பாடல்: கண் மலர்களில் அழைப்பிதழ் திரைப்படம்: தைப்பொங்கல் பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி இசை: இளையராஜா

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்

நான் ஆளும் மனம் பூவோ
நீ நாளும் தமிழ்ப்பாவோ
பூவாடும் விழி தானோ
நீ பாட மொழி ஏனோ
என்ன இன்று…ஆஹா
கண்ணில் என்னை வென்று…ஆஹா
கண்ணன் எண்ணுவதோ
எனக்கென ஒரு கணமோ
விளக்கங்கள் தரும் மனமோ
நமக்கென விழித்திடும்
மலர்களோ…மனங்களோ

கண் மலர்களில் அழைப்பிதழ்
லல லல லல லல
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
லல லல லா

தாம்பூல நிறம் தானே
மாம்பூவின் இளம் மேனி
ஆ…தாங்காது இனிமேலே
தூங்காது மனம் நாளை
கண்ணில் என்ன…லாலா
மின்னல் கண்டபின்னும்…லாலா
இன்னும் மின்னுவதோ
உனக்கென்று ஒரு மனமோ
நமக்கென்று திருமணமோ
இணைக்கின்ற இயற்கையின்
உறக்கமோ…மயக்கமோ

கண் மலர்களில் அழைப்பிதழ்
ல லல லல லல லல
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
ல லல லல லல லல

இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
ல லல லல லல லல
லல லல லல லல
ல லல லல லல லல

லல லல லல லல லா
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN