teaser

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அந்நேரம் அவன் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வர, அது சிறிய தங்கை நிர்மலாவிடமிருந்து வந்தது என்று தெரிந்ததும் ஒரு சிரிப்புடன் மடிக்கணிணியை உயிர்ப்பித்தவன், வீடியோ அழைப்பில் வீட்டில் உள்ளவர்களிடம் பேச, தாயிலிருந்து அவன் மூன்று தங்கைகள் வரை அனைவருக்கும் அவனைக் கண்டதில் சந்தோஷம். நேற்று தான் ஜெர்மனியிலிருந்து விமானத்தில் ஏறுவதற்கு முன் வீடியோ அழைப்பில் பேசினான். ‘ஒரு நாளுக்குள் இவ்வளவு சந்தோஷமா இவர்களுக்கு!’ என்றிருந்தது அவனுக்கு.

இவர்களே இப்படி என்றால் எதுவும் சொல்லாமல் திடீரென்று தன்னவள் முன் நான் சென்று நின்றால் அவளின் சந்தோஷம் எப்படி இருக்கும்? அதைக் காண ஆசைப்பட்டது இவன் மனது. ‘இந்தியா வந்துட்டேன் my soul... உன் முன்னாடி சீக்கிரமே வந்து நிற்பேன். நீ, நான், என் அம்மா, தங்கைகள்னு நாம் எல்லோரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம்’ என்று காதலோடு தன்னவளின் நினைவில் திளைத்துக் கொண்டிருந்தவனின் முன்பு ஒரு கவரை வைத்தான் பிரகாஷ்.

இவன் கேள்வியோடு என்ன இது என்பது போல் பிரித்துப் படிக்க, அதில் அவனுடைய மனைவி… அவனுடைய soul... அவனிடமிருந்து விவாகரத்து கேட்டு பத்திரம் அனுப்பியிருந்தாள். அதைப் படித்தவனின் உதட்டிலோ ஒரு விரக்தி புன்னகை குடியேறியது அந்த இருப்பத்தைந்து வயது ஆண்மகனுக்கு. சற்று முன் தான் கட்டிய கனவுக்கோட்டை தூள் தூளாகும் சப்தத்தில் தன் இதயத் துடிப்பே நின்று விட்டதைப் போல் உணர்ந்தான் அந்த அன்புக் கணவன். தன்னவள் கேட்ட படி விவாகரத்து தருவானா?

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
மகிழ்வரதன் அலுவலுக அறை…
“என்ன சொல்ற தன்யா?” வக்கீல் வல்லவன் கேட்க

“விவாகரத்து தான் என் இறுதி முடிவு அங்கிள்” என்றாள் அவள்.

“ப்ச்சு! சட்டம் தெரியாம பேசக் கூடாது”

“என்ன அங்கிள் எனக்கு சட்டம் தெரியல… என்னுடைய விஷயத்தை நீங்க முன் வைங்க.. எல்லாம் விவாகரத்து கிடைக்கும்” இவள் பிடிவாதமாய் நிற்க

“சும்மா அதையே சொல்லாதே. இப்போ உனக்கு பெரிதா ஒரு பாதிப்பும் இல்ல. அதை உன் கணவர் சைட் வக்கீலும் கோர்ட்டில் சப்மிட் செய்வார். அதனால் இந்த காரணம் செல்லாது” அவரும் பிடிவாதமாய் சொல்ல

“அப்போ என்னை என்ன தான் செய்யச் சொல்றீங்க”

“உனக்குத் திருமணம் செய்த போது உன்னுடைய விஷயத்தை மறைத்து ஒன்றும் திவாகருக்கு உன்னை நாங்க கட்டி வைக்கலை. அதற்கு பிறகு உன்னுடைய பிரச்சனை, திவாகர் வெளிநாடுன்னு போக... நீங்க இரண்டு பேரும் முகம் பார்த்துப் பேசினதே அரிது தான்.

இப்போ உன் கணவர் இந்தியா வந்தாச்சு. நீ ஒரு வருஷம் அவர் கூட அவர் வீட்டில் இருக்கணும்னு அவர் விருப்பபடுகிறார். அப்பொழுதும் உனக்கு அவரைப் பிடிக்கலைனா விவாகரத்து தரேன்னு அவர் சொல்கிறார். எனக்கும் அது தப்பு இல்லைன்னு படுது” என்று நிறுத்தி அவர் அவள் முகம் பார்க்க

அவளோ அமைதியாக நின்று இருந்தாள்.. பின் அவரே “அதுவும் இல்லாமல் அவர் மூத்த தங்கைக்கு திருமண ஏற்பாடு நடக்கிறதாகவும் இந்த நேரத்தில் எப்படி விவாகரத்து கொடுக்கிறதுனு யோசிக்கிறார். சோ, நீ உன் கணவர் வீட்டுக்குப் போவது சரின்னு தான் எனக்குப் படுது” ஒரு குடும்ப நண்பராய் வக்கீல் வல்லவன் சொல்ல

‘அது தானே பார்த்தேன்.. இதிலும் அவருக்கு சுயநலம்.. அவர் தங்கை திருமணத்திற்காக நான் கூட நிற்க வேண்டுமா… ஆனால் இதில் தவறு இல்லையே.. ஒரு அண்ணியாய் நான் நின்றுதானே ஆக வேண்டும்.. ஒரு வருடம் தானே பார்த்துகலாம் என்ற முடிவுடன்’

கொஞ்சம் நியாய குணம் உள்ளவள் இவள் என்பதால் இவள் தந்தையைப் பார்க்க, “அது உன் கணவர் வீடு தன்யா. உன் வீடும் கூட போய் இருடா” என்று அவர் சம்மதத்தை தர

“சரி, அதற்கான ஏற்பாட்டை அவரை செய்யச் சொல்லுங்க அங்கிள்” என்று பட்டும்படாமல் சொல்லி அந்த இடத்தை விட்டு விலகியிருந்தாள் விதுனதிபாகரனின் மனைவி தன்யரித்விகா. ஆனால் இந்த ஒரு வருடம் முடியும் போது தன்னவளை விலக விடுவானா அவள் கணவன்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

கணவனின் பார்வையை சந்தித்தவளுக்கு பேச்சே வரவில்லை… சாப்பாடு மேஜையில் உணவை எடுத்து வைத்தவள், சிரமப்பட்டு “சாப்பிட வாங்க” என்று இவள் கணவனை அழைக்க

அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் குடித்தவன், “நான் பாக்டரியிலேயே சாப்பிட்டேன். அதுவும் இல்லாமல் மணி இப்போ பத்தரை” என்று இவன் சொல்ல

“அந்த உணவு செரிமானம் ஆகியிருக்கும். இடியாப்பம் தான் செய்தேன்… இப்போ ஒரு தடவை சாப்பிட்டா ஒன்றும் ஆகாது” பிடிவாதத்துடனே சொன்னவள் அதே பிடிவாதத்துடனே இடியாப்பத்தை ஒரு தட்டில் எடுத்து இவள் வைக்க, மனைவியை அழுத்தமாக பார்த்தபடி சேரில் வந்து அமர்ந்தவனோ இன்னோர் தட்டு எடுத்து அதில் இடியாப்பம் வைத்து அவளையும் சாப்பிடச் சொல்ல...

‘இந்த இரண்டு வருடத்தில் இவர் எடுத்து வைத்து தான் நான் சாப்பிட்டேனா..’ என்று மனதிற்குள் நொடித்தவள்

கணவனிடம் சண்டை போடவேண்டும் என்று நினைத்ததை மறந்தவளாக, “நான் எட்டு மணிக்கே சாப்பிட்டேன்… நீங்க சாப்பிடுங்க” என்க

“நீ என்னிடம் சொன்னது தான்.. அது செரிமானம் ஆகி இருக்கும்.. சாப்பிடு ரித்வி” என்று இவன் அழுத்திச் சொல்ல

முதல்முறையாக கணவன் தன் பெயரைச் சுருக்கி அழைத்ததை உள்வாங்கியவளாக மறுபேச்சு இன்றி அவனுடன் உணவை உண்டாள் அவள். உண்டு முடித்ததும் இருவருமாக அந்த இடத்தை சுத்தம் செய்த பிறகு, “இனி பாக்டரில் வேலை அதிகம் இருக்கும். சோ, நான் வீட்டுக்கு வர முன்னே பின்னே ஆகும். அதனால் இனி நீ எனக்காக காத்திட்டு இருக்காம சாப்பிட்டுப் படு” ஒரு கணவனாய் அவன் சொல்ல

சரி என்ற தலை அசைப்புடன் இவள் காலையிலிருந்து புழங்கின தன் அறைக்குத் தூங்கச் செல்ல, மனைவியின் நோக்கம் புரிந்து அவளுக்கு முன்பாக அறையின் வாசலில் அவளை மறித்தார் போல வந்து நின்றவனோ, “நம்ம அறை அங்கு இருக்கு ரித்வி” என்று வேறு ஒரு அறையை அவன் விரலால் சுட்டிக் காட்ட

இவளுக்கு முகம் சிவந்தது… கோபத்தில் தான். “ஒரு வருஷம் நான் உங்க வீட்டில் இருப்பேன் என்பது தான் டீல் அதுவும் நான் கேட்ட விவகாரத்திற்காக” என்று இவள் நினைவுபடுத்த

“தப்பு தப்பு... என் மனைவியா என் கூட என் அறையில் நீ இருக்கணும் என்பது தான் டீல்.. அப்போது தான் நீ கேட்டதை நான் தருவேன்” இவன் திருத்தியபடி பேச்சில் கிடுக்கு பிடி போட

“நான் அங்கே வரலை” இவள் பிடிவாதமாய் நிற்க, அடுத்த நொடி, “வா டி என் அணில் குட்டி” என்ற முணுமுணுப்புடன் மனைவியைக் கையில் ஏந்தி, தன் அறை நோக்கி நடையைப் போட்டான் அவள் கணவன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN