Recent content by Aarthi Murugesan

  1. Aarthi Murugesan

    பூவே: 2

    பூவே: 2 மஞ்சள் பூசி நலங்கு வைபவத்தின் பாதியில் வந்தவன் போல, தன் மீதுள்ள மஞ்சளை ஒளிக்கதிர்களாய் ஏவி புத்துணர்வுடன் புதிய ஆரம்பமாக ஞாயிறை ஆட்சி செய்ய ஆரம்பித்தான், ஞாயிறவன். உன் காதல் வாசம் என் தேகம் பூசும் காலங்கள் பொய்யானதே தீராத காதல் தீயாக மோத தூரங்கள் மடை மாறுமோ வான்...
  2. Aarthi Murugesan

    பூவே: 01

    நிலாமகள் பொட்டென உருக்கொண்டு நடுவானில் அரங்கேறி கருமையவளை பொலிவேற்றி கொண்டிருக்க, நட்சத்திர கூட்டம் பூத்து குலுங்கியது முன்னிரவு முடியும் நேரத்தில். மக்களை காக்கும் காவல் நிலையத்தில் நண்பர்களின் ஜீவனை வற்ற விட்டிருந்தான் அவன். சற்று நேரத்திற்கு முன், நால்வரும் மதுபான...
  3. Aarthi Murugesan

    விவசாயி

    கலப்பை பூட்ட களைப்பை பார்க்காதவன்! சொகுசு மனிதருக்கும் சோறு போட்டு சொகுசென்ற வார்த்தையின் வடிவத்தை கண்டிராதவன்! தூணிலும் உள்ளதாம் துரும்பிலும் உள்ளதாம் தெய்வம் - அத்தெய்வம் மனிதத்திலும் உள்ளதென காட்டிய மானிடன் அவன்! பாரதநாட்டின் நலம்விரும்பி அவன் ஏழைதாயின் விவசாயி மகன்!
  4. Aarthi Murugesan

    மழைதுளி கவிதை

    இடிபோல தென்றலும் உரக்க தாக்கி இரவாக மாற்றியது நொடியில் அறையையும் கையில் காகிதமும் இணைக்காதலி பேனாவும் கற்பனையில் ரசிகனும் கருத்தில்லா வெள்ளையை கருத்தேற்றி நிறம்கூட்டிய சாளர மழைத்துளிகளால் என் எழுத்தும் பிறப்பெடுத்தது மின்னலொளியில்... பிரசவித்தவன் மகிழ்ந்தான் கொசுக்கடியில்...
  5. Aarthi Murugesan

    கண்டதும் காதல்

    செவிப்பறை அடைந்தும் தாகம் தீரவில்லைபோல் உடலெங்கும் சுழன்று குருதியென பாய்ந்து காட்சியிலும் இயைந்து விழிதனையும் விடமால் முடிவில்லா மோகத்தோடு காற்றோடு கொண்டாடி மூச்சோடு கலந்தோடி அறிவோடு உறவாடி உயிர்வரை தீண்டி மெய்சிலிர்க்கும் அமுதத்தமிழே ! கருவகத்தில் உணர்வோடு உரையாடிய தாயின்...
  6. Aarthi Murugesan

    காற்றில் கரைந்துருக்கும் கவிதை

    இமைகள் மூடாமல் இதழ் விரிக்காமல் காது மடல்களில் தஞ்சம் புகுகிறாய் காற்றில் கரைந்துருக்கும் கவிதையாய்...
  7. Aarthi Murugesan

    அழகான இணை

    வானும் நிலவும் கடவுள் படைத்த அற்புத இணை... இவர்களின் பிரிவு உலகையே வாட்டுகிறது இருட்டாக... இவர்களின் சங்கமம் உலகுக்கு வெளிச்சம் தருகிறது பால் வெள்ளை ஒளியாக
  8. Aarthi Murugesan

    கன்னி காதல்

    கன்னியவளின் காதல் கற்பனையில் கருவாகி கரம் வழியில் கவிதையாகி கண்ணில் கனவாகி போனதே
  9. Aarthi Murugesan

    மனிதநேயம்

    நாமும் அலைகிறோம் உலகோடு... உலகம் தந்த வாழ்வோடு... இந்த காற்றுக்கு என்ன பலன்... நம் பின்னாடி சுற்றி நமக்கு மூச்சு கொடுக்க... இதுதான் மனிதநேயமோ
  10. Aarthi Murugesan

    இயற்கை தாயே

    இரவில் படர்ந்திருக்கும் இருளும் நீயே! பகலில் ஒளி பரப்பும் சூரியனும் நீயே! கண் மூடும் பொழுதில் தோன்றிடும் கற்பனை நீயே! என் எழுத்தில் உயிர் பெரும் கவிதையும் நீயே! உலகை இணைக்கும் ஒற்றுமையும் நீயே! உணர்வுகளில் கலந்திருக்கும் அன்பும் நீயே! இப்பூலோகத்தை படைத்த இயற்கை தாயே!
  11. Aarthi Murugesan

    தன்னடக்கம்

    இயற்கையின் பிறப்பாய் கவிஞனின் எழுத்துக்களால் வர்ணிக்கும் வரம் பெற்று பல வர்ணங்களின் மாயாஜாலமாய் தோன்றி மறையும் வானுயர்ந்த வானவில் உரைக்குதே தன்னடக்கத்தை
  12. Aarthi Murugesan

    மழை காலம்

    அடர்ந்த பொழுதில் சிசுவை காணும் ஆவலில் மேகம் பிரசவ வலியாக இடி முழக்கம் பதற்றமடையும் மின்னல் வெட்டு மகப்பேறும் முடிந்து இரவும் கடந்து புலர்ந்த காலையில் மலர்ந்த இலை நுனியில் பூத்த மழை நீர் காட்டும் மழை காலமும் கவிதை தானே...
  13. Aarthi Murugesan

    ஓர் நொடி

    மாற்றம் நிகழ்வதும் மரணம் வருவதும் இன்பம் நிகழ்வதும் அழகை ரசிப்பதும் ஓர் நொடி தான்... ஒவ்வொரு நொடியாக கடந்து போகும் வாழ்க்கையும் அடங்குமே ஓர் நொடியில்
  14. Aarthi Murugesan

    tips 1

    Akka romba usefulla irruku ka...Super akka
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN