தென்றல் வந்து தீண்டுதமா

Ashwathi

Active member
Staff member
படம் : அவதாரம்
வரிகள்: வாலி
இசை : இளையராஜா

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல..
வந்து வந்து போகுதம்மா , எண்ணமெல்லாம் வண்ணமம்மா..
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா..
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே..

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல..

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது..
உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது..
எவரும் சொல்லாமலே குயில் எல்லாம் தேனா பாடுது..
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது..
ஓட நீரோடை இந்த உலகம் அது போல..
ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல..
நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே..

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது..
ஆழம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அல போலே அழகெல்லாம் கோலம் போடுது..
குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா..
கிளியே கிழியினமே அத கதையா பேசுதம்மா
கதையா விடுகதையாய் ஆவதில்லையே அன்பு தான் ..

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல..
வந்து வந்து போகுதம்மா , எண்ணமெல்லாம் வண்ணமம்மா..
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா..

உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன..

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல...

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN