5. என் பார்வை உனக்கும் இரகசியமா?

Sankaridayalan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இன்னும் இரண்டு வாரங்களில் எனக்கும் ஹரிக்கும் ரிஷப்ஷன் என்று என் மாமியார் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் . அவர் சொல்லிச் சென்ற செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது என்பது அவர்களின் முகபாவனைகளிலேயே தெரிந்தது .

எனக்கும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான் .


என் ஹரிக்கும் இதில் ஆனந்தம் தான் என்பது அவரைப்பார்த்த மட்டில் எனக்குப் புரிந்துவிட்டது .



இருவரும் சீக்கிரம் உணவருந்தி விட்டு எங்களறைக்குத் திரும்பினோம் . “ஹரி … எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு … எங்க வீட்லதான் என்ன புரிஞ்சிக்கலை ஆனா உங்க அம்மா நிஜமாவே ஸ்வீட்தாங்க … உங்க மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காங்க … ரியலி யூ ஆர் ப்ளஸ்டு ஹரி “ என்றேன் நான்.


அவர் மெலிதான புன்னகையினூடே “சீக்கிரம் உங்க வீட்லயும் நம்மை புரிஞ்சிப்பாங்க வானு … எந்த அப்பா அம்மாவாலயும் அவங்க பசங்க மேல ரொம்ப நாளைக்கு கோபமா இருக்க முடியாது . இதான் பேரண்ட்ஸோட நேச்சர். சோ என் வானு இப்ப ஹாப்பியா நம்ம ரிஷப்ஷன்க்கு ப்ரிப்பேர் ஆகறீங்களாம் ஓகேவா ? என்றபடி என்னை அணைத்துக்கொண்டு தன் நெஞ்சோடு என்னை சாய்த்துக்கொண்டார் .


அவர் சொன்னது போல் என் வீட்டிலும் எங்களை விரைவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.

சற்று நேரத்திற்கு பிறகு அவர் திருமண வரவேற்பு பத்திரிக்கையின் மாடல்களை தெரிவு செய்வதற்காக கிளம்பினார் .

திடீரென எடுத்த என் பிறந்தகத்தின் பேச்சினால் எனக்கு அவர்களின் ஞாபகம் சற்று அதிகமாகவே எடுத்தது . அவர்களிடம் பேச வேண்டும் என்ற ஏக்கம் மெலிதாக துளிர்த்தது. ஆனால் இப்பொழுது பேசினால் அனல் கக்கும் வார்த்தைகளைத்தான் நான் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும் என்பதனால் என் எண்ணத்தையும் ஏக்கத்தையும் சற்று தள்ளி வைத்து விட்டேன் .


அவர் கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் எனக்கு அறையின் தனிமை சலிப்பைக் கொடுக்கவே எழுந்து வெளியே வந்தேன் . வீடே பரபரப்பாக இருந்தது .


“ ஏய் மாணிக்கம் இந்த இடத்தை நல்லா சுத்தம் பண்ணு … சோஃபா கவர் எல்லாம் புதுசா மாத்திடு “ அவரின் அண்ணண் யாரோ ஒரு மாணிக்கத்தை வேலை வாங்கிக் கொண்டிருந்தார் . ஹரியின் அத்தை சமைல்காரம்மாவிடம் கூடுதல் பதார்தங்களை செய்யுமாறு உத்தவிட்டுக்கொண்டிப்பதும் என் செவியில் விழுந்தது.


அவரின் , மாமா ,அத்தை பெண் ,சித்தி , சித்தப்பா என வேலையாட்கள் முதற்கொண்டு குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரும் அரக்கப்பரக்க வேலை செய்து கொண்டிருந்தனர் .


“ என்ன வான்மதி வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கீங்க “ நந்திதாவின் குரல்தான் . அவளைப்பார்த்தவுடன் இதுவரை மறந்திருந்த நேற்றைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தன . வலிய என் முகத்தில் புன்னகையை படரவிட்டு “ அது ஒன்னும் இல்ல நந்திதா … இவ்வளவு ஆர்பாட்டமா வீடு இருக்கே … அதான் பார்த்துட்டு இருந்தேன் “.


“ எல்லாம் உங்க ரிஷப்ஷனுக்காகதான் ரெடிபண்ணிக்கிட்டு இருக்காங்க … இன்னும் ரெண்டு வாரம்தானே இருக்கு . அதுக்காகத்தான் இந்த பரபரப்பு . “ என்றாள் அவள் .


அவள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே ஹரியின் அத்தைப் பெண் மஞ்சு ஓடி வந்து “ நந்திதா அக்கா … நீங்க இங்கயா இருக்கீங்க …. உங்களை உஷா அக்கா சீக்கிரம் கூட்டிட்டு வர சொன்னாங்க “ என்று அழைத்தாள் என்னை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே…என்னை விட நான்கு அல்லது ஐந்து வயது இளையவளாக இருப்பாள்.


“ சரி வான்மதி நான் என்னன்னு அக்கா கிட்ட கேட்டுட்டு வந்துட்றேன். நீ மஞ்சு கிட்ட பேசிட்டு இரு “ என்றபடி அங்கிருந்து சென்றாள் .


“ஹாய் அக்கா .... நான் மஞ்சு … ஹரி அத்தானோட அத்தைப் பொண்ணு ..” முதலில் அவள்தான் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள் . அவளின் இரட்டைச்சடையும் , பாவாடை தாவணியும் அவளுக்கு அழகாய்ப் பொருந்தியது .

“ஹாய் மஞ்சு … நான் வான்மதி “ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே… “ உங்க பேர் வான்மதின்னு நீங்க வந்த ஃபர்ஸ்ட்டேவே எனக்குத் தெரியுமே….!!! ஐ வான்ட் சம் மோர் இன்ஃபர்மேஷன் அபௌட் யூ கா “ என்று கூறி என் கையை உரிமையாக பற்றிக்கொண்டாள்.

எனக்கு அவளின் இச்செய்கை சற்று வியப்பாக இருந்தது . சட்டென உரிமையாகப் பழகும் இவளை எனக்குப் பிடித்திருந்தது .


“ என்னப் பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்ல மஞ்சு … சொந்த ஊர் சென்னை… எம்.எஸ்.ஸி மைக்ரோபயாலஜி படிச்சிட்டு ஒரு ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்ல வொர்க் பண்ணிட்டு இருந்தேன் . தட்ஸ் இட் “

“ என்னக்கா … தட்ஸ் இட்னு சிம்பிளா முடிச்சிட்டீங்க… எங்க ஹரி அத்தானையே லவ் மேரேஜ் பண்ண வச்ச காந்தக் கண்ணழகி அல்லவா நீங்க… எனிவே இப்போ ரிஷப்ஷன் வேலை எல்லாம் பயங்கரமா இருக்கு … சோ நான் இப்போ கிளம்பறேன் . இன்னொரு நாள் உங்க லவ் ஸ்டோரியை ப்ரீஃப் ஸ்டோரியா எனக்கு சொல்லனும் சரியா…. ? “ என்றபடி அவளும் படபடவென்று பொரிந்து விட்டு சென்றுவிட்டாள் .


அனைவரும் ஆளாளுக்கு ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்போது நான் மட்டும் அமைதியாக உட்கார்ந்திருப்பது எனக்கு என்னவோ தர்ம சங்கடமாக இருந்தது . எனவே ஏதாவது வேலை செய்யலாம் என்று நினைத்து கீழே இறங்கி கூடத்திற்கு வந்த என் கவனத்தை உஷாவின் குரல் கலைத்தது .


“ஹலோ ….”

……

“ இன்னும் வேலை முடியலைமா “

…..

“ என்னை என்ன பண்ண சொல்ற … என்னால முடிஞ்சதை நான் செஞ்சிட்டுதான் இருக்கேன் “

……

“ ஹ்ம்ம்… 22 ஆம் தேதிதான் … அதுக்குள்ள என்ன செய்ய முடியுமோ அதைப் பண்ணலாம் “

……

“ இன்னும் ரெண்டு வாரம் இருக்குள்ள … எப்படியும் ப்ளான் சக்ஸஸ் ஆகிடும் “

……

“ கண்டிப்பாமா…. நீ எதுக்கும் கவலைப்படாத எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் . சரி சரி …. இப்போ என்னால விலாவரியா எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்க முடியாது . யாராவது வந்துடப்போறாங்க … நான் அப்புறம் பேசுறேன் . என்றபடி செல்ஃபோனை அணைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். அவள் வெளிவரும் சமயம் நான் சற்று மறைவாக நின்றிருந்ததால் என்னை அவள் கவனிக்கவில்லை.


நான் அந்த தொலைப்பேசி உரையாடலை பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை . எதேச்சையாக நான் உஷாவின் அறையின் சாளரத்தைப் பார்த்த பொழுது உஷாவின் குழந்தைகள் ஒரு நாற்காளியின் மீது ஏறி அலமாரியில் உள்ள கிஃப்ட் ரேப்பரை எடுத்துக்கொண்டிருந்தனர் . அந்த கிஃப்ட் ரேப்பரைப் பார்த்தவுடன் என் இதயத்துடிப்பு பன்மடங்காகியது . நேற்று இரவு எங்கள் அறை வாயிலில் கிடந்த பரிசுப்பெட்டியில் சுற்றப்பட்ட கிஃப்ட் ரேப்பர்தான் அது. ஒரு நிமிடம் யோசித்த நான் பின்பு ஒரு முடிவெடுத்தவளாக உஷாவின் குழந்தைகளை வெளியே அழைத்தேன் .


சற்று நேரம் தயங்கிய குழந்தைகள் பின்பு ஓடிவந்தன. குழந்தைகளிடம் சற்று பெரியவனாக இருந்த சஞ்சய்யிடம் “ வருண்…. இந்த கிஃப்ட் ரேப்பரை யாருப்பா வாங்கிட்டு வந்தாங்க “ என்று கேட்டேன் .

“ இதுவா ஆண்ட்டி…. இது எங்க அம்மா யாரோ அவங்க ஃப்ரண்ட்க்கு கிஃப்ட் பேக் பண்ணணும்னு வாங்கிட்டு வந்தாங்க … “ என்று கூறினான்.


அதுவரை உஷாவின் தொலைப்பேசி உரையாடல் எனக்குள் ஏற்படுத்ததாத உறுத்தல் இப்போது உதயமானது. எனக்கும் அந்த தொலைப்பேசி உரையாடலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா ? அப்படி என்ன திட்டத்தை பற்றி அவள் பேசிக்கொண்டிருந்தாள் . அந்தப் பரிசுப்பெட்டியை அனுப்பி வைத்தது உஷாவா…. ? அவள் ஏன் அப்படி செய்யவேண்டும். வழக்கம்போல் என் மூளைச்செல்கள் வினாக்களை தோற்றுவிக்க ஆரம்பித்துவிட்டன .

*****

மதி மயக்கும் அந்த பொன் மாலைப்பொழுதில் ஆதித்யன் மெல்ல மெல்ல இரு மலை முகடுகளுக்கு நடுவே துயில் கொள்ளச்செல்லும் அழகான காட்சியை நான் வீட்டின் மொட்டை மாடியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். மனம் அழுத்தம் அதிகமாக கூடும்போது இப்படிப்பட்ட இயற்கை அன்னையின் எழிலை இரசிக்கும்போது எப்படித்தான் மனம் இலகுவாகின்றது என்பது அந்த இயற்கை அன்னைக்கே தெரியும் . எனக்கும் அப்படித்தான் புத்துணர்ச்சியாக இருந்தது .


“ என்ன அக்கா …. அங்க ஹரி அத்தானை தனியா விட்டுட்டு நீங்க பாட்டுக்கும் மாடில நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ? நான் உங்களை எங்க எல்லாம் தேடினேன் தெரியுமா ? … “ என்றபடி மஞ்சு வந்தாள் .


அவளைப் பார்த்தவுடன் புன்னகையுடன் “ வா மஞ்சு .... சும்மா… ஜஸ்ட் என்ஜாயிங் த நேச்சர் …. ஆமா … என்னை எதுக்கு தேடின ? “ என்று கேட்டேன் .


“ என்னக்கா…. இன்னும் ரிஷப்ஷன்க்கு கொஞ்ச நாள்தான் இருக்கு … உங்களுக்கு ட்ரஸ் எடுக்கனும் ப்ளவுஸ் தைக்கனும் , ஃபேஷியல் , ஸ்கின் கேர்னு இன்னும் எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? “


“ போதும் … போதும் … லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது... எப்போ எல்லாம் ட்ரஸ் எடுக்க போறீங்க … “


“ நாளைக்குக்கா … அதான் உங்க கிட்டநாளைக்கு ரெடியா இருக்க சொல்ல சொன்னாங்க …நாளைக்கு நாம எல்லாரும் கோயம்பத்தூர் போறோம் ட்ரெஸ் எடுக்க”என்றாள் .


“ ஓஓஓ… சரி மஞ்சு…. என்ற என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

“என்ன மஞ்சு … ஏன் அப்படி பார்த்துட்டு இருக்க … “


“நீங்க நல்லா அழகா இருக்கீங்க அக்கா… அதான் ஹரி அத்தானுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிட்டுதோ… எனக்கும் உங்களைப் போல அழகா இருக்கனும்க்கா “ என்றாள் .


“ இல்ல மஞ்சு…. ஒருத்தர் மேற்பார்வையில நல்லா இருந்தா அது கண்ணுக்கு மட்டும்தான் அழகா தெரியும் … அவங்க கூட பேசி பழகும்போதுதான் அவங்க உண்மையான அழகு நம்ம மனசுக்கு தெரிய வரும். அன்ட் நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா…. என்னை விடவும் நீ அழகுதான்...என்று மஞ்சுவிடம் கூறினேன் .


“ ஹ்ம்ம்…. நிறைய ஃபிலாசபி படிச்சிருக்கீங்க போல … தத்துவ அறிஞர் போலவே பேசறீங்களே .... “ என்று கேலி செய்யும் தொனியில் கூறினாள் மஞ்சு.


"ஹாஹா…நான் ஒன்னும் பிலாசஃபி எல்லாம் படிக்கல மைக்ரோபயாலஜிதான் படிச்சிருக்கேன்… சரி என்னைப் பத்தியே கேட்டுட்டு இருக்கியே உன்னைப் பத்தி எதுவும் சொல்லமாட்டியா மஞ்சு" என அவளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டேன்.


"என்னக்கா… என்ன பத்தி சொல்ல என்ன இருக்கு…. ஹ்ம்ம்…என் பேர் மஞ்சு… சென்ட் ஆன்ஸ் ஸ்கூல்ல ப்ளஸ் டூ வரையும் படிச்சிருக்கேன்.அப்புறம் மூவீஸ் பாக்குறதுன்னா ரொம்ப பிடிக்கும்… அவ்வளோதான் சிம்பிள்…."என்றபடி தலைசாய்த்து சிரித்தாள்.


அவளின் பதிலில் அதிர்ச்சியடைந்த நான்"ஏன் மஞ்சு காலேஜ்லாம் நீ போகலையா?... ஏன் ப்ளஸ் டூ க்கு அப்புறமா படிக்கலை?...உனக்குப் படிக்க ஆசையில்லையா மஞ்சு?…"அவளிடம் கேள்வி எழுப்பினேன்.


"நீங்க வேறக்கா… ப்ளஸ் டூ வரற்துக்கே தட்டுத் தடுமாறினது எனக்குதான் தெரியும்…சுபத்ரா அத்தை கூட காலேஜ் போகறியான்னு தான் கேட்டாங்க ஏதேதோ ட்ராமா பண்ணி நான் தான் காலேஜ் போகாம தப்பிச்சிட்டேன்… நீங்க புதுசா ஆரம்பிக்காதீங்கக்கா…."என சர்வ சாதாரணமாக சொன்னாள்.


"என்ன மஞ்சு… படிப்புன்னா சாதாரணம் இல்லம்மா… அது ஒரு தற்காப்பு ஆயுதம் மாதிரி… காசு பணம் எதுவும் நமக்கு நிரந்தரம் கிடையாது… இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்… ஆனால் படிப்புன்றது எப்பவுமே நமக்கு துணையா நம்ம கூடவே இருக்குறது… இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை… நீ டிஸ்டன்ஸ் எஜுகேஷன்ல படிக்கலாம்… நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்" என்று கல்வியின் முக்கியத்துவம் பற்றிக் கூறிக்கொண்டிருந்தேன்.



இவ்வாறு அவளிடம் பேசிக்கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை … ஹரி வந்து இரவு உணவிற்கு அழைக்கும்போதுதான் இரவாகி விட்டதையே உணர்ந்தேன் .

இரவு உணவை முடித்துவிட்டு எங்களறைக்குத் திரும்பிய பிறகு சிறிது நேரத்திற்கெல்லாம் தூக்கம் கண்களைத் தழுவவே … ஹரியின் நெஞ்சோடு தலைசாய்த்து அமைதியாக துயில் கொண்டேன் .
 

Author: Sankaridayalan
Article Title: 5. என் பார்வை உனக்கும் இரகசியமா?
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN