நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

படம்: மனதில் உறுதி வேண்டும் இசை: இளையராஜா வரிகள்: வாலி குரல்: சித்ரா

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா -பழம்
பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா -அந்த
ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா -அந்த
ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கதான் இப்போது ஆள் இல்லை
சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா -பழம்
பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா -தினம்
ஏவல் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைகின்ற கை இல்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை
கனவுகளில் மிதந்தபடி
கலங்குது மயங்குது பருவக்கொடி

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா -பழம்
பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்

கணங்களும் என்ன கண்களில் என்ன நீரோட்டமா………..
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top