பூ 44

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

"பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை மூட்டும், பச்சை நிறமே, புல்லின் நுனியும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே,
எனக்கு சம்மதம் தருமே…" என்று உச்சஸ்தாயில் பாடியபடி கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்து தயாராகிக் கொண்டு இருந்தாள் மேகலா,


"அடியேய், என்ன கருமம் டி இது…. இப்படி காதே செவிடா போகுற அளவு கத்திட்டு இருக்க" என்று மேகலாவின் அம்மா பின்கட்டில் இருந்து குரலை கொடுத்தபடி உள்ளே வந்தவர், அவள் உடையை பார்த்ததும் "என்னடி இது உடுப்பு….? கோவிலுக்கு போற, நல்ல லட்சணமா பாவடை தாவணியை போட்டுக்கிட்டு போறதை வுட்டுட்டு தலைகாணி உறைமாதிரி இருக்கு இதை போட்டுட்டு போற" என்றார் முகத்தை சுருக்கியபடி


"ஏ… ம்மா இதுக்கு என்ன குறைச்சல்... நல்லாதானே இருக்கு... போன பொங்களுக்கு மதனி எடுத்துடுக் கொடுத்த சுடிதார்... அதுக்குள்ள உன் கண்ணுக்கு தலைகாணி உறைமாதி ஆகிடுச்சா" என்று கவலையாக தன் உடையை முன்னும் பின்னும் திருப்பி கண்ணாடியில் பார்த்திருந்தாள் மேகலா


"அட கூறு கெட்டவளே... உடுப்பு நல்லா தான் இருக்கு... கோவிலுக்கு போறியே கொஞ்சம் லட்சணமா போன்னு தான் சொன்னேன்…
அதுக்கு ஏழு ஊருக்கு முகத்தை தூக்கி வைச்சிக்க!!" என்று அவளை நொடித்தவர் " படிச்சி என்ன பிரயோஜனம், சொல்றது ஒன்னு விளங்குதா?!?!" என்று திட்டியபடியே கையில் இருந்த தூக்கை மகளின் கைகளில் திணித்தார்.


"சொல்றதை ஒழுங்கா சொல்லனும், உனக்கு மட்டும் விளங்குறாப் போல சொன்னா, எனக்குன்னு இல்ல, மெத்த படிச்ச மேதாவிக்கு கூட புரியாது... நான் என்ன கோவிலுக்கு மட்டுமா போறேன், ஜவுளி கடைக்கும் தானே போகபோறேன்… அதுக்கு இது போதும்" என்று தாயிக்கு நிகராக தர்கம் செய்தவள் "ஆமா இதுல என்ன இருக்கு?" என்றாள் கையில் திணித்ததை தூக்கி பார்த்தபடி


"இதுல தேவாவுக்கு, பலகாரமும் இந்த பையில பூவும் வைச்சி இருக்கேன்... ரொம்ப நாள் கழிச்சி அவள பாக்குற, இப்பதான உடம்பும் குணமாகி இருக்கு…. வாயிக்கு ருசியா சாப்பிட தோணும் அதான் இதை வைச்சிருக்கேன்" என்றவர் "சீக்கிரம் வீட்டுக்கு வந்திடனும் அந்த தம்பியே போன் பண்ணி, உன்னையும் அனுப்பி வைக்க சொல்லி உங்க அப்பாருகிட்ட கேட்டதால தான் உன் அப்பாரு அனுப்புறாரு... புரியுதா புள்ள" என்று கூறி அவளை வழியனுப்பி வைக்க சரிம்மா சீக்கிரம் வர பாக்குறேன் என்று அவளும் கிளம்பி இருந்தாள்.


அக்ஷ்ராவை பற்றி பேசிய பின் அவளை பற்றிய பேச்சையே எடுக்க கூடாது என்று கவனமாக தான் இருந்தாள், இருந்தும் கணவனை நினைத்து வேதனையாக இருந்தது ஒரு தலையாக காதலித்த தான்னலேயே அவன் மறுத்ததை தாங்க முடியாமல் வேதனையில் உழன்றது அவளுக்கு தானே தெரியும்... அப்படியிருக்க உருகி உருகி காதலித்து பிரிந்ததை எப்படி தாங்கி கொண்டிருந்தாரோ என்று நினைக்கையிலேயே இதயம் அவனுக்காக தவித்தது.


அக்ஷராவை சந்தித்து ஒருவாரம் கடந்து இருந்தது. ஒருவாறாக அனைத்தையும் மூளையிலிருந்து ஓரம் ஒதுக்கியவள் அமுதாவின் கல்யாண வேலையில் தன்னை திணித்துக் கொண்டு இருந்தாள். அந்நேரம் அமுதா தேவா மேகலா மூவரும் தேனியில் ஜவுளி கடைக்கு சென்று விட்டு அப்படியே கோவிலுக்கும் சென்று வரலாம் என்று இருக்க அதற்குதான் மேகலா கிளம்பி பேருந்து நிலையத்திற்கு வந்தாள்.


வரும் போதே தேவாவின் வீட்டிற்கு சென்று வரலாம் என்று தான் நினைத்தாள் மேகலா. அந்நேரம் பார்த்து ஜெயசந்திரனுடைய நினைவு வர எதற்கு கடப்பாறையை எடுத்து காதை குடைவானே வலிக்குதேன்னு அலறுவானே என்று நினைத்தவள் அப்படியே யூ டர்ன் அடித்து பேருந்து நிறுத்தம் செல்ல, அவளே ஒதுங்கி போனாலும் விதி தன் வேலையை செவ்வனே செய்ய அங்கிருந்த உறவுமுறை பையனிடம் சிரித்தபடி பேசிக்கொண்டு இருந்தாள்.


வெளியே சென்று இருந்த ஜெயசந்திரன் மேகலா நிற்கும் பேருந்து நிறுத்தம் வழியாக வரவும் மேகலா ஒருவனிடம் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து அதற்கு எதிரில் இருந்த டீ கடையில் பைக்கை நிறுத்தியவன் அதன் மேல் சாய்ந்தபடி ஒரு டீ என்று உரக்க கூறிட அவன் சத்தமிட்டதில் நிமிர்ந்து யார் என பார்த்தவள் கண்கள் தன் போக்கில் பக்கத்தில் நின்றிருப்பவனின் மேல் கோவமாய் பார்த்த சந்திரனை கண்டு அகலமாய் விரிந்தது.


'இவன் ஏன் இப்படி முறைக்குறான்'. என்று அவனை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டாலும், பயம் இல்லாதவள் போல் காட்டிக்கொள்ள பெரும்பாடுபட்டவள் "அப்புறம் மகேஷூ நீ என பண்றதா இருக்க?" என்று பேச்சு அந்த இளவட்ட ஆண்மகனிடம் இருந்தாலும் "அட அப்பா சாமி, முடியலடா... எதுக்கு இப்படி முறைச்சி உயிரை வாங்குறான்?" என்று நினைத்தாள்.


அவனும் அங்கிருந்து சென்று விடுவான் என்று பார்த்திருந்த ஜெயசந்திரன் அவன் செல்லாமல் பேசிக்கொண்டே இருக்க ஜெயசந்திரனே "டேய் மகேஷூ" என்று உரக்க அழைத்திருந்தான் அவள் அருகில் இருந்த மகேஷ் என்னும் இளைஞனை


அவன் அழைப்பில் அருகே வந்து நின்ற மகேஷின் தோளில் நட்பாய் கையை போட்டபடி ஏதோ பேசிக்கொண்டே எதிரில் இருந்த மேகலாவை தீ பார்வை பார்த்தான் சந்திரன்.


'என்ன டா கருமம் இது… அவன் எப்படி பார்த்தாலும் முறைக்கற மாதிரியே தெரியுது??? எனக்கு தான் கண்ணுல பிரச்சனையா!!" என்று இரு கண்களையும் கசக்கியபடி அவனை பார்த்தாள், உடன் பேசிக்கொண்டு நிற்கும் மகேஷ் அறியதவாறு அவன் தோள் மேல் போட்ட கையைக் கொண்டே ஜாக்கிரதை என்று விரல் நீட்டி மேகலாவை எச்சரித்தவன் பேருந்து வரும் வரை அந்த இளைஞனை அனுப்பவில்லை


ஏறக்குறைய 15 நிமிடங்களுக்கு பிறகு வந்த பேருந்தில் ஏறியவள் மகேஷ் இன்னும் வரவில்லையே என்று அவனை பார்க்க அவனை விடாமல் நிற்கவைத்து கதை அளந்துக்கொண்டு இருந்தான் ஜெயச்சந்திரன். "அண்ணா பஸ்ஸு" என்று அந்த இளைஞன் இழுக்க


"போட்டும் டா … அடுத்ததுல போகலாம்... உனக்கென்ன நேரம் ஆச்சுன்னா, நானே கொண்டு போய் விடுறேன்... ரொம்ப நாளுக்கு அப்புறம் பாக்குறோம் பேசலன்னா எப்புடி டா "என்று பல கொக்கிகளை போட்டு நிற்க வைத்துக்கொண்டான்.


அவனை தாண்டி பேருந்து செல்லும் வரை ஏதோ முக்கியமான விஷயம் பேசுவதை போல பாவனை செய்து கொண்டு இருந்தவனை கடுப்பாக பார்த்த மேகலாவை "போடி" என்று உதட்டசைவில் கூறியவன் கண்களில் வெற்றிக்கொண்ட கர்வமும் ஒளிர்ந்தது.


என்ன சொல்றான் என்று உன்னிப்பாய் கவனித்தவளுக்கு அவன் கூறிய வார்த்தைகள் புரிந்த போது 'எருமை எருமை எப்போ பார்த்தாலும் வம்பு பண்றதுக்குன்னே வரான்... நான் ஒதுங்கி போனாலும் இவன் போகமாட்டான் போலயே!!! எப்படியோ இவன்கிட்ட இருந்து தப்பிச்சா போதும்' என்று நினைத்தவள் தேவாவின் ஊருக்கு பயணப்பட்டுக் கொண்டு இருந்தாள்.
💐💐💐💐


"என்னடி முகத்தை இப்படி வச்சி இருக்க கொஞ்சம் சிரிச்சா மாதிரி கிளம்ப" என்றபடி சட்டையின் கையை மடித்து விட்டுக் கொண்டு இருந்தான் விசாகன்.


"நான் ஒன்னும் முகத்தை தூக்கி வைச்சிக்கில... என் முகமே அப்படித்தான்... பாருங்க ஹீ…" என்று அவனுக்கு அழகு காமித்தவள் " நான் எங்கேயும் போகல.." என்று வீம்பாய் பேசி மெத்தையில் அமர்ந்து கொண்டாள்.


"அப்புறம்" என்றான் மற்றொரு கையையும் மடித்தபடி. அவளிடம் கதை கேட்பது போல


அப்புறமா?!?!… நான் என்ன கதையா சொல்றேன்???…. அப்புறம்னு கேக்குறிங்க?!?!…. சொல்ல சொல்ல கிளம்பினா என்ன அர்த்தம்?" என்றாள் அவன் தலை சரிசெய்வதை பார்த்தபடி


"ம்… எனக்கு முக்கியமான வேலைன்னு அர்த்தம்" என்றான் மேசையில் சீப்பை வைத்தபடி


"அதை அப்புறம் பாக்கலாமே" என்றாள் அவன் முகம் பார்த்து கெஞ்சலாய்


"அது முடியாது சனா" என்றதும்


முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு மெத்தையில் படுத்து கொண்டவளின் கால் பக்கம் அமர்ந்த விசாகன் அவள் பாதங்களை மெல்ல வருடி விட கூச்சத்தில் பாதங்களை இழுத்துக்கொண்டவள் "என்னை ஒன்னும் சமாதனப்படுத்த வேண்டாம் போங்க" என்று அவனை பாராமல் முகத்தை திரும்பிக்கொண்டாள்.


"எங்க போக டி?" என்றான் சிரிப்புடனே எவ்வளவு சொல்லியும் அடங்காமல் அவளின் சிறுபிள்ளை தனமான கோபம் அவனுக்கு சிரிப்பை தான் வரவழைத்து இருந்தது.


"அதான், உங்களுக்கு வேலை வந்துடுச்சே, அங்கயே போங்க ஒரு நாள் ஒரே நாள் எங்க கூட வெளியே வர முடியல!" என்றவளது குரலில் ஏகத்திற்கும் ஏக்கம் நிறைந்து இருந்தது.


"ஒரு முக்கியமான கம்பெனியோட ஆர்டர் சனா, இது பெரிய கம்பெனி வேற நான் இப்போதானே பேக்டரி ஆரம்பிச்சி இருக்கேன் ஆர்டர்ஸ் எல்லாம் இன்னைக்கு டிஸ்பேட்ச் செய்தாகனும் நானோ இல்ல சுந்தரனோ அங்க இருக்கனும்... அவன் என்னோட நண்பனாலும் இந்த வீட்டோட மாப்பிள்ளை இல்லையா அவனை போய் வேலைய பாருடான்னு சொல்ல முடியாது டீ அதனால தான் நானே போறேன்…." என்று விளக்கம் கொடுத்தான்.


இதுவே பழைய விசாகனாக இருந்தால் வர முடியாது என்ற ஒரே வார்த்தையோடா முடித்து இருப்பான் அவனுடைய மாற்றம் அவனுக்கே ஆச்சர்யமாய் இருந்தது. தேவாவின் முகம் சிறிது வாடினால் கூட அவனுக்கு மனது கேட்காது போக அதனாலயே கூடுமானது வரை அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.


அவன் பேச்சிக்கள் புரிந்தது போல ஷாலின் நுனியை முறுக்கியபடி வாடிய முகத்துடன் தலையை குனிந்தவாறே அவனுக்கு ம் என்று தலையாட்டியவளின் முகத்தினை கைகளால் பற்றியவன் "என்ன பாரு" என்றான்.


நிமிர்ந்து அவனை பார்த்தவள் கண்கள் என செய்தி சொன்னதோ கண்களை மூடி தன்னை ஆஸ்வாசம் செய்து கொண்டவன் "எப்படியும் 3 மணிக்கு உங்க கூட ஜவுளி கடையில இருப்பேன்.. போதுமா" என்று கூறிட


கூம்பிபோய் இருந்தவளது முகம் சூரியனை கண்ட தாமரையாய் மலர்ந்து புன்னகையே சூடிக்கொண்டு அழகுபெட்டகமாய் காட்சி அளித்தது. "தேங்க்ஸ் ஹீரோ தேங்கீயூ சோ மச்" என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் கூறியவள் அவன் என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் எம்பி அவன் கன்னத்தில் தன் முதல் முத்திரையை பதித்தவள் அறையில் இருந்து புள்ளிமானாய் துள்ளி குதித்து வெளியே ஓடி இருந்தாள். அவளாகவே முன்வந்து கொடுக்கும் முதல் முத்தம் விசாகனுக்கு உச்சி முதல் பாதம் வரை தன்னை மாற்றிய தேவதையின் வாசம் வேண்டும் என்று அடம் பிடிக்க உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியவன் அவள் படிப்பினை காரணம் காட்டி தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டான்.


சிறது நேரம் கழித்து கீழே வந்தவனுக்கு ஹாலில் அனைவரையும் ஒரு வழிபடுத்திக்கொண்டு இருந்த தேவா தான் கண்களுக்கு தெரிந்தாள் புதிதாய் தெரிந்தாள் அழகியாய் கவர்ந்தாள் துரு துரு பேச்சில் ஆளை அசரடித்தாள் மொத்ததில் அவனின் இளமை என்னும் செந்தனலை தன்னயும் அறியாமல் பற்ற வைத்துக் கொண்டு இருந்தாள். அவன் வரவை உணர்ந்தவள் "இதோ அவரே வந்துட்டாரு" என்று மேகலாவிடம் கூறிட அப்போதுதான் அருகில் இருந்த மேகலாவை பார்த்தான்.


"எப்படி அண்ணா இருக்கிங்க?"


"நல்லா இருக்கேன் மா.. நீ எப்போ வந்த?" என்றபடி தேவாவின் அருகே வந்து நின்றான் விசாகன்.


"இப்போதான் அண்ணா வந்தேன்" என்றவள் இருவரின் முகத்திலும் நிறைந்திருந்த புன்னகையை கண்டு திருப்தியானாள்… அவ்வப்போது தோழியின் கிறுக்குத்தனமான பேச்சில் அவள் வாழ்க்கையை பற்றி கவலைப்பட்டவள் ஆயிற்றே இந்த புன்னகை அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.


"அதே நேரம் விசா போலாமாடா" என்று உள்ளே வந்தான் சுந்தரன்


நீங்க கிளம்புங்க டா நானும் வறேன்… ஆனா இப்போ இல்ல மூனு மணிக்கு மேல வறேன்... முதல்ல ஜவுளி எடுக்க போக வேண்டாம், வேற எங்கயாவது அழைச்சிட்டு போ... நான் வந்ததும் எல்லோரும் ஒன்னா சேர்ந்து ஜவுளி எடுக்க போலாம்" என்றிட


"சரி டா ஆனா சொன்னபடி வந்திடுவ தானே" என்றான் சுந்தரன்.


"மாப்ள வந்துடுவேன் டா நீ இவங்கள கூட்டிட்டு போ.. நான் வேலைய முடிச்சிட்டு, லோடு அனுப்பிட்டு, பின்னாடியே வந்துடுறேன்..." என்றவன்


அமுதா உனக்கு என்ன வேணுமோ அதை வாங்கிக்க எதுக்கும் தயங்காத என்று அவள் கரங்களில் பணத்தை கொடுத்தவன் மனைவியிடமும் பணத்தை கொடுத்து மேகலா வருவதால் அவளுக்கு ஏதாவது வாங்கி தருமாறு கூறியவன் தில்லையிடமும் கூறிவிட்டு தொழிற்சாலைக்கு கிளம்பி இருந்தான்.


தில்லையிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியவர்களை மதியம் மேல் ஜவுளி எடுக்க அழைத்து செல்வதால் தேனீயில் இருக்கும் சில முக்கிய இடங்களை சுற்றி காட்ட அழைத்துச் சென்றான் சுந்தரன்.


"கடவுளே! எப்போ இந்த தேனீய விட்டு வெளியே போவேன்னு இருக்கு" என்றாள் மேகலா சலிப்பான குரலில்


"அப்படி என்னம்மா சலிச்சிக்கிற!! அதுக்குள்ள உனக்கு போர் அடிச்சிடுச்சா இந்த ஊரு?" என்றான் சுந்தரன் கேலியான குரலில்.


"பின்ன இங்க சுத்தி பாத்த இடத்தையே, எத்தனை முறை சுத்தி பாக்குறது.." என்றாள் மேகலா எரிச்சலான குரலில் இதில் பார்வையாளராய் மட்டுமே இருந்த அமுதாவிற்கு ஒவ்வொரு பேச்சிக்கும் தன்னை தீண்டி செல்லும் சுந்தரனின் விழிகளால் செந்நிறமாக மாறிக்கொண்டு இருந்தது அவளது கன்னங்கள்.


"இங்க இருக்க அழகுக்கு, மத்த ஊரு இதுக்கு முன்ன போட்டி போட முடியுமா?" என்று சொந்த ஊரின் பெருமையை பற்றி பேசியவள் சுந்தரனின் விழியசைவையும் அதற்கு அமுதாவின் வெட்க சிவப்பையும் கண்டு விட அமுதாவின் தோளை இடித்து நடத்துங்க நடத்துங்க" என்று உதட்டசைவில் கேலி செய்ய
வெட்கத்தில் அவள் மேலேயே சாய்ந்துக் கொண்டு விழிகளை மூடிக்கொண்டாள் அமுதா.


அமுதா, தேவா,மேகலா பின் இருக்கையில் இருக்க, சுந்தரன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வண்டியை செலுத்தியபடி ரீயர்வியூ மிரரில் அமுதாவையே பார்த்து வந்த சுந்தரனின் பார்வையை கண்ட தேவா, "அண்ணா முன்னாடி ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க... பின்னாடி இருக்கவங்கள நாங்க பத்திரமா பாத்துக்குறோம்" என்று அவனுக்கு ஒரு கொட்டை வைக்க "அது, அது... பின்னாடி வர்ற வண்டிய பாத்தேன் மா... அதை போய்" என்று சிரித்து மழுப்பியவன் மறந்தும் அவர்களின் பக்கம் கண்ணை திருப்பவில்லை


மேகலா கேட்டுக்கொண்டதுக்காக "சுருளி அருவி, ஐந்தருவிக்கு அழைத்துச்சென்றவன் அமுதா தனியாக வருவாளா என்று பார்க்க தேவா மேகலாவை விட்டு வராமல் அவர்ளுடனே சுத்தி திரிந்தவளை கண்டு நொந்து போனான் சுந்தரன்.


இதற்கே மதியம் ஆகிவிட அவர்களை சாப்பிட வைத்து வைகை அணைக்கு அழைத்து வந்தான். அதுவரை தோழியுடனும் அமுதாவுடனும் அளவளாவி வந்தவள் இங்கு வரவும் ஒரு வித மோன நிலையில் இருந்தாள்.. திருமணம் ஆகி விசாகன் முதல் முதலாய் அழைத்து வந்த இடம் பசுமையாய் இதயத்தில் பதிந்து போய் இருந்தது. உள்ளமோ தன் மனம் கவர்ந்தவனின் அருகாமைக்கு ஏங்கியது,


இதோ இங்கு தானே நின்றிருந்தான் என்று அன்று வந்த நினைவில் பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு அவளை அணைத்து பக்கத்தில் நிற்பதை போன்று உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது.


காற்றில் பறக்கும் கருங்கூந்தலின் வாசம் பிடித்து அவனுள் தன்னை புதைத்து கொள்வது போல பிரம்மையில் கண்களை மூடி கனவை ரசித்தவளுக்கு அமுதாவின் தொடுகையில் அனைத்தும் மறைந்து போனது.


ஒவ்வொரு இடமும் பாவையவளுக்கு அவன் நிற்பதை போன்றோ தன்னை அணைப்பது போன்றோ முத்தமிடுவது போன்றோ தோற்றத்தை கொடுக்க தலையை உலுக்கி கண்களை கசக்கிக்கொண்டாள். நான் எப்பவும் அவரையே நினைக்கறதுனால எங்க பார்த்தாலும் அவரே தெரியுறாரு என்னை ஏதேதோ செய்றாரு என்று தன் பின்னந்தலையை தட்டிக்கொள்ள


ஹே… அண்ணா வர்றாருடி என்ற மேகலாவின் குரலில் அவன் தன்னை நோக்கி வருவது
நிஜம் என்று உரைக்க மனது சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து குதித்து குத்தாட்டம் போட்டது…. அவன் தன் கணவன் என்று நினைக்கையிலையே அவன் கைபிடித்து இந்த உலகையே வலம் வந்தது போல அத்தனை கர்வமாய் உணர்ந்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN