குரலில் காரை சடன் பிரேகிட்டு நிறுத்தியவன்


"யாரு?... யாரு...யாரு? அவங்க யாருன்னு சொன்னாதான் கூட வருவியாடி" என்று காரில் இருந்து இறங்கி கார்கதவை அறைந்து சாத்தி இருந்தான்.


'எதை நினைக்கவே கூடாது... என்று இருக்கிறானோ அதையே மறுபடி மறுபடி ஞாயபகப்படுத்த அவனுள் எழுந்த கோவம் தேவாவிடம் வார்த்தைகளாக வெளிப்பட்டது.


"நான் இப்போ என்ன கேட்டேன் அவங்க யாருன்னு தானே அதுக்கு ஏன் இவ்வளவு கோவம்" என்று முனுமுனுப்பாக கூறவும்


கோவம் கொண்டு வெளியே நின்றிருந்த விசாகனுக்கு அவள் முனுமுனுப்பு தெளிவாக கேட்கவும் "எதை வேண்டாம், தேவை இல்லன்னு சொல்லிட்டு இருக்கேனோ, அதையே தான் கிளறிகிட்டு இருக்க, இதுக்கு கோவப்படாம இருக்கனுமா… தேவை இல்லாத குப்பைன்னு தானே, நானே ஒதுங்கி போறேன்... குப்பைய கிளறி கிளறி நீதான் அசிங்கபடுத்துற" என்று எச்சரிக்கை போல் கூறிட ஒரு நொடி அவனின் முகத்தில் வந்து போன உணர்வுகளை கண்டவளுக்கு மறுபடியும் கேட்கும் துணிவு இல்லை


அவன் கோபத்தில் கடிந்து பேசவும் முகத்தினை தூக்கி வைத்துக் கொண்டவள் நகத்தினை கடிக்க அவள் விரல்களில் பட்டென ஒரு அடியை வைத்தவன் "என்னடி இது, சின்ன புள்ள மாதிரி எதை எதை கடிச்சி திங்னும்னு அறிவு இல்லை" என்று அதட்டியபடி காரில் ஏறி இருந்தான்.


அவனுக்குமே யோசனைதான் தேவாவிடம் எப்படி கூறுவது என்று ஏற்கனவே அவ்வப்போது எழும் முதல் காதல் பற்றிய பேச்சை அடியோடு வெறுத்தவளிடம் விஷயத்தை கூற தயங்கினான்.


அவன் எண்ணவோட்டத்தை அறியாதவளோ "ஷப்பா முடியல என்று சீட்டின் பின் புறம் சாய்ந்து, இனி எது பண்ணனும், பண்ணக் கூடாதுன்னு, சொல்லிடுங்க... கேட்ட கேள்விக்கு தான் பதிலை சொல்ல மாட்டிங்கன்னு பார்த்தா! என் இஷ்டமா ஒரு நகத்தை கூட கடிக்க முடியல…" என்று ஆதங்கப்பட்டு சாளரத்தின் வெளிபுறத்தில் பார்வையை திருப்பினாள்.


அவளுடைய பேச்சு அவன் தயக்கத்தை எல்லாம் பின்னுக்கு தள்ளியிருந்தது.. இவ்வளவு கூறியும் அடம் பிடிக்கின்றாளே என்ற கடுப்பில் "நகத்தை மட்டும் ஏன் கடிக்கிற? அதோ தெரியுதே அந்த மரம், செடி, கொடி எல்லாம் இருக்கு... அதையும் முயற்சி பண்ணு" உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டோம்... இப்போ என்ன உனக்கு அவ யாருன்னு சொல்லனும், அதானே உன் பிரச்சனை!?!?... அவளை பத்தி சொன்னா அமைதியா இருந்துடுவியா?!?!" என்று கேள்வியை கேட்டவன் கோவமாக "அவ,அவதான் என் முதல் காதல்" என்று கசப்பு நிறைந்த குரலில் கூறியவன். காரை உயிர்ப்பித்து அதிவேகமெடுத்து கிளப்பி இருந்தான்.


இந்த வார்த்தைகள் தேவா அனுமானித்தது தான்…. "அவள் என் காதலியாக இருந்தாள்", என்று விசாகனின் வாய் மொழியால் கேட்டே போதே உள்ளுக்குள் ஏதோ உடைந்து உயிர் வரை தாக்கியது போல் பெரும் வலி எழுந்ததை அவளால் தடுக்க முடியவில்லை… அதிக வலியை அனுபவிக்கிறாள் என்பதை அவளது முகமே காட்டியது.


காரை செலுத்தியபடியே தேவாவின் முக மாறுதல்களை வைத்தே அவள் எந்த அளவுக்கு வேதனைபடுகிறாள் என்று அறிந்தவன் காரை நிறுத்தி விட்டு அவளையே பார்த்தான். கண்கள் நீரில் பளப்பளத்தது, முக்கு விடைத்து அழுகையை அடக்க அரும்பாடுபடுவது நன்றாகவே தெரிந்தது இதற்கு மேல் அவளை காண சகியாதவன் "இதுக்கு இதுக்கு தான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்... சொல் பேச்சை கேட்டா தானே, இப்ப நீயும் கவலைப்பட்டு என்னையும் கவலைப்பட வைக்குறடி…" என்று சத்தமிட்டு அவனை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் காற்றும் புக முடியாத படி இறுக்கமாக அணைத்து அவள் தலை கோதி, அது இறந்தகாலம் சனா… முடிஞ்சி போன ஒன்னு…. அதையே நினைச்சி உன்னை வருத்திக்காதடா பீளீஸ்…" என்று காது மடல் உரச பேசி அவளை ஆறுதல் படுத்தியவன் அழுத்தமாக இதழொற்றலை கொடுத்து அவளை சமாதனபடுத்தினான்.


இந்த தீடீர் அணைப்பும், எதிர்பாரத இதழொற்றலும் அவளுக்கு அதிர்வையும், நடுக்கத்தையும் கொடுக்க உடல் சில்லிட்டு போனது தேவாவிற்கு, அவள் நிலையை கண்டு மனமே இல்லாமல் கைகளை தளர்த்தி அவளை விடுவித்தானே தவிர. விட்டு விலகவில்லை


அவனின் ஆறுதலான வார்த்தைகளும் இதமான அணைப்பும், உயிர் வரை ஊடுருவி சிலிர்க்க வைத்த மென்மையான இதழொற்றலும் ரணமான இதயத்திற்கு மயிலிறகாய் வருடிட ஒரு கட்டுப்பாட்டிற்குள் மனதை செலுத்திய தேவா, " ந… நான் நார்மலாதான் இருக்கேன்… எனக்கென்ன…. உங்களுக்கு லவ் இருக்குன்னு தெரியும்…. தெரிஞ்சி தானே கல்யாணம் பண்ணேன்... அதுல... அதுல எனக்கு வருத்தம் இல்ல…" என்று கூறவும்,


அவள் தலையை தன் தலையால் முட்டியவன் "லவ் இருக்குன்னு, இல்ல இருந்தது…| என்று திருத்திட, ஆமா ஆமா இருந்தது" என்று கூறி சிரிக்க முயன்றாள். உதட்டில் நிறைந்த சிரிப்பு கண்களை எட்டவில்லை


"இனி எப்பவும் இதை பேசக்கூடாது சனா… முடிஞ்சி போச்சி, அப்படி ஒரு அத்தியாயம் இருந்தது, என்பதையே மறந்துடு... எனக்கு ஞாபகமும் படுத்தாத... "என்றான் கரகரப்பான குரலில்,


மூக்கை உறிஞ்சியபடியே "இந்த விஷயத்துல நான் கோவமா தான் இருக்கேன்.. ஆனா அது உங்க மேல இல்ல காலப்போக்குல கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடும் என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கூறியவள்… இந்த விஷயம் உங்களை நோகடிக்கிதுன்னா நிச்சயமா பேச மாட்டேன்ங்க… உங்கள கேட்டது கூட அவங்க அழறாங்களேன்னு குழப்பத்துல தான் கேட்டேன்… இனிமே கேட்டு உங்களை கஷ்டப்படுத்த மாட்டேங்க" என்றாள் ஒரு முடிவை எடுத்தவள் போல்.


அவள் முதுகை வருடி விட்டவன் "நீ இப்போதான் நார்மல் ஆகிட்டு வர்ற சனா...ரொம்ப யோச்சி கொஞ்ச நஞ்சமா இருக்க முளையும் குழப்பிக்காத…. இப்பவும் சொல்றேன், அது என்னோட கடந்த காலம்... இப்போ, இந்த நிமிஷம் நீ...நீ மட்டும் தான்... நிஜம்... அதை நல்லா ஞாபகம் வைச்சிக்கோ" என்று அழுத்தம் நிறைந்த குரலில் கூறி இறுக்கமாக அணைத்து விடுவித்தவன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.


வேறு எதையும் நினைக்கவே கூடாது என்று மூளைக்கு திரையிட்டு மறைத்து வைத்தவளுக்கு தெரியவில்லை அது தன்னையும் சேர்த்து முழுங்க காத்திருக்கிறது என்று வரும் மாற்றங்கள் நல்லதாக இருக்குமா


தொடரும்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN