கோதுமை இடியாப்பம்

meerajo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஹாய்!

என் வீட்டில் என் சமையல் அனைவருக்கும் பிடிக்கும்.

அந்த நம்பிக்கையில் எழுதியுள்ளேன்...

மிகவும் விரும்பத்தக்க காலை உணவு.

செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று என்னிடம் கூறுங்கள்.

கோதுமை இடியாப்பம்


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2கப்
உப்பு. - தேவைக்கேற்ப
சுடுநீர். - தேவைக்கேற்ப
தேங்காய் துருவல்
சீனி
பால்

செய்முறை:

1. வாணலியில் கோதுமை மாவை போட்டு, குறைந்த நெருப்பில், வறுக்கவும்.

2. மற்றோரு அடுப்பில் தண்ணீர் சுட வைக்கவும்.

3. கோதுமை மாவு, நிறம் மாறி வாசனை வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, உப்பு சேர்த்து கிளறவும்

4. கோதுமை மாவில் சூடான நீர் விட்டு, சற்று கெட்டியாக கரண்டி கொண்டு கிளறி, ஆற விடவும்.

5. மாவு கைசூடு பொறுக்கும் அளவு வந்ததும், சப்பாத்தி மாவை விட இறுக்கமாக பிசையவும்.

5. அரிசிமாவு இடியாப்ப மாவு போல் மென்மையாக இருக்கக் கூடாது... சற்று இறுகலாக இருக்கவேண்டும்.

6. இட்லி தட்டில் அல்லது இடியாப்பம் செய்யும் தட்டில் சுத்தமான ஈரத்துணினை விரித்து, இடியாப்ப அச்சில் பிழிந்து கொள்ளவும்.

7. இட்லி சட்டி மில் நீர் ஊற்றி, சிறிது புளி அல்லது எலுமிச்சை பழத்தோல் போட்டு, தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை வைத்து மூடி விடவும்.

8. சரியாக பத்து நிமிடத்தில் இறக்கவும்.

9, சர்க்கரை, தேங்காய் துருவல், எண்ணை சேர்த்தும் அல்லது

10. பாலுடன் சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.

நன்றி!

-மீராஜோ🌹
 
OP
meerajo

meerajo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Superrr akka..naan try Pani paakuren 😍
ம்ம்...
கோதுமை மாவு வாசம் வரணும் டா..
செஞ்சு பார்த்துவிட்டு எனக்கு சொல்லு
 

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
woww... semma sis.... heart beat heart beat heart beat
update azhakaa pottu irukkinga... smilie 18smilie 18smilie 18smilie 18
naan seithathu illai seithu paargaran... smile 9smile 9smile 9smile 9
 
OP
meerajo

meerajo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செய்து பாருங்கள் சிஸ்.... ஒரு முறை கோதுமை இடியாப்பம் செஞ்சுட்டா அப்புறம் அரிசிமாவு இடியாப்பம் வேண்டாம் னு குட்டீஸ் சொல்லியும்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN