ஆடிக்கூழ்

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஹாய் நட்பூஸ்....

இதோ சமையல் குறிப்பு பக்கத்திற்கு உங்களை வரவேற்கின்றேன்....:love::love::love::love:

என்னடா சமையல் குறிப்பெல்லாம் போடுறாங்களே.... இவங்க என்ன பெரிய Chef ஆனு நீங்க நினைச்சிடக்கூடாது.... எனக்கு அவ்வளவு எல்லாம் சமைக்கத்தெரியாது..... சுடுதண்ணி மட்டும் சூப்பரா வைப்பேன்😂😂😂

ஆனா எப்படி ரெசிபி போடுறேன்னு நீங்க யோசிக்கலாம்... எனக்கு தான் சமைக்கத்தெரியாதே தவிர எங்க அம்மா வெஜ் நான்வெஜ்னு எல்லாத்துலயும் இறங்கி கலக்குவாங்க.... சோ அவங்க ரெசிப்பி தான் இங்க பதிவு பண்ண போறேன்....
முதல் ரெசிப்பி அப்படீங்கிறதாலும் இது ஆடி மாதம் அப்படீங்கிற காரணத்தாலும் இந்த மாதத்தோட ஸ்பெஷல் டிஸ்ஸான ஆடிக்கூழ் எப்படி செய்றதுனு இன்னைக்கு சொல்லப்போறேன்... எல்லாரும் கவனமாக படிச்சி அதை ட்ரை பண்ணி பார்த்துட்டு எப்படி வந்துச்சுனு சொல்லுங்க.....

தேவையான பொருட்கள்

சிவப்பா பச்சை அரிசி – ¼ கிலோ
பாசிப்பருப்பு – ¼ கிலோ
பனங்கட்டி – 01 பெரிய கட்டி
சர்க்கரை – ½ கிலோ
தேங்காய் – 01 எண்ணிக்கை

செய்முறை

1) அரிசியை நன்றாக நனையவிட்டு பின்னர் அதனை வடித்தெடுத்து கிரைண்டரில் போட்டு மாவாக்கி வைத்துக்கொள்ளவும்.

2) பாசிப்பருப்பை நன்றாக வறுத்தெடுத்து வைக்கவும்.

3) வறுத்த பாசிப்பருப்பை தண்ணீரில் கொதிக்க வைத்து நன்றாக அவித்த பின்னர் தண்ணீரை வடித்து வைக்கவும்.

4) தேங்காய் ஒரு பாதியை துருவி பாலாக்கி கொள்ளவும்

5) தேங்காயின் இன்னொரு பாதியை செட்டு செட்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

இப்போது எம்மிடம் உள்ள அரிசிமா, அவித்த பாசிப்பயறு, பனங்கட்டி, தேங்காய் பால், சர்க்கரை என்பவற்றை பாத்திரம் ஒன்றில் இட்டு தேவையான தண்ணீரையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இவ்வாறு கலக்கிய கலவையை அடுப்பில் வைத்து வேகவைக்கவும். நன்றாக வேகிய அக்கலவை இறுக்கமான கூழ் பதத்துக்கு வந்தவுடன் தேங்காய் சொட்டை அதனுள் போட்டு நன்றாக கலக்கிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கவும்.

இப்போது குடிப்பதற்கு சுடச்சுட சுவையான ஆடிக் கூழ் தயாராக இருக்கும்.😇😇😇
 

Attachments

  • OIP (1).jpg
    OIP (1).jpg
    5.6 KB · Views: 214
Last edited:

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பனங்கட்டி போட்டு நாங்க செய்தது இல்லை....👏👏👏👏
செய்து பார்த்து... சாப்பிட்டு ருசித்து விட்டு சொல்கிறோம்....Flying kissFlying kissFlying kiss
அம்மாவுக்கு நன்றி சொல்லிடுங்க heart beat heart beat heart beat
 
OP
Anu Chandran

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பனங்கட்டி போட்டு நாங்க செய்தது இல்லை....👏👏👏👏
செய்து பார்த்து... சாப்பிட்டு ருசித்து விட்டு சொல்கிறோம்....Flying kissFlying kissFlying kiss
அம்மாவுக்கு நன்றி சொல்லிடுங்க heart beat heart beat heart beat
:love: :love: :love: :love:
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN